(Reading time: 7 - 13 minutes)

கொலைகாரர் தெரு - சத்யா 

ன்று தான் எனக்கு அந்தப்  பள்ளியில் முதல் நாள் . நான் அந்தப்  பள்ளிக்குப்  புதியவன் .6 வது படித்துக்கொண்டிருந்தேன் . அன்று எனக்கு கிடைத்த புதிய நண்பனுடன்  (பெயர் சிவா) நான்  பள்ளியை விட்டு  வெளியே வர என் தாயை நன்குத்  தெரிந்த 8  ஆம் வகுப்பு ஆசிரியை என்னை பார்த்து " ஜெயா வின் மகன் தான. நீ? , அம்மா எப்டி இருக்கிறாள் ?,நீ 6 த் தானே படிக்கிர  ?" என்ற அவர்களை பார்த்து நான் பயந்த வாரே “ஆமாம்” என்றேன் . " சரி  பத்திரமா வீட்டிற்கு போ..."  என்றார்கள் .

என் நண்பன் அந்த ஆசிரியரை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான் நான் அவனிடம் பேசிக்கொண்டே என் விட்டிருக்கு  நடக்க தொடங்கினேன் . {சரியாக மெயின் ரோடு வழியாக  நடந்து சென்றால் 30 நிமிடங்கள் ஆகும் என் விட்டிருக்கு  . மெயின் ரோடின் இரு புறமும் கொஞ்சம் உயரமா  கட்டிடங்களும் நடுவில் சிறிய  மதில் சுவர்களும் இருக்கும்}

அப்பொழுது  எங்களுடன் பள்ளி முடிந்து வந்த பிற மாணவர்களுள் சிலர்  அங்கு இருந்த மதில் சுவரை தாண்டி குதிப்பதை கண்டேன் . என் நண்பனிடம் கேட்டதற்கு அவன்  “அவங்க கொலைகாரர் தெரு பசங்க ல” என்று கூற நான் என்ன வென்று விசாரிப்பதற்குள் ஒரு கார் வேகமாக எங்களை இடிக்கும் வண்ணம் உரசி நின்றது . நாங்கள் பயந்து ஒதுங்கி நின்றோம் . அதில் இருந்ததது சகுனி மாமா . என் தந்தையின் நண்பர் .நான் அடிக்கடி அவரது விட்டிற்கு என் தந்தையுடன் செல்வது உண்டு.

Kolaikara theru

அவர் என்னை பார்த்து " என்ன டா சத்யா இங்க என்ன பண்ற ? அந்த தெரு வழியா போலான்னு பாக்குறியா .அந்த தெரு வழியாலாம் போக கூடாது..... பாட்டிகிட்ட சொல்லிருவேன் பாத்துக்கோ.... வா வந்து   வண்டில்ல ஏரு.."  என்று அதட்டிய சகுனி மாமா வை பார்த்து

" இல்ல மாமா சும்மா தான் பார்த்துக்குட்டு இருந்தேன்..."என்றேன் . 

பாட்டி என்று கூறிய உடன் பதில் பேசாமல்  காரில்  என் நண்பனையும் அழைத்க்கொண்டு ஏறினேன் . அவன் என்னை பார்த்து " பாட்டி கிட்ட உனக்கு அவ்வளவு பயமா ல ?  "என்றான்.அதற்கு பதில் அளிக்காமல்  இரு புறமும்  வேடிக்கை  பார்த்துக்கொண்டிருந்தேன் . என் மனதில் முழுவதும் அந்தத் தெருவை பற்றிய சிந்தனை யே ஓடிக்கொண்டு இருந்தது .

நாங்கள் வீடு சென்று அடைந்தோம் . எனக்காக காத்துக்கொண்டிருந்த என் தாய் என்னை பார்த்து " என்ன டா முதல் நாளே கார்  என்ன டா உனக்கு .!." என்ற என் தாயிடம் என் பையை சிரித்துக்கொண்டே கொடுத்தேன் . என் தாய் சகுனி மாமாவிடம் " ஏங்க..!  அவன் புது பசங்க கூட நல்ல பழக தான அவன நடந்து வர சொன்னேன் நீங்க ஏன் அவன கூட்டிட்டு வந்திங்க .." என்ற என் தாயின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வரு வதற்குள் , என் பாட்டி அங்கிருந்து " அவன ஏண்டி அந்த கொலைகாரர் தெரு பசங்க  அதிகம் படிக்குற அந்த  இடத்துல சேத்த ? உம் புருஷன் கம்பெனி பக்குதல இருக்கிற இவங்க அண்ணன் படிக்கிற அந்த இடத்துல சேக்க வேண்டியது தான  ?" என்றாள்.

அதற்கு என் தாய் " இந்த காலத்துல எதுக்கு இது எல்லாம் பாக்குறிங்க .." என்று கூறிய வாரே என்னையும் அழைத்துக்கு கொண்டு உள்ள வர என்னை பிடித்து இழுத்து என் பாட்டி " டேய் ,  அந்த தெரு பக்க மோ,

அந்த தெரு பசங்க கூட யோ உன்ன பாத்தேன்னு  தெரிஞ்சுது ,உன்ன கொன்னுருவேன் பாத்துக்கோ......"என்றாள் .

நான் சரி என்று உள்ளே  ஓடி வர  என் அண்ணன் அங்கிருந்து " என்னடா வந்த உடனே கிழவி  இப்படி கத்துது, என்ன பண்ண ?"என்றான் . நான் அந்த கொலைக்காரர் தெருவை பற்றி விசாரிக்க அவன் கூறிய பதில் எனக்கு மிகவும் பயமுட்டியது . 

"அங்கு இருக்கும் எல்லாரும் கொலை காரங்கலாம்  . எல்லாரும் எப்பவும் தண்ணில தான்  இருப்பாங்கலாம் . பொம்பளங்க கூட தண்ணி அடிப்பான்கலாம்  . சின்ன   பசங்க வந்தா கடத்திட்டு  கொலை பண்ணிருவாங்கலாம் ."என்றான் .

நான் மறு நாள் பள்ளிக்கு சென்ற உடன் என் புதிய நண்பன் சிவா விடம் அத்தனை கதைகளையும் கூறினேன் .அதை கேட்டுக்கொண்டிருந்த வகுப்பில் இருந்த சில மாணவர்கள் என்னை பார்த்து முறைத்தார்கள் .

பின்பு பள்ளி முடிந்ததும் நானும் என் நண்பனும் நீண்ட நேரம் அதை பற்றி  பேசிக்க்கொண்டிருந்தோம் . பின்பு அவன் சென்றுப் பார்த்து விடலாம் என்றான் . எனக்கு பயம் இருந்தாலும் அந்தத் தெருவின் மீது இருந்த ஆவலால் சரி என்று கூறி புறப்பட்டோம் .

நங்கள் அங்கு சென்று அடைந்தோம். அங்கு கற்களால் அமைக்கப்பட்டப் படிகள் அந்த மதிலை தாண்ட உதவியது . அதை தாண்டி குதித்த எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது .அங்கே பச்சை பசேல் என்று ஒரு வயல் இருபுறமும் இருக்க நடுவில் ஒரு பாத்தி இருந்தது . அதன் வழியாக நடக்கத் தொடங்கினோம் . அங்கு எவரும் தென்படவில்லை. அங்கே நடுவில் ஒரே ஒரு காளை மாடு எங்களை பார்த்து உர் என்றது . அதன் கொம்புகள் சிவப்பட்டிருந்தன . (அந்த அழகிய  மாலை வேலையில் உங்கள  பாத்து ஒரு  மாடு உர் என்றால் நீங்க என்ன பண்ணுவிங்க ....) அந்த மாடு கட்டப்பட்டிருந்ததை அறிந்த நாங்கள் அதன் மீது ஒரு கல்லை எரிந்து விட்டு  அந்த வயலைத்  தாண்டி ஓடி வந்து விட்டோம். அந்தத் தெருவை அடைந்தோம் .

அது "சிமெண்ட்" ஆல் ஆன ரோடு . பொதுவாக சிமெண்ட் ரோடுகள் 5-9  வருடங்களுக்கு  ஒரு முறை தான் மாற்றப்படும் , (durability) ஆயுட்காலம் அதிகம் என்பதால். ஆனால் அந்த ரோடுசரியான நேரத்தில் பராமரிக்கப் படவில்லை. குண்டும் குழியுமாக இருந்தது.   இரு  புறமும் இருந்த முற் செடிகள் எங்களுக்கு பயம் மூட்டியது . ரோடு முழுவதும் ஆங்காங்கு ஆட்டுப் புழுக்கைக்களும் மாட்டுச் சானமாகவும் இருந்தது . சில ஆடுகளும் சுற்றிக் கொண்டிருந்தன .  சுற்றி இரு புறமும் சில குடிசைகளும் நடுவில் சில காலி  இடங்களும் இருந்தன . அங்கு ஒரு சிறிய அய்யனார் கோவில் இருந்தது. நாங்கள் அய்யனாரை கும்பிட்டு விட்டு நடக்க அங்கு தூரத்தில் ஒரு அடி குழாய் இருந்தது. அங்கு ஒரு அம்மா தண்ணிர் அடித்துக் கொண்டு இருந்தார்கள் . அவர்கள் பக்கத்தில் சகுனி மாமா வயதுள்ள ஒருவன் மல்லாக்கக் கிடந்தார் . அந்த தெருவை பற்றி கேள்வி பட்டது போல் அவர் தண்ணியில் தான் இருந்தார் . அவர் எங்களை பார்த்து எழுந்து

" பாருடி உன் பையன்  வந்துட்டான் " என்றார்.

அதற்க்கு அந்த அம்மா கையில் இருந்த தண்ணிரை அவர் தலையில் உற்றி விட்டு " நம்ம மகன் செத்து தான் 5  வருடம் ஆச்சே... வாயா வீட்டுக்கு போலாம் "  என்றாள்.

அந்த மாமாவை தூக்கி நிறுத்திய அந்த அம்மா  எங்களை பார்த்து சிரித்தார்கள். நாங்கள் அந்த இடத்தை விட்டு மெதுவாக கடந்து வந்தோம் . அங்கு சில மாணவர்கள் கிரிக்கெட் விளையடிக்கொண்டிருந்தர்கள் . அவர்கள் எங்கள் பள்ளி மாணவர்கள் . அதில் எங்கள் வகுப்பு மாணவர்களும் இருந்தார்கள் . அவர்கள் தான் காலையில் என்னை பார்த்து முறைத்த மாணவர்கள்.  நாங்களும் வருகிறோம் என்றதற்கு அவர்கள் முதலில் மறுத்தார்கள் .பின்பு அந்த தண்ணிர் பிடித்துக்கொண்டிருந்த அம்மா வந்து சொன்னவுடன்  எங்களை சேர்த்துக் கொண்டார்கள் .நாங்கள் தீவிரமாக விளையாடத் தொடங்கினோம். நேரம்   போனதே தெரிய   வில்லை .

என் சிந்தைக்கு வந்த நான் " வீட்டுக்கு போலாம் டா நேரம் ஆயிருச்சு ...."என்றேன் . இருவரும் சேர்ந்து கிளம்பினோம் .  இருட்டத் தொடங்கியது . அந்தத் தெருவைப் பற்றிய எந்த பயமும் எனக்கு இப்பொழுது  இல்லை.  நாங்கள் அந்தத் தெருவை விட்டு வெளியே வந்தோம் . எனக்கு பாட்டி  குறித்த பயமே அதிகமாக இருந்தது . வெளியே வந்த எனக்கு அன்று  சனி காரில்  வந்திருந்தது , அது என் சகுனி மாமா . நேரம் ஆனதால் அவர்  என்னை  தேடி வந்திருந்தார். காரில் ஏறி  நான் வீடு சென்றடைந்தேன் . அங்கு அனைவரும் எனக்காக வெளியே நின்று  கொண்டிருந்தார்கள் . என் அண்ணன் என்னை பார்த்து சிரித்தான். அங்கிருந்து வந்த என் அம்மா என் அழுக்கான சட்டையையும் தலையையும் பார்த்து " என்னடா நீ , எங்க டா.... போன... ?"என்ற அவர்களிடம் நான் “விளையாடிட்டு இருத்தென் மா” என்றேன் . அதற்குள் சகுனி மாமா தன் வேலையை காட்ட  ஆரம்பித்தார் . பாட்டி என்னைப் பார்த்து எதோ சொல்ல நினைப்பதற்குள் என் தாய் அவரை பார்த்து "சின்ன பையன் தான ,  விடுங்க .." என்றாள் . நான் எதோ பெரிய பிரளயம் நடக்கப் போகிறதென்று நினைத்தேன் . ஆனால் என் தாய் அனைத்தையும் சமாளித்து விட்டால் .என் பாட்டி அதன் பின்பு என்னை பல முறை அதட்டினார், ஆனால் நான் அங்கு சென்று விளையாடுவதை நிறுத்தவில்லை . பின்பு அவரும் அதை விட்டு விட்டார் . அன்று முதல் நாள் அங்கு சென்ற பொது  குடித்து விட்டு  கிடந்த மாமா இப்பொழுது குடிப்பதை விட்டு விட்டார் . எங்களை மகன் போலவே பாவித்தார் .அந்த   அம்மாவும் எங்களிடம் மிகுந்த பாசமுடன் இருந்தார்கள் . நாங்கள் சுற்றித் திரிந்தோம் அந்தக் கொலைகாரர் தெருவில் இருந்த அந்த அழகான வயலில் ஆனந்தமாக ....  

"ஜாதி என்பது பிறப்பால் வருவது அல்ல , சமுகத்தால் நமக்கு ஊட்டப்படுவது" என்பால் என் தாய் அடிக்கடி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.