(Reading time: 4 - 8 minutes)

கஃபே காதல் - சைலஜா

வள் காபி ஷாப்பிற்குள் நுழையும்  போதே அவள் கைப்பேசி சிணுங்கியது. அவள் எடுத்து பார்த்தாள் . திரையில் தெரிந்தது அவன் பெயர் .அவள் எரிச்சலுற்றாள் ."நா எப்ப என்ன பிளான் போட்டாலும் அத கெடுக்குரதுக்கெனே இருக்கான் இவன் " என்று மனதிற்குள் அவனை திட்டினாள்.

அவள் இன்னும் அவன் அழைப்பை ஏற்கவில்லை. "இந்த கால்ஐ அட்டெண்ட் பண்ணலாமா ? இல்ல உள்ள போய் ஒரு காபி சாபிட்டு கிளம்பலாமா? இல்லனா டிக்கெட்டை கான்செல் செய்யலாமா? ம்ம்ம் என்ன பண்ணலாம் ??" இவ்வாறு அவள் மனதில் பல கேள்விகள் எழுந்தன.

"எப்பவும் போல இன்னைக்கும் வரமாட்டேன்னு தான் சொல்லபோறான்.இன்னைக்கு என்ன சொல்லி சமாளிக்க போறான்னு பாக்கலாம்..." இவ்வாறு எண்ணி கொண்டே அழைப்பை ஏற்க முடிவு செய்தாள்.

Cafe kathal

அழைப்பை ஏற்று  "ஹலோ" என்றாள்.

“எங்க இருக்க?” - அவன்

“உனக்கு தெரியாதா நன் எங்க இருக்கன்னு?” - அவள்

“ஓகே ஓகே நான் உங்கிட்ட ஒன்னு சொல்லணும்.” - அவன்

“அது தான் எனக்கு தெரியுமே .... இன்னைக்கு மீட்டிங் இருக்குமா வர முடியாதுடா... இத தான சொல்ல போற?” - அவள்.

“ஏய் மொதல்ல என்ன முழுசா பேச விடு.” - அவன்.

“சரி சொல்லு.” - அவள்.

“கோவப்படாம நான் சொல்றத பொறுமையா கேளு” - அவன்

..........

“ஹலோ கேக்குறிய?” - அவன்.

............

“ஓகே இப்போ நீ என்ன பண்றனா?....  என் அழகான குரங்கு முகத்தை நெனச்சு பாக்குற.... அதுக்கு அப்புறம் பாரு உன்னால சிரிப்ப கண்ட்ரோல் பண்ணவே முடியாது..” - அவன்.

"சரியான கள்ளன் என்ன எப்படி சிரிக்க வைக்கணும் இவனுக்கு தான் நல்ல தெரியும்" என்று மனதினுள் எண்ணி கொண்டு சிரித்தாள்.

“கேட்டுகிட்டு தான்  இருக்கேன் சொல்லு....” - அவள்

“நான் உங்கிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயத்த சொல்லணும்னு நெனைக்குறேன் பட் என்னால சொல்ல முடியல...” - அவன்.

அவள் கலக்கதுடன் அவன் பேச்சை கேட்டு கொண்டிருந்தாள்.

“சரி ரொம்ப யோசிக்காத மா. இல்லாத மூளைய ஏன் ரொம்ப கஷ்ட படுத்துற. யோசிக்குற உன் முகத்த பாத்தா சிரிப்பு தான் வருது...” -அவன்.

அவள் அவனை தேடி கண்களை அலையவிட்டாள். அவன் எங்கும் தென்படவில்லை.

“என்ன யாரோ அங்க தேடுறமாதிரி இருக்கு. ரொம்ப தேடாத நீ நான் சொல்றத கேட்டதுக்கு அப்புறம் உன்ன வந்து நானே பார்ப்பேன்.” - அவன்.

“ஓகே சொல்லு” - அவள்.

“உனக்கு நாம மொதல்ல எங்க மீட் பண்ணோம்னு ஞாபகம் இருக்கா?? நீ இந்த காபி ஷோப்க்கு உன் friends கூட வந்தப்போ உன்னை கவனிக்காம மோதிட்டு கைல இருந்த காபீயை தெரியாம உன்மேல கொட்டிட்டு வண்டி வண்டியா திட்டு வாங்குனேனே ஞாபகம் இருக்கா?”  -- அவன்

“நீ நீ எங்க.....?” - அவள்.

“என்ன முழுசா பேச விடு மா...” - அவன்.

“சரி சரி சொல்லு.” - அவள்

“நான் உன்ன பாத்த அந்த நொடியிலேயே உன்கிட்ட சரணடஞ்சிட்டேன். இத உங்கிட்ட சொல்லனும்னு தான் தினமும் துடிச்சேன். உங்கிட்ட பேசும் போதெல்லாம் சொல்லிடனும்னு நெனச்சேன் ஆனா நீ என்ன  வெறுத்துடுவியோனு ரொம்ப பயந்தேன். அதுக்காக இந்த எண்ணத்துல தான் என்கூட பழகினியானு கேக்காத. உன்னோடு பழகுன ஒவ்வொரு நாளும் எனக்கு உன்மேல இருக்குற அன்பை அதிகபடுத்திருச்சு. ஆனா இவ்ளோ  நாள் எனக்கு அத சொல்ல தைரியம் இல்லாம போச்சு.இனியும் என்னால முடியாது. உன்கிட்ட சொல்லாம தினமும் நரக வேதனைய அனுபவிக்குறேன். இன்னைக்கு கண்டிப்பா சொல்லியே ஆகணும்னு முடிவு செஞ்சு உன்ன நாம மொதல்ல சந்திச்ச அதே காபி ஷாப்க்கு வர சொன்னேன். நேருக்கு நேரா உன் கண்ண பாத்து நான் சொல்லணும் ஆனா எனக்கு அந்த தைரியமில்லை. நான் சொல்லி உன் மனசு கஷ்டபட்டா அத தாங்குற சக்தி எனக்கில்லை. அதனால தான் போன்ல சொல்றேன். உனக்கு என் ப்ரோபோசல் + என்னை பிடிச்சிருந்தா என் கிப்ட்டை கவுன்ட்டர் நம்பர்: 1ல வங்கிக்கோ” -- அவன்.

“நீ இப்போ இங்க வரபோறிய இல்லையா?” -- அவள்

“அது நீ  சொல்ற பதிலை பொருத்து” -- அவன்.

“ஓஹோ நான் முடியாதுன்னு சொன்ன என்ன பண்ணுவ?” -- அவள்.

“அப்படியே திரும்பி என் முகத்தை உன்கிட்ட காட்டாம ஓடி போயிடுவேன்.”

 -- அவன்.

“அப்படினா நீ என்ன இந்த அளவுக்கு தான் லவ் பண்றியா?” -- அவள்.

“இல்ல நான் சொல்றத கேட்டு நீ கஷ்டப்பட்டா அத பாக்குற சக்தி எனக்கில்லை. அப்படி ஒரு வேள  என்ன உனக்கு பிடிக்கலன்னா... உனக்கு தொந்தரவா நான் எப்பொழுதும் இருக்கமாட்டேன். என்னால என் தேவதைக்கு ஒரு கஷ்டமும் வரகூடாதுன்னு நெனைக்குறேன்.” -- அவன்.

“ஓஹோ நான் கஷ்டபடுறத உன்னால பாக்கமுடியாது ஆனா கேக்க முடியுமோ?” -- அவள்

“அப்டின என்ன உனக்கு பிடிக்கலையா???” - அவன்.

“நீ இப்போ நேர்ல வரபோறியா இல்லையா?” -- அவள்.

...... -- அவன்.

பேசப்போறிய  இல்லையா? -- அவள்.

……….

“நீ நேர்ல வந்ததான் நான் என் முடிவை சொல்லுவேன்....” -அவள்.

……….

“ஹ்ம்ம் ஓகே நான் போன்ஐ கட் பண்றேன்.” -- அவள்.

வள்,அவன் சொன்ன கவுன்ட்டர் நம்பர்:1 சென்று பரிசை வாங்கினாள். அதன்மேல் "என் அன்பு காதலிக்கு" என்று எழுதி இருந்தது. கூடவே ஒரு ரோஜா பூங்கொத்தும் இருந்தது.

பின்னே திரும்பி பார்த்தால் அவளின் காதலன் அவளுக்காக ஒரு மெல்லிய புன்னகையுடனும் மனதில் அளவில்லாத மகிழ்ச்சியுடனும் கையில் ஒரு ரோஜாவுடன் காத்துகொண்டிருந்தான்.

“இப்போவாது சொல்லுவியா இல்ல மறுபடியும் கண்ணாம்பூச்சி ஆடப்போறியா?” -- அவள்.

அவன் முழங்காலில் மண்டியிட்டு ரோஜாவை அவள்புறம் நீட்டி கண்களில் மல்கி வரும் ஆனந்தக் கண்ணீருடன் சொன்னான் "டார்லிங் ஐ லவ் யூ .... வில் யூ பீ மை பெட்டெர் ஹால்ப்.....?"

அவள் அதை வாங்கி கொண்டு "லவ் யு டூ ... எஸ் ஐ அம் " என்றாள்.

அவர்களின் காதல் காட்சியைப் பார்த்து காபி ஷாப்பில் இருந்த அனைவரும் கர ஒளி எழுப்பி அவர்களின் காதலுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.