(Reading time: 8 - 15 minutes)

எதோ மாற்றம் - சத்யா 

ன்று என் உடலில் எதோ மாற்றம் ஏற்பட்டிருந்தது .

என்னவென்று என்னால் உணர முடிந்தது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான்  அன்று என் பள்ளியில் 12 வகுப்பு  தேர்வு எழுதிக்கொண்டிருந்தேன் . தமிழ் பேப்பர் ,சென்ற முறை கூட எனக்கு அதில் தான் மார்க் குறைவாக இருந்தது . எனக்கு எந்தக் கேள்விக்கும் விடை தெரியவில்லை. கையில் இருந்த தண்ணீர் பாட்டில் தண்ணீர் கீழே கொட்டிவிட்டது .....3 வருடங்கள் ஆயிற்று நான் 12ஆம் வகுப்பு முடித்து .திடிரென்று மறுபடியும்  12ஆம்  வகுப்பிற்கு வந்து உட்கார்திருந்தாள் எனக்கு என்ன தெரியும். நான் கஷ்டப்பட்டு   எடுத்த  மார்க், கட் ஆப் , பல்கலைகழகத்தில்  கிடைத்த சீட்  ,படித்த மூன்று வருடங்கள், அனைத்தும்  பயனில்லாமல் போனது.மறுபடியும் 12ஆம் வகுப்பு , அய்யோ கடவுளே என்ன கொடுமை இது .இது எல்லாம் எப்படி நடந்தது என்று எனக்கு நினைவில் இல்லை .ஆனால் இது அனைத்தும் அந்த மூன்றாம் ஆண்டு கடைசி 10 நாட்களிலேயே நடந்திருக்க வேண்டும். எனக்கு சில பின்பங்கள் மட்டும் நினைவில் வந்து வந்து போகிறது . என் நண்பர்களுக்கு தெரிந்திருக்கக் கூடும் ஆனால் அவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது .அவர்களும் இப்போது என்னைப் போல் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிறுப்பார்கள்.

edho maatram

எனக்கு அந்த கடைசி 10 நாட்களில் ,அந்த ஒரு நாள் நினைவு கடைசி நாள் நினைவு மட்டுமே இருந்தது.அது  என்னவென்றால் என்னை யாரோ கருப்பு   முகமூடி அணிந்திருந்த மனிதர்கள் துரத்திக் கொண்டிருந்தார்கள்.அவர்கள் முழுவதுமாக தங்கள் உடலை மறைத்து  இருந்தார்கள், வெய்யிலில்  பட்டால் அவர்கள் உடலிற்கு ஆபத்து என்பது எனக்குத் தெரிந்திருந்தது . எப்படி எனக்கு அது தெரியும்  என்று எனக்குத்  தெரியவில்லை.நான் அவனிடம் இருந்து தப்பிக்க நான் ஓடிக்கொண்டிருந்த போது.என் நண்பன் சிவா வீட்டிற்க்குள் சென்றேன். எப்பொழுதும் அங்கு என் பிற இரு  நண்பர்களுடன் {ராம் ,கணபதி}  கேம் விளையாடிக்கொண்டிருக்கும் என் நண்பன் அங்கு இல்லை. அவன் வீட்டிலும் யாரும் இல்லை. வெய்யில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. ஓடி வந்ததால்  என் இதயம் பலமாக துடித்துக் கொண்டிருந்தது . உடல் முழுவதும் வியர்வை .எனக்கு மிகுந்த தாகமாக இருந்தது   .அவர்களை  தேடி மொட்டை மாடிக்கு ஓடினேன்.நான் எதிர்பார்த்தது போல் அங்கு என் நண்பர்கள் தண்ணீர் தொட்டிக்குள்  மறைந்திருந்தார்கள் .என்னை பார்த்ததும் என்னை உள்ளே இழுத்துப்  போட்டன் .சிவா 

"நீ எதுக்குடா இங்க வந்த?உன்ன தான் அவங்க தேடிக்கிட்டு  இருக்காங்க,அந்த கருப்பு முகமூடி போட்டவங்க.அவங்களுக்கு இந்த வீடு தெரியாது .அதுனால தான் டாக்டர் எங்கள இங்க இருக்க சொன்னாரு .உன்னால இப்போ இந்த இடமும் போச்சு ...." அதற்குள் கணபதி "நான் அப்பவே அந்த டாக்டர் கூட சேராத சேராத ன்னு எத்தன தரவ சொன்னேன் கேட்டியா நீ .. இப்ப பாரு என்ன ஆச்சுன்னு........."என்றான் சிவாவை பார்த்து.சிவா,"நான் என்னடா பண்ணேன்....எல்லாம் இந்த ராம் தான் ..." .  ராம் ," எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியுமா என்ன..எல்லாம் அந்த டாக்டர் ####ஆல " .இப்படி பேசிக்கொண்டிருந்த போது, அனைவரும் யாராவது வருகிறார்கலா என்று குனிந்து கண் மட்டும் வெளியே தெரியும் அளவிற்கு, வெளியே பார்த்துக்கொண்டிருந்தர்கள். நான் அவர்களை பார்த்து எதுவும் புரியாமல் " யாருடா இந்த டாக்டர், எதுக்கு அந்த முகமூடி மனிதர்கள்  என்ன தொரத்துறாங்க எனக்கு எதுவும் நினைவுல இல்ல என்ன நடந்துதுன்னு சொல்லு.. "என்று புரியாமல் கேட்க்க  என்னை பார்த்து சிவா "ஆமாம் உனக்கு எதுவும் மெமரி ல இருக்காது .அந்த டாக்டர்  சொன்னான் . அந்த நாய் தான் இதுக்குல்லாம் காரணம் .இதை நீ வந்தா கொடுக்க சொன்னான் .இந்தா ... நீ இங்கிருந்தா எங்களுக்கும் ஆபத்து .உன்ன தான் அவங்க பாத்துட்டாங்க..நீ இங்கிருந்து போ ..இந்தா இதை பிடி ."

அதை நான் வாங்க அது  மின்னியது .சட் என்று  என் கையில் ஒட்டிக் கொண்டது பின்பு அதில் இருந்து சிறு சிறு பூச்சி போன்ற சிலவை என் உடல் முழுவதும் பரவியது   .அதில் இருந்து எதோ ஒரு ஊசி போன்ற கம்பிகள்  என் நரம்புகளுக்குள் சென்றது . அது என்னை முழுமையாக கட்டுப் படுத்துவது போல் இருந்தது.நான்  மயங்கி கீழே விழுந்தேன்.அனைவரும் என்னை பிடித்துக் கொண்டனர். என் முகத்தில் தண்ணிர் பட நான் நினைவிற்கு வந்தேன்.நான் அப்பொழுது எதோ ஒரு குழாய் அடிக்கு கீழே கிடந்தேன். என் தாகத்தை உணர்தே அங்கே போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அங்கே யாரும் இல்லை.தெருவே காலியாக இருந்ததது .என் உடலில் எந்த காயங்களும் இல்லை . கையில் அவர்கள் கொடுத்த அந்த மினு மினு பொருள் கை கெடிகாரம் போல் என் கையை சுற்றி இருந்தது .

நான் என் தாகத்தை தீர்க்க குழாயை திறந்தேன் . தண்ணிர் அந்த.... அந்த.... மினு மினு பொருள் மேல் பட்டதும் என் உடல் முழுவதும் கொதிக்கத் தொடங்கியது .எதோ ஒரு விதமான  நாற்றம். அந்த இடத்தை விட்டு போனால்  போதும்  என்று இருந்தது. நான் ஓடத் தொடங்கினேன் . ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது .அதில் ஓடி ஏறினேன் .இருபுறமும்  சில மனிதர்கள் உட்கார்திருந்த்தார்கள். நான் ஒருவர் பக்கத்தில் சென்று தண்ணிர் இருக்கிறதா என்றேன். அவர் " இல்லை பா ..ஏன் இப்படி எல்லாரும் ஓடி வாரிங்க ?இப்பத்தான்  ஒரு ஆழு உன்ன மாதிரி ஓடி வந்து பின்னாடி உட்கார்ந்திருக்கிறாரு ..." என்றவுடன் திரும்பிப் பார்த்தேன்.அங்கு  அந்த முகமூடி மனிதன் ஒருவன் நின்று கொண்டிருந்தான் .என்னிடம் அவன் நெருங்க, நான் தப்பிக்க வேகமாக அந்த இடத்தை விட்டு நகர முயன்றபோது அந்த மினு மினு பொருள் அங்கிருந்த கம்பியில் பட்டது .  நான் பஸ்ஸில் இருந்து கீழே குதிக்க அங்கே சென்று கொண்டிருந்த ஒரு சைக்கிள் மீது விழுந்தேன் .என் உடல் முழுவதும் ஒலிமயமானது, அந்த மினு மினு பொருள் மிகவும் மின்னியது  . அவரை தள்ளிவிட்டு அந்த சைக்கிளை எடுத்த நான் , திடிரெண்டு ஒரு சிவன் கோயிலுக்குள் அந்த சைக்கிளோடு  வந்துவிட்டேன். அது நான் எப்பொழுதும் செல்லும் சிவன் கோயில் தான் . எப்பொழுது கஷ்டம் வந்தாலும் என் தாய் அங்கு சென்று வழிபட சொல்வார்கள் .

அந்தக் கோயில் குகை வடிவில் இருக்கும்.அன்று  சிவனின் இருபுறமும் தொங்கும் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தது .சிவனிற்கு மாலை சூட்டப்பட்டிருந்தது . . முன் இருந்த நந்தியின் மேல் பூக்கள் இருந்தன மற்றும் மஞ்சள் துணியும் சாற்றப்பட்டிருந்தது.கோயிலில் எவரும் இல்லை, கதவு வெளியே பூட்டப்பட்டிருந்தது . நான் என் காலில் செருப்பு இருப்பதை உணர்ந்து அதை எடுத்து சைக்கிள் ,முன் கூடையில் வைத்து விட்டு "அப்பா ... என்னை காப்பாற்று" என்றேன் சிவனை பார்த்து.அந்த மினு மினு பொருள் மருபடியும் மின்னியது. நான் அந்த சைக்கிளோடு  என் கல்லூரி  hostel லில் இருந்தேன் அதுவும் என் ரூமில் . என்னால் என்ன நடக்கிறதே என்றே புரிந்து கொள்ள முடியவில்லை. அங்கிருந்த என் நண்பன் {எந்த விடுமுறைக்கும் வீட்டுப் பக்கம் செல்லாதவன்} "டேய்...! சைக்கிளோட எப்டிடா ரூமுக்குள்ள வந்த ?...இங்க என்ன பண்ற ?..."என்று அவன் கேள்வி மேல் கேள்வி கேட்க அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன் கையில் இருந்த தண்ணிரை வாங்கி அப்படியே அங்கு அமர்ந்துவிட்டேன். எனக்கு மயக்கமாக வந்தது .. நான் குடிக்க பாட்டிலை எடுக்க அதற்குள் , என் நண்பர்களும் , டாக்டர் என்ற பெயருக்கு ஏற்றவாறு ஒருவரும் உள்ளே வந்து என் ரூம் நண்பனை பின்புறமாக தாக்கினார்கள் .

அவன் மயங்கி விழுந்தான். என்னைப் பார்த்து இவனையும் நம்மையும் காப்பாற்ற ஒரே வழி தான் இருக்கிறது. மீதி இருக்கும் அந்த முயற்சியையும் இவன் மீது செய்து விடலாம் என்றார்கள். அவன் பாக்கெட்டில்  இருந்து மற்ற சில மினு மினு பொருட்களை எடுத்தான். அதில் ஒன்றை எடுத்து என் கையில் இருந்த ஒன்றோடு இணைத்தான். நான் எப்பொழுதும் போல்  மயங்கினேன்.

பின்பு ஒரு குரல் " டேய்  ....எக்ஸாம் ஹால்ல வந்து தூங்குது பாரு ....கர்த்தரே.....இந்த பையனுக்கு  சொம்பெரின்கிற பெரிய பிசாசு பிடிச்சிருக்கு .நீ தான் இவனை காப்பத்தணும்...."அது என் தமிழ் ஆசிரியரின் குரல் . நான் எழுந்து பார்த்தால் என் ஸ்கூலில் இருந்தேன். தமிழ் எக்ஸாம் .எனக்கு வெறுத்தேவிட்டது.நான் மறுபடியும் பள்ளி மாணவனைப் போல் மாறி விட்டேன். மறுபடியும் 12ஆம் வகுப்பா என்ற கவலை எனக்கு . இதற்க்கு ஒரு 8 அல்லது 10ஆவது என்றால் கூட பரவாயில்லை. எவருக்கும் கிடைக்காத பள்ளி வாழ்கை மறுபடியும் கிடைத்தது என்று சந்தோசப்பட்டிருப்பேன். ஆனால் 12ஆவது அதுவும் கடைசி தேர்வு. என் வாழ்கையே முடிந்தது .

12த்தில் தோல்வி l என்றால் நாய் கூட மதிக்காது.பேப்பரை பார்த்து எழுத முயற்சி செய்தேன்.கையில் வினாத் தாளை எடுத்ததுப் பார்த்தேன் . அதை எடுக்கும் ஆருவத்தில் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலலை கீழே போட்டுவிட்டேன் .... என் தமிழ் அய்யா " எழுது .... மணி ஆயிருச்சு ..." என்றவுடன் என் கையில் அந்த மினு மினு பொருள் இன்னும் இருப்பதை கண்டேன்.  கோபத்தில் ஓரே அடி அது மேல் அது மினு மினுத்தது . கண்ணை மூடிக் கொண்டேன் .

கண்ணை திறந்த போது  நான் என வீட்டு மெத்தையில் இருந்தேன். என்  தாய்  " டேய்  ஏந்திரி டா ...... பரிட்ச 3 மாசத்தில இருக்குன்னு  பயம் இருக்கா பாரு ...ஏந்திரி ....." என்றவுடன் எழுந்து பார்த்தால், என் கலென்டறில் தேர்வுக்கு 90 நாட்கள் இருந்தது. கையில் இருந்த மினு மினு பொருள்  உடைந்து  விழுந்தது. அது பக்கத்தில் அந்த வினாத்தாளும் இருந்தது. அதை எடுத்துப் பார்த்தேன். அதே தமிழ் வினாத்தாள். நான் அந்த வினாத்தாளை எடுத்து உள்ளே வைத்து விட்டு ........ தண்ணீரை  தேடினேன்...அங்கு பாட்டில் இருந்தது . அதை எடுக்க நான் வர அதற்குள் அதை கையில் எடுத்து என் தாய்    , “எழுந்துட்டியா..பல் தேய். டா... முதல்ல .. காபி தரேன் . போ...... காலையிலேயே என்ன தண்ணி வேண்டி இருக்கு உனக்கு........ ” ....என்றார்கள்......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.