(Reading time: 10 - 20 minutes)

இனி புது சங்கீதமே – புவனேஸ்வரி கலைசெல்வி

" டடே, வர வர உங்க அட்டகாசத்துக்கு அளவே இல்லாம போச்சு அம்மா... இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்... நீங்க என் பக்கமா? இல்லே உங்க மருமகள் பக்கமா ? " என்று பொய் கோபத்துடன் வழக்கம் போல தனது வாதத்தை  ஆரம்பித்தான் நம் கதாநாயகன் ஆதித்யன்.

Ini puthu sangeethame" யாரு நானு அட்டகாசம் பண்றேனா? ஏன்டா இன்னும் ரெண்டு மாசத்துல நீயே அப்பா ஆகப்போற. அதுவும் புள்ளதாச்சியா இருக்குற என் மகளுக்கு சரமாரியா வம்புக்கு வர்றியே ..உனக்கு இது ஓவரா இல்லையா ? " என்று சிரித்தப்படி தன் மருமகளை (மன்னிக்கவும்) மகளை வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டார் சாரதா (ஆதித்யாவின் தாயார் )...

"அப்படி சொல்லுங்க அத்தம்மா .. எப்போ பார்த்தாலும் இவருக்கு என்மேல்தான் கண்ணு" என்றவாறே கணவனிடம் வெற்றி புன்னகை வீசினாள் சாஹித்யா...

" அடியே ஒன்னு அத்தைன்னு கூப்பிடு இல்ல அம்மான்னு கூப்பிடு .. அதென்ன அத்தம்மா அத்தம்மானு...எங்க அம்மாவை கலாய்க்கிறியா?"

" அடேய் என் மருமக என்னை எப்படி கூப்பிட்டா உனக்கென்ன ? நானே சும்மாதான் இருக்கேன் ... நீ ஏன் கலகம் மூட்ட முயற்சி பண்ணுறே ?

" அம்மா போ மா... நீ சீரியல் பார்க்க ஆரம்பி.. என்ன நீ பாரம்பரியத்தை கெடுக்குற? காலம் காலமா மாமியார் மருமகள்னா சண்டை போடணும் ... புரிஞ்சதா ? "

" அட போடா அதெலாம் மாமியார் மருமகளுக்கு ..நாங்க அம்மா பொண்ணு "

என்னதான் சலித்துகொள்வது போல நடித்தாலும் , அவர்களை நினைத்து எப்பொழுதும் பெருமிதம் கொள்வான் ஆதி . " நாங்க அம்மா பொண்ணு " என்ற வார்த்தையில் அவன் நெகிழ்ந்திருக்க, கண்ணில் ஏதோ ஒரு சோகத்தை மறைக்க முயன்றுகொண்டிருந்தாள் சாஹித்யா. இன்று மட்டுமல்ல, சாரதா அவளை மகள் என்றழைக்கும்போதேல்லாம் தன்னையும் மீறி அந்த சம்பவம் ஞாபகம் வர, என்றேனும் ஒரு நாள் உண்மையை அத்தையிடம் சொல்ல வேண்டும் என காத்திருந்தாள் சாஹித்யா.. அப்போது ,

" சகி என்னடா யோசிக்கிறே "

" ஒண்ணுமில்ல அத்தம்மா... கொஞ்சம் களைப்பாக இருக்கு அவ்வளோதான் "

" சகி உன்கிட்டே ஒரு விஷயம் கேட்டேனே மறந்துட்டியா? "

" என்னம்மா "

" அடுத்தவாரம் உனக்கு வளைகாப்பு செய்யலாம்னு இருக்கோம்... உனக்கு என்ன வேணும்னு நான் கேட்கும்போதெல்லாம் நீ வளைகாப்பு செய்யும்போது சொல்றேன்னு சொன்னியே . இப்போ கேளு இந்த அம்மா கிட்டே உனக்கென்ன வேணும் ? "

இந்த கேள்வி அவள் எதிர்பார்த்ததுதான்..ஆனால் பதில் ? ஒரு கணம் தன கணவனை பார்த்தாள்  சகி . அவன் கண் அசைவில் தைரியம்பெற

" அத்தை என் வளைகாப்புக்கு சந்தியா வரணும் . என் குழந்தைக்கு அவ ஆசிர்வாதம் வேணும் . என் கணவருக்கு அவ தங்கச்சி வேணும் . என் அத்தம்மாக்கு மகள் வேணும் .. அவளை கூப்பிடுங்க அத்தை .. "

" சாஹித்யா............... இதுதான் உன் ஆசைனா அதை மறந்துடு. எனக்கு மகள் நீ மட்டும்தான் வேற யாருமில்ல. நீ என்ன சொன்னாலும் நான் செய்வேன் ஆனா அவ விஷயத்துலே நான் எப்பவோ தலை முழுகிட்டேன்"

" அத்தை அவரசப்பட்டு முடிவெடுக்காதிங்க... அவ நம்ம வீட்டு பொண்ணு.. என்ன நடந்தது ? அவ பக்கம் உள்ள நியாயம் என்னனு தெரியாம பேசாதிங்க ? எனக்கு வலிக்கிறது அத்தை நீங்க என்னை மகள்னு சொல்லும்போது ... ஏன்னா..ஏன்னா அது என் சந்தியா இருக்கவேண்டிய இடம்... அவ மேல எந்த தப்பு இல்ல அத்தை "

 " சகி அவமேல தப்பில்லன்னு சொல்றியா? அவ கழுத்துலே தாலி ஏற எவ்ளோ கஷ்டப்பட்டுருபார் உன் மாமா . கொஞ்சம் கூட யோசிக்காமே முகுர்த்த நேரத்துல எனக்கு இந்த கல்யாணத்துலே இஸ்டம் இல்ல  ஸ்ரீராம் தான் என் மனசுலே இருக்கார்னு சொன்னதும் இல்லாம நம்ம கண்ணு முன்னாடி அவன் கையாலே தாலிய வாங்கிகலையா அவள் ? அந்த அதிர்ச்சி தாங்கமத்தானே உன் மாமாவும் என்னை விட்டுடு சாமிகிட்டே போய்ட்டார்? "

" அத்தம்மா அழாதிங்க ... கொஞ்சம் யோசிச்சு பாருங்க ..எந்த பொண்ணாவது தன்னோட  அப்பா சாகனும்னு நினைப்பாளா ? அதுவும் மாமாவுக்கு சந்தியானா உயிராச்செ ... எனக்காக அத்தம்மா... பிளிஸ் ... நிறையபேரு வரபோராங்கதானே , அவங்கள்ள ஒருத்தியா அவளும் வரட்டும்"

" ஆதி நீ என்னப்பா நெனைக்கிற ? "

" அவ வரட்டும்மா.... உண்மை ஒரு நாள் வெளிவரும் அன்னைக்கு நெனச்சு பார்த்து பீல் பண்ண என்ன இருக்கு ? அவ நம்ம வீட்டு பொண்ணுமா "

" சரி நீங்களே கூப்டுங்க.... மாப்பிள்.......................... அவரையும் கூப்பிடுங்க... எனக்கு தலைவலிக்குது.. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன் "

முகம்பார்த்து பேசமால் பேசிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டார் சாரதா. கலங்கிய விழிகளுடன் நின்றிருந்த மனைவியை பின்னாலிருந்து அணைத்தான் ஆதி.

" ஹேய் கண்ணம்மா "

" ம்ம்ம்ம் "

" உன் கஷ்டம் எனக்கு புரியுது "

" என்னலேதானேடா ? நான்தானே சந்தியாவை அப்படி சொல்ல சொன்னேன் . அப்படி பார்த்தா நான்தானே மாமா சாவுக்கு..."

" ஹேய் என்னடி பேசுறே நீ ? நீ மட்டும் அன்னைக்கு அப்படி ஒரு யோசனை சொல்லலேனா அந்த கபிலன் இந்நேரம் சந்தியாவை சித்ரவதை பண்ணி கொன்னுருப்பான் . தப்பானவனை மாப்பிள்ளையா  ஆக்கி பொண்ணு வாழ்க்கையை வீனாக்கிட்டோம் நெனச்சு அப்பா இறந்துருப்பாரு... இங்க பாருடா ....எல்லாம் சரி ஆயிடும் ... நான் இருக்கேன் உன்கூட அம்மாவும் சந்தியாவும் பேசுனாலே எல்லாம் சரி ஆயிடும் ... அம்மா புரிஞ்சுபாங்க ..நீ அழாதே...நைட் நாமே சந்தியாவுக்கு போன் போடலாம் ... இப்போ கொஞ்சம் தூங்கு "

" எனக்கு தூக்கம் வரலே "

" அதெப்படி என் செல்லத்துக்கு தூக்கம் வராம போகும் ? இங்க வா.... நான்  பாடுவேனாம்  , என் ராஜாத்தி அப்படியே தூங்குவிங்கலாம்.... "

" ம்ம்ம்ம் " என்றபடி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் சகி .

காதல்கொண்டேன்கனவினைவளர்த்தேன்

கண்மணிஉனைநான்கருத்தினில்நிறைத்தேன்

உனக்கேஉயிரானேன்எந்நாளும்எனைநீமறவாதே

நீயில்லாமல்எதுநிம்மதிநீதான்என்றும்என்சந்நிதி

கண்ணேகலைமானே! கன்னிமயிலென

கண்டேன்உனைநானே

அந்திப்பகல்உனைநான்பார்க்கிறேன்

ஆண்டவனைஇதைத்தான்கேட்கிறேன்

ராரிராரோஓ! ராரிரோ

" ராம் ...ராம் ... எங்க இருக்கீங்க ? "

" இடதுபக்கம் பாருடி உன் ஹார்ட் லதான் இருக்கேன் "

" யோவ்.... எப்ப பார்த்தாலும் குதர்க்கமான பேச்சு... இங்க வாங்களேன் பிளிஸ்"

" வந்தேன் மகாராணியே ... சொல்லுங்க என்ன விஷயம் ? "

இதுதான் ஸ்ரீராம் . இப்போ இல்ல எப்போதுமே சந்தியா கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்பவன். அன்றைக்கும் அப்படிதான்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.