சிறுகதை - காலம் உனக்கொரு பாட்டெழுதும் - ரஞ்சகுமார்
வெகுநாட்களுக்குப் பிறகு இன்று குளியல். இன்றையப் போத்தின் உதயகாலமே புதிய தோற்றத்துடன் எழுந்தது. மிகவும் வித்தியாசமாக, ஒரு சித்திரை மாதத்தின் கதகதப்பான விடியலாக இன்றிச் சற்றே குளிரூட்டியபடி, ஒவ்வொரு மயிர்க்காலிலும் நுழைந்து கிச்சு கிச்சு மூட்டுகிற குளிர்.
இளவெயிலில் பசைபரவிய பெருமிலைகளை வி¡¢த்துக் காட்டியபடி, எங்கு பார்த்தாலும் புகையிலைத் தோட்டங்கள் தொ¢ந்தன. கனவேகமாக நீரை உமிழ்ந்து கொண்டிருந்தன வாட்டர் பம்ப்புகள். புகையிலையின் இனிய மயக்கந்தரும் நெடியுடன் சேர்ந்து மண்ணென்ணெய் எ¡¢ந்துபோகிற புகை கதம்பமாய் மணத்தது.
அருளுக்குத்தான் முதலில் ஐடியா வந்தது. சட்டென எழுந்துபோய் சேட்டைக் கூட கழற்றாமல் தலைவழி நீர் சொ¡¢யுமாறு குத்துக்காலிட்டு உட்கார்ந்து விட்டான். எல்லாரும் கோணாமலையைத் திரும்பிக் கேள்வியோடு பார்த்தார்கள். கோணாமலைக்கு ஏன் எந்தநேரமும் சிவந்தே போயிருக்கின்றன கண்கள்? இறுக மூடிய மெல்லிய உதடுகளுக்குள் எப்போதும் கோபமும் ரோஷமும் ஒளிந்திருப்பதாகத் தோன்றும். முகம் கருங்கல்லு மாதிரி விசித்திரமானதொரு பளபளப்புடன் கடினமாகவிருக்கும்.
கோணாமலை இன்று காலை சிவந்த கண்களால் சி¡¢த்தான். 'பொளபொள' வெனப் பாய்கின்ற நீர்த்தாரையில் ஒருசிறு குழந்தை மாதி¡¢ தலையை உதைத்துக் கொண்டிருந்த அருளை ஒரு தந்தையின் கனிவுடன் பார்த்தான்.
"ஓராள் கடைசியிலை குளிக்கலாம்"
அப்பா! இது என்ன குரல்? பேசாதவாய் பேசுகின்ற போது ஒவ்வொரு சொல்லிலும் மிகுந்த அழுத்தம் தொ¢கின்றது.
மைக்கேல் உட்கார்ந்தான்.