(Reading time: 30 - 60 minutes)

 காதல் சொல்ல வந்தேன் - அன்னா ஸ்வீட்டி                      

ப்பொழுதுதான் சுரஞ்சகன் அறைக்குள் நுழைந்தான். அனுமதி பெற்று அறைக்குள் நுழைந்த இவன் பின் மற்றவன். இவனைப்போன்றே சீருடையில் அவனிருப்பது அறையிலிருந்த ஐஜி பால்வண்ணன் தலைக்கு பின்னாக சிரித்திருந்த தேசத்தந்தை புகைப்படத்தின் கண்ணாடியில் முழு தெளிவின்றி தெரிகின்றது.

ஹேய்....மின்னலுக்கும் குறைவான நேரத்தில் தன் வலக்காலால் பின்னோக்கி குறிபார்த்து குதிரைபோல் ஒரு உதை. இடக்கை எதிரிலிருந்த ஐஜியை அவரது மேசைக்கு கீழாக தலை பிடித்து அழுத்த, அதே நேரம் வலக்கை அதன் அருகில் நின்றிருந்த அவளை தரையோடு தள்ளிற்று.

சுரஞ்சகன் உதையில் ஐஜியை துப்பாக்கியில் குறிவைத்த பின்வந்தவன் தடுமாறி சரிய, அதற்குள் வெளிப்பட்டிருந்த தோட்டாக்கள் சுவரின் குறுக்காக புள்ளிகளிட, மைக்ரோ செகண்டில் 180 டிகிரி சுழன்று பின்னால் விழுந்திருந்தவன் கழுத்தில் தன் இடது முழங்காலை மடக்கி ஊன்றி இடக்கையால் அந்த அந்நியன் பிஸ்டலை பிடுங்கி அதை விழுந்துகிடந்த அவன் நெற்றிப் பொட்டில் வைத்தான். வலக்கையால் அவன் கன்னத்தில் ஓர் அறை

“யார்டா...நீ?”

வந்திருந்த அந்த இரும்புச்சிலை மனிதன் மயங்கிச்சரிந்தான் அவ்வறையில்.

வெல்டன் யங்மேன்...வெல்கம்...வெல்கம் டூ அக்க்ஷன் என்று கண்சிமிட்டிய ஐஜி அவனது வலத்தோளை தட்டியவர் அவனை தன்னோடு ஒரு கணம் அணைத்து விலகினார். அவர் முகம் எங்கும் பரவசம் பெருமை. கண்ணோரம் என்ன நீரா?? தன் பெரிய மீசையை முறுக்கிக் கொண்டார்.

“உன்ன இப்படி பார்க்க எவ்ளவு நாளா காத்துகிட்டு இருக்கேன்....” என் கனவ நிறைவேத்திட்டடா..இனி சாகனும்னா கூட நெஞ்ச நிமித்திகிட்டு சாவேன்...”

“க்கும்..இது ஐஜி ஆஃபீஸுன்னு நினச்சேன்...என்னமோ சினிமா ஷூட்டிங் ...இல்ல சீரியல் சூட்டிங் மாதிரி இருக்குது...நீங்கெல்லாம் சேர்ந்து இவனுங்கள பிடிச்சு...ஒருத்தன் துப்பாக்கியோட உள்ள வந்து விழுந்து கிடக்கான்....அத கவனிக்காம மாமா...மாப்ளேன்னுகிட்டு...”

தன் முன்தலையை ஒரு கையால் அடித்துக் கொண்ட அவள் ஐஜியை நோக்கி “ அப்பா ..பை” என்றுவிட்டு இவனை திரும்பி கூட பார்க்காமல், குறுக்காக விழுந்து கிடந்த அந்த அரை வழுக்கையனை ஹீல்ஸ் காலால் தாண்டிச் சென்றாள்.

சுரஞ்சகன் முழுப்பார்வையும் அவளது கறுப்பும் வெள்ளையுமான சல்வார் கண்பார்வையை விட்டு மறையும் வரையும் அவள் பின் சுழன்று அவள் மறைந்த பின்பே எதிரில் நிற்பவரை நோக்கி மீண்டுமாக வந்தது. இப்பொழுது எதிரில் நிற்பவர் முகத்தில் ஒரு விதமான நக்கல் பாவம். அதே ரக புன்னகை வேறு. மாட்டிகிட்டியா...என்றது விழிமொழி.

வாய்விட்டு விசிலடித்தார்..

“இது எத்தனா நாளா...? எனக்கே தெரியாம? “

 இதற்குள் அவரது அறைக் கதவிற்கு வெளியாக அத்தனை காக்கி கால்கள்.

விழுந்துகிடந்தவனுக்கு செய்யவேண்டிய ஏற்பாடுகாளை செய்து முடித்தபின்பு மீண்டுமாக இருவருக்குமாக தனிமை கிடைத்தது.

“ஆக்க்ஷன் பார்ட் இஸ் ஓவர்....ஸ்விட்ச் ஓவர் டூ ரொமன்ஸ்...டெல் மீ..யங்மேன்.. டெல் மீ உயவர் லவ் ஸ்டோரி...”

“ சார் நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல... “

அவன் பேச்சை தொடரும் முன் அவர் முந்திக் கொண்டார் “ ஒன்னுமில்லையா...இடி மின்னல்...கடும் மழை எல்லாம் இருக்குது அங்க...நீ என்ன தப்பு பண்ண..? .நீ இன்னைக்கு ட்யூட்டில ஜாய்ன் பண்றன்னு தான் மேடம் இன்னைக்கு இங்க வந்தாங்களா...? நீ சொன்னத விட லேட்டா என்ட்ரி குடுத்துட்டியோ...? தன் வாட்ச்சைப் பார்த்தவர் இல்லையே..பெர்ஃபெக்ட் டைமிங்...அப்போ ...ரூமுக்குள்ள வந்தவுடனே அவ முகத்த பார்க்காம இந்த வயசான யூத்த பார்த்துட்டன்னு பார்ட்டிக்கு டென்ஷனா..?”

“சார்...அவங்க உங்க டாட்டர் சார்...பார்டி அது இதுன்னு....”

இப்பொழுதும் அவனை அவர் பேசவிடவில்லை.

“மேடத்தை சொன்னா சாருக்கு டென்ஷன் ஏறுதே....குட் ...குட்... ஐ லைக் இட்....பை த வே நான் தான் மைவி அப்பான்னு ஞாபகம் இருந்தா சரி..”

“சார்...நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல... நான் மைவிழி மேடத்தைப் பார்த்து கிட்டதட்ட நாலு வருஷம் ஆகுது...அப்ப இருந்து...இப்ப வரைக்கும் எங்களுக்குள்ள எந்த கம்யூனிகேஷனும் இல்ல...”

“நாலு வருஷ கோபம்....?” யோசனையோடு சற்று இழுத்துச் சொன்னவர். ஒரு பெரு மூச்சை வெளியிட்டார்.

“உங்களுக்குள்ள என்னனு எனக்கு தெரியாது...பட் நீங்க விரும்பி கல்யாணம் செய்துகிட்டாலும்...இல்ல கல்யாணம் செய்துகிட்டு விரும்புனாலும்....எனக்கு பூரண சம்மதம். ரொம்..”

“சார்..” இடையிட்டான் சுரஞ்சகன்.

“வெயிட் மை பாய்...லெட் மி ஃபினிஷ்....உன்னைய இப்படி ஐ பி எஸ் ஆஃபிஸரா பார்க்கனும்ங்கிறது எப்படி என்னோட கனவோ அப்படியே தான் மைவிக்கும் உனக்கும் கல்யாணம்ங்கிறதும் என் ஆசை...நான் ஆசைப்பட்டதுக்காக நீ இதை செய்ய வேண்டாம்...செய்யவும் கூடாது...பட் நீங்க ரெண்டு பேரும் விரும்பி மேரேஜ் செய்துகிட்டீங்கன்னா உங்களவிட சந்தோஷ படுற ஒரு உயிர் இருக்கும்.....அது நான்... உன்னவிட நல்ல இடத்த என் பொண்ணுக்கு கண்டுபிடிக்க என்னால முடியாது..அதே மாதிரி அவளவிட உனக்கு கொடுக்கிறதுக்கு என்ட்ட வேற மேலான பொருள் எதுவும் கிடையாது...ஷீ இஸ் மை ட்ரெஷர்”

தன் கையிலிருந்த தொப்பியை மேஜை மீது வைத்தான் சுரஞ்சகன்.

“அங்கிள் நீங்க கேட்டுகிட்டதுக்காக நான் அவள கட்டாயத்துக்காக கல்யாணம் செய்றேன்னு தப்பா புரிஞ்சிகிடுவா....அதனால நீங்க என்ட்ட சொன்ன விஷயத்தை இப்போதைக்கு அவட்ட சொல்ல வேண்டாம்...ப்ளீஸ்....”

 து வந்துமா....நான் இத வேனும்னே செய்யலமா...எங்க தோட்டம் மலைய ஒட்டி இருக்கிற இடம்மா...புலி... கரடி...மிளா ..காட்டு பன்னி...சில நேரம் யானை கூட வந்து பயிர அழிச்சு நாசம் செய்யும்மா....அது மாதிரி அன்னைக்கும் எங்க மரத்தை எதோ ஆட்ற சத்தம்மா...சாயங்காலம் 7மணி இருட்டு...வீட்ல இருந்து பார்க்கிறப்ப எதிர்ல இருக்கிற தோட்டத்துல மரம் ஆடுது...யாரோ கத்திகிட்டே போறான் ஏ...வேது...உம்ம தோட்டத்துல மிளான்னு...எதுக்கும் இருக்கட்டுமேன்னு அரிவாள எடுத்துட்டு ஓடினேன்...எந்தம்பி பக்கத்து வீட்ல இருந்து கேட்டவன் அவனும் பின்னால ஓடியாந்து இருக்கான்...அண்ணன் தனியா போறேன்னு ஒரு பாசம் இருக்கும்ல...அதான்...தூரத்துல எதோ ஓடுதா...கைல இருந்ததை தூக்கி வீசுதேன்...அப்பதான் நான் இருக்க பக்கம் வராம எதிர் பக்கத்துல மலைய பாத்து ஓடும்னு...

வந்தது திருட்டுபயலா இருந்துறுக்குது....அறுவா அவன் கால்ல போய் விழுந்து இருக்குது அவன் அதோட ஓடிட்டான்...

மறுநாள் ஒரு கூட்டம் வருது வீட்டுக்கு...ஏல வேது ...அவன் கால்ல அறுவா பட்டதுக்கு செலவுக்கு காசு தான்னு...எவன் தாயி கொடுப்பான் திருடனுக்கு வயித்திய செலவு...அதான்...முடியாதுன்னுட்டேன்...வாக்குவாதம்..இரண்டு பக்கமும் வார்த்தைய சிந்தியாச்சு...

என் நேரம் மறுநாள் அந்த திருட்டுபய செத்துட்டான்...திருட போன இன்னொரு மரத்தில இருந்து விழுந்துட்டானாம்....

முந்துன நாள் என்ட்ட சண்ட போட்டு வசவு வாங்கிட்டு போனவன்ல ஒருத்தன் போலீஃஸ்ல போய் நானும் என் தம்பியும் சேர்ந்துதான் அந்த திருட்டுபயல கொன்னுட்டோம்னு கேஸ் பதிஞ்சிட்டான்...

மரத்துல இருந்து விழுந்து செத்ததுக்கும் அறுவா வெட்டி செத்ததுக்குமா கோர்ட்டுக்கு வித்யாசம் தெரியாதுன்னு நாங்க தைரியமாத்தான் இருந்தோம்...எங்க வக்கீலும் அப்படித்தான் எங்கட்ட சொல்லிகிட்டே இருந்தான்...கடைசில தீர்ப்பு எங்களுக்கு செயிலுன்னு வந்துட்டுமா.... எங்க வக்கீலு எதிர் ஆளுங்கட்ட காசு வாங்கிட்டான்னு அப்புறமாதான் தெரியுது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.