(Reading time: 9 - 17 minutes)

றுநாள் ஊருக்கு கிளம்ப எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டிருந்தான் ப்ரசாத்

மறுநாள் காலை எழுந்தபோது, கொதிக்கும் காய்ச்சலில் நடுங்கிக்கொண்டிருந்தாள் அவன் அருகில் படுத்திருந்த  ரம்யா

அவசரம் அவசரமாய் அவளை டாக்டரிடம் அழைத்து சென்று வந்தவனிடம் மெதுவாய் கேட்டாள் ரம்யா  'நீங்க ஊருக்கு போய்தான் ஆகணுமா?

'ப்ளீஸ்டா' என்றான் 'பக்கத்து தெருவுலே தான் உன்  தங்கை இருக்காளே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா'. ஒரே நாளிலே வந்திடறேன்.' கெஞ்சினான்.

அரை மனதுடன் சம்மதித்தவளின் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு கிளம்பிவிட்டிருந்தான் ப்ரசாத்

நான்கு வருட ஹைதராபாத் வாழ்க்கையில் சில லட்சங்களுக்கு அதிபதியாய் இருக்கிறான். ரேவதிக்காக ஏதாவது வாங்கிக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது. 

கண்ணில் பார்த்ததையெல்லாம் வாங்கிகொண்டான். கைக்கு அருகில் இருந்ததையெல்லாம் அள்ளிகொண்டான்.

'என் கையை பற்றிக்கொண்டு ஊரெல்லாம் சுற்றியவளுக்கு என்ன கொடுத்திருக்கிறேன் நான்? கண்ணீரை தவிர'.! நகைக்கடைக்குள் நுழைந்து நான்கு தங்க வளையல்களை வாங்கிக்கொண்டான்.

றுநாள் காலை மதுரையில் சென்று இறங்கிவிட்டிருந்தான். மனம் நிலைக்கொள்ளவில்லை.

ஹோடேலில் ரூம் எடுத்து குளித்தான்.

காலை உணவை முடித்து விட்டு அறையில் வந்தமர்ந்தான்.

மணி பத்தை நெருங்கிய போது ஒரு முடிவுக்கு வந்தவனாய் ,கைபேசியை எடுத்து அவள் எண்ணை அழுத்தினான். இதயம் படபடத்தது.

'ஹலோ' என்றது மறுமுனை.

'கண்ணம்மா' என்றான் நிதானமான குரலில்.

'கண்ணம்மா' அந்த ஒற்றை வார்த்தை போதுமானதாக இருந்தது அவளுக்கு, அவன் யாரென்று தெரிந்துக்கொள்ள.

பதில் சொல்லவில்லை அவள். அப்படியே மௌனமானாள்.

'கண்ணம்மா' 'கண்ணம்மா ப்ளீஸ் கண்ணம்மா. போனை வெச்சிடாதே. நான் மதுரை வந்திருக்கேன். உன்னை பார்க்கணும்டா. உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன், அழ வெச்சிட்டேன். உன்னை நேர்லே பார்த்து மன்னிப்பு கேட்கணும். வராதே சொல்லிடாதே. ப்ளீஸ்டா' குரல் உடைந்து குலுங்க துவங்கினான் ப்ரசாத்

அவன் குரல் உடைந்தபோதே தளர்ந்து விட்டிருந்தாள் ரேவதி. அதற்கு மேல் அவனை கெஞ்ச வைக்க மனமில்லை அவளுக்கு.

'சரி வா' என்றாள் தழைந்த குரலில்.

தன்னை சுதாரித்து கொண்டு கேட்டான் 'அப்பா இருக்காரா?'

இல்லை அவர் காரைக்குடி போயிருக்கார் . வீட்டிலே நான் மட்டும் தான் இருக்கேன் நீ வா.

'தேங்க்ஸ் மா' என்றான் 'வந்து உன்னை பார்த்துட்டு உடனே கிளம்பிடுவேன். என்னாலே உனக்கு எந்த பிரச்னையும் வராது.  அரை மணியிலே வரேன்.

ஆட்டோவில் ஏறி கிளம்பினான்.மனம் சந்தோஷத்தில் பொங்கியது .மதுரை அத்தனை அழகாய் தோன்றியது. கண்களை மூடிக்கொண்டு நிதானமாய் சுவாசித்தான். கடைசியாய் ரேவதியை பிரிந்து சென்ற போது அவள் கண்ணில் தேங்கி நின்ற கண்ணீர் நினைவுக்கு வந்தது.

வள் வீட்டை கண்டுபிடித்து வீட்டு வாசலில் இறங்கினான் ப்ரசாத் அவனை எதிர்பார்த்தபடியே வாசல் படியில் அமர்ந்திருந்தாள் ரேவதி.

அவனை பார்த்தவுடன் புன்னகையுடன் எழுந்தாள் ரேவதி.

வீட்டுக்குள் நுழைந்தவன் புன்னகையுடன் அவளை பார்த்தபடியே நின்றுவிட்ட போது அவன் கண்ணில் பட்டது அவளது மேடிட்ட வயிறு.

சந்தோஷத்தில் திளைத்தபடியே அவளை நிமிர்ந்து பார்த்து 'எத்தனை மாசம் டா?' என்றான்.

அஞ்சு என்றாள் புன்னகையுடன்.

சரியான நேரத்தில் தான் வளையல் வாங்கி வந்தேனோ?

தங்க வளையல்களை எடுத்து அவள் கையில் போட்டு விட்டான்.

'அண்ணா' என்றாள் ரேவதி 'எதுக்கண்ணா இதெல்லாம்?'

கண்களில் கண்ணீர் வழிய அப்படியே ஸோபாவில் அமர்ந்தான்.

என்னாச்சுண்ணா'?  என்று அவன் அருகில் அமர்ந்தாள் ரேவதி.

'எத்தனை வருஷமாச்சு கண்ணம்மா'  என்றான் ஒரே வயித்திலே பிறந்தோம். இத்தனை நாள் நீ எங்கே இருக்கேன்னு கூட தெரியாமல் ................. பெரிய சுயநலவாதி மா நான்.

கண்கள் கலங்க அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள் ரேவதி. 'அதான் இப்போ வந்திட்டே இல்லே .விடுண்ணா' அவள் கண்களில் நீர் வழிந்தது.

சட்டென்று சுதாரித்து அவள் கண்களை துடைத்தான் ப்ரசாத். 'பாரு இந்த மாதிரி நேரத்துலே நீ அழக்கூடாதுமா. நீ சந்தோஷமா இருக்கியா. எந்த குறையும் இல்லையே?

'ரொம்ப சந்தோஷமா இருக்கேன் புன்னகைத்தாள்.

எத்தனை ஆண்டுகள் ஆயிற்று இந்த புன்னகையை பார்த்து?

ரம்யா  மீதிருந்த தீராத காதலுக்கு அப்பா குறுக்கே வர ,எதையுமே யோசிக்காமல், தான் போய்விட்டால், தங்கையின் வாழ்கை என்னவாகுமோ என்று நினைக்காமல்  ரம்யாவை திருமணம் செய்துக்கொண்டு   வீட்டை விட்டு இறங்கியபோது நின்று போன புன்னகை.

அப்போது அப்பா போட்ட சத்தத்தில் இனி அப்பாவின் முகத்தில் விழிக்கவே கூடாது என்ற வைராக்கியம் தலை தூக்க, ஊரை விட்டு கிளம்பிய போது மனதில் இருந்த அழுத்தம், இப்போது அவளை பார்த்ததும். சற்று குறைந்தது போல் தோன்ற, ரேவதியை தோளில் சாய்த்துகொண்டு நிம்மதியாய் சுவாசித்தான்  பிரசாத்.

.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.