(Reading time: 3 - 6 minutes)

முகநூல் – சுமதி

ன் தோழி சொன்னதே என் மனம் முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. சமைக்கவும் தோன்றவில்லை. பசிக்கவும் இல்லை. யோசிக்க யோசிக்க அவள் சொன்னது சரியென்றே தோன்றியது. பல வித யோசனைகள் மனதில் ஓடிகொண்டே இருக்கிறது. என்ன செய்யலாம். சரி, இன்று எப்படியும் கேட்டுவிட வேண்டியதுதான்.

muganoolஎங்களுக்கு போன மாதம் தான் திருமணமாகி இப்பொழுது புனேவில் வசிக்கிறோம். நாங்கள் இருவருமே கம்ப்யூட்டர் என்ஜினியர்கள். என் பெற்றோர்களும் அவர் பெற்றோர்களும் வந்து வீடு பார்த்து தனிக்குடித்தனம் வைத்து விட்டு சென்று இரண்டு வாரம் ஆகிறது. அவர் குடும்பம் பெரியது என்றாலும் ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊரில், அக்கா கனடாவில், அண்ணா ஆஸ்திரேலியாவில், முதல் தங்கை அமெரிக்காவில், இரண்டாவது தங்கை பெங்களுருவில், தம்பி சென்னையில் என்று. அதனால் தனிக்குடித்தனம் தான் எங்களுடையது. பெரிய குடும்பமாக இருக்கிறதே என்று யோசித்த என் அப்பாவுக்குக்கூட இந்த சம்பந்தம் பிடித்து போனதுக்கு மிக முக்கிய காரணம் எப்படியும் நாங்கள் தனியாகத்தானே இருக்கபோகிறோம் என்பதால் தான்.

ஆனால் இப்பொழுது பிரச்சினை முகநூல் வடிவத்தில்.

எனக்கும் முகநூல் பழக்கம் உண்டு என்றாலும் அவருக்கு உயிர்நாடியே முகநூல் தான். முகநூலில் குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு பிரிவு (குரூப்) உருவாக்கியுள்ளார். அதில்தான் அவரது அன்றாட நிகழ்ச்சிகள் எல்லாம் பதிவு செய்கிறார். அவர் என்ன செய்கிறார், என்ன சாப்பிடுகிறார், எப்பொழுது தூங்குகிறார் என்று எல்லாமே முகநூலில் பதிவுகள் இருக்கும். ஒவ்வொரு நிகழ்வும் அவரின் மொத்த குடும்பத்துக்கும் பதிவு அடித்து கொண்டு இருப்பது ஆரம்பத்தில் எனக்கு எதுவும் தோன்றவில்லை தான் . அவருக்கு அலுவலகத்தில் விருது கிடைத்தது கூட முகநூலில் தான் சொன்னார், எனக்கும் சரி, அவர் குடும்பத்தார்களுக்கும் சரி .

இது சம்பந்தமாக என் தோழியிடம் சொன்னபொழுது அவள் பதிலுக்கு சொன்னது இது தான் ...

"நீ அவர் கூடயே இருக்கும் பொழுது அவர் உன்னிடம் முதலில் விஷயத்தை நேரிலோ போனிலோ சொல்லாமல் வெளியூரில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்துவது போலவே உனக்கும் முகநூல் வழியாக சொல்வது சரியாகப்படவில்லை ... இதை இப்பொழுதே கண்டித்து வைத்துக்கொள்".

தைக்கேட்டபின் மனம் இன்னும் கனமாகிவிட்டது ... நான் அவரிடம் எப்படி சொல்லுவது , என்ன சொல்லுவது ... சொல்லித்தான் ஆகவேண்டுமா.. இது ஒரு பிரச்சினையா என்று பலவித யோசனைகள் ... யோசனைகளுடனே வீட்டுக்கு வந்தேவிட்டேன் . போனில் அவரின் முகநூல் பதிவு –

"இன்று டின்னெர் பார்ட்டி ஆபீசில்.".

அவர் லேட்டாக வரும் செய்தி கூட முகநூலில் எல்லாருக்கும் சொல்லவேண்டுமா . .. படித்தவுடன் தான் முடிவு செய்து விட்டேன் ... இன்று கேட்டே தீர்வதென்று ...

ஆனால் என்றும் போல இல்லாமல் மாற்றி மாற்றி போன் கால்கள். என் நாத்தனார்கள் , ஒர்ப்படியா என்று ....

மனம் முழுக்க இந்த யோசனையே நிரம்பி இருந்ததால் என்னால் சரியாக அவர்களிடம் பேசமுடியவில்லை ... இருந்தாலும் அவர்கள் பேசுவதை உம் கொட்டி (கேட்டு) கொண்டிருந்தேன் .

சரியாக மணி பத்து . அவர் கார் வந்து நிற்கும் சத்தமும் , "வீட்டுக்கு வந்துவிட்டேன் " என்று முகநூல் பதிவு சத்தமும் ஒரே நேரத்தில் . அப்பொழுது என்னிடம் பேசி கொண்டிருந்தது என் நாத்தனாரின் மகன். கதை சொல்லிக் கொண்டிருந்தான் ... என் நாத்தனார் போனை வாங்கி

"அண்ணா வந்தாச்சு . நீங்கள் அங்கே பாருங்கள் அண்ணி.... டேய் குட்டி வா மாமா வந்துட்டாங்க. இப்போ அம்மாக்கு கதை சொல்லு " என்று சொல்லி போனை வைக்க அட ... அப்பொழுதான் புரிந்தது ... அவரின் டின்னர் பார்ட்டி பற்றிய முகநூல் பதிவை பார்த்து அனைவரும் நான் தனியாக இருப்பேன் என்று என்னிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று ....

என் தோழியின் வாதம் என் கூட்டுவலைக்குடும்பத்துக்கு ஏற்புடையதாக இல்லை என்று அந்த நிமிடமே புரிந்துகொண்டுவிட்டேன். உடனே முழுமனதுடன் அவரை வரவேற்க மகிழ்ச்சியுடன் சென்றேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.