(Reading time: 3 - 5 minutes)

நீயுமா? - ஷாரன்

ய் அஜி, தயவு செய்து என்னைய எப்படியாவது ஏத்தி விட்ருபா. எனக்கு ட்ரைன்னுனாலே கொஞ்சம் பயம். இதுல கூட்டமா வேற வரும்னு சொல்ற. நீ மட்டும் என்னை விட்டுட்டு போய்ட நான் காலி “ என்று செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் நின்று தனது தோழி அஜித்தாவிடம் சொல்லி.. இல்லை இல்லை கெஞ்சி கொண்டு இருந்தாள் தர்ஷினி.அவளின் பயம் கலந்த பேச்சை கேட்டு  சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள் ஆஜிதா.

தர்ஷினி, முதலாம் ஆண்டு பொறியியல் பயில திருச்சியில் இருந்து சென்னை மாநகரை அடைந்த பெண். வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட்தாலும், முதன்முறை பெற்றொரை பிரிந்த நிலையினாலும் சற்று அதிகமாகவே பயம் குடிக் கொண்டுவிட்டது அவல் நெஞ்சில். படிப்பில் மிகவும் கெட்டிக்காரியான அவள், தனது இன்டெர்ன்ஷிப் சம்மந்தமாக விசாரிக்க தோழிகளாய்ச் செங்கல்பட்டு வந்திருந்தனர். வரும்பொழுது பேருந்தில் பயணம், அவளுக்கு பழக்கப்பட்டதே. திரும்புகையில் “ட்ரைன்னுல போனால், சீக்கிரம் ஹாஸ்டெல் போயிடலாம்” என்று அஜி சொல்ல, இருவரும் வந்து நின்ற இடம் செங்கல்பட்டு இரயில் நிலையம்.

இரயில் வந்தவுடன் அதில் எறிய தர்ஷினி, அஜியை பார்த்து “அப்பாடா” என்று பெருமூச்சுவிட்டாள். சற்று தள்ளி உள் இருக்கைக்கு அருகில் சென்று நின்றுக்கொண்டாள். அங்கு தன்னுடன் நின்ற ஒரு ஐந்து வயது சிறுமியைப் பார்த்தாள். சற்றே கலைந்த கேசம், கருத்த தேகம், அழுக்கான உடை. எப்படி இருந்தாலும் குழந்தைகள் அழகு தானே.

girlதன்னை நிமிர்ந்து நோக்கிய அச்சிறுமியைப் பார்த்து புன்னகைத்தாள் தர்ஷினி. கண்ணடியைப் போல், தன் முத்து பற்கள் தெரிய ஒரு சிரிப்பை பதிலாக அளித்தாள் சிறுமி. இது போல சிறுசிறு விளையாட்டுகளுடன் தொடர்ந்து அவர்களின் பயணம்.

சில நேரம் கழித்து ஒரு நிறுத்ததில் ஏறினார் ஒருவர். சீரான உடை, சற்று வழுக்கை விழுந்த தலை, கையில் ஒரு உயர் ரக செல்போன். பார்த்தாலே ஒரு “ஆப்பர் மிடில் கிளாஸ் லுக்” அவருக்கு. இரண்டு நிறுத்தங்களில் கூட்டம் வெகுவாக குறைய தொடங்கியது. அவர்கள் அருகில் உள்ள ஒரு இருக்கை காலியானவுடன் அச்சிறுமியின் தாய் அவளை துக்கிக்கொண்டு அதில் அமர முயன்றாள்.

“ஏய், ஏய் எங்க உட்காருர.. நகரு நகரு..முதல நீ இந்த வண்டில ஏறுனதே தப்பு. உங்க்ளுக்கு எல்லாம் சரியான இடம், அதோ அந்த கதவு பக்கம் தான். போ.. போ..” என்று அதட்டினார் ஏறியவர். அத்தாயோ வேறு எதோ ஒரு பாஷையில் எதையோ யாசிப்பது போல கேட்க, விடாப்படியாக தர்க்கம் பண்ணி அந்த இருக்கையில் அமர்ந்தார் அந்த மாமனிதர்.

அவரிடம் பேசி அப்பெண்ணுக்கு உதவ அங்குள்ள யாருக்கும் துணிவில்லை. இந்நிலையில் சிறுமி பரிதாபமாக தர்ஷினியை ஏறிட்டாள். அந்த பார்வையை அவளால் எதிர்க்கொள்ள முடியவில்லை. கண்களில் நீர்க் கோர்த்து நின்றது அவளுக்கு. கொஞ்சம் தயங்கிய அந்த தாய், பிள்ளையை தூக்கிக்கொண்டு அடுத்த நிறுத்த்தில் இறங்கி போய்விட்டாள்.

“நீயாவது எனக்கு உதவ மாட்டாயா?” என்று கேட்ட அந்த சிறுமியின் பார்வை அவளின் மனதை விட்டு அகலவே இல்லை. இது தான் போலும், “ஸோ கால்டு சிவிலைஸுடு ஸொஸைடி” என்று தன்னையே நொந்து கொண்டாள் தர்ஷினி.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.