(Reading time: 2 - 4 minutes)

கிராமத்து பொக்கிஷங்கள் - சுதாகர்

குமார் தனது அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு வேகமாக வீட்டுக்கு கிளம்பினான். அவனது சக உழியர்கள் அனைவரும் ஆச்சரியம், எப்போதும் தாமதமாக செல்லும் குமார் இன்று வெகு சீக்கிறமாக கிளம்புகிறான். அதுவும் என்றும் இல்லாத உற்ச்சாகத்துடன். ஒரு வருடம் கழித்து தந்து சொந்த கிராமத்திற்கு செல்கிறான். அவன் வளர்ந்த கிராமம் அவனை வளர்த்த ஊர் என்றும் இல்லாத சந்தோஷம் அவனுக்கு.

போன வருடம் அவன் சென்ற போது நடந்த நிகழ்வுகள் அவனை இப்படி உற்சாகமூட்டியது. நகரத்து வாழ்க்கையில் அவன் இழந்த கிராமத்து தாவணிகளை காண கண்கள் ஏங்கியது. அவள் கண் சிமிட்டல் அவனை சிரிக்க வைத்தது. வேகமாக வீட்டிற்கு வாங்கிய பொருள்களை எடுத்து வைக்க தொடங்கினான். ஒரு கிருஷ்ணர் படம் ஒன்றை எடுத்துவைத்தான். அது அவன் தேடித் தேடி வாங்கியது. அது அவன் முறைப்பெண் அத்தை மகள் ஆசையாய் கேட்டது. அந்த நிகழ்வு அவன் கண் முன்னோடியது.

போன வருடன் அவன் சென்றபோது நடந்த நிகழ்வு.

Gramathu pokkishangal

"வாடி இவள.... உன் மாமா வந்தா மட்டும் உனக்கு மூக்கு வேத்துறுமே அவன் வந்தா மட்டும் தான் இந்த அத்த வீடு தெரியுதா? என்று அவன் அம்மா ஆரம்பித்தாள்.

"இல்ல அத்த... என நெழிந்தாள்" பின்பு மாமா எங்க என கேட்டாள்.

"மேல தான் இருக்கான்"

ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு மேலே ஓடினால்

"மாமா"

"ஏ வா டி எப்படி இருக்க"

"நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க"

"பாத்தா எப்படி தெரியுது"

"கொஞ்சம் எலச்ச மாரி இருக்க"

"எல்லாம் உன் நெனப்பு தான்"

"பொய் சொல்லாத மாமா, எனக்கு என்ன வாங்கி வந்த" என கேட்டவுடன் அவன் யோசிக்க தொடங்கினான்(ஆகா இவள மறந்துடோமே)

"போ மாமா நீ என்ன மறந்துட"

"இல்ல டீ நா யாருக்கும் எதுவும் வாங்கி வல்ல அடுத்த தரம் கண்டீப்பா வாங்கி வரேன் உனக்கு என்ன வேணும்.

"மாமா எனக்கு கிருஷ்ணர் படம் வாங்கி வா"

"சரி கண்டீப்பா" அவள் சிரித்துக்கொண்டே சென்றதை நினைத்துபார்த்தான். 

ஒரு கண் கண்ணாடியையும் எடுத்து வைத்தான். அவன் பாட்டிக்காக. அதை உற்றுபார்த்துக் கொண்டே இருந்தான். பாட்டி கூறியது நியாபகம் வந்தது.

டே கண்ணுபையா எல்லாம் வேலைக்கு போறேனு பட்டணத்துக்கு போயிடீங்க. நா மூட்டுவழி வந்து படுக்க போறேன். அம்மாயிக்கு கண்ணு தெரிய மாட்டீங்குது டா. வேல வேலனு அங்கயே கேடக்குற நா செத்து கித்து போயிடேனா நெய் பந்தம் பிடிக்க வந்துறா இல்லனா இந்த கட்ட வேகாது" என்று அவன் பாட்டி கூறியது அவனை கண் கலங்க வைத்தது.

அவன் அங்காளி பங்காளி கூட்டம்,ஊர் திருவிழா கொண்டாட்டம். கண்மாய் குழியல், பள்ளி நண்பர்கள், நகரத்து வாழ்க்கையில் அவன் தொலைத்த கிராமத்து பொக்கிஷங்களை தேடி அவன் பயணத்தை தொடங்கினான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.