(Reading time: 8 - 16 minutes)

மதன் வெட்ஸ் நந்தினி - மனோ ரமேஷ்

லோ அண்ணா, சென்னை எப்படி இருக்கு.

ம்.... ஜில்லுனு இருக்கு,

சென்னையே ஜில்லுனு இருக்கா, இல்ல அண்ணி போட்டோ பார்த்ததுல உனக்கு ஜில்லுனு இருக்கா.

Mathan weds Nanthiniஅண்ணி போட்டோவா?....... 

ஆமா, உனக்கு மெயில் பண்ணாங்களே, நீ பார்க்கலயா.

ஏன் டா………., என்கிட்ட யாரும் எதுவும் சொல்லல,

இந்த பொண்ணு சென்னைல இருக்காளா

சரி போன வை.

அண்ணா............

வை, நான் அப்புறம் கூப்பிடறேன்.

ஹீரோயின் போட்டோ பார்த்து நம்ம ஹீரோ பிரீஸ் ஆகிட்டாரு. ஏன்னு அவரே சொல்லுவாராம்,இன்னும் கொஞ்ச நேரத்துல.

அதுக்குள்ள நான் அவர பத்தி சொல்றேன். மதன் வீட்டுக்கு மொத பையன். அதுக்குண்டான பொறுப்பு, அடாவடி எல்லாம் இருக்கற ஆளு. நம்ம மணிரத்னம் சார் மட்டும் ரோஜா படம் எடுக்கலேன்னா, இவரு இந்நேரம் ஆர்மில க்ரிப்ட்டோகிராபரா இருந்திருபாரு. அவரு அதில அரவிந்த்சாமிய க்ரிப்ட்டோகிராபரா காட்டி அவர கடத்திட்டதால, மைதிலி நந்தகுமாரன் இவர ஆர்மில சேர விடல. அதனால செக்யூரிட்டி சாப்ட்வேர் டெவெலெப்மெண்ட் கம்பெனி நடத்தறாரு சென்னைல.

ஹலோ நந்தினி, நான் மதன் பேசறேன்.

நானே உங்களுக்கு பேசனுன்னு நெனச்சேன்.

அப்படியா! என்ன விஷயம்?

இல்ல எங்க வீட்ல உங்க ப்ரொபைல் பார்க்க சொன்னாங்க. அவங்க கிட்ட கல்யாணம் வேணாம்னு சொல்ல முடியாது, சொன்னாலும் ஒத்துக்க மாட்டாங்க, நீங்க பொண்ண புடிக்கலைன்னு சொல்லிட்டா கல்யாணம் நின்னுடும் அதான்.

அடிப்பாவி கல்யாணத்தை நிறுத்தத்தான் போன் பண்ணனும்னு நெனச்சியா நான் கூட ஏதேதோ நினைச்சிட்டேன் (மனசுகுள்ளதான்)

என்னை புடிக்கலைன்னு சொல்லி நீங்க கல்யாணத்தை நிறுத்தலாமே. உங்களுக்கு சொல்ல விருப்பம்னா, ஏன் கல்யாணம் உங்களுக்கு வேணாம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?!

எனக்கு இப்போ கல்யாணம் பண்ற ஐடியா சுத்தமா இல்லையே.

எனக்கும் தான் இல்ல……………. ஆனா, உன் போட்டோ பாத்ததுக்கு அப்புறம் யோசிக்கலாம்னு தோணுது

புரியல.!

    நீ நனையறதுக்கு ஆட்டின மரத்துக்கு கீழ நின்னு நானும் நனைச்சு இருக்கேன், உன்னால.

ஊரே பார்க்கற படத்தவிட்டு புதுசா ஏதாவது ட்ரை பண்ண படத்துக்கு போனா தியேட்டர்லயும் நீ. சரி கோயம்புத்தூர்ல தான் அப்படினா. ட்ரைன்ல திரும்பி படுத்தா எதிர் பர்த்ளையும் நீ,

சென்னைல புக்பேர்.... 

இத்தனை நாளாய்

காதலித்து கொண்டு இருக்கிறோம்       

இன்னும் புதிதாய்

என்ன கொஞ்சல் என்கிறாய்,

அதே நாசி அதே காற்று

ஒவ்வொரு முறையும்

புதிதாய் சுவாசிப்பது இல்லையா 

உன்னை அழைத்து போக வந்தேன்நர்சிம். இன்னும் தேடிட்டு தானே இருக்க? நானும்தான்.

இப்படி எல்லாம். என்னை எனக்கே திருப்பி காட்ற, கண்ணாடி பொண்ண, எப்படி புடிக்கலைன்னு சொல்லமுடியும்.

  அதுக்குனு கண்டதும் காதல்னு எல்லாம் சொல்லல. ஆனா, ஏதோ உன்னை புடிக்கலைன்னு சொல்லி, நானா கல்யாணத்த நிறுத்தறது, எனக்கே எதிரா நான் செய்யற ஒரு விஷயமா இருக்கும். எனக்கு புடிச்ச மாதிரி எல்லாம் இருக்க ஒரு பொண்ணு என்னை தேடி வரும்போது நானா ஏன் தவிர்க்கணும்னு நீ யோசிச்சு பாரேன்.

உனக்கும்தான் கல்யாணத்த வேணாம்னு சொல்ல எதுவும் காரணம் இல்லை.

இல்லை

கல்யாணம் பண்ணிக்க எப்படி காரணம் இல்லையோ அதே மாதிரி வேணான்னு சொல்லவும் எனக்கு காரணம் இல்ல.

இல்லைதான்

இப்போ உன் பிரச்சனை திடிர்னு ஒரு கல்யாணம் அதானே. நான் அதை பாத்துக்கறேன்

அப்போ யோசிக்கலாம்.

நல்ல டைம் எடுத்து யோசி என்ன வேணும்னு சொல்றதுக்கும் வேணாம்னு சொல்றதுக்கும் எதாவது காரணம் கிடைக்கும் இல்ல உனக்கு இந்த டைம்ல.

ஆனா டைம் எப்படி கிடைக்கும்.

அது யோசிப்போம், நான் உங்க அப்பாகிட்ட பேசறேன்.

சரி.

(அப்பாடி எவ்ளோ பேசவேண்டியிருக்கு.)

ஹலோ டாடி,

சொல்லுடா, என்ன உன் தம்பி கிட்ட அப்பறம் போன் பன்றேனு சொல்லி அரைமணி நேரம் கழிச்சு பன்ற.

ஹ்ம்ம். உங்க மருமக கூட பேசிட்டு இருந்தேன்.

டேய் நீயா முடிவெடுத்துட்ட, அவளுக்கு ஓகேவா.

அத சொல்லதான் அப்பா கூப்டேன்.   

எனக்கு இப்ப உடனே கல்யாணம் பன்ற ஐடியா இல்ல அவளுக்கும் அப்படிதான்

அதனால, அவங்க அப்பாகிட்ட  பேசி கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் வெச்சிக்கலாம்னு சொல்லுங்க.

அப்போ இப்போதைக்கு நிச்சயம் வெச்சுக்கலாம்

அதெல்லாம் வேணாம், நான் அவகிட்ட உனக்கு என்னை பிடிச்சு இருக்கா  இல்லையானு யோசிக்க டைம் ரெடி பன்றேனு சொல்லிட்டு  நிச்சயம் பண்ணா  அது சரியே இல்ல, அதுக்காக எல்லாம் அவ என்ன கல்யாணம் பண்ண கூடாது டாடி.

அப்பறம் அவங்க அப்பாகிட்ட என்ன பேசறது வேற நல்ல மாப்பிள்ளை வந்தா அவங்க பொண்ணுக்கு அவங்க கல்யாணம் பண்ணிவெச்சிடுவாங்கலே

டாடி காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு, நீங்க என்ன இப்படி பேசறீங்க,

அதெல்லாம் அவ வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கமாட்டா.

என்னடா இப்படியும் சொல்ற அப்படியும் சொல்ற.

அப்பா அவ என்னை வேணான்னு சொல்ல போறதில்ல, ஆனா உங்க எல்லாருக்காவோ இல்ல நிச்சயம் பண்ணிட்டதுக்காகவோ என்னை கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு சொல்றேன் அவளோ தான்

சரி உன் அம்மாட்ட என்ன சொல்ல.

எனக்கு ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் இருக்கு, முடிக்க டைம் ஆகும்னு சொல்லுங்க.

போன் பண்ண முதல் நாளே இவளோ பேசி மயக்கிட்டானே இப்படி கொஞ்ச நாள் பேசி பேசி நந்தினிய கல்யாணம் பண்ணிக்க ஓகேனு யோசிக்க வெச்ச நேரம் நேசமாவே வேலை நெறைய ஆகிடுச்சு (ஹா ஹா இதுதான் விதி)

 

      மலர் மஞ்சம் விழி கெஞ்சும் மனம் மஞ்சம் அல்லவா

உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சம் அல்லவா  

உன் தனிமை கதவின் தாழ் நீக்கவா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.