(Reading time: 13 - 26 minutes)

கௌரவக் கொலை - வசந்தி

கௌரவக் கொலை

பாத்து...பாத்து..மெதுவா இறங்கும்மா...இப்பத்தானே செக் அப் முடிச்சிருக்கோம்..டாக்டர் என்ன சொன்னாங்கன்னு நினைவிருக்குல்ல..பதமா நடந்துக்கணும்..வேகமா போகக்கூடாது..புரியுதா சுஜானா”

இப்படிக்கூறிய அத்தையைப் பார்த்த சுஜானா, “ சரிங்கத்த,பாத்து நடந்துக்கறேன்” என்று சொன்னவள் கண்ணில் துளியும் மகிழ்ச்சியில்லை.

மருமகள், மாமியின் பேச்சுக்களைக் காதில் வாங்கிய ப்ரீத்தியின் குடும்பம் அதிசயப் பட்டது.இப்படித் தாங்குகிறார்களே மருமகளை...சுஜானா ஏதோ புண்ணியம் செய்திருக்கிறாள் என்று தான் நினைத்தனர்.

ப்ரீத்தி, சுஜானாவிற்கு அக்கா உறவு..ஒன்றுவிட்ட சொந்தம்.இவர்கள் வீட்டு வழியாக செல்ல நேர்ந்தால், கண்டிப்பாக ஒருமுறை எட்டிப்பார்ப்பது வழக்கம்.ப்ரீத்திக்கும்,சுஜானாவிற்கும் நல்ல புரிதல் உண்டு..அக்கா அக்கா என்று பிரியமாக அழைத்துத் தன் மனக்கவலைகளையும் பகிர்ந்து கொள்வாள் சுஜானா.

சுஜானா...பெயருக்கேற்றபடி நல்ல பெண்..மிக மிக நல்ல பெண்..கணினித்துறையில் எம் இ முடித்தவள். படித்த களை முகத்தில் தெரிந்தாலும் அதைக் கடுகளவு கூட வெளிக்காட்டாது பிறரிடம் பழகுவாள். நல்ல வசதியான வரன் என்று வந்த கணேஷிற்கு மணமுடித்துக் கொடுத்தனர் அவள் பெற்றோர்.

ஆரம்பத்தில் அவள் வாழ்க்கை சீராகத்தான் சென்று கொண்டிருந்தது.ஒரு வருடம் வரையில் எந்தப் பிரச்சினையுமில்லை.கணேஷும் அவளை நன்றாகத்தான் பார்த்துக் கொண்டான்.வேலைக்கு அனுப்ப இஷ்டப்படாததால், அவள் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையைத் திருமணமானதும் ராஜினாமா செய்து விட்டாள்.

கமலம்..கணேஷின் தாய்..திருமணம் முடிந்து ஓராண்டு கழிந்ததும் குழந்தை குறித்து பேசத் தொடங்கினார்.அதுவரை, குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போட்டிருந்த தம்பதிகளும், வாரிசு பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.ஆனால்...

சுஜானாவுக்கு இரண்டு மூன்று முறை கரு தங்கிப் பின் கலைந்துவிட்டது.அதனால் ப்ரீத்தியின் யோசனைப்படி மருத்துவரை அணுகவே, அவர் சுஜானாவின் கருப்பை சற்றே பலமின்றி இருப்பதாகவும், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிவிட்டார்.

இப்படியே, நான்கைந்து ஆண்டுகள் கழிந்து இன்னமும் ட்ரீட்மென்ட் எடுக்கிறாள் சுஜானா..முதல் இருமுறை ஏதும் சொல்லாமல் இருந்த கமலம்,சுஜானாவை வார்த்தை அம்புகளால் துளைக்கத் தொடங்கினார்.

ஒவ்வொரு முறை கரு தங்காமல் போகும்போதும், “என்னன்னு தான் வளர்ந்தியோ உங்க வீட்டுல, உருப்படியா வளர்ந்திருக்கக் கூடாது...ஒரு வேலை செய்ய துப்பில்லை...காரணம் கேட்டா, டாக்டர் சொல்லியிருக்காங்க வேலை செய்யக்கூடாது..அப்படி இப்படின்னு சொல்லுவ, ம்ஹ்ம்...எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கப் பாரு...வயசாகுது..அக்கடான்னு உட்காந்தோம்னு இல்லாம, உனக்கும் சேத்து வடிச்சுக்கொட்ட வேண்டியிருக்கு..எல்லாம் என் தலையெழுத்து”

“இதுக்குத்தான் முதல்லேயே சொன்னேன்..என் தங்கச்சிப் பொண்ண கணேஷுக்கு கட்டலாம்னு...நீ கேட்டாத்தானே...படிக்கலன்னு சொல்லி ஓரங்கட்டின..இப்ப படிப்பா வந்து முன்னால நிக்குது...இப்பப் புலம்புற...நல்லா அனுபவி” என்று கமலத்திற்குப் பின்பாட்டுப் பாடி தன் மனக்குறையைத் தீர்த்துக் கொண்டார் கமலத்தின் கணவர் சந்திரன்.

“ம்க்கும்...இதக் குத்திக்காட்ட இதுதான் நேரம் பாருங்க...சொல்ல வந்திட்டார்.. இங்க பாருங்க...நாம இதுக்கு சாப்பாடு போடத்தான் முடியும்..வைத்தியச் செலவெல்லாம் பாக்க முடியாது.ஒழுங்கு மரியாதையா அவ அப்பன் வீட்டுல இருந்து ஆகற செலவெல்லாம் பைசா விடாம வாங்கிட்டு வரச் சொல்லுங்க..புரியுதா”

“அத ஏன் என்கிட்டே சொல்ற..அவகிட்ட சொல்லி, அவ வீட்டுல கேக்கச் சொல்லு”

உள்ளறையிலிருந்து கண்ணீருடன் கேட்டுக்கொண்டிருந்த சுஜானாவிடம்,“இதப்பாருடி நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ தெரியாது..இதுவரைக்கும் ஆன செலவுக்கணக்கு என்கிட்டே இருக்கு..அதுபடி உங்க அப்பன்கிட்ட சொல்லி அனுப்பச் சொல்லு..புரியுதா” என்றவர் ஒரு பெருந்தொகையை அவளிடம் கூறினார்.

அதைகேட்டுத் திகைத்த சுஜானா, “அத்தை, இவ்ளோ நாள் எங்க அப்பா குடுத்தாங்களே..இப்ப மறுபடியும் அதிகமாப் பணம் கேட்டா...திடீர்னு எப்படி அத்தை” என்று தடுமாற,

“திடீர்னு என்னடி திடீர்னு...இத்தனை வருஷமா புள்ளை பிறக்கலன்னதும் உன்னப் பெத்தவங்க எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்ல..இதோப் பாருடி...உன்னைக் கட்டிவச்சு என் மகன் வாழ்க்கையை நான் நாசமாக்கிட்டேன். பேர் சொல்ல ஒரு புள்ள இல்ல உனக்கு..ஊருல எல்லாரும் என்ன கமலம் உன் மருமக வயித்துல ஒன்னும் தங்கலயாமேன்னு கேக்கும்போது, எனக்கு நாக்கப் புடுங்கிட்டு சாகலாம் போல இருக்கு...நியாயமாப் பாத்தா நீதான் அதச் செய்யணும்..நீந்தான் குத்துக்கல்லு மாதிரி இருக்கையே...போதாக்குறைக்கு என் மகனுக்கு வேற கெட்ட பேரு..நீ மலடாப் போயிட்ட..ஆனா பாரு பழி என் புள்ளை மேல..இப்படியே போச்சுன்னு வை..உன்னைய அத்துவிட்டுட்டு வேற கல்யாணம் பண்ணி வச்சிருவேன் பாத்துக்க” என்று மிரட்டினார் கமலம்.

“அத்தை..நான் என்ன தப்பு செஞ்சேன்...இப்படிப் பேசறீங்களே..நான்...”

“இதோ பாரு சுஜானா, புள்ளை பொறக்கலைன்னா தப்பு உம்பேருல தான்..எனக்கு வாரிசு முக்கியம்..அதுக்காக நான் என்ன வேண்ணா பண்ணுவேன்”

“அத்தை, எனக்கு மட்டும் ஆசையில்லையா...இதுக்காக இத்தனை வருஷமா எத்தனை சித்திரவதையை அனுபவிக்கேன்னு உங்களுக்கேத் தெரியுமே..ஒவ்வொரு தடவையும் எத்தனை டெஸ்ட், எத்தனை மருந்துன்னு என் உடம்பு பூரா குத்திக் குத்தி ரணப்பட்டுத்தானே அத்தை வரேன்..இது உங்களுக்குப் புரியலையா?”

“அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்..நீ வாங்கி வந்த வரம் அப்படி..ஆளப்போல நீயும் பெத்துக்குடுத்திருந்தா இந்த கஷ்டம் ஏன் படணும்..அதுக்கு வழி இல்லன்னும் போது அனுபவிச்சுத்தானே ஆகணும்”

“இதுல என் தப்பு என்ன இருக்கு அத்தை..என்னோட கருப்பை உறுதியா இல்லாமப் போனது,ஆண்டவன் பண்ணினத் தப்பு..அதத் தீக்கத்தான் இவ்வளவு போராடறேன்..நீங்க எனக்கு உறுதுணையா இல்லாம இப்படில்லாம் பேசி என்னைக் கஷ்டப்படுத்துறீங்களே..உங்க பொண்ணுக்கு இப்படி ஆகிருந்தா இப்படிதான் பேசுவீங்களா”

 

“ஐயோ ஐயோ என்னமாப் பேசறா..இங்கப் பாத்தீங்களா..இவ அடிக்கற வாய...என் பொண்ணுக்கு ஏன் அப்படி ஆகப் போகுது...இதோ பாரு..இப்படிப் பேசற வேலை இனி வச்சுக்காத...இன்னிக்கு ஆஸ்பத்திரிக்குப் போறது தான் கடைசி...திரும்பவும் பழைய குருடி கதவத் தொறடின்னு ஆச்சுன்னு வச்சுக்க...அப்புறம் இந்த கமலத்தோட இன்னொரு பக்கத்தைப் பார்ப்ப..புரியுதா?சும்மா அழுது வடியாம ஆஸ்பத்திரிக்குக் கிளம்புற வழியப் பாரு”

இப்படி மிரட்டிவிட்டு, டாக்டரைப் பார்த்துவிட்டு வரும்வழியில் தான் ப்ரீத்தியின் வீட்டுக்கு வந்திருந்தனர் சுஜானா குடும்பத்தினர்..

கர்ப்பத்தை உறுதி செய்ததால் தான் அப்படிப் பார்த்து நடக்கச் சொல்லி உறவினர்கள் முன்னிலையில் தாங்கினார் கமலம்.

ப்ரீத்திக்கு கமலாம்மாவின் குணம் தெரிந்தாலும், இந்தக் கவனிப்பைக் கண்டு வியக்கத்தான் செய்தாள்.

சுஜானாவைப் பார்த்த மற்ற உறவினர்களோ, “அவளுக்கென்ன, தாங்கு தாங்குன்னு தாங்க மாமியார் அமைஞ்சிட்டா..நமக்கென்ன அப்படியா..சொல்லு” என்றும், “எப்பப் பாரு கார் சவாரி தான் அவளுக்கு..அலுங்காம குலுங்காம தான் பாத்துக்கறாங்க..ஆனா பாரு ஒரு வாரிசு கிடைக்கறது குதிரைக்கொம்பா இருக்கு” என்றும் பொறாமை பாதி அக்கறை பாதி என்ற அளவில் கலந்து பேச்சு நடந்தது.

உண்மையில் நரக வேதனையை உடலாலும் மனதாலும் அனுபவித்தாள் சுஜானா என்பது யாருக்கும் தெரியவில்லை...கணேஷ் உட்பட...ஏனென்றால் காருக்கு ஊற்றும் பெட்ரோல் காசு கூட சுஜானா தாய் வீட்டினரிடம் பெற்றுக் கொடுக்க வேண்டும். அடுத்த மாதம் பொங்கல்...திருமணமானது முதல் பொங்கல் படி என்று லிஸ்ட் போட்டு அதையும் வாங்கிவிடுவார்கள்.

மாமியாரின் சுடு சொற்கள்  அவளைக் காயப்படுத்திய போது கணவனின் துணையை நாடினாள் அந்தப் பேதை..ஆனால் அவனோ, “அவங்க அப்படிதான் சொல்லுவாங்க..நீ ஒழுங்கா ஒரு குழந்தையைப் பெறும் வரைக்கும் அம்மா சொல்றதக் கேட்டுதான் ஆகணும்” என்று சொல்லிவிட்டான். அத்தோடு இவளிடம் பாராமுகம் காட்டவும், கூடவே சுடுசொற்களையும்  சொல்லத்தொடங்கினான் கணேஷ்.

சாய்ந்து கொள்ளும் தோள் அவன் என்று நினைத்த சுஜானா, தேள் போன்ற கொட்டும் வார்த்தைகளால் புண்ணாகிப் போனாள்.

தெய்வம் இந்த முறையும் அவளைச் சோதித்து விட்டது..ஆம் ஐந்து மாதத்தில் சிசு அழிவைத்தேடிக்கொண்டது.இதோடு ஏழுமுறை...ஏமாற்றம் அவளுக்கு..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.