(Reading time: 10 - 20 minutes)

விடிந்ததும் திருமணம். அனைவரும் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருக்கும்போது சந்தியா காலை சூரியனை பார்க்க விரும்பி மொட்டைமாடிக்கு போனபோது, இன்னொரு பெண்ணை தழுவிக்கொண்டிருந்தான் மணமகன் கபிலன் .

" கபிலன் ???? என்ன இதெல்லாம் "

" சந்தியா நீ .....நீ ...நீ என்ன பண்ற இங்க ?"

" அதை நான் கேக்கணும் இங்க என்ன அசிங்கம் நடக்குது ? ச்ச்ச... உங்களையா அப்பா நல்லவருன்னு நெனசார்? "

" ஆமா நான்தான் ..அசிங்கம் தான் ..அதுகென்ன ? "

" இந்த கல்யாணம் நடக்காது ...இப்போவே உன்னைபத்தி சொல்லி கல்யாணத்தை நிறுத்துறேன் "

" நிறுத்து ... அதோடு உன் குடும்ப கெளரவம் நிற்கும் .. உன் அப்பா அம்மா மூச்சும் நின்னுடும்... பெரிய உத்தமி மாதிரி குதிக்காதே ... உன்னை பத்தியும் அந்த ஸ்ரீராம் பத்தியும் எனக்கு தெரியாது நெனச்சியா ?

" சீ.... தப்பா பேசாத..அவரு என் சகி அண்ணியின் நண்பர்"

" ஏய் சும்மா கத்தாதே ..உன்னாலே முடிஞ்சதை பார்த்துக்கோ ...ஆனா இந்த வீட்டுலே சாவு விழாம இருக்குறதும் உன் கையிலே தான் இருக்கு "

ன்னைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றாள் சந்தியா .  கபிலனை நேரடியாக எதிர்க்காமல் திருமணமேடை ஏறியப்பின் திருமணத்தில் இஸ்டம் இல்லை என்றுரைக்க சொன்னது சாஹித்யாதான் ... அன்றும் சந்தியாவுக்கு தோள் கொடுத்தது ஸ்ரீராம்தான் .

" ஹே டார்லிங் ..என்ன டே டிரிமிங் தானே ? "

" ராம்........ நான் .....எனக்கு ..............."  என்றபடி ஒரு கணம் தனது கணவனை இறுக அணைத்து அழுதாள் சந்தியா .

" ஹேய் தியா.... தியாம்மா.... என்னடா இது ? அம்மா ஞாபகம் வந்துடுச்சா? "

" இல்ல ...பழசெல்லாம் நெனச்சு பார்த்தேன்...நீ மட்டும் இல்லனா .... "

" ம்ம்ம்கும்ம்ம் நான் எப்படி டி இல்லாம போவேன் ..நானே எப்படித்தான் உன்னை கடத்திட்டு போயி கல்யாணம் பண்ணலாம் நெனச்சேன் தெரியுமா ... ? எவ்ளோ நாள் உன் கூட பேசிருக்கேன் அப்போலாம் எதுவும் தோணலே ...ஆனா உனக்கு கல்யாணம்னு தெரிஞ்சதும் மனசே சரி இல்ல ... அர்ச்சதை எடுக்கும்போது கூட தாலிய எடுத்து கட்டிடலாமானு நெனச்சேன்"

இதை பலமுறை  சொன்னாலும்கூட  முதல் முறை கேட்பதுப்போல கண்களை விரித்து பார்க்கும் மனைவியை ரசித்து மெல்ல முத்தமிட்டான் ஸ்ரீராம்...

" நிஜ்ஜம்மாதான் சொல்றியாடா"

" ஆமாம்டி மக்கு "

" அப்போ நீ ஏன் என்னை பொண்ணு கேக்க வரல ?"

" அப்போ என் காதலை நானே உணரலேடி ... இல்லேனா இவ்ளோ கஷ்டம் உனக்கு நடக்க விட்டுருப்பேனா ? மன்னிச்சுருடா "

" ஹேய் நான் சும்மாதான் கேட்டேன்பா.. டோன்ட் பீல் கில்டி... அச்சோ சொல்ல மறந்துட்டேனே.... சகி அண்ணி பேசுனாங்க ... அவங்களுக்கு அடுத்த வாரம் வளைகாப்பு வைக்கிறாங்க... அம்மா கிட்டே பேசி நம்மளை அண்ணி வர சொல்லிருகாங்க ... ஐ எம் சோ ஹாப்பி கண்ணா "

" ம்ம்ம்ம் நீ சந்தோஷமா இருந்தா நானும் சந்தோஷமா இருப்பேன் பேபி "

ந்தியா - ஆதித்யா , ஸ்ரீராம் - சந்தியா மட்டுமில்லாமல் சாரதாவும் காத்துகிட்டு இருந்த நாள் வந்தது . கோபமான முகத்தோடு வளம் வந்தாலும் தனது மகளையும் மருமகனையும் கவனிச்சுகிட்டுதான் இருந்தார் சாரதா . " பாவி மகள் முன்னாடியே சொல்லி இருந்த நாமலே கட்டி வெச்சுருக்க மாட்டோமா ? ஏண்டி இப்படி பண்ணேன்னு மனசுக்குள்ளேயே பொருமிகிட்டெ இருந்தாங்க . எப்படியாவது இருவரையும் பேச வைக்கனும்னு முயற்சித்தாள் சாஹித்யா.

அப்போது ,

" சகி வா , இந்த புது சேலை கட்டிக்கோ ... ஹேய் பார்த்து நடம்மா"

" அத்தம்மா சந்தியாவும் வரட்டுமே "

" ம்ம்ம் வர சொல்லு "

" அம்மா நான் அண்ணிக்கு உதவி பண்றேன் நீங்க நகையெல்லாம் எடுத்துட்டு வாங்க "

" சகி அவளை என் கிட்டே பேச வேணாம் சொல்லு .. ஆதி வாங்கி வந்த வைர நெக்லஸ் எங்கம்மா ? "

" பின்னாடி லாக்கேர்லே அத்தை "

திடீர்னு யாரோ கதவு திறந்து வர்ற சத்தம் கேட்டது . சத்தம் கேட்டு சாரதா முன்னாடி போறதுக்குள்ளே யாரோ ஒரு உருவம்  அவங்க வாய பொத்தி மௌனமாய் இருக்க சொன்னது. அதே நேரம் அங்கே

" ஏய் "

" கபிலன் .......... நீ என்ன பண்ற இங்க ? "

" நானா இதோ இவளையும் இவளுக்கு  உதவி பண்ண உன்னையும் கொல்ல வந்தேன் "

"சகி அண்ணி, அண்ணாவுக்கு போன் போடுங்க "

" போடுடி நீ போடுறதுக்குள்ள உன் அன்பு சந்தியா பரலோகம் சேர்ந்திடுவா" என்றபடி கதியை நீட்டினான் கபிலன்.

" உனக்கென்ன வேணும் இப்போ ? "

" உங்க ரெண்டு பேரு உயிர் தான் . போயும் போயும் பொம்பளைங்க என் மானத்தை வாங்கிட்டிங்க ...நான் சும்மா இருப்பேன் நெனச்சியா ? இதோ இவளை கல்யாணம் பண்றேன்னு சொன்னதே பணத்துக்காக தான் ..என் திட்டத்தை உடைச்சதும் இல்லாம இன்னொருத்தனை கட்டிகிட்டு என்னை அவமானபடுதிட்டா............ இவள.................."

" ஆஆ ஆ ஆ ......................"

" ஸ்ரீராம் நீ எப்படி உள்ள வந்த? பயத்துல சந்தியா மயங்கிட்டா பாரு... இந்த கபிலன்.... " என்றவாறே தரையில் விழுந்து கிடந்த கபிலனை மிரட்சியுடன் பார்த்தாள் சகி.

" அவனை நான் பார்த்துக்குறேன் " என்றபடி பின்னாலிருந்து தன் தாயுடன் வந்தான் ஆதித்யன்

" என்னங்க எனக்கு ஒன்னும் புரியலே ? இங்க நீங்க எப்டி வந்திங்க ? "

" இந்த பொறுக்கி மாடி ஏறும்போதே நானும் ஸ்ரீயும் பார்த்துட்டோம் டா.  அம்மாக்கு உண்மை தெரியனும்னு தான் அவனை பேச விட்டு நானும் ஸ்ரீயும்  காத்திருந்தோம். "

" இப்போ இவனை என்ன பண்றது ? "

"அவனை விட்டுடுங்க " என்றார் சாரதா ..அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர் .

" போதும் டா.. உங்கப்பா போய்டாரு .. உண்மைய புரிஞ்சுகாமே நான் என் மகளை பிரிஞ்சு இருந்திட்டேன் . இபோ இவனை எதாச்சும் பண்ணி உங்களை இழக்க விரும்பல... போகட்டும்"

"ஆனா அத்தம்மா ...................."

" சகி கவலை படாதே இவன் பேசுனது எல்லாம் நான் ரெகார்ட் பண்ணிட்டேன் .... எக்குதப்பா நடந்தா இனி கம்பிதான் எண்ணனும்" என்ற கணவனை பெருமையுடன் பார்த்தாள் சகி .

தே நேரம் " சந்தியா ...தியா... தியாம்மா ...எழுந்திரிடா .." என்றபடி சந்தியாவை மடியில் தாங்கினார் சாரதா .

மெல்ல கண் விழித்தவள்  " அம்மா பேசிட்டிங்களா ? என் கிட்டே பேசிட்டிங்களா ? நான் ஒரு தப்பும் பண்ணலேம்மா ...அப்பாவை நான் கொல்லலேம்மா " என்றபடி வெடித்து அழுதாள்  சந்தியா ...

 " இல்லம்மா இல்ல .. நீ தப்பு பண்ணுலேடா அம்மாதான் தப்பு பண்ணிட்டேன் .. பெரியவங்கனா தப்பு  பண்ண மாட்டோம்னு நெனச்சுட்டேன்... உனக்கு பேச நான் வாய்ப்பு தந்துருக்கணும் . என்னை மன்னிச்சுருடா "

இருவரின் உரையாடலை கண்ட மூவரும் கண் கலங்கி நிற்க , இயல்நிலைக்கு அனைவரையும் கொண்டு வந்தது ஸ்ரீராம்தான்..

" ஆமா சந்து, நீ ஒரு சூரப்புலின்னு நெனச்சேனே .. இப்படி மயங்கி விழுந்து என் கனவுகோட்டையை இடிசுட்டியே "

 " டேய் என் தங்கச்சிய என்னடா சந்து பொந்துன்னு கூப்டுற நீ ? "

" அதுவா அத்தான் , ஸ்ரீயை பார்த்து நம்ம சந்தியா மயங்கி விழவில்லைன்னு அவருக்கு கவலை " என்று தானும் சேர்ந்துகொண்டாள் சாஹித்யா...

" ஹேய் சாஹித்யா என் ராமை ஓட்டதிங்க சொல்லிட்டேன் "

" பாருடா " என்று எல்லோரும் ஒரே குரலில் சொல்ல

"ஏன்னா அவரை நான் மட்டும்தான் ஓட்டுவேனே " என்று தானும் இணைந்து கொண்டாள் சந்தியா.

" சந்தியாம்மா உனக்கு எதுவும் இல்லல..மயங்கிட்டியே " என பதறினார் சாரதா .

" அதுவாம்மா  நம்ம சகி அண்ணியின் பாப்பாவுக்கு ஜோடி வேணாமா ?" என்றபடி அவள் கண் சிமிட்ட , ஆனந்தத்தில் அவளை தூக்கி சுற்றினான் ஸ்ரீராம் ... அவர்களின் புன்னகை அறை முழுதும்  வியாபிக்க புது சங்கீதமே உருவானது ...

இது சங்கீத திருநாளோ

புது சந்தோசம் வரும் நாளோ

ரதி நம்வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.