(Reading time: 6 - 11 minutes)

திருமணத்திற்கு பின் காதல் எங்கே?? - ஸ்ரீ குட்டி 

This is entry #20 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

ருமையான பனி விழும் குளிர் காலத்தில் தன் படுக்கைவிட்டு எழுதிருக்க மனம் இல்லாமல், திடீர் என்று தன்அலுவலகத்திற்கு நேரம் ஆகி விட்டதை உணர்ந்து வேகமாக எழுந்து காலை பணிகளை முடிக்க சென்றால் நம் கதையின் நாயகி ஸ்ரீஜா.

அமெரிக்கவிற்கு சென்ற இரண்டு மாதத்தில் தானும்வெள்ளையர்களை போல பிரட், பட்டர் என காலை உணவைஉட்கொள்ள பழகிவிட்டதை எண்ணி கொண்டேஅலுவலகத்திற்கு கிளம்பினாள். சக வெள்ளையர்களோடுசேர்ந்து பஸ்சில் பயணம் செய்து அலுவலகம் வந்துஅடைந்தால் ஸ்ரீஜா.

இந்தியாவில் இரவு நேரம் ஆகபோவதை எண்ணி தன்அன்னைக்கு கால் செய்து பேசினாள்.எப்பொழுதும் போலதன் வேலையில் மூழ்கி போனாள்.மாலை நான்கு மணிஆனதும் விரைவாகவே இருள் சூழ்ந்து விடவும், பணிகளைமுடித்து வீடு திரும்பினாள். மறுபடியும் அடுத்த நாள்அலுவலகம் எடுத்து செல்ல மதிய உணவு மற்றும் அன்றையஇரவு உணவு செய்ய தயார் ஆனாள். தன் வேலைகளைமுடித்தவுடன் சிறிது நேரம் பால்கனியில் வந்து அமர்தாள்ஸ்ரீஜா. அவள் வசிக்கும் அபர்ட்மெண்ட்யில் பெரும்பாலும்இந்தியர்களே இருந்தனர். காசுக்காக குடும்பத்தை விட்டுஇங்கு வந்து இருபவர்களை எண்ணி கவலை கொண்டாள்ஆனால் தன் நிலையோ வேறு என்று எண்ணி கசப்பாகபுன்னகைத்தாள்.

Thirumanathirku pin kathal enge

திருமணமாகி இரண்டு மாதத்திலே அமெரிக்க வந்துஇருந்தாள் ஸ்ரீஜா. தான் கடந்த வந்த பாதையை நினைத்துபார்க்க ஆரம்பித்தாள். வீட்டிலே கடை குட்டியான ஸ்ரீஜாவிற்குஎப்பவுமே வீட்டில் அதிக செல்லம் தான். தன் கல்லூரியின்இறுதி ஆண்டில் தன் தந்தையை இழக்கவும் அவளின்குடும்பம் அதில் இருந்து மீண்டு வர சிறிது காலம் ஆகியது.கல்லூரியை முடித்த அவளுக்கு ஒரு மென்பொருள்நிறுவனத்தில் பணி கிடைத்தது. வாழ்க்கை இனிதே சென்றுகொண்டு இருந்தது அவளின் தாய் அந்த விசயத்தைஆரம்பிக்கும் வரை.

அது அவளின் கல்யாண விஷயம் தான் அது. மிகுந்தபோரட்டாதற்கு பின் அவளை அவள் அன்னை சம்மதிக்கவைத்தாள். மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பம் ஆனது.நிறைய மாப்பிள்ளையா பார்த்து கடைசியாக அவள் அன்னைகண்டு எடுத்த மாப்பிள்ளை தான் பாலா. ஸ்ரீஜாவும் பாலாவைபாரத்துடனே சம்மதம் சொல்லிவிட்டாள்.

கல்யாண வேலைகள் வேகமா நடக்க இருவரும் ஒருவருக்குஒருவர் புரிந்து கொள்ளும் முன்னரே கல்யாணம் இனிதேமுடிந்தது. 

கல்யாண சந்தோஷத்தில் திளைத்து கொண்டு இருந்தாள்ஸ்ரீஜா. திருமணம் ஆகி மூன்று நாள் கழித்து ஆரம்பம் ஆனதுஅவள் வாழ்கையின் சோதனை காலம். பாலாவின்நடவடிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது ஸ்ரீஜாவிற்குஎதுவுமே புரியவில்லை. தினமும் அலுவலகத்தில் இருந்துதாமதமாக வந்தான் பாலா. அவளிடம் சரியாக முகம் குடுத்துகூட பேசவில்லை, வீட்டில் அவள் சமைத்து வைத்த உணவைகூட அவன் உண்ணவில்லை. அவனாகவே விஷயத்தைசொல்லட்டும் என்று அமைதியாக இருந்தாள் ஸ்ரீஜா. அவனின்இந்த செயலுக்கு காரணம் புரியாமலே ஒரு மாதம் ஓடிவிட்டது.

பின்பு ஒரு நாள் பாலா தன்னிடம் எதோ பேச வேண்டும்வெளியே அழைத்து சென்றான். அன்று தான் அந்தவிஷயத்தை சொன்னான் அவன். தான் இன்னொருபெண்ணை காதலிப்பதாக சொன்னான். ஸ்ரீஜாவிற்கு என்னசெய்வது என்ன சொல்வது என்றே தெரியவில்லைஅமைதியாக வீடு வந்து சேர்ந்தனர். அந்த விஷயம்தெரிந்தவுடனே ஸ்ரீஜாவிற்கு கொஞ்சம் நிம்மதியாகவேஇருந்தது என சொல்லலாம். இருந்தாலும் பாலாவின்செயலில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. தினமும் தாமதமாகவருவது போனில் இரவில் பேசிகொண்டே இருப்பதுதொடர்ந்து கொண்டே தான் இருந்தது. ஸ்ரீஜாவிற்கு மேலும்அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் பாலாவின் காதல்விவகாரம் அவன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்கல்யாணதிருக்கு முன்னரே தெரியும் என்பது தான்.

பாலா தன் முடிவில் தெளிவாக இருந்தான் தன் காதலி உடன்தான் வாழ வேண்டும் என்பதில். அவனுடைய குடும்பத்தார்அனைவரும் ஸ்ரீஜாவிற்காக பாலாவிடம் சண்ட போட்டுகொண்டு இருந்தார்கள். ஸ்ரீஜாவிற்கு இந்த விஷயத்தை தன்அன்னையிடம் சொல்ல விருப்பமில்லை. தன் அன்னையைகஷ்டபடுத்த கூடாது என்பது அவளோட எண்ணம். இதைபாலா விடமும் தெளிவாக சொல்லிவிட்டாள்.இரண்டுமாதங்கள் இவ்வாறு நரகத்தில் இருந்த ஸ்ரீஜாவிற்குஅப்பொழுது தான் அவள் வேலை செய்யும் கம்பனியில்இருந்து இந்த அமெரிக்க செல்லும் வாய்ப்பு வந்தது.கடமையே என்று அவள் பயணம் செய்வதற்கு பாலா உதவிசெய்தான். அனைவரிடமும் தான் மூன்று மாத காலத்திற்கேசெல்வதாக கூறி அனுமதி பெற்றாள்.

அவள் பயணம் செய்ய வேண்டிய நாளும் வந்தது. அவளுக்குமட்டும் தான் தெரியும் அவள் தன் வாழ்கையை பணயமாகவைத்து தான் இந்த பயணம் செய்கிறாள் என்று. அன்றுஅவன் விமான நிலையத்தில் அவளை வழி அனுப்பிவைக்கும்போது சொன்ன வார்த்தை அவளுக்கு இன்றும் தன் மனதில்வலியை ஏற்படுத்தியது. அவை என்னவென்றால் " அங்குசென்ற பிறகு தயவு செய்து எனக்கு கால் பண்ணி தொந்தரவுபண்ணாதே". அவனுடைய இந்த வார்த்தைகளை கடைசியாககேட்டுவிட்டு விமானத்தில் ஏறினாள்.

ங்கு வந்த பிறகு அந்த கசப்பான அனுபவகளை மறைக்கதன்னையே மாற்றி கொண்டாள். தன்னை சுற்றி எப்பவும் ஒருசந்தோசமா சூழலை உருவாகி இருந்தாள். தன் அன்னைபாலா பற்றி தினமும் கேட்கும் கேள்விகளுக்கு தினமும் ஒருஅழகான பொய் சொல்லிக்கொண்டு இருந்தாள். அங்கோஅவனின் பெற்றோர் அவனை மாற்றும் முயற்சியில் தோல்விஅடைந்து கொண்டு இருந்தனர்.

அந்த இரண்டு மாதத்தில் பாலா தன்னிடம் அன்பாகபேசிவில்லை என்றாலும் இங்கு வந்த ஒரு வாரத்தில் அவள்அவனின்றி தனிமையை பெரிதும் உணர்ந்தாள். அவனின்பெற்றோர்கள் தினமும் அவளுக்கு தைரியம் சொல்லிகொண்டு இருந்தார்கள். எப்படியும் அவன் மாறி விடுவான்என்ற நம்பிக்கையில் காத்துகொண்டு இருந்தாள்,

கல்யாணத்திற்கு முன் தன் நண்பர்களிடம் பெற்றோர்களிடம்கிடைத்த காதலை கல்யாணத்திற்கு பின் தன் கணவனிடம்எதிர் பார்த்து வந்த காதல் கிடைக்காமல் தன் கனவு கருகிபோனதை நினைத்து நொந்து கொண்டாள். திருமணத்திற்குபின் காதல் எங்கே சென்றது என்று தேடி கொண்டுஇருந்தாள்.

பாலாவின் மனதை புண்படுத்த கூடாது என்று அமைதியாகஇருந்தாள் ஸ்ரீஜா. அந்த மாத இறுதியில் ஸ்ரீஜாவின்பிறந்தநாள் வந்தது. அதற்கு இரண்டு நாள் முன் தான்பாலாவின் அன்னை அவனுடைய காதலி அவனை ஏமாற்றிவிட்டு போன விஷயத்தை சொன்னார். ஸ்ரீஜாவிற்கு எப்படிநடந்துகொள்வது என்றே தெரியவில்லை.

தன் பிறந்தநாளன்று சரியாய் பன்னிரண்டு மணிக்கு தன்போன் அடித்தது, அழைத்தது பாலா தான். இரண்டுமாதத்திற்கு அப்புறம் அவனின் குரலை கேட்டு உடைந்துபோய் விட்டாள். அவன் அவளிடம் மனதார மன்னிப்புகோரினான் பின்பு அன்பு மலை பொழிய பிறந்தநாள் வாழ்த்துசொன்னான்.

அவன் சொன்ன அந்த மூன்று வார்த்தையில் திருமணத்திற்குபின் காதல் எங்கே என்பதின் விடை கிடைத்தது ஸ்ரீஜாவிற்கு.

"ஐ லவ் யு"

This is entry #20 of the current on-going short story contest! Please Visit the contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.