(Reading time: 7 - 14 minutes)

மீண்டும் ஓர் கருவறை - கீர்த்தனா

கோயம்புத்தூர் மாநகரமே கலை கட்டி இருந்தது அந்த  விழாவிற்காக. தெருவெங்கும் தோரணங்கள்,வண்ண விளக்குகள் என அந்த இடமே ஜொலித்துக் கொண்டிருந்தது. அங்கு இருக்கும் கார்களின் எண்ணிக்கையே சொல்லும் பணக்கார வீட்டு திருமணம் என்று.

ஆம்.தமிழகத்தில் கொடி கட்டி பறக்கும் ஆடையர் உலகம் கடையின் குடும்பத்தின் திருமணம்.அவர்கள் வீட்டின் செல்ல இளவரசியின் திருமணம்.

திருமண மேடை முழுவதும் நறுமணம் தரும் இயற்கை பூக்களால் அலங்கரித்திருந்தனர். திருமணத்திற்கே அழகு  சேர்க்கும் நாதஸ்வர இசை காற்றில் மிதந்து வந்தது.

Meendum or karuvarai

வாங்க நாம போய் நிபுணா-வ அதாங்க நம்ம ஹீரோயின்-அ  சைட் அடிப்போம்.

பொன் பூட்டியதால் இந்த பெண் அழகானாளா?இந்த பெண்ணுக்கு பூட்டியதால் பொன் அழகாக தெரிகிறதா? என பட்டி மன்றம் நடத்தும் அளவு மிக அழகாக இருந்தாள்.

அவளின் அலங்காரம் முடியவும் அவள் கல்லூரி தோழிகள் நுழையவும் சரியாக இருந்தது.

அவளைப் பார்த்தவுடன் அவளின் தோழி பூஜாவுக்கு முதலில் தோன்றியது எப்படி இவள் இந்த திருமணதிற்க்கு ஒத்து கொண்டாள் என்பதுதான்.

அவள் மனதில் நினைத்ததை இன்னொரு தோழி நித்யஸ்ரீ கேட்டே விட்டாள்.

"என்னடி நான் எப்பவும் திருமணமே பண்ணிக்க மாட்டேன் திருமணம் ஒரு அடிமை சங்கிலி என பேசிய உனக்குத் தான் நாம செட் ல முதல கல்யாணம் நடக்க போகுது.எப்படி இந்த அதிசயம் நடந்தது?"

அவள் கேட்டவுடன் குறுஞ்சிரிப்பை உதிர்த்தாள்.ஆனால் அவளின் இதழில் ஓடிய சோக முறுவலை யாரும் கவனிக்கவில்லை பூஜாவைத் தவிர.

எல்லாரும் கொசு வர்த்தி சுருள் எடுத்துச் சுத்திக்கிட்டே மேல பாருங்க.

ல்லூரி என்றாலே மகிழ்ச்சி தான்.அதிலும் மகளிர் கல்லூரி என்றால் அங்கு இருக்கும் பெண்களின் மகிழ்ச்சிக்கு குறைவேது.

தோழிகள் அனைவரும் ஒரு மரத்தின் கீழ் வட்டமிட்டு அமர்ந்தனர் மதிய உணர்விற்காக (நமக்கு சாப்பிடறது தான் முக்கியம் பாருங்க). எபம்(FM) கேட்டுக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

சரியாக அந்த நேரத்தில் எபம்மில் மயக்கம் என்ன படத்தில் இருந்து GV.பிரகாஷின் இசையில் காதல் என் காதல் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.

"அடிடா அவளை உதைடா அவளை" என்ற வார்த்தைகளை கேட்ட உடன் நிபுணாவிற்க்குள் இருக்கும் பெண் விழித்தெழுந்தாள்.

நிபுணா "என்ன லிரிக்ஸ் டி இதெல்லாம். இப்போல்லாம் வர எல்லா மூவிலையும் ஒரு பாட்டாவது பொண்ணுங்கள எறக்கி பாடறதே வேலையா போச்சு எல்லாருக்கும். அவங்கள பெத்தவங்களும் ஒரு பொண்ணு தானே. அதை எல்லாம் யோசிக்கணும்ல."

பூஜா உடனே சொன்னாள் "இதை நாம சொன்ன அம்மாங்க எல்லாம் அந்த ஜெனரேசன்னு. அவங்களுக்கு இது பொருந்தாதுனு சொல்லுவாங்க"

"ஏன் அப்போ அவங்க தங்கைகள் எந்த ஜெனரேசன்?இவங்க இவ்ளோ கேவலமா பொண்ணுங்கள சொல்றது அவங்க தங்கையையும்,மனைவியையும் சேர்த்து தானு ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்கிறாங்க" என சாட்டையாய் வந்தது பதில்.

"நீ ஏன் டி டென்ஷன் ஆகற?விடு" என அவள் தோழிகள் சமாதானப் படுத்தினர்.

இருந்தும் அவளின் கோவம் தணியவில்லை.ஆனால் தோழிகளிடம் அவள் அதை வெளிப்படுத்த விரும்பவில்லை. எனவே முகத்தை சாதரணமாக மாற்றிக் கொண்டாள்.அவள் சாதரணமாகி விட்டாள் என நினைத்த திவ்யா அவளை சீண்ட எண்ணி,

"பாவம் டி உன் ஆத்துக்காரர்.உங்கிட்ட கை கட்டி, வாய் பொத்தி தான் இருக்கனும் போலவே. இந்த பாட்டை எழுதுன யாரோ தெரியாதவங்கலையே இந்த வாங்கு வாங்கறியே அவர் என்ன பண்ணுவார் பாவம். நான் அந்த பாவப் பட்ட ஜீவன்காக இப்போவே வேண்டிக்கறேன்" என சொன்னாள்.

உள்ளுக்குள் ஆறியிருந்த கோவத்தீ வெளியே வந்தது.

"நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.என்னோட லட்சியமே அன்னை தெரசா மாறி சேவை செய்யணும்கிறதுதான். மன நிலை பாதிக்க பட்டவங்களுக்கு மருத்துவ வசதிகளுடன் கூடிய "பாசக்கூடு" என்ற இல்லம் ஆரம்பிக்கணும். இன்னும் என்னுடைய இலட்சியங்கள் நிறைய இருக்கு. ஆனால் அதைக் கூறி உங்களை போர் அடிக்க விரும்பல"

அவள் கூறிய பதிலில் அவர்கள் வாயடைத்து போயினர்.

அன்பு,அழகோடு பல பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரி திருமணம் வேண்டாம் என்று சொன்னால் ஆச்சரியப் படாமல் இருக்க முடியுமா!!!

"என்னடி பேசற லூசா நீ??உன்னோட சொதுக்காகவே சொத்தை கூட விடு. அது இரண்டாம் பட்சம் தான். உன்னுடைய அழகுக்காகவே பசங்க கியூ ல நிப்பாங்களே. உன்னுடைய இலட்சியத்தை புரிஞ்சுகிட்டு உனக்கு உதவி செய்யறவனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ" என கூறினாள் அந்த பாசமிக்க தோழி பூஜா.

"இந்த காலத்துல யார் டி நான் சேவை செய்ய போறேன்னு சொன்னா ஒத்துக்குவா?அதெல்லாம் நடக்காது. நான் இப்படியே இருந்தா தான் என்னுடைய இலட்சியத்தை அடைய முடியும்"என உறுதியான குரலில் கூறினாள் நிபுணா.

அவளுடைய குரலில் இருந்த உறுதி அவர்களை மேற்கொண்டு பேச விடாமல் தடுத்தது.

நாட்கள் நகர, கல்லூரி முடிந்த ஒரு மாதத்திலேயே நிபுணா அவளின் திருமணத்திற்கு அவள் தோழிகளை தொலைபேசியில் அழைத்தாள். அப்பொழுது அவர்களால் அவளிடம் காரணம் கேட்க்க இயலவில்லை.

அதனால்  தான் இந்த முந்திரிக்கொட்டை நித்யஸ்ரீ வாயை வைச்சு சும்மா இருக்காம வந்த உடனே கேட்டு விட்டாள்.

அவளின் நினைவுகள் இங்கில்லாத காரணத்தலோ இல்லை இது நடக்க வேண்டும் என்பது தான் விதியா என நான் அறியேன். அவளின் சேலை விளக்கின் மேல் பட்டது. சுற்றி இருந்தவர்களும் பேசிக் கொண்டிருந்ததால் அதை கவனிக்கவில்லை. சரியான நேரத்தில் பூஜா கண்டு விட்டதால் நிபுணாவிற்கு எந்த ஆபத்துமில்லை. ஆனால் முஹுர்த்தப் புடவையின் பாதி முந்தி தீக்கு இரையாகி விட்டது.

அந்த நேரத்தில் “பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ” என ஐயரின் குரல் கேட்டது.

இப்படியே செல்ல இயலாத காரனத்தால் நிபுணாவை அழைக்க வந்த உறவினர்களிடம் சொல்ல, அவர்களோ இது என்ன அபசகுணம் திருமணத்தையே நிறுத்தணும் என மாப்பிள்ளையின் உறவினர்கள் கூறிக் கொண்டிருந்தனர்.

நிபுணா ஒரு பக்கம் கண்ணீர் விட்டு கொண்டிருந்தாள். நிபுணாவின் பெற்றோரும் என்ன செய்வதென தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எங்கே தன செல்ல மகள் வாழ்வு ஆரம்பிக்கும் முன்னே முடிந்துவிடுமோ என பயத்தில் இருந்தனர்.

மாப்பிளையின் பாட்டி செல்லம்மா அனைவரையும் அடக்கி கொண்டிருந்தார்.

மாப்பிள்ளை கோலத்தில் அங்கு வந்த நிகிலனை கண்ட அவள் உள்ளம் ஒரு நிமிடம் நின்று துடித்தது அந்த நேரத்திலும். முதல் முறையாக மாப்பிளையை நேராக பார்க்கிறாள். அவர்கள் திருமணம் அவசர திருமணம் என்பதால் பொண்ணோ, பையனோ நேராக பார்த்துக் கொள்ளவில்லை.

நிகிலனின் கண்ணசைவில் அவனின் தாய் யசோதா நிபுணாவிடம் "சீக்கிரம் போய் வேற சேலை மாத்திட்டு வாம்மா. முஹுர்த்த நேரம் முடியப் போகுது" என சொல்ல நிபுணாவிருக்கும், அவள் பெற்றோருக்கும் மிக்க மகிழ்ச்சி.

மற்றவரின் எதிர்ப்பையும் தன் பார்வையால் அடக்கினான்.

உடனே வேறு சேலைக்கு மாறி அப்சரசாக வந்தாள் நிபுணா. முஹுர்த்த நேரத்தில் தாலி கட்டி, நிபுணாவை தன்னவள் ஆக்கி கொண்டான் நிகிலன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.