(Reading time: 30 - 60 minutes)

டுங்கியபடி எடுத்தாள். எடுக்கும்போதே கவனித்தாள் அவள் மொபைலின் கீழ் ஒரு சீ டி. இவள் வீட்டிற்குள் இன்னும் அந்நியர்கள்??

அந்த சுரஞ்சகன்ட்ட சொல்றதுக்கு முன்ன இந்த சீ டிய பாரு அது புத்திசாலித்தனம்.

அவசரமாக அதைப் படகாட்சியாய் பார்த்தாள்.

அவள் தந்தையுடன் இன்னும் இருவர் கடத்தப்பட்டிருந்தனர். ஒருவர் ஹைகோர்ட் ஜட்ஜ் மற்றவர் சி.பி ஐ ஆஃபீஸர். அந்த சி.பி ஐ ஆஃபீஸர் கொல்லப்படுவதோடு முடிந்தது அந்த சீடி.

இவள் அலற கூட நேரமின்றி மீண்டுமாய் மொபைல் அழைப்பு..

அவர்கள் சொல்வதை செய்ய ஆயத்தமாகிவிட்டாள் மைவிழி.

கையில் கிடைத்த சல்வாரை அணிந்துகொண்டு இவள் தலை தெறிக்க ஐஜி ஆஃபீஸ் சென்று அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள். கட்டை குரலினிடமிருந்து அழைப்பு.

அடுத்ததாக அவர்கள் சொன்ன தகவல்களுடன் இருந்த அந்த ஃபைலை எடுத்துக் கொண்டு இவள் கிளம்ப ஆயத்தமான நேரம் அடுத்த அறையில் சுரஞ்சகனின் சிரிப்பு சத்தம் கேட்டது.

மனம் அவனிடம் ஓடி விட துடித்தாலும் அவன் கண்படாமல் வெளியேறுவது உத்தமம் என தோன்ற விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.

இவள் காரில் அவர்கள் சொன்ன இடம் சென்று அங்கிருந்த ஆம்னியில் ஏற, அது கிளம்பியது.

வாயில் துடித்தது இதயம். இவள் முழுதாய் திரும்புவாளா? அவளைப் பற்றிய எண்ணமே அப்பொழுதுதான் வந்தது.

என்ன செய்து கொண்டிருக்கிறாள் இவள்?

இவள் அப்பா இன்னும் உயிருடந்தான் இருக்கிறார் என்று என்ன நிச்சயம்?

அப்படியே இருந்தாலும், இந்த ஃபைல் அவர்கள் கை சேர்ந்ததும் இவளை யார் திருப்பி அனுபப்போவதாம்?

பயத்தில் பதற்றத்தில் இவள் எத்தகைய முட்டாள்தனம் செய்துவிட்டாள்?

ரஞ்சனிடம் சொல்லி இருந்தாலாவது எதாவது செய்திருப்பானே...?

ஆம்னியில் இவளுக்கு இருபுறமும் இருந்த தடியன்களைப் பார்த்தாள். இத்தனை சின்ன வயதில் இவர்களுக்கு புத்தி ஏன் இப்படி போகுது..? இப்பொழுது இவள் என்ன செய்யவேண்டும்?

 வளது எதிர்பார்ப்பிற்கு மாறாக நகரின் ஜன நெருக்கடியான பகுதிகளுக்குள் சுற்றிய அந்த ஆம்னி பிரபலமான மனநோய் மருத்துவ மனை வளாகத்திற்குள் நுழைந்தது.

உடன் பயணித்தவர்களின் உடையின் அர்த்தம் அப்பொழுதுதான் புரிந்தது. மருத்துவ சிப்பந்திகள் போல் அவர்கள்.

எச்சில் விழுங்கினாள். அதோடு சேர்ந்து பயத்தை விழுங்க முயன்றாள். அவர்கள் புடை சூழ உள்ளே காரிடாரில் நடை. எல்லாம் இயல்பாய் இருப்பதுபோல் தெரிந்தாலும் எதுவும் இயல்பாய் இல்லை என்று உள்ளுணர்வு.

இவர்களை ஆப்ரேஷன் தியேட்டருக்குள் இருந்து வெளி வரும் மருத்துவர்கள் போல உடை அணிந்து மருத்துவ மாஸ்க் மூலம் முகம் மறைத்திருந்த இருவர் மௌனமாக வரவேற்றனர்.

தூரத்தில் மனநிலை சரி இல்லாதவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

அந்த அறைக்குள் நுழையும் போது வாய் வரண்டிருந்தது. என்ன பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ளவேண்டும் என இவள் எதை எதையோ நினைத்துக் கொண்டிருக்க எதையும் செய்ய வழி இன்றி உள்ளே நுழையும் நேரமே இவளுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த முகமூடி மருத்துவர்கள் பிஸ்டலை உருவி உள்லிருந்தவர்களை தோட்டாக்களால் குளிப்பாட்ட தொடங்க அதை இவளுடன் வந்த இளைனர்களும் பின்பற்றினர். “டேக் ஹேர் டு 44” என்றபடி ஒரு முகமூடி டாக்டர் உள்ளே முன்னேற இவள் இடபுறமிருந்தவன் அவளை இழுத்துக்கொண்டு வல புறமாக காரிடாரில் ஓடினான்.

இவள் மனம் வேறு எங்கும் இல்லை. அந்த முகமூடிக் காரன் குரலில் நின்றுபோயிருந்தது அவன் சுரஞ்சகன்.

இவன்? இங்கு? எப்படி?

அந்த ரூம் 44 என்ற கோட் வேர்ட் குறித்தது பார்க்கிங்கில் இருந்த ஸ்கார்ப்பியோவை.

அந்த இளைஞன் இவள் மறுப்பை சட்டை செய்யாது மருத்துவ வளாகத்தைக் கடந்தான்.

நடந்த அத்தனை காரியங்களும் இவளுக்கு விளக்கப்பட்டது.

சமீபமாக ஒரு தீவிரவாதியை கைது செய்திருக்கிறார்கள். அவனை தப்பிக்கவிடச்சொல்லி மிரட்டி இருக்கிறது ஒரு முகமில்லா கும்பல் இவள் தந்தையை.

அவர் மறுக்க, அவரை கொன்றுவிட்டு அந்த தீவிரவாதி ஒளித்துவைக்கபட்டிருக்கும் சிறை பற்றிய தகவல் அடங்கிய ஃபைலை எடுக்க வந்தவந்தான் அன்று சுரஞ்சகன் பணியில் சேர்ந்த அன்று துப்பாக்கியுடன் இவள் தந்தை அறைக்கு வந்தவன்.

இப்பொழுது அவனும் சிறையில்.

ஆக கொதித்துப்போன அக்கூட்டம் இவளை கடத்தி இவள் அப்பாவை பணிய வைக்க திட்டமிட அதையும் தகர்த்துவிட்டான் சுரஞ்சகன்.

இப்பொழுது அவர்கள் மாற்று ஏற்பாடாக இவள் தந்தையுடன் இன்னும் இருவரை கடத்திவிட்டார்கள். அதில் ஒருவரை கொன்றும்விட்டார்கள்.

ஐஜி அலுவலக அறையில் இருக்கும் ஃபைலை யார் தடையும் இன்றி வந்து எடுத்துச்செல்ல இவள் தான் சரியான ஆள் என இவளை மிரட்டி காரியம் சாதிக்க திட்டம்.

இவளும் அவர்கள் திட்டபடிதான் ஆடி இருக்கிறாள். இவளை அவன் ஆள் பின் தொடரவும் செய்திருக்கிறான்.

ஆனால் இவள் தன் தந்தை அலுவலகம் சென்றபோது சுரஞ்சகன் அவளை பார்த்திருக்கிறான். விஷயத்தை ஊகித்துவிட்டான். எப்படி??????????

எப்படியோ ஊகித்துவிட்டான்.

உடனடியாக இவள் மொபலை ஸ்டடி செய்ய சொல்லிவிட்டு... அந்த கூட்டம் இவளை வர சொன்ன இடத்துக்கு தன் டீமை அவளுக்கு முன்னாக அனுப்பி அங்கு ஆம்னியில் இவளுக்காக காத்திருந்த, அந்த கூட்டத்தை சேர்ந்த மூவரை காலி செய்து அப்புறபடுத்திவிட்டு,

அவர்களது மொபைலை எடுத்துக் கொண்டு, அவர்களை போல் உடை உடுத்தி... அவர்களை போல் இவனது டீமை இவளுக்காக காத்திருக்க வைக்க....

இவள் வந்து சேரவும்...இவள் வந்து சேர்ந்ததை இவளை பின் தொடர்ந்தவன் மூலம் உறுதி செய்த அந்த கூட்டம்......

.இவளை எங்கு கூட்டி வரவேண்டும் என்ற தகவலை அவர்களது டிரைவர் என எண்ணி இவனது டீம் நபருக்கு தகவல் தர.... இவனது டீம் அந்த கூட்டம் சொன்ன இடத்தை சுரஞ்சகனுக்கு மெசேஜ் செய்ய... இன்னும் சிலரோடு மருத்துவர் போல், நோயாளிகள் போல் அவனும் மருத்துவமனைக்கு இவர்களுக்கு முன்பாக சென்றுவிட்டதோடு...அங்கிருந்த நிலமையையும் ஓரளவு படித்துவிட்டான்.

கடத்தியவர்களை எந்த சந்தேகமுமின்றி இழுத்துவர. அடைத்து வைக்க வசதியான இடம் என அந்த கூட்டம் தேர்ந்தெடுத்திருந்த இடம் மன நல மருத்துவ மனை. அங்கிருந்த தலைமை நிர்வாகிகளை பிணயமாக பிடித்து வைத்துகொண்டு உள்ளிருந்த மற்றவருக்கே தெரியாமல் அவர்கள் ஐஜி யையும் மற்றவரையும் அடைத்து வைத்திருக்க...

அவர்களுக்கு சந்தேகம் வராதிருக்க இவளை அங்கு வரை வர வைத்து, அதன் மூலம் இவனது டீமை அங்கு தடையின்றி நுழையவைத்து வேட்டை ஆடி விட்டான் சுரஞ்சகன் அந்த கூட்டத்தை.

இவர்கள் புறம் ஒருவருக்கு கையில் புல்லட் ஷாட். மற்றபடி எல்லாம் சுபம். அந்த கூட்டத்தில் கைதாயிருப்பவர்களை தவிர அனைவரும் காலி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.