(Reading time: 6 - 11 minutes)

கடவுள் இருக்கிறார் - ப்ரியா

This is entry #23 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

ன்று வார விடுமுறை!! நாளை மறு நாள் புத்தாண்டு...!! என்ன செய்யலாம்?! கையில் காபி கப்புடன் யோசிக்க தொடங்கினேன்..

என்ன புத்தாண்டு வந்து என்ன?! இந்த கார்பரேட் உலகத்திற்குள் என்று காலடி எடுத்து வைத்தேனோ அன்றே என் புத்தாண்டு,தீபாவளி,பொங்கல்,சுதந்திர தினம் என அணைத்து பண்டிகைகளும் என் கணினியுடன் தான் என்றாகி விட்டது!!!

அங்கலாய்க்க தொடங்கிய மனதை திசை திருப்பினேன்!! சற்று நேரம் மனதை அமைதி படுத்தி காபியை பருகினேன்.

புத்தாண்டு அன்றும் வேலைக்கு செல்ல வேண்டும் தான்!! ஆனால் ஷிப்டின் அடிப்படையில் மதியம் சென்றால் போதும்!!

இந்த பெங்களுரு மக்களின் ஆர்ப்பாட்டம் தான் என்னையும் தொற்றி கொண்டு அலைகழித்தது. என் ஊரில் என் வீட்டில் இருந்திருந்தால் அப்பா வாங்கி வரும் கேக்கை நானும் என் தங்கையுமாய் வெட்டி பெற்றோருக்கு ஊட்டி விட்டு "ஹாப்பி நியூ இயர்" என்று சொன்னால் புத்தாண்டு வந்து விடும்.. அப்படி தான் வரவேற்போம்!!

ஆனால் இங்கே, நாடு,மொழி,மாநிலம் கடந்து வேலைக்கு செல்லும் இளைஞர் கூடம் ஒரு பக்கமும் பெற்றோர் சம்பாதித்து வைத்துள்ள பணத்தை செலவழிக்க வழி தேடி அலையும் மற்றொரு கூட்டமும் தங்கள் அடம்பரதையும் வெட்டி சம்பத்தையும் காட்ட சிறந்ததொரு நேரம் பண்டிகை நேரங்கள்!! அதிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு என மால்கள், பப்கள் என எங்கு காணினும் கண்கவர் ஒலியமைப்புகளும் காது கிலியும் ஒளியமைப்புகளும்.. அப்பப்பா!! இதில் மதுவும் மாதுவும் வேறு சேர்த்தி!!

நான் என்ன செய்ய போகிறேன் என்று தானே யோசனை!! இந்த மனம் எப்போதுமே இப்படி தான்.

அப்போது அங்கு வந்தார் என்னுடன் அறையை பகிர்ந்து கொள்ளும் தோழி.

அவருடன் கலந்து ஆலோசித்ததில் எம்.ஜி ரோட் செல்லலாம் என முடிவு செய்தோம். அங்கு கொண்டாட்டத்திற்கு குறைவில்லை!! பெண்கள் மட்டும் பங்கேற்கும் வகையிலான பார்ட்டி ஏதேனும் உள்ளதா என தேடி பாக்கலாம் என்று அவர் கூற, நானும் ஒப்பு கொண்டு கிளம்புவதாக கூறினேன்.

ஆனால் இருவருக்கும் இருந்த வேலைகளில் மூழ்கி விட, பின்னர் செல்லலாம் என முடிவு செய்தோம்.

அதற்குள் வந்தது அந்த செய்தி..

 "பெங்களுருவில் குண்டு வெடிப்பு, எம் ஜி ரோட் அருகில் உள்ள ஒரு ஹோட்டலின் முன்னே நடந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் பலி, மூவர் காயம்" என, அதிர்ந்து போனோம் இருவரும்.

ஆனாலும் ஆசையாக முடிவு செய்தது இப்படி கேட்டு விட்டதே என பக்குவ படாத இருவர் மனதும் குண்டு வைத்தவனை சபித்தது!!    

அன்று அப்படியே உறங்கி போனோம். மீண்டும் காலையில் இதே யோசனை நாளை புத்தாண்டு. நடந்த விபரீத செயலினால் பொது மக்கள் கூடம் உள்ள இடங்களில் குறிப்பாக புத்தாண்டு தின இரவு அன்று செல்வதை தவிர்க்கவும் என்ற தலைப்பு செய்தியை பார்த்த பின்பு சந்தோஷம் வடிந்து போனது!!

மெல்ல கிளம்பி அலுவலகம் செய்ய தயாரானேன். செல்லும் வழியில் ஒரு செருப்பு தைக்கும் தாத்தாவிடம் ஒரு பெண் நாளை கண்டிப்பாக வருவீர்களா என்று கேட்டாள். கண்டிப்பா வரேன்ம்மா என்று விட்டு தன் வேலையே பார்த்தார் அவர்!

அடுத்து நான் ஏறிய பேருந்து ஓட்டுனரின் புலம்பல், "நாளைக்கும் வரணும், ஆனால் பாரேன் புத்தாண்டு அன்று கூட வேலை செஈய வேண்டிய கட்டாயம் ஒரு நாள் கூட லீவ் இல்லாமல், குழந்தைக கூட கொஞ்ச நேரம் செலவிட முடியாமல் என்னய்யா" என்று கண்டக்டரிடம் அலுத்து கொண்டார்.

பேருந்தில் இருந்து இறங்கி நடந்த பொது அலைபேசி அழைத்தது. என் டீம் லீடர் தான் இன்று ஓவர்டைம் பார்க்கும் படியும் தான் மீட்டிங் செல்வதாகவும் கூறினார்.

‘வாங்கும் பதினைந்து ஆயிரம் சம்பளத்திற்கு இரவு பகல் என மாறி மாறி ஷிப்ட் பார்த்து இதில் ஓவர்டைம் வேறு ஆனால் ப்ரோமோசன் (பதவியுயர்வு), இன்க்ரிமன்ட் (சம்பள உயர்வு) கேட்டல் மட்டும் தர மாட்டார்கள் ச்சே' என்று பொருமி கொண்டு மேலும் நடையை எட்டி போட, வேகமாக இடைமறித்தாள் ஒரு சிறுமி இருந்த கோபம் பன்மடங்கானது!

'இவர்கள் வேறு பொய் சொல்லி ஏமாற்றி பிச்சை கேட்க காலையில் கிளம்பி விட்டார்கள் ச்சே'

"மேடம் பைசா" என கையை நீட்டினாள் அவள். மிஞ்சி மிஞ்சி போனால் ஆறு வயது இருக்குமா?!

ஆனாலும் இதை ஊக்குவிக்க கூடாதென மேலும் நடக்க முயன்றேன். அவள் விடவில்லை கோபத்துடன் அவளை பார்க்கும் போது அவள் சாலையின் மறுபுறம் பார்த்தாள். நடுத்தர வயது பெண்மணி, கணவன் இல்லை போலும், இதுவும் ஏமாத்து வேலையோ?!

அருகில் சென்றேன் திட்ட தான்!! ஆனால் ஒரு கால் வளர்ச்சி இல்லாமல், இன்னொரு காலில் புண்!! புரையோடி சீல் பிடித்து. குமட்டி கொண்டு வந்ததை பெரும்பாடு பட்டு அடக்கிக்கொண்டு முகத்தை திருப்பி கொண்டேன்!! அந்த சிறுமியின் கண்களில் லேசான நீர் திரை!! உடனே முகத்தை மாற்றி கொண்டு, சிறு புன்னகையுடன் பத்து ரூபாய் தாளை கொடுத்தேன் அவளிடம்!!

அளவிட முடியாத மகிழ்ச்சி அவளிடம் ஆனாலும் அதை தாண்டி கண்களில் ஏதோ ஒன்று. ஒரு முடிவுக்கு வந்தேன் " வா என்னோடு" என அழைத்து சென்று ஒரு செட் இட்லியும், ஒரு செட் தோசையும் வாங்கி இருவரும் உண்ணுமாறு கொடுத்தேன்.

அவள் அவளிடம் நான் கொடுத்த ரூபாயில் பாதியை அதாவது ஐந்து ரூபாயை கொடுத்து ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி சென்றாள். வியப்பாக நான் பார்க்க, ஓடி சென்று அன்னையிடம் தோசையை கொடுத்தவள், அருகில் இருந்து தெரு நாய்கள் இரண்டிருக்கு பிஸ்கட்டை பகிர்ந்து கொடுத்து விட்டு இட்லியை பிட்டு வாயில் போட்டாள்.

என்ன மாதிரி உணர்வு என்னை சூழ்ந்தது என நான் இந்த நிமிடம் வரை அறியேன்!! அவள் அருகில் சென்று ஐம்பது ரூபாய் தாளை கொடுத்து விட்டு சட்டென அகன்று விட்டேன்!! அலுவலகம் வந்து இதோ குளிர்சாதன படுத்தப்பட்ட அறையில் குஷன் இருக்கையில் கொண்டு வந்த ஹார்லிக்சை உறுஞ்சிய படி அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன்!!

ஒரு நிமிடம் மன திரையில் மின்னி மறைந்தது அந்த சிறுமியின் முகம்!! இதோ எழுத தொடங்கி முடிக்கவும் போகிறேன் இந்த கதையை!!!

உடம்பு நோகாமல் செய்யும் வேலையும், தேவைகேற்ப ஊதியமும், நல்ல பெற்றோரும், நோய் நொடியற்ற ஆரோக்கியமும்,அன்பான நண்பர்களும் என்று எல்லாமே கிடைக்க பெற்றுள்ளேன்!!

மேலும் நல்ல படிப்பறிவும், பிறரை அறைந்து அந்தி கதையாக தொடுக்கும் அளவு கலையறிவும், பகுத்தறிவும் மேலும் மற்றவர் முகம் சுளிக்காத வகையில் இயற்கை அழகையும் கொண்டுள்ளேன்!!

இவை அனைத்தும் கொடுக்கவும் அதை பேணி காக்கவும் தனி மனுஷி என்னால் எப்படி முடிந்தது!! முடியவும் முடியாது!! முடியும் என்று நினைத்தால் நான் தான் அடிமுட்டாள்!!

இருக்கிறான்.. இதை புரிந்து கொள்ள அரிய செயலோ, மாயா மந்திரமோ எதுவும் தேவை இல்லை. இதோ நானே ஒரு அரிய செயல் தானே அவன் படைப்பில்!! படைத்தது காத்து ரட்சித்து, சரியான நேரத்தில் தேவையானவற்றை தந்து, யாசிக்கும் போதும் சிலதை தட்டி கழித்து, மன வலிமை பெற செய்து, உலகுடன் போராட செய்து கை பாவையை போல ஆடி வைக்க, அந்த ஆட்டம் தப்பான ஆட்டம் கண்டு விடாமல் தாங்கி பிடிக்க கடவுள் இருக்கிறார்!!!!!    

This is entry #23 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.