(Reading time: 5 - 9 minutes)

என் மகனே !! - Sujatha

க்ஷ்மி மனதை திடப்படுத்தி கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தாள் . வாணம் நிறம் மாறிவிட்டதா என்ன ?

ஏனோ அவளுக்கு பார்பவைகளில் எல்லாம் மாற்றம் உள்ளதாகவே தோன்றியது . கணவன் உயிருடன்

இருந்த வரை இந்த உலகு எத்தனை அழகாய் இருந்தது .. இன்று ஏன் எல்லாம் மாறி விட்டது ..

இவ்வாறு எண்ணங்களில் இருந்தவளை கலைத்தது அந்த அழைப்பு ..

en magane

குரல் கேட்ட திசையில் பார்த்தாள் , அங்கு பவானி வந்து கொண்டு இருந்தாள்..

பேருக்கு சிரித்த லக்ஷ்மியின் முகத்தை பார்த்து " எங்க போற லக்ஷ்மி ? "

லக்ஷ்மி நான் வீட்டு வேலைக்கு சொல்லி வெச்சிருந்தேன் அக்கா , ஒரு அம்மா இன்னைக்கு வர சொன்னாங்க , அவங்க வீட்டுக்கு போறேன் ...

பவானி உனக்கு ஏன்மா இந்த வேலை ??

லக்ஷ்மியின் மௌனத்தை கண்டு அவளே தொடர்ந்தாள் , எல்லாம் உன் பையன தான் சொல்லணும் வயசான காலத்துல

உன்ன பார்க்காம .... (அந்த தாயின் முகம் கருப்பதை கண்டு நிறுத்திவிட்டாள் )

அக்கா அவன பத்தி ஒன்னும் சொல்லாதீங்க , என்ன இருந்தாலும் அவன் என் மகன் ..

திகைத்த பவானி , அப்றோம் ஏண்டி நி வேளைக்கு போற என்றாள்

(அவங்க முகத்தில என்ன இருக்கு , பரிகாசமா ?? அனால் எதுவும் சொல்ல தோணவில்லை லக்ஷ்மிக்கு )

லக்ஷ்மி "சாப்பாட்டுக்கு வழி " ??

பவானி எதிர் கேள்வியை கேட்டு "பார்த்து போ லக்ஷ்மி " என்றதோடு விட்டாள்.

லக்ஷ்மியின் முகத்தில் சின்னதாய் ஒரு சிரிப்பு எட்டி பார்த்தது ...

( சாப்பாட்டுக்கு வழி என்று கேட்பவரிடம் எத்தனை பேர் அதற்க்கான வழியை சொல்லுவார்.. வழி

சொல்பவர் யாரும் இல்லை..கேள்வி கேட்பவர் தாராளம் என்று நினைத்து நடந்தாள் )

ருவாறு "பார்கவி நிலையம் " வந்தடைந்தாள் , அழைப்பு மணியை தொடர்ந்து உள்ளே இருந்து  வந்த வீட்டு தலைவியிடம் லக்ஷ்மி தன்னை அறிமுக படுத்தி கொண்டாள்.  பார்த்ததுமே வீட்டு தலைவி சாந்தா'வை அவளுக்கு பிடித்து விட்டது ... 

வேலைக்காரி என்று இல்லாமல் தன்னிடம் அன்பாக பழகிய சாந்தா அவளுக்கு  நாளடைவில்  நல்ல துணை ஆனாள்.

மாதங்கள் சென்ற பின் சாந்தாவுக்கு லக்ஷ்மி ஒரு குடிலில் தனித்து

வாழ்கிறாள் என்றதும்.. அவளை தன்னுடன் வீட்டில் குடி வைக்க ஆசை வந்தது .

(தினமும் வேலைக்கு போகும் பெண்களுக்கு வீட்டில் தாயாக , குழைந்தகளுக்கு பாட்டியாகவும் ஒருவர் இருக்க சம்மதித்தால் கசக்குமா என்ன )

இதை அவளிடம் கூறி யோசித்து சொல்லும் படி கேட்டாள் சாந்தா ..

லக்ஷ்மி யோசிக்க எதுவும் இல்லை

"ஒருநாளும் என்னால் இதை செய்ய முடியாது அக்கா "

சாந்தா புரியாமல் பார்த்தாள் , அதை கண்டு லக்ஷ்மியே துடர்ந்தாள்

"அக்கா என் கணவன் இறந்து ஒரு மாசம் ஆனதும் , என் மகன் , அவன் பொண்டாட்டி சொன்னா சொல்லி என் கிட்ட வந்து வீடு அவன் பேருக்கு மாத்தி கொடுக்க சொன்னான் .. நான் என் மகனுக்கு கொடுக்காம

யாருக்கு கொடுப்பேன் ..கண் மூடி அவன் சொன்னதை எல்லாம் செஞ்சேன்

ஒரு மாசம் போச்சு , அப்றோம் இரண்டு பேரும் சேர்ந்து , இது என் வீடு இங்க உங்களுக்கு   இடமில்லை , வெளிய போங்க சொல்லி துரத்திட்டான்.

எனக்கு வேறு போக்கிடம் இல்லை......

அவள் கண்கள் நீரால் நிறைந்தது ,அதை துடைத்த அவளை பார்க்கவே கஷ்டமாக இருந்தது ...

சாந்தா உங்க வீட்ல யாரும் இல்லையா ..?? (கரகரத்த குரலில் கேட்டாள்)

லக்ஷ்மி எல்லாரும் கூப்ட்டாங்க நான் தான் போல அக்கா

சாந்தாவின் கண்களில் கேள்வியை கண்டு லக்ஷ்மி தொடர்ந்தாள்

அவர்களிடம் என் மகனை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது என்று சொல்ல முடியல அக்கா .. 

ஏதோ ஒன்னு என்ன தடுக்குது அக்கா ,அவனை  யார்கிட்டேயும் விட்டு கொடுக்க முடியல ... பொதுவா யோசிக்கும் போது தப்பு'னு புத்தி'கு எட்டுது ஆனா மனசு அதை ஏற்க மறுக்குது ....  

(கண் மூடி தனமான பாசம் அவள் கண்ணை மறைத்தது )  

நீங்க என்னை புரிஞ்சுக்கணும் அக்கா , அவன் என்னை "போ" என்று சொன்னாலும் என்னால என் மகனை ஒதுக்க முடியல .. அதனால  தான் வீட்டுக்கு முன்னாடி ஒரு குடில் கட்டி அங்க இருக்கேன் .. 

தினமும் அவன் வெளியல போகும்போதும் , வரும்போதும் அவனை பார்ப்பேன் .... அவன் என் மகன் அக்கா , அவன் நல்லா இருக்கான்னு தூரத்துல இருந்து பார்த்து , அந்த சந்தோஷத்தில வாழ்கிறேன் .... வாழ்ந்திடுவேன் ..ஹ்ம்ம் 

அவனை பார்க்காமல் மட்டும் என்னால் உயிரோடு இருக்க முடியாது அக்கா , மன்னிச்சிருங்க அக்கா என்றாள் கண்ணீருடன் .

என் மகனே நீ  என் இதயத்தை கேட்டிருந்தால் 

நான் சிரித்து கொண்டே கொடுத்திருப்பேன் ,

உன் வாழ்கைக்காக என்  உயிரை  தானம் கேட்டிருந்தால் 

அந்த நொடி என் உயிரை உனக்காகவே தந்திருப்பேன் ,

ஏனெனில் என் இதயம் உனக்காகவே துடிக்கிறது 

என் உயிர் உனக்காகவே வாழ்கிறது ,

ஆனால் நீ கேட்டதோ ஒன்று அதில் என் இதயம் சிதறியது ,

 உயிர் இருந்தும் வாழ்வை துளைத்தேன் ....

இன்றும் உன் கடைக்கண் பார்வைக்கும் , அம்மா என்ற அழைப்பிற்கும் 

ஏங்கும் இந்த தாயிடம் நீ  ஒரு நாள் வருவாய் 

என்ற நம்பிக்கையுடன் உயிரை தாங்கியுள்ளேன் ,

நீ  வருவாய் ஒரு நாள் ஏனெனில் நீ  " என் மகன் "

சாந்தாவின் கண்கள் நிறைந்தது ... லக்ஷ்மியின் கண்களில் தெரிந்த ஏக்கத்தை கண்டு இறைவனிடம் அவளுக்காக வேண்டினாள்...

note : இந்த கதையில் வரும் லக்ஷ்மி என் வீட்டில் 10 வர்ஷத்துக்கு முன்னாடி servant ஆ வேலைக்கு வந்தாங்க ... இப்போ வரைக்கும் அவங்க மகனுக்காக காத்திருக்காங்க ..... அவங்க பைய்யன் மட்டுமில்ல இப்போ  பேர புள்ளங்களையும் தூரத்திலேயே பார்த்திட்டு வாழறாங்க . புறக்கணிக்கப்பட்டு மகன் அல்லது மகளின் ஒரு பார்வைக்கும் , அம்மா / அப்பா என்ற அழைப்பிற்கும் ஏங்கும் எல்லா பெற்றோருக்கு ஆகவும் இதை சமர்ப்பிக்கிறேன் . 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.