"ஆளை நீ பார்க்கயில்லை...பாத்தாலெல்லோ தெரியும்!..."
"......."
"ஹ¤ம்....எல்லாம் நல்லபடியா முடிஞ்சு.....நானும் உயிரோட இருந்தா...."
"இருந்தா?....."
"ஹ¤ம்"
இவன் திரும்பி அருளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். லோக செளந்தர்யங்கள் யாவும் அருளின் இறுகிய முகத்தில் ஒரு வினாடி பூத்திருக்கக் கண்டான். இவனும் அருளுக்காக ஒரு பெருமூச்சை உதிர்த்தான்.
ஒரு கணம் தான்!
பிறகு அருள் மாறிவிட்டான். கண்களில் பழைய இறுக்கம் பரவியது. கால்கள் கனவேகமா சைக்கிளை உழக்க வாரம்பித்தன. ஒரு உண்மையான ஊழியன்!
வெகு காலத்திற்குப்பிறகு, இன்று அருமையான சாப்பாடு. எந்த மகராசி கைகளோ! மணக்கிற சமையல். அருள் கைகளை வழித்து வழித்துச் சூப்பியபடி இவனைப் பார்த்து கண்களைச் சிமிட்டி இளித்தான்.
ஒவ்வொரு பெண் கைச்சமையலுக்கும் ஒவ்வொரு ருசி இருக்கிறது. என்றாலும் அம்மாவின் எளிமையான சமையலின் ருசி வேறெவருக்கும் வாய்க்காது. அம்மா கையால் வெந்நீர் தந்தாலே அதற்குத் தனி ருசி இருக்கும். மெல்ல இருள் சூழும் போதுகளில் அம்மா கோவிலால் அவளுக்கு வலுக்கட்டாயமாக வெள்ளைச்சேலை உடுத்தி வன்மத்துடன் வேடிக்கை பார்த்தன. அம்மா தலை முழுகி, ஈரக்கூந்தலை நுனியில் முடிந்து போட்டபடி ஒவ்வொரு நாள் மாலையிலும் கூந்தலிலிருந்து நீர் சொட்டிச் சொட்டி வெள்ளைச்சேலையின் பின்புறம் நனைந்தபடி தோற்றம்காட்ட, அம்மன் கோயில்களைத் தேடிப்போக ஆரம்பித்தாள்.