(Reading time: 9 - 18 minutes)

உன்னிடம் மயங்குகிறேன் - நிலா

உன்னிடம் மயங்குகிறேன்

ங்களை ரொம்ப பிடிச்சிருக்கு!கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறேன்”

 

நரேந்திரன் கூறியது என்னவோ ஒருமுறைதான்!ஆனால்,ரதிப்ரியா அவன் பேச்சை ஓராயிரம் முறை தனக்குள் ஒலிபரப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் காதருகில் காகமொன்று விடாமல் கரைந்ததில் அவள் கவனம் மீண்டது.பொறியலுக்காக பறித்துக் கொண்டிருந்த முருங்கைக் கீரையை வேகமாய் பறிக்கத் தொடங்கினாள்.

 

கடவுளே!இது என்ன?இத்தனை நாட்கள் இல்லாமல் என் மனம் புதிதாக இப்படித் தடுமாறுகிறது??

 

ஒரு ஐந்தாறு முறை கடைக்கு வந்திருக்கிறான்!அவ்வளவே!!எது அவனிடம் என்னை ஈர்க்கிறது?அவனுடைய தோற்றமா,கண்களை நேராகப் பார்த்து பேசும் பண்பா?அவன் கண்களில் குடி கொண்டிருக்கும் கனிவா?

 

போதும்!போதும் ரதி!அவனைப் பற்றி யோசிக்காதே!!சொன்னால் கேட்டு விடுமா காதல் மனது? ஏற்கனவே சலனப்பட்டிருந்த மனது அவன் மணக்கக் கோரியதும் முழுதாய் அவனைச் சரணடைந்து விட்டதோ??

 

“வாங்கம்மா!உட்காருங்க!”

 

தாயார் யாரையோ வரவேற்பது கேட்க,தேநீர் தயாரிப்போம் என பின்கதவு வழியாக சமையலறைக்குள் நுழைந்தாள் ரதிப்ரியா.மூன்று அறை கொண்ட சிறிய வீடென்பதால் கூடத்தில் பேசுவது ரதிப்ரியாவிற்கு தெளிவாகவே கேட்டது.

 

“என் பேர் கோதை.இவன் என் பையன் நரேன்”

 

அடக்கடவுளே!!வீட்டிற்கே வந்து விட்டானா??நான்தான் திருமணத்தில் எல்லாம் நாட்டமில்லை என்று தெளிவாக சொல்லி விட்டேனே!!

 

“என் கணவர்...இவன் அஞ்சாவது படிக்கும் போது...ஒரு தீ விபத்தில இறந்துட்டார்”

 

தழுதழுத்த அவர் குரல் சமன்பட சில நிமிடங்கள் பிடித்தது.

 

ரதிப்ரியாவின் உள்ளம் நரேந்திரனுக்காக கண்ணீர் சிந்தியது.ஐயோ பாவம்!அத்தனை சிறிய வயதில் தந்தையை இழந்து விட்டானா?

 

அங்கு நிலவிய அமைதியை கலைத்து,“சமையல் வேலையும்,தையல் வேலையும் செஞ்சு ஓரளவுக்கு இவனை படிக்க வைச்சிருக்கேன்!இன்னைக்கு அவனே சொந்தமா டிராவல் ஏஜென்சி வைச்சிருக்கான்!கை நிறைய சம்பாதிக்கிறான்!ஒரு கல்யாணத்தை பண்ணிட்டா என் கடமை முடிஞ்சுது”

 

தன் கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்தார் மங்களம்.மங்களமும்,வாஞ்சிநாதனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.அவர்கள் பார்வை தாங்கள் ஒரு நல்ல பெற்றோராக இல்லையே என்ற ஏக்கத்தை சுமந்து நின்றது.

 

“உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னான்!அதான் உடனே கிளம்பி வந்தேன்”

 

தாயாரின் பார்வையில் கூடத்திற்கு வந்து கரங்களைக் குவித்து பணிந்தாள் ரதிப்ரியா.

 

“ரதியேதான்”என அவள் கன்னம் தொட்டு திருஷ்டி கழித்தவர்,“உள்ள போடா கண்ணு”என அனுப்பி வைத்தார்.

 

“நரேன் சொல்லும் போதே எனக்கு ரதியை பிடிச்சு போச்சு!எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை!நான் உங்க பொண்ணை என் பொண்ணு மாதிரி பார்த்துக்குவேன்!யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க”

 

ன்று இரவு.

“என்னங்க...அழறீங்களா”

 

“நான் செஞ்ச தப்பை நினைச்சு அழறேன்!அம்மா,அப்பா பேச்சை,உன் பேச்சை யார் பேச்சையும் கேட்காம செஞ்ச பாவத்தை நினைச்சு அழறேன்”

 

“ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க!அதையெல்லாம் மறந்திடுங்க”மங்களம் கணவனைத் தேற்ற.

 

“என்னோட கெட்ட பழக்கங்களாலே நம்ம குடும்பமே சீரழிஞ்சு போச்சு மங்களம்!நம்ம ப்ரியாவை படிக்க வைக்க முடியாம,வேணுங்கிறதை வாங்கி கொடுக்க முடியாம..சின்ன வயசுலயே இந்த குடும்பத்தோட பாரத்தை சுமக்க வைச்சுட்டேன்...யார் பேச்சையும் கேட்காம புகையா விட்டுத் தள்ளுனேன்..நான் பாவி...நான் பாவி...பாவம் புள்ளை...படிக்க வேண்டிய வயசுல உழைச்சு,உழைச்சு தேய்ஞ்சா...கல்யாணம்,குழந்தைனு வாழ வேண்டிய வயசுல...நம்மளை குழந்தையா பார்த்துட்டிருக்கா..”

 

“விடுங்க!நீங்கதான் இப்ப அந்த விஷத்தை தொடறதில்லையே..பழசை எல்லாம் நினைச்சு வருத்தப்படாதீங்க!ப்ரியா கல்யாணத்தை பத்தி மட்டும் யோசியுங்க”

 

“ம்ம்...அந்த புள்ளை நல்லவனாதான் தெரியறான்!விசாரிச்சுட்டு பேசி முடிச்சுடுவோம்!

பணத்துக்கு ஏற்பாடு பண்ணனும்”

 

“கொஞ்சம் நகையிருக்கு!இரண்டு சீட்டு இருக்கு!அதை எடுத்துடலாங்க”

 

“சரிம்மா!நீ ப்ரியாவுக்கு பிடிச்சிருக்கா கேளு!போற இடத்திலயாவது அவ சந்தோஷமா வாழனும்”

 

“சரிங்க!நீங்க படுத்துக்கங்க!நான் அவகிட்ட பேசிட்டு வரேன்”

 

“தூங்கிட்டியா கண்ணு”

 

“இல்லைமா”மெத்தையில் அமர்ந்த தாயின் மடியில் நகர்ந்து படுத்தாள் ரதிப்ரியா.

 

“உனக்கு அந்த புள்ளையை முன்னாடியே தெரியுமா ப்ரியா”

 

“அம்மா...!!”

 

“உன் முகத்தில தெரிஞ்ச சந்தோஷம்,கோபம்,வருத்தம் எல்லாத்தையும் நான் பார்த்துட்டுதான் இருந்தேன் தங்கம்”

 

“அவர்...நம்ம...கடைக்கு வருவார்மா”

 

“உனக்கு அவரை பிடிச்சிருக்கா”

 

“........”

 

“எங்களுக்காக வேண்டாம்னு சொல்லிட்டியா?நீ எங்களைப் பத்தி கவலைப்படாதே ப்ரியா.இரண்டு வீட்டு வாடகை வருதே!அதுவே எங்களுக்கு போதும்!உன்னை கல்யாண கோலத்தில பார்க்கனும்னு எவ்வளவு ஆசையாயிருக்கு தெரியுமா”

 

“.........”

 

“கல்யாண செலவை பத்தியெல்லாம் கவலைப்படாதே,செஞ்சுக்கலாம்”

 

“...........”

 

“ப்ரியா!எங்களுக்கு பேரக்குழந்தைகளை பார்க்கனும்,கொஞ்சனும்கிற ஆசையெல்லாம் நிறையவே இருக்கு!எங்க உடம்பை பார்த்துக்குவோம்!அலட்சியமா இருக்க மாட்டோம்”

 

“..........”

 

“என்ன கண்ணு!இன்னும் என்ன யோசனை”

 

“உங்க இஷ்டம்மா”

 

“என் ராஜாத்தி!தூங்கு கண்ணு”

 

மங்களம் வெளியேறிச் செல்ல ஏதேதோ சிந்தனைகளில் ஆழ்ந்து விட்டு மெல்ல கண் அயர்ந்தாள் ரதிப்ரியா.

 

றுநாள் மாலைப்பொழுது.

 

செயற்கை பூக்கள்,பூமாலைகள்,பூங்கொத்துகள் நிறைந்திருந்த தனது “ரோஜா பிளவர்

ஷாப்பை” மூடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் ரதிப்ரியா.

 

“குட்ஈவ்னிங் ரதி”நரேந்திரன்தான் வந்திருந்தான்.

 

“குட்ஈவ்னிங்”

 

“கோபமா இருக்கியா?ரதி!உனக்கு என்னை பிடிக்கலைனா நான் விலகிப் போயிருப்பேன் ரதி!உனக்கு என்னை பிடிச்சிருக்கு...”

 

“எனக்கு கோபம் இல்லை!உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்!உட்காருங்க”

 

அச்சிறிய கடையில் இருந்த இரண்டு சேர்களில் அமர்ந்தனர் இருவரும்.

 

“நரேன்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.