Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 17 - 33 minutes)
1 1 1 1 1 Rating 4.94 (17 Votes)
Pin It

என் உயிர் தோழி - ப்ரீத்தி

enuyirthozhi

ன்று போல் அடுத்தடுத்து கட்டப்பட்டிருந்த காலனி வீடுகள், 5 மணி ஆகியும் சூரியன் வெளியே எட்டிப்பார்க்கலாமா வேண்டாமா என்று யோசனையில் இருக்க, மார்கழி காற்று உடலை சிலிர்க்க வைத்து கடந்துச்சென்றது. ஒவ்வரு காலனி வாசலிலும் குளிர் தாங்காமல் ஸ்கார்ப்(scarf) ஒன்றை கட்டிக்கொண்டு, போட்டிப்போட்டு வண்ண பொடிகளால் பெரிய பெரிய கோலங்கள் போட்டனர் அழகு பெண்கள். உடல் அசதி தெரியாமல் இருக்க ஒருவருக்கொருவர் கதை பேச கைகள் மட்டும் வண்ணமயம் காட்டியது.

““எப்படி அக்கா இவ்ளோ அழகா கோலம் போடுறிங்க?, நானும் எவ்வளவு ட்ரை பண்ணாலும் உங்களை மாதிரி வரமாட்டிங்குது”” என்று கொஞ்சம் புலம்பிக்கொண்டே கோலம் போட்டாள் பக்கத்து வீட்டுபெண், மீரா.

எதுவும் பதில் கூறாமல் ஒரு புன்னகை மட்டும் வீசித் தொடர்ந்து கோலம்ப் போட்டார் சாருமதி. பேருக்கு ஏற்றார்போல் வட்டமான மதி போல் இருந்த முகம் இருட்டிலும் பிரகாசித்தது. கோலம் முடிந்து திருப்தியுடன் அதை பார்த்து ரசித்துவிட்டு காலை வேலையை தொடர வீட்டினுள் சென்றாள் சாரு. தொலைக்காட்சியில் சாமிப்பாடலை பாடவிட்டு குளித்து கையில் காபியுடன் அறைக்கு சென்றாள். வேலை முடித்து அயர்ந்து தூங்கும் தன் கணவனை சில நொடிகள் கண்களால் புகைப்படம் எடுத்தவள் மெதுவாக அஷோக்கை எழுப்பினாள்.  

கண் விழித்து பார்த்தவனோ சில மணித்துளிகள் மயங்கிதான் போனான், திருமணம் நடந்து 7 வருடங்கள் ஆயினும், 6 வயதில் ஒரு பெண் குழந்தை வந்த பின்பும் சாருமதியின் அழகு மட்டும் குறையவேயில்லை, திருமணத்தன்று பார்த்தது போல் இன்றும் அவளது முகம் என்றும் மங்காத நிலவொளியாக பிரகாசித்தது... அவளை காணும்ப் பொழுதெல்லாம் “மதி என் மதி” என்று அசோகின் மனம் பறைசாற்றும்... விடியல் பொழுதில் இப்படி அஷோக் தன்னை மயங்கி பார்ப்பதும் அதற்காகவே காத்திருந்தார் போல் சாருவின் கன்னம் சிவப்பதும் என்றும் நடக்கும் வாடிக்கை ஆனது... ஒருவழியாக எல்லா கொஞ்சல்களும் முடிந்து சாரு மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்தாள்.

சாருமதிக்கு உணவு தயாரிப்பதில் உதவ முடியாவிட்டாலும் முடிந்தவரை அஷோக் உதவுவான். என்றும் போல் அன்றும் அவர்களது மகள் ரதியை குளிக்க வைத்து தானும் குளிக்க சென்றான். அஷோக் ஒரு தனியார் தொழிற்சாலையில் மேனேஜராக பணிப்புரிந்து வருகிறான். ரதியும் அருகில் உள்ள பள்ளியில் 2 ஆம் வகுப்பு பயின்று வந்தாள்.

“”அம்மா அம்மா இன்னைக்கு கேசரி செஞ்சிங்களா? ப்ரியாவுக்கும் சேர்த்து வையுங்க அவளுக்கு நீங்க செய்த கேசரினா ரொம்ப பிடிக்கும் அம்மா...”” என்று தலையை ஆட்டி ஆட்டி பேசும் தன் ரதியை அள்ளி அனைத்து முத்தமிட்டாள் சாரு..

“”நிறையா வச்சிருக்கேன்டா தங்கம், அவளுக்கும் குடுத்துட்டு நீயும் சாப்பிடு சரியா?”” என்று அவளை போலவே தலையை ஆட்டி பேசினாள்.இருவரது செய்கையையும் தூரம் நின்று பார்த்துக்கொண்டு இருந்த அஷோக்கிற்கு யாரை கொஞ்சுவது என்றே புரியவில்லை.

“”ரெண்டு பேருமே இப்படி இருந்தால் எனக்கு யார் பொண்ணு யார் அம்மானே குழம்பிடும்”” என்று கூறி ரதியின் தலையை லேசாக ஆட்டினான்.

இனிமையாக நேரம் கடக்க இருவருக்கும் காலை உணவை பரிமாறிவிட்டு ரதிக்கு தானே ஊட்டிவிட்டாள் சாரு.. வாயில் வாங்கிக்கொண்டே பேசியவள் முழுவதும் ப்ரியாவின் புராணம் தான். அம்மா ப்ரியா அது சொன்னாள், ப்ரியா இது செய்தாள் என்று பேசிக்கொண்டே இருந்தாள். இருவரும் lkg முதல் ஒரே பள்ளியில் படிக்கின்றனர் ரதியின் உயிர் தோழி யார் என்று தூக்கத்தில் எழுப்பி கேட்டாளும் ப்ரியாவின் பெயரை கூறுவாள். சாருவும் ரதிக்காக என்ன செய்தாலும் ப்ரியாவிற்கும் சேர்த்து வைத்து தருவாள். அதே போல் ப்ரியாவும் ரதிக்கு பிடித்தவையை செய்து தருமாறு அவள் அன்னையிடம் கேட்டு வாங்கி வருவாள். இவ்வாறு ஒருவரை விட்டு மற்றவர் இருந்ததில்லை.

ரதியும், அஷோக்கும் பள்ளிக்கும் வேலைக்கும் சென்றபின் சாருவிற்கு மிகவும் போர் அடிக்கும் தொலைகாட்சியில் தொடர்கள் பார்ப்பது சாருவிற்கு பிடிக்காது. அதே போல் அடுத்தவர் வீட்டு விஷயங்களை புரளி பேசவும் பிடிக்காது, எனவே புத்தகங்களை படித்து உலக நடப்பை அறிந்துகொள்வாள். சாரு வறுமையில் வளர்ந்து வந்தமையால் அதிகம் படிக்கவில்லை, வீட்டில் பார்த்த முதல் பையனே அழகாவும் நல்லவனாகவும் இருக்கவும் அஷோக்கை சாருவிற்கு பிடித்துப்போனது. படிப்பறிவு இல்லை என்றாலும் பகுத்தறிவு நிறைய இருந்தது. இருவரும் ஒருவர் மனம் மற்றவர் கோணாமல் வாழ்ந்தனர்.

ள்ளிக்குச் சென்று வரும் ரதியிடம் சாரு நல்ல தோழியாகவே பழகினாள்.

“”இன்னைக்கு என்ன சொல்லிக்குடுத்தாங்க என் தங்கத்துக்கு?””

“”இன்னைக்கா தமிழ்ல 2 பாடல் சொல்லி தந்தாங்க, அப்பறம் இங்கிலிஷ்ல ஒரு பாடம் நடத்தினாங்க”” என்று அன்று நடந்தவையை ரதியும் கூறுவாள்.

இப்படி என்னதான் பழகினாலும் வருடங்கள் செல்ல செல்ல ரதிக்கு சாருவிடம் நட்பு பாராட்ட முடியவில்லை. அதற்கு பெரும்பாலும் சாரு பெரிதாக படிக்காதது ஒரு காரணமாக அமைந்தது. ப்ரியாவின் தாய் நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பதால் அவ்வப்போது படிப்பில் புரியாதவற்றை அவர்தான் சொல்லித்தருவார் என்று பிரியா சொல்லும் போதெல்லாம் ரதிக்கு பொறாமையாக இருக்கும். ரதிக்கு அஷோக் அவ்வப்போது சொல்லி தருவது உண்டு ஆனால் அவள் மனதில் படிந்த எண்ணம் மட்டும் மாறவில்லை.

நாட்கள் வருடங்கள் ஆகி ரதி 5 ஆம் வகுப்பு படித்து கொண்டு இருக்கையில் ப்ரியாவின் தந்தைக்கு வேறு ஊருக்கு பணிமாற்றம் கிடைத்தமையால் ப்ரியா அந்த பள்ளியை விட்டு சென்றாள். அவ்வளவுதான் அன்று பள்ளி முடிந்து வந்து ரதி பண்ணாத ஆர்ப்பாட்டம் இல்லை இனிமேல் ப்ரியாவை பார்க்க முடியாதாம், அவள் தன்னை அழைக்கவெனத் தந்த தொலைபேசி எண்ணை உபயோகிக்க கூட வீட்டில் ஒரு தொலைபேசி இல்லை என்று அழுது புரண்டாள் ரதி. அவளது அழுகை சிறிது குறையவும் சாரு பேச்சுக்கொடுத்தாள்.

“”ரதி இப்போ என்னடா, ப்ரியாட்ட பேசணும்னு தோணுனா பக்கத்துல இருக்க கடையில போய் ஒரு கால் பண்ணிட்டு வந்திடலாம்டா அழாதமா”” என்று பரிவாக பேசி பார்த்தாள் அப்போதும் அழுகை நிற்கவில்லை.

“”நம்ம வேணும்னா இந்த அரை பரீட்சை முடிந்ததும், ஒரு தடவை போய் ப்ரியாவை அவங்க ஊருல பாத்திட்டு வரலாம்டா அழாதடா கண்ணு”” என்று மீண்டும் கெஞ்சினாள் சாரு.

அவரது கடைசி கூற்றில் முகம் சிறிது தெளிவடைந்தது, அதை கண்ட சாரு “”ம்ம்ம் இப்போ அம்மா சொன்னால் கேட்பல்ல,நானும் உன் ஃப்ரிண்ட் தானே?”” என்று அவர் கையை நீட்ட, “”எனக்கு படிக்காத ஃப்ரிண்ட் ஒன்னும் வேண்டாம்”” என்று கூறி அவரது கையை தட்டிவிட்டாள்.

அவள் கூரியவிதத்தில் மனம் உடைந்து போனது சாருவிற்கு பார்த்து பார்த்து செய்து என்ன பயன்? தன் மகளின் மனதை வெல்ல முடியவில்லையே என்று தோன்றியது. வருத்தபட்டு தலை நிமிர அங்கு அஷோக் நின்றான் அவளது முகவாட்டத்தை கண்டு மனம் வலித்தது. எனினும் சிறு பிள்ளையிடம் பக்குவமாக சொல்லவேண்டும் என்று தோன்ற சாருவின் கைகளை ஒரு கையால் பிடித்துக்கொண்டு ரதியை சமாதானம் செய்தான், ரதியை சமாதானம் செய்வது அஷோக்கிற்கு பெரிய வேலையாக தோன்றவில்லை. ஏனெனில், எல்லா கோவத்தையும் அவள் சாருவிடம் காட்டிமுடித்திருந்தாள்...நாள் போக்கில் சாருவும் ரதியின் கூற்றை மறந்தாள்.

டுத்து சில வருடங்கள் சென்றது... “அம்மா இன்னைக்கு தாரிகா... மேடம் எடுத்துட்டு வர சொன்ன இங்கிலீஷ் நோட்ஸ் கொண்டு வரலைமா அப்பறம் நான் தான் என்னோட தமிழ் நோட்ஸ் குடுத்து அப்போதைக்கு எழுத சொன்னேன், நல்லவேளை மேடம் இன்னைக்கு கரெக்ட் பண்ணலை இல்லாட்டி ரெண்டு பேரும் மாட்டி இருப்போம்”.

“”உனக்கு எத்தனை தடவை ரதி சொல்றது இப்படி ஏமாத்தக்கூடாது கண்ணா, நேர்மையா இருக்க கத்துக்கோ நீயும் கெட்டு அவளையும் கெடுக்காத” என்று அறிவுரை கூற அது காற்றில் தான் சுற்றியதே தவிர ரதியின் காதுகளில் செல்லவில்லை, அதை ஏற்க அவள் முயற்சிக்கவும் இல்லை.

ப்ரியா சென்றபின் தாரிகா தான் ரதியின் உயிர் தோழியானால்... பிரதி பொழுதும் தாரிகாவின் புராணம் ஓடியது. தற்போது ரதி 10ஆம் வகுப்பு படித்தாள்... இந்நிலையில் அஷோக் வீட்டை மாற்றினார் அதன் விளைவாக அதற்கு அருகில் இருந்த பள்ளியில் ரதி சேர்க்கபட்டாள்... முன்பு போலவே இந்த முறையும் அடம் பிடித்தாள் ரதி எப்போதும் தன் தோழிகளை தம்மிடம் இருந்து பிரிப்பதே பெற்றோரின் கடமை என்பது போல் பேசிக்கொண்டே போக, இந்த முறையும் சாரு மனதிடத்தோடு சென்று ஆறுதல் கூறினாள்.

“”அடிக்கடி பார்க்காட்டி என்னடா? எப்போ தோணுதோ அப்போ ஃபோன் பண்ணி பேசலாம் இல்லையா நம்மகிட்டதான் இப்போ ஃபோன் இருக்கே...”” அவரது பேச்சு கொஞ்சம் ஆறுதலாக இருக்க எழுந்து உணவருந்த சென்றனர்.

சிறிது நேரம் அமைதியாக சென்று கொண்டிருக்க சாருவே பேச்சை ஆரம்பித்தாள். “ரதி நான் வேணும்னா ஒரு யோசனை சொல்லவா?” என்று கேட்க அமைதியாக அவளை பார்த்தாள் ரதி.

“”உனக்கு தான் ஃப்ரிண்ட்ஸ் மாறிட்டே இருக்காங்கனு ஃபீல் பண்ணுறல பேசாம நம்ம ஃப்ரிண்ட்ஸ் ஆகிடலாமா? எப்பவும் உன்கூடவே நான் இருப்பேன்ல” என்று அவள் குழந்தை போல் கை நீட்ட ரதி சிரித்துவிட்டாள். “அம்மா dont be silly, நீங்க எப்படி என்னோட ஃப்ரண்டா இருக்க முடியும்?” என்று கூறி அவள் சாப்பிட துவங்கினாள். மீண்டும் மனம் உடைந்து போனது சாருவிற்கு அவருக்கும் சிறு வயதில் இருந்து தோழிகள் என்று கூறிக்கொள்ள யாரும் இருந்தது இல்லை. வறுமையை காட்டியே ஒதுக்கப்பட்டாள் எனவே சொந்த மகளிடமாவது அந்த தோழமை கிடைக்காதா என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது ஒவ்வருமுறையும். இது அனைத்தும் நிகழ்கையில் அஷோக் அங்கு இல்லை அவருக்கு வேலை பளு கூடிக்கொண்டே போனது வீட்டில் செலவிடும் நேரம் குறைந்துப்போனது. களைத்துவரும் கணவரிடம் தன் வாட்டம் காட்ட பிடிக்காமல் மறைத்தாள் சாரு. அவள் கூறாவிட்டாலும் அவளது முகம் கண்டு அவளது மனதைப்படித்த அஷோக் “இன்னைக்கு என்ன சொன்னாள் ரதி?” என்றுக் கேட்டான். சிறிது ஆச்சர்யமாக இருந்தாலும் அஷோக்கின் வார்த்தைகளும் புரிதலும் ஆறுதலை தந்தது.

“அவளை சுத்தி இருக்க நட்பு வட்டாரம் அப்படி மதி அதான் அவளுக்கு உன்னோட அருமை தெரியலை போக போக வேணும்னா பாரு அவளே புரிஞ்சுப்பா, அவள் உன்கூட தோழியா இல்லாட்டி என்ன? நான் தான் உனக்கு நல்ல தோழனா இருக்கேன்ல... ஏன் என்னை உன்னோட தோழனா ஏத்துக்க மாட்டியா?” என்று அவள் முகம் பார்த்து கேட்க அவனது தோளில் சாய்ந்துக்கொண்டாள் அவனது மதி. மகளின் மூலம் ஏற்பட்ட சிறு வருத்தம் இருந்த இடம் தெரியாமல்ப் போனது கணவனது அணைப்பில்...

ருடங்கள் செல்ல செல்ல ரதியை சுற்றி இருக்கும் நட்பு வட்டாரம் பெருகிக்கொண்டே போனது... தோழிகளோடு வெளியே செல்வதும் ஒன்றாக படிப்பதும் என்று நாட்கள் இறக்கை கட்டிப் பறந்தது ரதிக்கு. உயிர் தோழனும் கணவனுமாகிய அஷோக் வீட்டில் இருப்பதே அபூர்வமாக இருக்க, இருக்கும் நேரத்திலும் அசதியில் படுத்து தூங்கி விடுகிறான். இவ்வாறு இருவரும் சாருவை மீண்டும் தனிமையில் விட மனம் சோர்வடையாமல் புது உணவு வகைகள் செய்துப் பார்ப்பதும், புத்தகங்கள்ப் படிப்பதும் என்று நாட்களை கடத்தினாள் சாரு. இந்த தனிமை தன் வலிமையை காட்ட சாருவின் உயிர் தோழனையும் பிரித்துச் சென்றது....

 

 •  Start 
 •  Prev 
 •  1  2 
 •  Next 
 •  End 

About the Author

Preethi

Latest Books published in Chillzee KiMo

 • January to DecemberJanuary to December
 • Kadhalika neramillai kadhalippar yaarumillaiKadhalika neramillai kadhalippar yaarumillai
 • Kalyanam than kattikittu odi polamaKalyanam than kattikittu odi polama
 • Neeyum NaanumNeeyum Naanum
 • Nee thanaaNee thanaa
 • Pennalla pennalla oothapooPennalla pennalla oothapoo
 • Pen ondru kandenPen ondru kanden
 • Gamagamakkum suvaiyana unavugalGamagamakkum suvaiyana unavugal

Add comment

Comments  
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05RamyaRam 2017-10-10 14:48
Just loved it :)
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05Janaki 2017-02-04 22:30
Such a beautiful emotional story :yes:
Keep writing preethi
Reply | Reply with quote | Quote
# AwesomeKiruthika 2016-08-11 17:32
Such a lovely story
Reply | Reply with quote | Quote
+1 # RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05afroz 2014-05-10 15:58
ipo dhan indha kadhaiya padichen.Bt aftr reading it, indha anubavathaiya namma miss pana pathomnu thonuchu. It was amazing. i'm not able to describe it in words. I didnt thnk tht a short story wud carry such strong emotions. But urs did. Kadhaiya padichu mudikumbodhu there were tears in my eyes. I thank u for giving us an opportunity 2 enjoy such a splendid story. HATS OFF 2 U ma'm. Expecting more such stories frm u. (y)
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05Preethi 2014-06-01 14:30
romba romba nandri afroz :thnkx: idhai thavira yenaku yenna solrathunu theriyalai... neenga sollum vaarthaiyula neenga yendha alavuku kadhaiyai rasithu paduchirukinganu puriyuthu... indha maadhiri oru vaazhtthukal yenna innum niraya yelutha thoonduthu afroz romba nandri, yenaku yeppadi solrathunu theriyalai unga comment padikkum pothu ithanai naal yengina yetho kidaitha vitta unarvu, oru periya satisfaction kedachuruku.... kandipa innum niraya kadhaigal ithe pol yezhuthuren... yen thodarkadhai kaattilum intha sirukadhai oru periya pokkisham pola thonuthu meendum romba nandri afroz :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05Preethi 2014-05-10 15:51
indha sirukadhai yen vaazhkaiye maatthi potta unarvu thanthirukku, adhuku mudhal kaaranam unga comments thaan thanks to all readers and yen kadhai paditthu azhutha yela readerskum romba nandri :thnkx: ;-)
Reply | Reply with quote | Quote
# EUTTamil Selvi 2014-05-10 14:23
Very Nice story.... (y)
Romba emotional la iruthathu...
padikum pothu kannu kalanguthu...
there is no words to explain..hw i am feeling now...
Reply | Reply with quote | Quote
# RE: EUTPreethi 2014-05-10 15:49
romba nandri tamil selvi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05sahitya 2014-04-14 22:05
romba arumai...naan azhuthitae than en comments anupuraen.............
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05Preethi 2014-05-10 15:49
yenna solrathu sahitya, vaarthaiye illa nandri solla. neenga yellarum aluthittenu sollum pothu yen kadhai ungala yendha alavukku thottirukkumnu ninaikkum pothu yenakku magilchiya irukku...romba nandri :thnkx:
Reply | Reply with quote | Quote
# EUTlucki 2014-03-11 14:10
kannu kalanguthu preethi semmmmma
Reply | Reply with quote | Quote
# RE: EUTPreethi 2014-05-10 15:46
romba nandri lucki :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05feroza 2014-01-16 19:43
superrrrrrrrrr dear...very touching story :) tears in my eyes.....i just luv it :) great work keep it up :)
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05Preethi 2014-05-10 15:46
romba thanks fero :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05usha amar 2014-01-12 05:51
என் உயிர் தோழி, என் உயிர் கொடுத்தவள்... என்பதை கதையாக கொடுத்ததற்கு நன்றி ப்ரீத்தி....
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05Bala 2014-01-09 00:02
nice story...
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05Preethi 2014-05-10 15:25
Thanks bala :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05Preethi 2014-05-10 15:27
indha vaaipai thandha ungalukkelam thaan naan nandri sollanum usha :thnkx: indha kadhai yen carrearla romba mukkiya thiruppatthai thandhathu :-)
Reply | Reply with quote | Quote
# என் உயிர் தோழிPreethi 2014-01-08 22:29
Thanks shaji, bhabraj, kowsalya :)
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05shaji 2014-01-08 19:30
super story,
Reply | Reply with quote | Quote
+1 # என் உயிர் தோழிP.Bhabraj 2014-01-08 15:20
ஒரு சிறுகதையில் தாயின் அன்பை ஆழமாகவும் அழகாகவும் வெளிப்படுத்தி இருக்கீர்கள், மனமார்ந்த வாழ்த்துக்கள் ப்ரீத்தி... :)
Reply | Reply with quote | Quote
# kowsalyaKowsalya 2014-01-08 10:22
Excellent.. satrum migai paduthammal pasathai katti irukiringa!!
Reply | Reply with quote | Quote
# என் உயிர் தோழிPreethi 2014-01-08 09:44
unga commentsku romba thanks aadhi, vino, abirami, shanthi :)
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05Thenmozhi 2014-01-08 03:21
Nice story Preethi.

Thank you for participating in the contest...
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05Nanthini 2014-01-08 01:29
அம்மா - மகள் உறவை அழகாக சொல்லி இருக்கீங்க ப்ரீத்தி.
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05Abirami.B 2014-01-08 00:25
Excellent :) I like It :)
Reply | Reply with quote | Quote
# RE: என் உயிர் தோழி - போட்டி சிறுகதை 05Admin 2014-01-07 20:33
Very nice Preethi :)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
ENUN

STST

NAI

VKV

KiMo

KanKad

NSS

VTV

KKP

SNSN

UIP

PVOVN2

NSS

NSS

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi 2

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top