(Reading time: 25 - 49 minutes)

அஹம் பிரம்மாஸ்மி - ஜெய்

ன்னா குழந்தையை பார்த்தேளா எப்பவும் சுவாமி பாட்டுப் போட்டா மட்டும்தான் கையைத் தட்டிண்டு கேக்கறது.  மத்த பாட்டுக்கெல்லாம் கொஞ்சம் கூட சலனமே இல்லாம இருக்காளே. என் பட்டு குட்டி இப்போவே என்ன பக்திடி உனக்கு.”, தன் 3 வயது மகளை கொஞ்சினாள் அலமு.

“ஆமாம்டி அலமு, குழந்தை நன்னா தாளம் போட்டு ரசிக்கறது பாரேன்.  இன்னும் ஒரு 2 வருஷம் போனா பாட்டு கிளாஸ்ல சேர்த்து விடணும். இப்போ நன்னா ஸ்பஷ்டமா பேசறா மாதிரியே நன்னா பாடுவான்னு நினைக்கிறேன்.”, தன் மகளை பார்த்து அகம் மகிழ்ந்து கூறினார் பார்த்தா.

“ஆமாம்னா, அதுவும் குழலூதி மனமெல்லாம் பாட்டப் போட்டா போறும், திரும்பத் திரும்ப போடச் சொல்லி ஒரே படுத்தித் தள்றா.”, பெருமையுடன் சொன்னாள் அலமு

Unakkenna mele nindraai

“சரி நீ பக்கத்து ஸ்கூல்ல ராதாக்கு அட்மிஷன் இருக்கான்னு கேக்கறேன்னையே என்னாச்சு”

“சீட் இருக்காம். அடுத்த ஜூன்க்கு ஜனவரிலையே பீஸ் கட்டி சேர்க்கணுமாம். பீஸ் மத்த details எல்லாம் அங்க டெலிபோன் பக்கத்துல இருக்கற நோட்ல எழுதி வச்சிருக்கேன் பாருங்கோ.”

“பீஸ் பரவா இல்லை அலமு, பார்த்துக்கலாம். பக்கத்துல இருக்கற ஸ்கூல்ல அட்மிஷன் கிடைக்கறதுதான் கஷ்டம்.  இப்போ கிடைச்சாச்சு.  பாவம் குழந்தையும் வான், ஆட்டோன்னு அல்லாட வேண்டாம்.  நீயே கொண்டு விட்டு கூட்டிண்டு வரலாம்”

“அதுவும் கரெக்ட்தான், ஆத்துக்கு சீக்கிரமே வந்தா குழந்தை பாட்டு, டான்ஸ் கத்துக்கணும்னாலும் டைம் இருக்கும்”

“சரி ராதாக்கு பசிக்கப் போறது.  நீ போய் டிபன் வேலையை ஆரம்பி.  நான் அவளோட விளையாடிண்டு இருக்கேன்”

“அம்மா, இன்னைக்கு ஸ்கூல்ல வச்சப் பாட்டு போட்டில எனக்குத்தான் first ப்ரைஸ்மா. எல்லா டீச்சர்சஸும் verygood சொன்னா”, certificate கையில் ஏந்தியபடியே பள்ளி வாயிலில் அன்னையை எதிர்கொண்டாள் ராதா.

“சூப்பர்டா செல்லம்.  என்ன பாட்டுப் பாடினே”, ஆறு வயது மகளைப் பாராட்டியபடியே certificate வாங்கிப் பார்த்தாள் அலமு, அப்பொழுது அங்கு வந்த ராதாவின் ஆசிரியரிடம் அலமு, ராதா எப்படி படிக்கிறாள் என்று கேட்க

“ராதா மாதிரி ஒரு ஸ்டுடென்ட் பார்க்கவே முடியாது.  ரொம்ப அமைதி.  என்ன சொன்னாலும் கேட்டுப்பா.  படிப்பு, படிப்பு, படிப்பு மட்டும்தான்.  நானே நிறைய முறை அவளை free period எல்லாரோடையும் விளையாட சொல்லுவேன்.  அப்போவும் ஏதோ வாய்ல பாட்டை முணுமுணுத்துக்கிட்டு படம் வரைஞ்சிட்டு உட்கார்ந்து இருப்பா.  அவளால ஒரு தொந்திரவும் இல்லை.”, என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.

வீட்டை நோக்கி நடந்தபடியே அலமு ராதாவிடம், “ஏண்டா கண்ணு டீச்சர்தான் சொல்றாளே, எல்லாரோடையும் சேர்ந்து விளையாட வேண்டியதுதானே.”, என்று கேட்க

“இல்லைமா, எனக்கு பிடிக்கலை, அப்போ எனக்கு  drawing போட்டுண்டே பாட்டு டீச்சர் சொல்லிக் கொடுத்த திருப்பாவை சொல்லத்தான் பிடிச்சிருக்கு.”, என்று சொன்ன மகளைப் பார்த்து இந்த வயசுலேயே என்ன பக்தி என்று மகிழ்ந்து போனாள் அலமு.

இருவரும் பேசியபடியே வீட்டை அடைய, “சரி ராதா, நீ கை கால் அலம்பிண்டு டிபன் சாப்பிடு.  ஹோம் வொர்க் இருந்தால் முடிச்சுட்டு டிவி பாரு”

“மாத்ஸ் மட்டும் இருக்கும்மா.  முடிச்சுட்டு நான் திருப்பாவை சொல்றேன்மா”

“ஏண்டி எப்பவும் அதுதானா.  வேற ஏதானும் பாடேன்,”,

“இல்லைமா எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு, ப்ளீஸ்மா”

“சரி சரி என்னவோ பண்ணு”, பெருமையாக சலித்தபடியே சென்றாள் அலமு.

“அம்மா நாளைக்கு உன்னை டீச்சர் வந்து பார்க்கச் சொல்லி இருக்கா”, 10 ஆம் வகுப்புப் படிக்கும் ராதா தன் அம்மாவிடம் வந்து கூறினாள்.

“ஏண்டி திடீர்னு எதுக்கு வரச் சொல்லி இருக்கா.  நீ விஷமம் பண்ணும் குழந்தையும், இல்லை.  பீஸும் கட்டியாச்சு, அப்புறம் என்ன”

“என்னைப் பத்தி கம்ப்ளெயின்ட் பண்ணத்தான் வரச் சொல்லி இருக்கா.”

“உன்னைப் பத்தி கம்ப்ளைண்டா, என்ன தப்பு பண்ணின”, அதிர்ச்சியுடன் கேட்டாள் அலமு.

“இல்லைமா, ஸ்கூல் அன்னிவெர்சரி வரது இல்லை, அதில் என்னைப் பாட சொன்னா, நான் பாட மாட்டேன்னு சொல்லிட்டேன்”

“நல்ல விஷயம்தானே.  இதுல என்ன இருக்கு, ஏன் மாட்டேன்னு சொன்ன”

“டீச்சர் என்னை சினிமாப் பாட்டுப் பாட சொன்னா.  நான் ஸ்வாகதம் கிருஷ்ணா, பாடறேன்னு சொன்னேன்.  அது கூடாதுன்னு சொல்லிட்டா”

“ஓ அப்படியா, சரி அந்தப் பாட்டு ஏன் வேண்டாம்ன்னு உனக்கு சொல்லி இருப்பாளே”

“அது வந்து கிருஷ்ணர் ஹிந்து கடவுளாம், ஸ்கூல்ல எல்லா மதத்துக்காராளும்  இருக்காளாம்.  அதுனால கூடாதாம்”

“உன் டீச்சர் சரியாத்தானே சொல்லி இருக்கா.  நீ கிருஷ்ணரைப் பத்தி பாடும்போது மத்த மதக் குழந்தைகளுக்கு கஷ்டமா இருக்காதா”

“அது சரிதான்மா, அனால் என்னால சுவாமி பாட்டு இல்லாம சினிமா பாட்டெல்லாம் பாட முடியாது. எனக்கு முதல்ல எந்த சினிமா பாட்டும் தெரியவும் தெரியாது. புதுசா கத்துக்கறதாவும் இல்லை.  நீயும் நாளைக்கு டீச்சர் கேட்டா அதையே சொல்லிடு.  ப்ளீஸ்மா”

“ம் பார்க்கலாம்.  நாளைக்கு உன்னோட டீச்சரைப் பார்த்துப் பேசறேன்”

றுநாள் பள்ளியில் ராதாவின் ஆசிரியரைக் கண்டவுடனேயே ஏதோ சரி இல்லை என்று அலமு புரிந்து கொண்டாள்.

“டீச்சர் நான் ராதாவோட அம்மா.  நீங்க என்னைப் பார்க்கணும்ன்னு வர சொல்லி இருந்தீங்களாம்.”

“ஓ வாங்க மேடம்.  உங்களுக்கு ஓரளவு ராதா விஷயம் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன்.  பள்ளி ஆண்டு விழா வருது. அதுல ராதாவை பாடச் சொன்னா கிருஷ்ணர் பாட்டுதான் பாடுவேன்னு பிடிவாதமா இருக்கா.  இத்தனைக்கும் நாங்க சினிமா பாட்டுக் கூட நல்ல தேச பக்திப் பாடலாதான் பாட சொன்னோம்.  அவ மறுத்துட்டே இருக்கா.  ரொம்ப சொன்னா அழ ஆரம்பிக்கறா. அதுனாலதான் நீங்க அவளுக்கு சொல்லிப் புரிய வைப்பீங்கன்னு வரச் சொன்னேன்”, தன்னால் முடியாததை அலமுவானும் செய்வாளா என்ற எதிர்பார்ப்புடன் ராதாவின் ஆசிரியர் பேசினார். 

“நேத்திக்கே வந்து ராதா விஷயம் சொன்னா டீச்சர் நானும் அவகிட்ட முடிஞ்ச வரை சொல்லிப் பார்த்தேன்.  என் கிட்டயும் அதே பதில்தான்.  மீறி பேசினா சுவாமியைப் பத்தி பாடற வாயால சினிமாப் பாட்டு பாட மாட்டேன்னு அழறா.”, தன் மகளிடம் தன் பருப்பும் வேகவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் சொன்னாள் அலமு.

“ரொம்ப நல்லா பாடற பொண்ணாச்சேன்னுதான் இத்தனை தூரம் சொல்றோம்.  அதுக்கும் மேல அவ அதைக் கேக்கலைனா என்ன பண்ண.  சரி மேடம் வேற பசங்க இருக்காங்க,  அவங்களை பாடச் சொல்றேன்”.  சலித்த குரலில் கூறினார் ஆசிரியர்.

“ரொம்ப சாரி டீச்சர்.  அவ மத்தபடி நல்ல குழந்தைதான்.  இந்த விஷயத்துலதான் இத்தனை பிடிவாதமா இருக்கா”, தயங்கியபடியே சொன்னாள் அலமு

“ஐயோ என்ன நீங்க, எனக்கு ராதாப் பத்தி தெரியாதா.  அவ ரொம்ப நல்ல பொண்ணு.  அதனாலதான் அவ பாடலையேன்னு வருத்தப் பட்டேன். மத்தபடி ஒண்ணும் இல்லை, நீங்க கவலைப் படாம வீட்டுக்குப் போங்க”.

ன்று இரவு வேலை முடிந்து வந்த  பார்த்தா தன் மனைவி மிகுந்த கவலையுடன் இருப்பதைப் பார்த்து என்னவென்று கேட்க ராதா தூங்கியபின் பேசலாம் என்றாள் அலமு.

“என்னாச்சு அலமு நானும் வந்ததுலேர்ந்து பார்க்கறேன், நீ சரியே இல்லை, ரொம்ப கவலையாவே இருக்கியே, என்னாச்சு”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.