(Reading time: 30 - 60 minutes)

துக்காகல்லாம் எனக்கு கவலை இல்ல அங்கிள்.....ஒவ்வொருத்தருக்கும் ஒன்னொன்னு இல்ல...சிலருக்கு பாட தெரியலை...சிலருக்கு டஅன்ஸ் தெரியலை...எங்க மதர்க்கு கம்ப்யூட்டர்ல டைப் செய்யவே வராதாம்...எங்க மோசே அங்கிளுக்கு மேத்ஸே வராதாம்...சிலருக்கு காசு இல்ல..சிலருக்கு படிப்பு இல்ல...அதுபோல எனக்கும் சிலது இல்ல......எங்க மதர் சொல்லி இருக்காங்க...நான் சந்தோஷமாதான் இருக்கிறேன்...”

அதே நேரம் அவர்களை பின்னிருந்து கடந்தாள் மைவிழி.

“நான் ஒன்னும் உங்களுக்கு இன்விடேஷன் கொடுக்கலை...” சொல்லியபடியே திரும்பாது நடந்தாள்.

“ஆஃபீஸ்ல எல்லோரையும் என் டாட்டர் இன்வைட் செய்திருக்கான்னுதான் சார் சொன்னாங்க...நானும் இன்றைல இருந்து உங்க அப்பா ஆஃபீஸ் ஸ்டாஃப் தாங்க மேடம்.”

அவன் முகம் பார்க்காமல் சென்றேவிட்டாள் மைவிழி.

 தெபி இவனை அழைத்துச்சென்று முன்னிருந்து மூன்றாவது வரிசையில் ஒரு இருக்கையை காண்பித்து “ஃபர்ஸ்ட் டூ ரோஸ் வி ஐ பி ரோஸாம்...இங்க இருங்க...நான் தான் காம்பயரிங்...ஸ்டேஜ்க்கு போகனும்...”

சொல்லிக் கொண்டு இருக்கும்போதே “வெல்கம் சார்...வாங்க...வாங்க...மிஸ்.மைவிழி சொன்னாங்க...நீங்கதான் நியூ ஏஎஸ்பின்னு...” என்றபடி பள்ளி தலைமை மதர் வரவேற்க....அவன் பார்வை தூரத்திலிருந்த மைவிழியை ஒருமுறை வருட...

”ஹே அஸ் யூஸ்வல் நான் கரெக்ட்... “என்றபடி ஸ்டேஜை நோக்கி தன் காலடியை எண்ணியபடி சென்றாள் தெபி.

விழா முடிந்து வெளி வந்தவனை அரை இருளில் நின்றிருந்த வாகனம் வரை வழி அனுப்ப வந்தார் மதர். அவருடன் மைவிழி. ஆனால் அவள் கண்கள் இவன் கண்களை தவிர்த்து தத்தி அலைந்தது.

மதரிடம் முறையாக விடை பெற்றவன்,

“அங்கிள்க்கு இம்பார்டன்ட் மீட்டிங்...அதான் இடையில கிளம்பிட்டாங்க....நான் உன்ன ட்ராப்பண்றேன .மைவி....”

மைவிழியிடம் சொல்லிவிட்டு மதரை பார்த்தான். புன்னகைத்துவிட்டு அவர் திரும்பி நடந்தார்.

 “இல்ல....அப்பா பேசினாங்க....அவங்க மீட்டிங் முடிஞ்சு நேர வந்துடுவாங்களாம்....ஈசிஆர்.. ஆட்டிட்யூட்ல டேபிள் புக் செய்துறுக்காங்க...என் பெர்த்டே அப்பாவுக்கு எப்பவும் முக்கியம் தான்..” கடைசி வரியில் ஒரு அழுத்தம். அவள் கண்களில் நீர் கோர்ப்பது அவள் குரலில் தெரிந்தது.

“பை” ஒற்றை வார்த்தையில் விடை பெற்றான். அவன் குரலில் ஒரு மரத்தன்மை. ஏன்?

அவளுக்குள் இன்னுமாய் கொந்தளித்தது. பெர்த் டேன்னதும் அவனுக்கு எத்தனை வெறுப்பு! அலட்சியம்.

கர்டசிக்காக கூட ஒரு ஒற்றைவார்த்தை வாழ்த்துகூட கிடையாது. எப்படி வாழ்த்துவான்?

நெஞ்சடைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உணர்ச்சி புயலை உள்ளத்தில் உண்டாக்கி...கண்ணில் கார்காலம் கட்டளையிட ....தன் கார் கதவை திறந்தவள் உள்ளமர்ந்து தன் இயலாமையை கதவில் காண்பித்தாள்.

பயணமெங்கும் பழைய குப்பை நினைவுகள்.

 சுரஞ்சகனின் தந்தை இவளது அப்பா பால்வண்ணனின் உயிர் நண்பர். அவரும் அவர் மனைவியும் ஒரு விமான விபத்தில் இறக்க, அவர்களது ஒரே மகனான 8 படித்துக்கொண்டிருந்த சுரஞ்சகனுக்கு பால்வண்ணன் அப்பொழுதிலிருந்தே கார்டியன், காட்பாதர் எல்லாம். சுரஞ்சகன் ஹாஸ்டலில் தங்கி படித்ததால் அவனை வருட விடுமுறை காலங்களில் மட்டும் தான் பார்க்கும் வாய்ப்பு இவளுக்கு.

அதுவும் ஆளுக்கு ஒரு காம்ப், கோச்சிங் என அலைந்து கொண்டிருப்பார்கள் இருவரும். பெரிதாய் பேசி பழகிக் கொண்டது இல்லை. ஆனால் அவன் படிக்கும் கல்லூரியில் இவள் சேர்ந்தபோது கதை மாறியது.

கல்லூரியின் முதல் நாளே “ரஞ்சா...இவள பார்த்துகிடுறதும் உன் பொறுப்பு” என்று அப்பா சொன்ன வார்த்தையில் தொடங்கியதோ..?

அப்பொழுது மைவிழி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி. சுரஞ்சகன் இறுதி ஆண்டு.

அவன் ஹயர் எஜுகேஷனுக்காக டெல்லி செல்ல போகிறான் என தெரியவும் இவளுக்குள் அடி அற்று போனதாக உணர்வு. அவனைப் பிரிந்து இருக்க முடியாது என்ற தவிப்பின் தாக்கம் கடுமையாக இருந்தது.

கல்லூரி இறுதி நாள் இவள் தன் காதலை அவனிடம் வெளியிட்டாள்.

அவன் மறுத்ததை தாங்க முடியவில்லை எனில் அவன் மறுத்த விதத்தை ஜீரணிக்க முடியவில்லை.

“இதை நான் எதிர்பார்த்தேன்....

இதெல்லாம் சரி இல்லை மைவிழி....

இப்ப உனக்கு புரியாது....பின்னால நீயே புரிஞ்சுப்ப...இனி நம்மளுக்குள்ள எந்த கம்யூனி கேஷனும் வேண்டாம்...அது நல்லதுக்கு இல்ல....” அந்த மரத்தடியில் வைத்து சொல்லிவிட்டு சென்றேவிட்டான்....

இதை நான் எதிர்பார்த்தேன்

அந்த வார்த்தையில் இவள் செத்தே போனாள். இன்றுவரை அந்த மரணத்திலிருந்து இவள் முழுதாக உயிர்த்தெழவில்லை..

இஞ்சினியரிங் படித்தாலும் அவள் அதற்கு சம்பந்தமே இல்லாமல் இங்கு வந்து வேலை செய்வதற்கும் அதுதான் காரணமோ?

 ஸ்பீடா மீட்டரில் எதேச்சையாய் அவள் கண்பட, அது 140 காண்பிக்க, தன்னிலை உணர்ந்து வேகம் குறைத்தாள். சற்று நேரத்தில்....டம்...என் டயர் வெடிக்கும் சத்தம்... .ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ் காற்று போக்கும் அரவம்..

.ர்ர்ர்ர்ர்ர்ச்ச்ச்ச்ச்ச்...டயர் பிரேக்கை தாங்கிக்கொண்டு தரையில் ஒருபுறமாக இழுபடும் சத்தம். சாலையின் ஓரமிருந்த கைப்பிடி சுவர் அருகில் சென்று இடிக்காமல் நின்றது வாகனம்.

சுற்றிலும் பார்த்தாள். மொத்த சாலையில் இவள் வாகனம் மட்டும் தனியாய்.

சே ...இந்த நேரத்தில அப்பா எதுக்கு இங்க வரச்சொன்னாங்க...இந்த டயருக்கு பஞ்சராக வேற இடமே கிடைக்கலையா...? காரைவிட்டு இறங்கி பார்க்கவா...வேண்டாமா..? சற்று தொலைவில் தெரிந்த அந்த குட்டை சுவரில் ஒற்றை மனிதன்.

லுங்கியும் சட்டையுமாக உட்கார்ந்து இருந்தவன் இவள் காரைப் பார்த்து வரதொடங்கி இருந்தான். பிறருக்கு உதவும் மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் போல... ஆனால் தனியாய் இருப்பது பெண் என்று தெரிந்தால் என்ன செய்வான்?

இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்? மொபைலை எடுத்து அப்பாவை அழைக்க ஆரம்பித்தாள்.

அதற்குள் அந்த லுங்கிக்காரன் இவள் காரை நெருங்கி இவள் வலபுற கண்ணாடியில் ஓங்கி ஒரு உதை...

“ஏய்...”இவள் கத்தியபடி இருக்கையில் இடப்புறமாக கண்மூடி சரிந்தாள்.

ஒன்றும் புரியவில்லை. மனோவேகத்தில் இவள் காரின் பின்கதவு திறக்கும் சத்தம். க்ளிக்ச்...... “ஸ்,,ச..” இவள் காரில் இருந்து யாரோ வெளியேறும் சத்தம்...கால் காற்றில் வீசப்படும் சத்தம்...’ஷ்க்க்க்...’ , ‘தக்....’அது அந்த கைலிக்காரன் கழுத்தில் இறங்கும் சத்தம்...’ஆஆஆஆ...’அவன் அலறும் சத்தம்....த்தட்ட்ட் அவன் தார்ரோட்டில் விழும் சத்தம்.

“சொல்ற வர எழும்பாத..படுத்துக்கோ மைவி.....” சுரஞ்சகன் குரல்...இவன் எப்பொழுது இங்கு வந்தான்...? அதுவும் இவள் காருக்குள்...?

இன்னும் சில ஷூக்கள்.....தோட்டாக்கள்...அலறல்கள்...பேச்சு குரல்கள்...சில வாகன ஒலி ஒளிகள்...

இவள் கார்கதவை திறந்தான். “எல்லாம் ஓவர் மைவி..யூ ஆர் ஸேஃப்...எழுந்துக்கோ...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.