(Reading time: 30 - 60 minutes)

ன்ன செய்ய ஜெயிலுக்கு வந்துட்டேன்....

“அப்ப இப்போ எதுக்குங்க கடவுள்ட்ட மன்னிப்பு கேட்கனும் அந்த ஜெபம் பண்ற பாப்பாவ பார்க்கனும்னு என்னை வர சொன்னீங்க...?” மைவிழி தன்னிடம் பெசிக்கொண்டிருந்த அந்த முதியவரிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“அது இல்லமா...இது நான் செயிலுக்கு வந்த கதை...ஆனா நான் செய்த தப்பு வேறமா.....என் தம்பின்னா எனக்கு உயிருமா...எங்கபோனாலும் சேர்ந்துதான் போவோம்...ஒரு தகராறுல என் தம்பி ஒருத்தன ஓட ஓட வெட்டிடான்மா...அவன் வெட்டுறதுக்கு முன்ன அந்த வெட்டு வாங்கினவன்...என்ட்ட கதறுனாம்மா...ஏ வேது...நீ வேண்டாம்னு சொல்லுல...உன் தம்பி கேட்பான்னு...என் தம்பிய அப்படி அதிகாரம்பண்ணி எனக்கு பழக்கம் இல்லையா...நான் ஒன்னும் சொல்லாம நின்னுட்டேன்...

நான் சொன்னாகூட என் தம்பி நிறுத்தி இருப்பானான்னு தெரியாது...அவன் குணம் அது...ஆனா இப்போ அடிக்கடி நான் அன்னைக்கு பண்ணது தப்பு ...ஒரு உயிர் போறத தடுக்க நான் முயற்சி செய்யல...அதான் இப்படி இந்த வயசான காலத்துல செய்யாத தப்புக்கு இங்க வந்து கெடக்கேன்னு இருக்குதுமா...

தப்பு செய்துட்டேன்...தண்டணை கூட அனுபவிச்சாட்சி...ஆனாலும் போற இடத்துல கடவுள எந்த மூஞ்ச வச்சுகிட்டு பார்க்கன்னு தெரியல... நான் தண்டணை அனுபவிச்சதாலமட்டும் செத்தவன் வீட்ல உள்ளவிய பட்டபாடு இல்லனு போயிடுமா...? அதான் உன்ட்ட பேசனும்னு சொன்னேன்...என்னமோ நாளைக்கு நான் பூமியில இருப்பேன்னு தோணலை....நான் இப்போ என்ன செய்யனும்மா..?”

“நம்மளால கடந்த காலத்தை மாத்த முடியாது...ஆனால் யேசப்பாவால ஒரு இழப்பை விதையா மாத்தி புது நன்மை விளைய வைக்க முடியும்....அதனால அவரை நம்பி அந்த குடும்பத்துக்காக ஜெபம் செய்ங்க...உங்களால முடிஞ்ச நன்மைய அந்த குடும்பத்துக்கு செய்ங்க...அதோட உங்க தப்புக்காக மன்னிப்பு கேளுங்க....தன்னிடம் வரும் யாரையும் நான் புறம்பே தள்ளுவதில்லைனு யேசப்பா சொல்லி இருக்கார்...”

பேசிமுடித்து வெளியே திரும்பும்போதுதான் கவனித்தாள் சுரஞ்சகன் அறை வாசலில் நின்றிருந்தான்.

காரிடாரில் இவளோடு இணைந்து நடந்தவன்..”.மைய்யூ நான் தப்பு செய்துட்டதா உனக்கு தோணிச்சுன்னா என்னை மன்னிச்சிடு..ப்ளீஸ்...நான் என்ன சொல்ல வறேன்னே கேட்காம இப்படி அவாய்ட் செய்தா எப்படி..? கொலை செய்தவங்கள கூட கடவுள் மன்னிப்பர்னு சொல்லிட்டு வர்ற...ஆனா என்ட்ட..”

“மனம் திருந்தினவங்களுக்குத்தான் மன்னிப்பும் ஃப்ரெண்ட்ஷிப்பும்..திருந்தாதவங்களுக்கு ஒன்லி மன்னிப்பு ....நோ ப்ரெண்ட்ஷிப்...நான் உங்கள எப்பவோ மன்னிச்சுட்டேன்...”

“நான் என்ன தப்பு செய்தேன்னு சொல்லு....நிச்சயமா ஐ’ல் ரிபென்ட்....”

“செய்தது தப்புன்னே தெரியாதவங்க..திருந்த போறாங்களாம்....” இதற்குள் வெளி வந்து தன் கார் அருகில் வந்திருந்தவள் காரை எடுத்துக் கொண்டு பறந்தாள்.

கொலையவிட பெரிய தப்பா..? அப்படி என்ன செய்தேன் என யோசிக்க தொடங்கினான் சுரஞ்சகன்.

 பார்வை அற்ற மாணவிகளுக்கான பள்ளி அது. மைவிழி விரும்பி பணி செய்யும் இடம். பள்ளியில் ஒருவிழா. வரவேற்பாளராக அவள்.

அவள் முன்னிருந்த தட்டிலிருந்த கற்கண்டை எடுத்து வாயில்போட்டான் சுரஞ்சகன். அவளையும் மீறி அவன் மீது கட்டற்ற வெள்ளமாய் பாய்ந்தது அவள் பார்வை. அடர் க்ரீம் நிறத்தில் பஅண்ட்ஸ் பளீர் வெண்ணிற சட்டை. ஷஅர்ட் டக் இன் செய்து கறுப்பு நிற பெல்ட்.

பார்க்காதே பார்க்காதே என்ற மனதில் அழுத்தம்.அதிகமாக அதே வேளை எதோ உறுத்த அவளையும் அறியாமல் அவன் முகம் பார்த்தாள் மைவிழி. அவளைத்தான் படித்துக் கொண்டிருந்தான் அவன்.

“சார் இங்க முன்னால இருக்குதுல்ல இந்த காரிடார்..அதுல ஃஸ்ட்ரெயிட்டா . போனா கடைசி என்ட்ரன்ஸ் திறந்து இருக்கும்...அங்க தான் ப்ரோக்ராம்...நான் அங்க தான் போறேன்...வாங்க வழிகாட்றேன்...” அருகில் ஒரு வாண்டின் சத்தம் கேட்க திரும்பி பார்த்தால் ஒரு ஏழெட்டு வயது மதிக்கத்தக்க சிறுமி. ஊண்கண்ணில் ஒளியற்றவள்.

“எங்க மைவிழி மேமை டிஸ்டர்ப் செய்யாதீங்க....”

“தேங்க்ஸ் சின்ன மேடம்....ஃபங்ஷனுக்கு கூப்பிட்டவங்க தான் வழி சொல்ல மாட்டேங்கிறாங்க...நீங்களாவது சொன்னீங்களே...சோ ஸ்வீட் ஆஃப் யு..பை த வே நான் சுரஞ்சகன்..” கை பற்றி குலுக்கினான். குழந்தையோடு சேர்ந்து நடக்க தொடங்கினான்.

“ப்ளெஷர் இஸ் மைன் மிஸ்டர். சுரஞ்சகன். ஐம் தெபோரா...தெபின்னு நீங்க கூப்டலாம்...”

பேசிக்கொண்டெ இருவரும் அந்த நீள கார்டாரின் பாதி தூரத்தை அடைந்திறுக்க அவனை பற்றி இருந்த கையை அழைப்பின் அடையாளமாக இழுத்தாள் தெபி. “அங்கிள் கொஞ்சம் குனிங்க..”

குனிந்தான் “என்னமா?”

“அங்கிள் மைவிழி மேம்க்கு உங்க மேல பயங்கர கோபம்.... ஆனா அதையும் தாண்டி ரொம்ப உள்ள உங்கள அவங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குது....”

ஆச்சர்யமாய் குழந்தையை பார்த்தான். “தெபி டார்லிங்க்கு இது எப்படி தெரிஞ்சிதாம்...?

“..அப்பப்ப இப்படி அடுத்தவங்கள பத்தி தோணுது... மைவிழி மேம் நம்ம பின்னால நடந்து வர ஆரம்பிச்சப்பல இருந்து அப்படியே தோணுது..’

 திரும்பிப் பார்த்தான். மைவிழி வெகு பின்னால் வந்து கொண்டிருந்தாள் க்ரீம் நிற புடவையில் ஆரஞ்சு வர்ணம். அழகு.

அத்தொலைவில் ஆள் வருவதை இக்குழந்தை அறிந்திருப்பதே அதிசயம். அதிலும் வருவது யார்... அவர்கள் மனதில் என்ன என்றெல்லாம் ...ஆச்சர்யமே!

“அவங்க வழக்கமா நடக்கிற மாதிரி நடக்கலை....கொஞ்சம் கோபமா....கொஞ்சம் வித்யாசமா...” யோசனையாய் ஒருநொடி வலபுறமாய் தலை சாய்த்த தெபி

என்னமோ எனக்கு அவங்களுக்கு உங்கள பிடிச்சிருக்கதாதான் தோணுது...அவங்க ரொம்ப நல்லவங்க...வேணும்னே தப்பு செய்தா மட்டும்தான் மேடத்துக்கு பிடிக்காது...அப்ப கூட அவங்க எங்கள அடிக்கவே மாட்டாங்க....”

தன் ஆசிரியைக்கு விளம்பரம் போல் ஆர்வமாய் ஆரவாரமாய் சொல்லிக் கொண்டு சென்றவள் தன் தொனியை வெகுவாக இறக்கி ரகசியம் போல்

“நீங்க ரொம்ப பெருசா தப்பு செய்துட்டீங்களா அங்கிள்.......? நான் வேண்ணா உங்களுக்காக மேடத்துட்ட பேசட்டுமா....அவங்களோட ஃபேவரைட் ஸ்டூண்ட் நான்...ஆனா நீங்க சாரி கேட்டுடனும்...அதோட அந்த தப்ப திருப்பி செய்யவே கூடாது...” கடைசி வரியில் தலையை இருபுறமும் மறுப்பாக ஆட்டியபடி தெபி பேச அவனுள் பாச அலை, பெருமிதம்.

குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான் சுரஞ்சகன்.

“டஅடி கிஸ்பண்ணா இப்படித்தான் இருக்குமா அங்கிள்...?” குழந்தையின் ஏக்க கேள்வியில் அவள் முன் முழந்தாளிட்டு அவளை தோளோடு அணைத்தான் சுரஞ்சகன்.

“ஐய...இப்படில்லாம் சைல்டிஷா செய்யகூடாது..ஐம் நவ் அ பிக் கேர்ள்......” மறுப்பாய் விலக்கினாள் தெபி.

“டாட்டர் இஸ் ஆல்வேஸ் அ சைல்ட் ஃபார் ஹெர் டஅட்...” இப்பொழுது அவன் கன்னத்தில் விழுந்தது மழலை முத்தம்.

“.எனக்கு அப்பாவே கிடையாதுன்னு எல்லோரும் சொல்றாங்களாம் அங்கிள்...அதான் அம்மா கூட என்னை இங்க விட்டுட்டு போய்ட்டாங்களாம்....”

“இதெல்லாம் உன்ட்ட யார் சொன்னாங்க...?” அவன் முகத்தில் வந்த இறுக்கம் குரலிலும் வெளிப்பட்டது போலும்.

“யாரும் வேணும்னுல்லாம் என்ட்ட சொல்லலை அங்கிள்...ஒரு நாள் ஆஃபீஸ் ரூம்க்கு அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரை திருப்பி குடுக்க வந்தனா...அப்ப அங்க யாரோ மதர்ட்ட சொல்லிகிட்டு இருந்தாங்க...”

“அதை..” அவன் எதோ தொடங்க அவனை பேசவிடாமல் தெபியே தொடர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.