(Reading time: 9 - 17 minutes)

 

மாலை மணி 5

ன்னடா மச்சி, இத்தனை சீக்கிரம் கிளம்பற, மீட்டிங் என்ன ஆச்சு”

“தலக்கு வயித்து வலி.  அதனால வீட்டுக்கு போய்ட்டார்.  மீட்டிங் கான்செல் ஆகிடுச்சுடா. அதான் சீக்கிரம் கிளம்பறேன்”, மிக சந்தோஷத்துடன் தன் பாஸ் வயிற்று வலியை பற்றி கூறினான் மகேஷ்.

“அது சரி.  அப்போ இரு. கீழ காபி ஷாப் போய் காபி குடிக்கலாம்”

“இல்லடா சங்கர்.  இன்னைக்கு எங்க கல்யாண நாள்.  கார்த்தாலையே ஏன் லீவ் போடலைன்னு ஒரே சண்டை.  அட்லீஸ்ட் சாயங்காலமானும் சீக்கிரம் போய்  சத்யாவை தாஜா பண்ணனும்.  அவ வேற அவங்க அம்மா வீட்டுக்கு போக போறேன்னு சொன்னா.  போன் பண்ணி நேர அங்க இருந்து கடைக்கு வர சொல்லணும்”

“ஹே, Happy  Anniversary-டா மகேஷ்.  தங்கச்சிக்கும் விஷ் பண்ணினேன்னு சொல்லு. மத்யானம் ரெண்டு பெரும் ஒண்ணாதானே கொட்டிகிட்டோம்.  அப்போ கூட சொல்லலை.  எங்க treat கேட்டுடுவேன்னா?

“ச்சே ச்சே இல்லடா, அவகிட்ட சண்டை போட்டதே மண்டைல ஓடிட்டு இருந்ததுடா, பாவம் எதுவுமே கேக்க மாட்டா, அவ கேக்கறதே இந்த ஒரு நாள் லீவ் மட்டும்தான்.  அதுவும் எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.  அந்த வருதத்தில இருந்தேனா.  அதுதான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்”

“சரி, சரி அதுக்காக வருத்தப்படாதே.  நம்ம ஊருலதான் கல்யாணம் மூணு நாள் நடக்குமே.  அதுனால நாளைக்கு எனக்கு treat கொடுத்துடு சரியா”

“அடப்பாவி, ஏன்டா கல்யாணம் மூணு நாள் பண்ணினா, Anniversary-யும் மூணு நாள் கொண்டாடுவாங்களா.  என்ன லாஜிக்டா உன்னோடது.  உங்கிட்ட பேசினேன் நான் இன்னைக்கு போட்ட பிளான் எல்லாம் சோபிளான் ஆகிடும்.  நான் கிளம்பறேன்”,  மனைவியுடன் கழிக்க போகும் சந்தோஷமான நிமிஷங்களை நினைத்துக்கொண்டே கார் பார்க்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான் மகேஷ்.

இரவு 8

ப்பா அண்ணனுக்கு இந்த ப்ளூ கலர்தான்ப்பா பிடிக்கும், அதுவே எடுக்கலாம்ப்பா”

“நீ சொன்னா சரிதான்ம்மா.  அதுவே எடுத்துடலாம்.  நீயே சொல்றே, அம்மாக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டியா”

“எனக்கும் பிடிச்சிருக்குங்க.  இந்த நீல சட்டையே எடுக்கலாம்.”

“சரி கொண்டா, நீங்க இங்கயே நில்லுங்க, நான் போய் பில்லுக்கு பணம் கொடுத்துட்டு வரேன்.  அப்புறம் போய் எதிர்க்க இருக்கற ஹோட்டல்ல சாப்பிடலாம்.  சரியா”

“அப்பா, அங்க பாருங்க, பைக் ஸ்டான்டுல அண்ணன் நிக்குது.  வாங்க போய் பேசலாம்”

“ஏய் வேண்டாம் நில்லு. அவனுக்கு தெரியாம வாங்கனும்ன்னுதானே அவன் இல்லாதப்போ வந்தோம்.  இங்கயே இன்னும் ஒரு அரை மணி நேரம் சுத்திட்டு அப்புறம் வெளில போலாம்.  சரியா, இப்போ வாங்க அவன் பார்க்கறதுக்கு முன்னாடி நாம கடை உள்ளார போய்டலாம்” 

இரவு 8.05

மார்.......     டமார்..........    டமார்...........

நகரில் அடுத்து அடுத்து வணிக வளாகம், திரை அரங்கு, துணிக்கடை ஆகிய மூன்று இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.  முன்னூறுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

அபுவைப் போன்றவர்களை ஏன் படைத்தாய் இறைவா, அத்தனை பேரின் ஆசைகள், பாசங்கள், கனவுகளை அவலப்படுத்துவர்க்காகவா????? எத்தனை மரணங்கள், எத்தனை எத்தனை ஓலங்கள், ஏன் எதற்கு இத்தனை பெரிய தண்டனை.  என்ன தவறு செய்தார்கள் இந்த அப்பாவி மக்கள். எத்தனை மக்களின் இன்பக்கனவுகள் இன்று வெடித்து விட்டது. 

என்று தணியும் இந்த அரக்கரின் தாகம்

என்று மடியும் இந்த வன்முறை மோகம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.