(Reading time: 5 - 9 minutes)

கண்ணோடு காண்பதெல்லாம்... - நிலா

Kannodu kanbathellam

வானவில் காதலி பிரிந்து சென்ற சோகத்தில் வானம் துளித்துளியாய் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது.நீராடிய பூக்கள் புது அழகுடன் புன்னகைக்கும் மாலை வேளையில் அப்பூவைச் சூடியிருந்த பூமிப்பெண் பேரழகியாய் திகழ்ந்தாள்.தென்றல் அவளுக்கு கவரி வீசி சேவை செய்தது.திங்களும் அவள் முகம் காண வானில் வந்தது.

 

கோவை மாநகரம்.பீளமேடு பகுதி.ஜெயம் டியூசன் சென்டர்.

 

"எக்ஸ்க்யூஸ் மீ "

 

"எஸ்"என தான் எழுதிக் கொண்டிருந்த கரும்பலகையில் இருந்து திரும்பினாள் சஞ்சனா.

 

கதவருகில் நின்றவனிடம் ஒரு கண்டிப்பான பார்வையுடன் சென்றவளிடம்,"ஹலோ மேம்!இன்ஜினியரிங் மேத்ஸ் மட்டும்தான் சொல்லிக் கொடுப்பீங்களா"என பவ்யமாக வினவினான்.

 

"இங்க எதுக்கு வந்தீங்க"என்றாள் குரலைத் தணித்து.

 

"ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்"

"கிளாஸ் முடிஞ்சவுடனே பேசலாம்"

 

"கிளாஸ் எப்ப முடியும்"

 

"இன்னும் அரைமணி நேரம் ஆகும்"

 

"ஓகே.பை"

 

மீண்டும் சென்று விட்ட கணக்கைத் தொடர்ந்த சஞ்சனா ஏதோ தோன்றவும் திரும்பி கதவைப் பார்த்தாள்.

 

கதவருகே மறைந்து நின்றிருந்தவன் அவள் பார்ப்பதைக் கண்டு மறைத்து வைத்திருந்த சிவப்பு ரோஜாவை எடுத்து நீட்டினான்.தனது மாணவர்களிடம் ஒரு பார்வையை செலுத்தியவள் சுட்டு விரலை நீட்டி அவனை எச்சரிக்க கண்சிமிட்டி சிரித்துவிட்டு மாயமானான் சஞ்சனாவின் உள்ளம் கொண்ட கள்வன்.மீண்டும் கரும்பலகையிடமே தஞ்சமடைந்தாள் சஞ்சனா.

 

"ஓகே ஸ்டூடண்ட்ஸ்,எதாவது டவுட் இருந்தா நாளைக்கு டிஸ்கஸ் பண்ணலாம்"

 

குப்பு முடிந்து அருகிலிருந்த தனது வீடு நோக்கி நடந்தாள் சஞ்சனா.

 

"அபி!அபி"என்று அழைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்த சஞ்சனாவை காபியின் நறுமணம் வரவேற்றது.

 

"இஎம் மேம்!முதல் காபி குடிங்க!ஆறிடும்"

 

"வரவர உன் விளையாட்டுக்கு அளவில்லாம போயிட்டிருக்கு"என்று கணவனின் காதைப் பிடித்து திருகினாள் சஞ்சனா.

 

"சஞ்சு!ஸ்கூல் டீச்சர் மாதிரி நடந்துக்காதே!காலேஜ் லெக்சரர் மாதிரி நடந்துக்கோ"

 

"அது உனக்கு இப்பதான் ஞாபகம் வருதா?"

 

"நான் என்ன பண்ணேன் சஞ்சு!மழை வருதேனு அக்கறையா உன்னை கூப்பிட்டு வரலாம்னு வந்தேன்"

 

"அடடா!என்ன ஒரு அப்பாவித்தனம்!நாலு எட்டில வர்ற வீட்டுக்கு இவர் கூப்பிட்டு வர்றாராம்”

 

"உன் புருஷை நீயே செவிடாக்கிடாதே சஞ்சு!ப்ளீஸ் காதை விடேன்!உன் கூட மழையில டூயட் பாடலாங்கிற ஆசையில வந்தேன்”

 

வலியில் துடிப்பது போல் அபராஜிதன் பாவனை செய்ய,"திருடா!நீ மாறவே மாட்டே"எனச் சிரித்தாள் சஞ்சனா.

 

"காபி இஎம் மேம்"

 

"அடி வாங்குவே அபி"

 

"சாரி சஞ்சு!முதல் காபியை குடி!எப்படியிருக்குனு சொல்லு"

 

தொலைக்காட்சியில் மழைப்பாடல்கள் பாடிக் கொண்டிருக்க அதை ரசித்தவாறே காபியை பருகினர் இருவரும்.

 

"என்ன அபி ஒரே ரியல் எஸ்டேட் விளம்பரமா இருக்கு!இப்படி இன்ஸ்ஸடால்மென்ட்ல இடம் வாங்கிறதெல்லாம்  ஒத்து வருமா அபி"

 

"பக்கத்துல போய் பார்த்தாதான் தெரியும் சஞ்சு!சுலப தவணை,இலவச பரிசுகள்னு என்னென்னவோ விளம்பரம் பண்றாங்க!கண்ணுல பார்க்கிறதை அப்படியே நம்பாம உண்மையை ஆராய்ஞ்சு தெரிஞ்சுக்கனும்"

 

"ம்.நாமதான் உஷாரா இருக்கனும்!தங்க காசு,ஈமுகோழினு எவ்வளவு பார்த்துட்டோம்"

 

"ஆனாலும் தொடர்ந்து ஏமாந்துட்டுதான் இருக்காங்க சஞ்சு"

 

"அதென்னவோ உண்மைதான் அபி!நாம கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை முதலீடு செய்யறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு பல தடவை யோசிக்கனும்!சாதக பாதகங்களை அலசிப் பார்க்கனும்"

 

"ஆமாம் சஞ்சு!என் பிரெண்ட் ஒருத்தன் தெரிஞ்சவங்க சொன்னாங்கனு சொல்ல சொல்ல கேட்காம நாலு சைட்டுக்கு இன்ஸ்ஸடால்மென்ட்ல பணம் கட்டிட்டு இருந்தான்!அவனால தொடர்ந்து கட்ட முடியாம போயிடுச்சு!பணத்தை திருப்பி கேட்டதுக்கு தர முடியாதுனு சொல்லிட்டாங்க"

 

"பாவம்!பணத்தை கொடுத்துட்டா வாங்கவே முடியாது அபி"

 

"ம்.அவன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் அவங்க அலட்சியமா பேசி அனுப்பிட்டாங்க சஞ்சு!போலீஸ்ல கம்ப்பிளெயின்ட் பண்ணலாம்னு சொல்றோம்,அதையும் கேட்க மாட்டீங்கறான்"

 

"ம்"

 

"நடுத்தர மக்கள் அவ்வளவு சீக்கிரம் போலீஸ்கிட்ட போக மாட்டாங்க!அதுதான் ஏமாத்தறவங்களோட பலமே சஞ்சு"

 

"அப்புறம் என்ன ஆச்சு அபி"

 

"பிரெண்ட்ஸ் நாலைஞ்சு பேர் சேர்ந்து போய் மிரட்டலா கேட்டோம்!அப்புறம்தான் கொடுத்தாங்க"

 

"ம்ம்...இப்படி கட்ட முடியாம,பணத்தையும் திரும்ப வாங்க முடியாம எவ்வளவு பேர் கஷ்டப்படறாங்களோ"

 

"இப்ப தெருவுக்கு தெரு ரியல் எஸ்டேட் ஆபிஸ்தான்!கவர்ச்சியான விளம்பரங்கள் வேற!கண்கள் சொல்றதை நம்பாம,அறிவு காட்டற பாதையில போனா எந்த ஏமாற்றங்களும் ஏற்படாது"

 

"சூப்பர் அபி"

 

"என்னவோ குறையுதே"

 

"இப்ப ஓகேவா"என அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் சஞ்சனா.

 

"டபுள் ஓகே"

 

"சஞ்சு!எனக்கு காபி வேணும்"

 

"ஏன் அபி!இப்பதானே குடிச்சே"

 

"குடிச்சேன்..அது சுமாராயிருந்துச்சு!காபி குடிச்ச மாதிரியே இல்லை"

 

"நல்லாதான் இருந்துச்சு!சரி இரு!இரண்டு நிமிஷத்தில வரேன்"

 

"தேங்க்ஸ் சஞ்சு"

 

ஞ்சனா சமையலறைக்குள் நுழைய நான்கு பர்னர் ஸ்டவ்வின் மீது வைக்கப்பட்டிருந்த ஒற்றை சிவப்பு ரோஜா அவளை அழைத்தது.இதழ்களில் தவழ்ந்த புன்னகையோடு அதை கையில் எடுத்தாள் சஞ்சனா.

 

"லவ் யூ சஞ்சு"காதோரம் அபராஜிதன் குரல் கிசுகிசுத்தது.

 

"மீ டூ அபி"

 

"இந்த மாதிரி ஒரு மழை நாள்லதான் நாம சந்திச்சோம் சஞ்சு"

 

"மறக்க முடியுமா அபி"

 

"ஓர் மழை நாளில்

சந்தித்தேன்

என் தேவதையை"

 

"ஆரம்பிச்சுட்டயா"என்றவள் சிரிக்க.

 

"மழை பரிசளித்த தேவதை!

என் காதல் காரிகை"

 

"ஆஹா!ஓஹோ"

 

"போ நீ என்னை கிண்டல் பண்றே"

 

"அச்சோ!என் அபியை நான் கிண்டல் பண்ணுவனா?நீ என்ன சொன்னாலும் எனக்கு கவிதைதான் கண்ணா"

 

பின்கதவைத் திறந்து அதன் படியில் அமர்ந்து சாரல் மழையை ரசிக்கத் தொடங்கினான் அபராஜிதன்.அவனருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்தாள் சஞ்சனா.மழையின் அழகு கூடியதாகத் தெரிந்தது அபராஜிதனுக்கு.நெஞ்சமிரண்டும் கதை பேசிட,விழிகள் காதல் கணை பாய்ச்சிட தொடங்கிய காதல் மழை நில்லாமல் பெய்திடும்,வாழ்வு வளம் பெறும்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.