பகல் பொழுது முடிந்து இரவும் வந்தது. கையில் பால் சொம்பை பிடித்த படி அறையில் நுழைந்தாள். நிகிலன் அவளின் கையில் இருந்து பால் சொம்பை வாங்கி ஓரமாக வைத்து விட்டு கேட்ட முதல் கேள்வி,
"உனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையா" என்று தான்.
அவனின் கேள்வி அவளுக்குள் பயத்தையும் ஆச்சர்யத்தையும் ஒருங்கே கொடுத்தது. இருந்தும் அவள் 'ஆம்' என தலையை ஆட்டினாள்.
"எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை.ஆனால் என் அம்மாக்கு கேன்சர். அவங்களோட கடைசி ஆசை என்னோட கல்யாணத்தை பாக்கணும்கிறது தான். அவங்களுக்காக தான் இந்த திருமணத்திற்கே சம்மதம் சொன்னேன்" எனக் கூறினாள்.
அவளிடம் ஒரு பத்திரத்தை கொடுத்து "பிரித்துப் பார்" என கூறினான்.
அதை திறந்து பார்த்து அவள் முகம் வெளிப்படுத்திய பாவனைகளில் தன்னை தொலைத்தான்.
இப்போ சொல்லு "உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா?". இந்த என்பதை அழுத்தி கூறினான்.
"எனக்கு முழு சம்மதம்ங்க" என்றாள் நிபுணா. "ஆனால் இது எப்படி உங்களுக்கு தெரியும்" எனக் கேட்கும் போதே அவன் பூஜாவோடு பேசிக்கொண்டிருந்தது நினைவு வர அவளே "பூஜா"எனக் கூறினாள்.
நிகிலன் "அதானே என் புத்திசாலி பொண்டாட்டி. நீ கெஸ் பண்ணது கரெக்ட் தான். அவங்க தான் உன்னோட ஆசைய சொன்னங்க. நிறைவேத்திட்டேன்"
அவளுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சந்தோசத்தின் உச்சியில் இருந்தாள் அவள்.
அவளுடைய மகிழ்ச்சிக்கு காரணம் அந்த பேப்பர் அவளுடைய கனவு இல்லமான "பாசக்கூடு" இடத்திற்கான நிலப் பத்திரம். அதுவும் அவள் பெயரில் பதிவு செய்ய பட்டிருந்தது. உன் லட்சியங்களை நிறைவேற்றுவேன் எனக் கூறாமல் செயலில் செய்து காட்டியவனை கண்களில் காதலுடன் ஏறிட்டாள்.
அவளின் கண்களில் காதலை உணர்ந்தவுடன் இரு கையை நீட்டி வா என அழைத்தான்.
மகிழ்ச்சியுடனே அவனுடைய கைகளுக்குள் சிறையானாள்.
"காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதால் கண்ணின் ஈரம்"
என்ற வரிகள் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்தது.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.