(Reading time: 30 - 60 minutes)

டுத்த இரண்டாம் மணி நேரம் சுரஞ்சகன் இவள் தந்தையுடன் இவளிருந்த அறைக்குள் நுழைந்தான்.

இடம் பொருள் ஏவல் எதுவும் அவள் மனதிற்கு தெரியவில்லை. பாய்ந்து சென்று அவன் மார்பில் சரண்.

“ஹேய்....மைய்யூ” என்றவன் கண்ணில் பட்டது ஐஜி. ‘ டூ மினிட்’ என்றவன் அவளோடு அறையை விட்டு வெளியே வந்தான்.

“எப்படி யோசிச்சுப் பார்த்தாலும் என்ன நீங்க சந்தேகமே படலை...முழுசா நம்பி இருக்கீங்கன்னு நல்லா புரியுது. என்னோட பயாலஜிகல் பேரண்ட்ஸ் மாதிரி நானும் கிரிமினலா இருப்பேன்னு நீங்க நினைக்கலைனு தெரியுது.....”

தன் கரத்தால் அவள் வாய் பொத்தினான்...

“நீ இப்படியாத்தான் புரிஞ்சி வச்சிருக்கன்னு நேத்துதான் எனக்கு புரிஞ்சிது... அதுவும்...அப்பாக்கு என் பெர்த் டே முக்கியம்னு சொன்னப்பதான்....... ஆனால் நின்னு எக்ஸ்ப்லைன் செய்ய அப்ப டைம் இல்ல....அதோட பெர்த் டே அப்ப எதுக்கு வருத்தமான விஷயங்கள கிளறனும்னு தோணிட்டு...அதான் நாளைக்கு பெசுறேன்னு சொன்னேன்...”

“இப்போ எல்லாரும் வெய்ட்பண்றாங்கடா.....மீட்டிங்...ப்ரஸ் எல்லாம் முடிஞ்சி ஃப்ரீ ஆனதும் பேசுவோமே.....”

நடந்ததை அவன் அனைவருக்கும் விளக்க எதுவும் அவள் காதில் விழவில்லை. அவள் கண்கள் அவன் மீதும் அவள் மனம் அவள் காதலின் மீதும்.

“அங்கிள் மைய்யூவ ஈவ்னிங் வீட்ல வந்து ட்ராப்பண்றேன் ப்ளீஸ்”

 அவனுடன் காரில் ஏறியதும் கேட்டாள் “ எப்படி என்னைவச்சு விஷயத்தை கெஸ் பண்ணீங்க...?”

“தெபி என் ஆஃபீஸ் பார்க்கனும்னு ஆசைப்பட்டதால நான் மார்னிங் அவளை அங்க கூட்டிட்டு வந்திருந்தேன்... நாங்க என் ரூமைவிட்டு வெளிய வர்றப்ப நீ வெளிய போய்ட்டு இருந்த....

தெபியோட இன்ட்யூஷன் மேல எனக்கு ஒரு நம்பிக்கை...நீ பயந்துபோய்...அதே நேரம் எதையோ மறைக்கனும்.....மாட்டிகிட கூடாதுன்னு ..ஓடுறன்னு அவ சொன்னா...

இந்த டெரடிஸ்ட் இஷ்யூ இருப்பது ஏற்கனவே தெரியும்...முந்தின நாள் உன்ன கிட்நாப் செய்ய ட்ரை பண்ணி இருக்காங்க...இன்னைக்கு நீ உங்க அப்பா இல்லாத நேரம் ஸ்டேஷன் வர்ற...சோ ரெண்டும் ரெண்டும் நாலு...உங்க அப்பாவை கான்டாக்ட் செய்ய முடியலை...உன் மொபைலுக்கு அன் நோன் நம்பரிலிருந்து கால்...அப்புறம் என்ன..நடந்ததுன்னு உனக்கு தெரியுமே...

இப்ப விஷயத்துக்கு வருவோம்...எந்த இடத்துல வச்சு உன் கால்ல விழனும்னு சொல்லு...அங்க போகலாம்....”

முறைத்தாள்.

“அம்மா தாயே... கால்ல விழுறதுன்னு முடிவு செய்தாச்சு.. எனக்குன்னு இல்லனாலும் என் யூனிஃபார்ம்க்காக... கால்ல விழுற இடம், ஆள் இல்லாத இடமா இருக்குற மாதிரி சொல்லுமா...”

“அப்படி ஆள் இல்லாத இடம் வேணும்னா...அது நம்ம மேரேஜ் அன்னைக்கு நைட்...” கண் அடித்தாள்.

வாலு...இரு கவனிச்சிகிறேன்..

“ஆனா இப்போ விஷயத்தை சொல்ல ஒரு இடம் வேணுமே....”

“உங்களுக்கு என் பயாலஜிகல் பேரண்ட்ஸ் பத்தி எவ்ளவு தூரம் விஷயம் தெரியும்னு எனக்கு தெரியாது... ரெண்டு பேரும் கிரிமினல்ஸ்....ட்ரெக் ஸ்மக்லிங்க்ல இருந்து மிலிட்ரி சீக்ரெட்ஸ் திருடி விக்றவரை எல்லாம் செஞ்சவங்க....நான் இல்லெஜிமேட் சைல்ட்...அவங்ளால அவாய்ட் பண்ணமுடியாம பிறந்துட்டேன் போல...எங்கவுண்டர்ல ரெண்டுபெரும் போய்டாங்க...என்ன பத்தி கேள்விபட்டு அப்பாவும் அம்மாவும் தான் அடாப்ட் செய்துகிட்டாங்க...நான் எப்பவுமே என்னை டாட்டர் ஆஃப் பால்வண்ணனாத்தான் இதுவரை உணர்ந்திருக்கேனே தவிர...மத்தவங்கள நினச்சதே இல்ல...ஆனா இதை நான் எதிர் பார்த்தேன்னு நீங்க சொன்னதும் ..உலகத்தைப் பொறுத்தவரை நான் டாட்டர் ஆஃப் கிரிமினல் தானன்னு தோணிட்டு... மனசளவில செத்துட்டேன்...

பட் இப்போ நீங்க அதை சொல்லலைனு புரிஞ்சிட்டுது...வேற என்ன காரணம் இருந்தாலும் எனக்கு ஒன்னும் தப்பா தோணாது...ஆஃப்ட்ரால் ஐ வாஸ் 18 தென்...ஆப்வியஸ்லி நாட் அன் ஏஜ் டு மேக் லைஃப் டைம் டெஷிஷன்.... “

“எக்ஸாட்லி...இதைத்தான் அன்னைக்கு நான் மீன் பண்ணேன்...நீ புரிஞ்சிப்பன்னு... அக்க்ஷுவலி எனக்குமே உன் மேல அப்ப மனசு ஊஞ்சலாடிட்டுதான் இருந்துது....உனக்கும் என் மேல விருப்பம்னு தெரியும்...உன்ட்ட சொல்லனும்னு முடிவு செய்துட்டேன்...எப்பவுமே சந்தோஷமோ துக்கமோ கொஞ்ச நேரம் அப்பாவோட டைரிய எடுத்து படிப்பேன்....அப்படி அன்னைக்கும் படிச்சேன்... இன்டெரெஸ்டிங்லி அன்னைக்கு என் கண்ணில் பட்டது அப்பா அவங்க ஃப்ரெண்டோட லவ்ஸ்டோரிய பத்தி எழுதி வச்சது..

அவங்க ஃப்ரெண்ட் காலெஜ் டேஸில் துரத்தி துரத்தி ஒரு பொண்ண காதலிச்சாங்களாம்.. ரெண்டு வருஷமா தினமும் அந்த பொண்ணை படையெடுத்து கடைசியில அந்த பொண்ணும் சம்மதிச்சிட்டாம்...அவங்க வீட்டுக்கு எப்படியோ விஷயம் தெரிஞ்சு பயங்கர சண்டை....பயங்கர ரெஸ்ட்ரிக்க்ஷன்....அந்த பொண்ணு சூசைட் அட்டெம்ப்ட்...கடைசியில அவங்க வீட்ல சம்மதிச்சாங்க போல.. வேலைக்கு போனதும் கல்யாணம்னு சொன்னாங்களாம்...அப்பா பிரெண்ட் வீட்லசொன்ன ஒரே கண்டிஷன் பையன் பிஜி படிச்சுட்டு தான் வேலைக்கு போகனும்னு...அவர் பிஜிக்கு வெளியூர் போக..அவர் வேலைக்கு போனதும் இரண்டு பேரண்ட்ஸும் கல்யாணத்தைப் பத்தி பேச டூ தெய்ர் ஷாக்...பையன் பொண்ணு ரெண்டுபேருமே அந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்...

அப்பா கீழ எழுதி இருந்தார் Keep your fields ready then build your house அப்படின்னு... என் ஃபாமிலிய பார்த்துகிடுற அளவுக்கு நான் வாரவரை ஃபாமிலி தேடக்கூடாதுன்னு தோணிச்சு...

எத்தனையோ ஆர்மி பீப்புள் வருஷம் 2 தடவை மட்டும் அவங்க வொய்ஃப பார்த்துட்டு லைஃபை லீட் பண்றாங்க....15 வருஷம் கழிச்சு வர்றப்பவும் அவங்க ஃபேமிலி அவங்களுக்கு இருக்கும்...ஆனா தினமும் பார்த்துக்கிற லவர்ஸ் ப்ரேக் அப் செய்துகிறாங்க...கல்யாணம் இல்லாத காதலோட பலம் அவ்ளவுதான்....அந்த மீன் டைம் அவங்க இழந்து போற விஷயம் எத்தனையாவோ இருக்கும்...இர்ரிகவரபிள்...

அதான் கல்யாணம் செய்துகிட்டுதான் காதலிக்கனும்னு டிசைட் செய்தேன்...சேஃபஸ்ட் வே...

இதை நீயும் புரிஞ்சிப்பனு நினைச்சேன்...

 இரு மாதங்களூக்குப் பின்:

அவர்களது திருமண இரவு.

அவள் வரும்போது அவன் பில் அப்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான்.

“என்ன ரஞ்சன்???!!!”

“பயமா இருக்குதே....” கண் சிமிட்டினான்.

அவளுக்கு வெட்கம் பிய்த்துக்கொண்டு போனது...

“ஹேய் நான் சொன்னது வேற....தெபிய அடாப்ட் செய்யலாம்னு ஆசை நீ என்ன சொல்லுவியோன்னு டென்ஷன்....?”

தொடங்கிய முதல் முத்தம் அவளது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.