(Reading time: 3 - 5 minutes)

நம்பிக்கை - அனிதா

நம்பிக்கை

ர் அழகிய சோலையில் தென்றலின் மீது காதல் கொண்டது அழகிய கிளி. கிளியின் காதல் அமைதியான அன்பு கொண்டது. கிளி தொலைவில் இருந்த படியே தென்றலை ரசித்துக் கொண்டிருந்தது. கிளி தன் காதலை தென்றலிடம் உரைப்பதற்கு சற்றும் முயற்சி செய்யவில்லை. கிளிக்கு காதல் கொண்டதன் காரணமும் பு¡¢யவில்லை,அதனை உரைக்காததற்க்கும் காரணம் தொ¢யவில்லை. அது ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டே போனது எல்லை இல்லாமல். கிளி தனது காதலை உரைத்திருந்தால் தென்றல் ஒப்புக்கொண்டிருக்கும் வாய்ப்பு இருகிறது. ஏன்னெனில் தென்றல் அதுவரை யார் மீதும் காதல் கொண்டிருக்கவில்லை. ஆனால் எதோ தடுத்தது கிளியை. தென்றலும் குயிலும் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. நெருங்கிய உறவுகளின் விருப்பப்படி இருவரின் வாழ்க்கையும் முடிவு செய்யப்பட்டது இருவரின் சம்மத்ததோடு. இருவருக்கும் காதல் மலர்ந்தது. நடந்த எதையும் அறியாத கிளி தென்றலிடம் அப்போது தான் பேசத்தொடங்கியது. தன்னை காதலிப்பது தெரியாமல் நட்பு பாரட்டியது தென்றல் கிளியிடம். கிளியின் மீது இனம் புரியாத அக்கரை தென்றலுக்கு. இருவரின் நட்பும் வளர்ந்துகொண்டே போனது.  கிளியின் காதலும் வளர்ந்து கொண்டே போனது.

கிளியின் பார்வையை வைத்து சந்தேகம் கொண்ட தென்றல் கிளியிடம் கேட்டது. கிளி அப்போதும் தன் காதலை மறைத்தது. தென்றல் அப்படி எதுவும் ஆகி விட கூடாது என்பதற்காக குயில் மீது தனக்கு இருக்கும் காதலை உரைத்தது கிளியிடம். கிளி கொண்ட வலிக்கு அளவே இல்லை. இதன் பிறகு தனது காதலை உரைக்கும் எண்ணத்தை கைவிட்டது கிளி. ஆனால் தென்றலை மறப்பதை பற்றி சிறிதும் யோசித்து கூட பார்க்கவில்லை. கிளியின் பேச்சு மற்றும் செய்கையில் இருந்து தன் மீது கிளி கொண்டிருக்கும் காதலை உணர்ந்த தென்றல் மறுபடியும் கேட்டது. ஏதோ நினைவில் ஒப்புக்கொண்டது கிளி தனது காதலை. ஒப்புக்கொண்டதன் காரணமும் அறிந்திருக்கவில்லை கிளி.  கிளி தன்னை மறப்பதற்கு முயற்சி செய்தது தென்றல். கிளியின் உள்ளம் அனைத்தையும் அறிந்திருந்தாலும் தென்றலை மறப்பதை மட்டும் அறிந்திருக்கவில்லை போலும். . . கிளியின் மனம் தடுமாறியது. தென்றலின் அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்தது. முடிவுதான் என்ன. . . . ?

இரண்டு முடிவுகள் (நம்பிக்கை, விடா முயற்சியை பொறுத்து)

1). கிளி இறுதி வரை உண்மையான காதலோடு இருந்திருந்தால். குயிலின் சம்மதத்தோடு தென்றலோடு சேர்ந்திருக்கும். ஏனெனில் கிளியின் காதல் உயர்ந்தது. கிளியின் நம்பிக்கையும் பெரியது. உண்மைக்கு என்றுமே வெற்றி தான்.

2). கிளி தன் காதலை மறந்து விட்டிருந்தால் தோல்வியில் முடிந்திருக்கும். ஏனெனில் கிளிக்கு நம்பிக்கையும் இல்லை. முயற்சியும் இல்லை.

                                                               

முயற்சி திருவினையாக்கும். முயன்றால் சாதிக்க முடியும். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.