(Reading time: 6 - 11 minutes)

திருமணத்திற்கு பின் காதல். . .!! – கல்பனா

This is entry #24 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்”

சொன்னது பாரதியார் அவரை யாரென கேட்கும் ஆண் கர்வ தலைவன் அவன்.பெயர் தனேந்திரப்பாண்டியன் வயது 27 வசிப்பது பெங்களூர்.முக நூலில் ஒரு வாரம் பேசிய பெண்ணுக்கு இவனை கொஞ்சம் பிடித்ததாலோ என்னவோ அவள் குணத்தை ஈனமாகப் பேசத்துணிந்தவன்.

Thirumanathirku pin kathal

"என்ன பத்தி பேச நீ யாரு,?இனி உன் முகத்துல விழிக்கவே மாட்டேன் உனக்கெல்லாம் என்ன நிரூபிக்கனும்னு தேவை இல்லை" தனாவிடம் திமிராய் சொல்லிவிட்டு வந்தேன். . .

இது நடந்து இரண்டு வருடம் இருக்கும் இன்று அவனையே கணவனாய் ஏற்கும் கேடுகெட்ட விதி எனக்கு.என் பெயர் வேரென்ன இருக்க முடியும் "பாரதி" வயது 22.

"டேய் விக்கி உனக்கு தெரியாது அவ அப்போவே என்ன வளைச்சு போட முயற்சி பண்ணா இப்போ அவ என் பொண்டாட்டி. . . . . " வெகு எரிச்சலாய் புகைக்குள் அவன் முகம் முதல் முறை நேரில் பார்க்கிறேன், மேலும் நிற்க மணமின்றி இறங்கிவிட்டேன் கொலுசுச் சத்தம் கேட்டிருக்கும் போலும் கீழே அவன் குரல் கேட்டது

"ஒட்டு கேக்க வந்திருப்பா. . ."

கண்ணீரை தவிற வேரென்ன பேசும். . .

"டேய் தனா ஏன் டா இப்படி பேசுற. .பிடிக்கலைன்னா ஏன் கல்யணத்துக்கு ஒத்துகிட்ட?"

“வேலை பிரச்சனைல அம்மாட்ட வாக்கு குடுத்துட்டேன் டா இப்போ தான் வறேன் அவள பேஸ்புக்ல நான் பாத்ததே இல்லை. . போட்டோ பாத்து சரினு சொல்லிட்டேன் இப்போ விசாரிச்ச அப்புறம் தான் தெரியுது இவ பொண்ணுனு. .விடிஞ்சா கல்யாணம் எப்புடி நிருத்த. . .??"

ன்மானத்தை தூக்கிலிட்டு அவனுக்கு கழுத்தை நீட்டியாகிவிட்டது. . .இதோ பெங்களூர் வாசம் என் நாசியோடு, விடிந்ததும் சென்றுவிடுவான் அலுவலகத்திற்கு. .நான் வீட்டுக்குள்ளே. . .

ஒரு மாதம் ஓடியது. . .

அவன் கண்கள் அவள் பக்கம் எட்டி பார்த்தது

"இரவெல்லாம் அலைபேசியை நோண்டிக்கொண்டிருக்கிறாள் தினமும் இதே வேலை. .எவனோட பேசுவாளோ. ." கோபம் தலைக்கேரிய நேரம் தன் அலைபேசி அலரியது

"மாப்ள. . .நான் பாரதி அம்மா அவ பக்கதுல இருந்தா குடுங்களேன்" அவளருகே சென்று நீட்டினான். .அலைப்பேசியை வாங்கியவள் பேசாமல் துண்டித்து நகர்ந்து விட்டாள். .

ரவு பண்ணிரெண்டு இருக்கும் அவள் அலைபேசியில் குருந்தகவல்.

அவள் நன்கு உறங்கிக்கொண்டிருந்தாள்

"பார்த்துவிடலாமா. . .?" அவன் கை துடித்தது

"அவ என்ன செஞ்சா உனக்கென்ன தனா. . . . .??ஆனா அவ என். . ."சட்டென பிறித்தான். . .

எந்த பாஸ்வேர்டும் போடாமல் இருந்தது தங்கள் திருமண புகைப்படம் வால்பேப்பர் வரவேற்றது. .ஓபென் மெஸ்ஸேஜ் சொடுக்கினான்

"ஹப்பி ஃப்ர்த்டே பாரதி. . .பேசு டீ. . . வீ மிஸ் யு" திவ்யா. . .         

திடீரென "திவ்யா காலிங்க்" அழைப்பு மணி அடிக்க விழித்துக்கொண்டாள் அவள், திரு திருவென விழித்தபடி போனை கொடுத்தான். . .வாங்கியவள் அழைப்பை துண்டித்து குருந்தகவளில் அவள் ஜிமெயில்,முகனூல் விவரங்களை டைப் செய்து கொடுத்து மீண்டும் படுத்துக்கொண்டாள். . .

இரவெல்லாம் யோசித்து அவன் வேண்டாம் என்றாளும் மனம் தானே துலாவியது மெயில்,செண்ட் ஐட்டம்,டிராப்ட் என எல்லாவற்றையும்.இந்த ஒரு மாதமாக யாரிடமும் அவள் பேசவில்லை ஒரு போன் மெஸ்ஸேஜ் எதுவுமே இல்லை தன்னோடும் பேசவில்லை. . .பாவம். . . பேச நினைப்பதை தட்டச்சு செய்து சேமிப்பதே வழக்கமாய் கொண்டிருந்தாள். . .

விடிந்தது தலை துவட்டிக்கொண்டிருந்தாள்

"அழகாக மிக அழகாகவே இருக்கிறாள். " கண்களை மூடிக்கொண்டான் “மரியாத முக்கியம் தனா. . . மரியாத முக்கியம் வழியாத“அதட்டிக்கொண்டான்.

நாள் முழுக்க ஒரு வேலையும் ஓடவில்லை. . .

"டேய் விக்கி வா கடைக்கு போனும்"

"எதுக்கு மச்சி"

"புடவை எடுக்க . . ."

"யாருக்கு. . . ."மிக நக்கலாய் கேட்டான் விக்கி

"பாரதிக்கு. . ."குணிந்தபடி சிரித்துக்கொண்டான். . .

மாலை கார் கேட்டினுள் நுழைகையிலேயே பார்த்துவிட்டான்.தோட்டத்தில் கால்களை கட்டியபடி மெரூன் நிற காட்டன் புடவையில். .பின்னாத கூந்தல் காற்றோடு காதலாகி இருக்க அவள் மட்டும் எதையோ வெறித்தபடி. . .

"பாரதி. . .!!"

பின்னால் அவன் குரல் கேட்டதும் திடுக்கென எழுந்துகொண்டாள் பட படவென நகர்ந்து உள்ளே சென்றாள். பதினைந்து நிமிடம் கழிந்து கையில் காபி கோப்பையுடன் அவள். . .

மெதுவாய் தயங்கி தயங்கி பார்சல் ஒன்றை நீட்டினான்

"புடவை. . . . . .உனக்கு தான். . . ."

ஒன்றும் புரியாமல் விழித்தாள். . .

"கட்டிட்டு வா கோவில் போலாம் . . ."                                                                          

"???????" கேள்வி மட்டுமே அவள் கண்களில். . .

அந்த கோவில் சன்னதியில் அவள் குங்குமத்துக்கு தான் மட்டுமே உரிமையானவன் என்பதில் சிரு துணிச்சல் வந்தாலும். .

அவன் பேச நினைத்த ஒன்றுமே பேச முடியவில்லை. . .

மொட்டை மாடியில் அவன் நினைவுகளோடு அவள் மனம் ஊசலாடியது. .                

"தனேந்திரப்பாண்டியன். . . ."

ஒரு முறை சொல்லிப்பார்த்தாள் பின் கழுத்தில் தாலிசரடை பற்றியபடி கண்மூடி சொல்லிக்கொண்டாள் மனத்க்குள்

"பாரதி தனேந்திரப்பாண்டியன்"      

அவன் காலடி ஓசை கேட்க திரும்பினாள் அவனேதான். . .

"மொட்டை மாடியில் நின்றிருந்தேன்

நிலா வருமென

நீ வந்தாய்

இரவில் ஒரு சூரியனாய்"

கல்லூரி காலத்து ஹைக்கூ ஒன்று அவள் நினைவில். . .

அவன் மனம் இன்னும் படபடப்பாக அவள் தங்க நிற புடவையில் மல்லிகைசரமும் நிலவுக்கு போட்டியாய் மாணிக்க மூக்குத்தியுமாய். . .அவள் பணிகுளிர் கண்கள் முன் தன்மானம் தளர்த்தி. . .

"பாரதி. . .என்ன மண்ணிப்பியா. . .??" வார்த்தை சிக்கிய தொண்டை எச்சில் விழுங்கி ஒரு வழியாய் பேசினான்.

"உன்ன பத்தி எதுவுமே தெரியாம. .நானே ஒரு முடிவுக்கு வந்து உன்ன என்னல்லாமோ பேசிட்டேன். . ."

“. . . . . . . .” சில நொடி மௌனம். . .

பொருக்க முடியாமல்

"பேசு பாரதி என்ன பிடிக்கலையா??" அவன் குரல் கிட்டத்தட்ட உடையும் நிலையில். . .எப்போதும் திமிராய் அலட்சியம் தெரிக்கும் கண் தரையை நோக்கியபடி

"தனேந்திரபாண்டியன் தான் பேசுரதா??" மெல்ல இதழ் விரித்த

தாமரை மொட்டாய் உதிர்ந்தன அவள் வார்த்தைகள்.

புண்ணகைத்தபடி .

"ஏன் பேச கூடாதா. . .பொண்ணுங்கள மதிக்க சொல்லி குடுதிருக்காங்க என் வீட்ல. . ."

"நீ பழைய மாதிரி சந்தோஷமா இருக்கனும். . .என் கூட இருப்பியா?? இப்பவும் எப்பவும். . .திருமதி.தனா வா??"

"ம்ம்ம்ம். . . "புண்ணகைத்தாள் பெரும் அமைதியோடு அவள் முடி அசைவும் கண்களும் சிரிக்கையில் விழும் கண்ணக்குழியும் அன்றே அவன் கண்ணில் பட்டது. .

"புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு. . .இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். . ." கைகளை நீட்டினான் கைகுலுக்கும் ஜாடையில் அவளும் நீட்டினாள் நடுக்கம் தெரியாத வண்ணமாய். . .

"ஏன் கை நடுங்குது. . .பயமா. . .??"

"இல்லையே. . .குளிர் அதான்" உண்மையில் தோன்றிய பயத்தை வெளிக்காட்டாத படி. . .

"ஓஹோ. . .!!" குரும்பு சிரிப்புடன் சட்டென அவள் கைகளை இழுத்து மார்பில் சாய்த்தான். . .

"சாத்திரம் பேசு கிறாய், – கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே – கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் – வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ! – இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!”     

This is entry #24 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.