(Reading time: 8 - 16 minutes)

தொடுவானம் தொடும் தூரம் - கீர்த்தனா

வாழ்க்கை ஒரு இலட்சியப்பாதை சிலருக்கு.  அது விதியின் விளையாட்டு சிலருக்கு. விதியின் விளையாட்டால் இலட்சியப்பாதையாக மாறுமா?

இங்கு நான் சொல்லி இருக்கும் அனைத்தும் கற்பனையே (ஆரம்பத்துலையே சொல்லிட்டா எனக்கு பிரச்சனை இல்லை பாருங்க).

இப்போ நீங்க இருக்கும் இடம் உலகப் புகழ் பெற்ற ஆராய்ச்சி கூடம்.யாரோ அங்க ரொம்ப சின்சியரா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்களே அவங்க யாருன்னு உங்களுக்கு தெரியுதா?அவங்க தான் மீனா. மருந்தியல் துறையில் ஆராய்ச்சி மாணவி. ஆனால் 21 வயதிலேயே பெயர் பெற்ற மிகப் பெரிய  நிறுவனங்கள் இவர் நம் கம்பெனிக்கு ஆராய்ச்சிக்கு வர மாட்டாரா என ஏங்கி தவிக்கும் அளவுக்கு மூளை உள்ளவர்கள் (உனக்கு பெரிய இன்ட்ரோ கொடுத்துட்டேன் மீனு என்னை நல்லா கவனிக்கணும்).

thoduvanamயாரோ ரெண்டு பேர் பேசிட்டு இருக்காங்க வாங்க என்னனு கேட்போம்.

கீர்த்தி:ஏன் மீன்ஸ் இப்படி பண்ற?

மீனா:நான் என்ன பண்றேன்.

கீர்த்தி: நீ பண்றது தப்பு.

மீனா:என்ன தப்பு?

கீர்த்தி:நம்மை நம்பி நம்ம கம்பெனி எவ்ளோ இன்வெஸ்ட் பண்றாங்க.அதுக்கு உபயோகமா பண்ணாம இப்படி தப்பு பண்ணலாமா?

மீனா:"தப்பெல்லாம் தப்பே இல்லை,சரியெல்லாம் சரியே இல்லை.

தப்பை நீ சரியாய் செய்தால், தப்பு இல்லை " எனப் பாட ஆரம்பித்து விட்டாள்.

இதைக் கேட்ட உடன் கீர்த்தி கடுப்பாகி விட்டாள்.

(எனக்கு மண்டைய பிச்சுக்குது.யாராவது ஒருத்தர் அந்த தப்பு என்னனு சொல்லுங்கப்பா)

கீர்த்தி:நீ பண்ற காரியத்தோட வீரியம் உனக்கு புரியுதா? நீ இப்படி சும்மா இருக்கனால கம்பெனிக்கு எவ்ளோ லாஸ் தெரியுமா?

(என்னது சும்மா இருக்கிறது தப்பா!!! மீனா நம்மினமடா)

மீனா:அதுக்குத்தான் நீங்க எல்லாரும் இருக்கீங்கள நீங்க எய்ட்ஸை தடுக்க கண்டுபிடிங்க.நான் ஜாலியா சில்சீ படிக்கிறேன்.

(அப்படி சொல்லு மீன்ஸ். இந்த கீர்த்தி கூட சேராத கெட்ட பழக்கத்தையெல்லாம் உனக்கு கத்துக் கொடுத்திடுவா)

கீரத்தி:ஹேய் இந்த மருந்தை கண்டுபிடிக்க நாம பண்ண முயற்சில 50% பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கு. நீ ஹெல்ப் பண்ணா இந்த ஆராய்ச்சிய இன்னும் சீக்கிரம் முடிக்க வாய்ப்பு இருக்கு. மத்த கம்பெனிஸை விட சீக்கிரம் முடிச்சா நம்க்கு தானே நல்ல பெயர் கிடைக்கும்.

மீனா: நான் எவ்வளவோ கண்டுபிடிச்சேன் இந்த நிறுவனம் எனக்கு என்ன பண்ணுச்சு? போடி.. இதாவது என் ஆசைக்கு பண்றேன்.

என அலட்டிக் கொள்ளாமல் சொல்பவளை, என்ன செய்வதென புரியாமல் பார்த்தாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, மீனா வீட்டிற்க்கு செல்ல தயாராகி வந்தாள். தினமும் கீர்த்தியும் மீனுவும் ஒன்றாகக் கிளம்புவதுதான் வழக்கம். வழக்கத்திற்க்கு மாறாக மீனா மேல் கோவம் கொண்ட காரணத்தால் மீனாவுடன் கீர்த்தி செல்லவில்லை.

மீனாவின் காரில் பழுது ஏற்ப்பட்டதால், இரயிலில் வீடு செல்ல முடிவெடுத்து இரயில் நிலையத்தை அடைந்தாள்.

கடிகாரம் இரவு 10.30 எனக் காட்டியது. அடிக்கடி இரவு நேரங்களில் பயணம் செய்பவள் என்பதால், பயமில்லாமல் நின்ற இரயிலில் ஏறினாள்.

அந்த பெட்டியில் அவளும், 17 வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் மட்டுமே இருந்தனர். மீனா ஹெட்செட் போட்டு பாட்டுக் கேட்டுக்கொண்டே, பயணம் செய்தாள். சிறிது நேரத்தில் அந்த பையன் ஏதோ மயக்கநிலைக்கு செல்வதைப் போல் அறிந்து அருகில் ஓடினாள்.

அதற்க்குள் அடுத்த நிறுத்தம் வந்திருக்கவே, அருகில் உள்ள முருத்துவமனையில் அனுமதித்தாள். வெளியில் அமர்ந்து மனதுக்குள் அவன் நலம் பெற பிரார்த்தித்தாள்.

வெளியில் வந்த மருத்துவர் சொன்ன செய்தியில் இவள் அதிர்ச்சியடைந்தாள்.

மீனா அதிர்ச்சி அளவு அடையும் மருத்துவருடன் நடந்த உரையாடல் இதுதான்.

மீனா: டாக்டர் அந்த பையனுக்கு என்னாச்சு?

மருத்துவர்: நீங்க அவனுக்கு சொந்தமா?

மீனா: இல்லை டாக்டர் நான்தான் அவனை இங்க சேர்த்தது.

மருத்துவர்: அவனுக்கு உறவில்லாதவரிடம் அவனைப் பற்றிக் கூற இயலாது.

மீனா: பிளீஸ் டாக்டர் சொல்லுங்க. நான் இந்த கம்பெனிலதான் சையின்டிஸ்ட்டாயிருக்கேன். இதோ என் ஐடி கார்டு.

மருத்துவர் அவளின் பரிதவிப்பைப் பார்த்து விட்டு, "அவனுக்கு ‘எய்ட்ஸ்’. அவனுடைய நேரத்தை எண்ணிக்கொண்டிருக்கிறான். சில மணி நேரங்களில் இறக்கப் போகிறான்" என்றார்.

மீனா:டாக்டர் அந்த பையோனோட நான் பேசலாமா?

மருத்துவர்:நிச்சயமாக.நீங்க போய் பேசுங்க.

மீனா:தேங்க் யு டாக்டர்.

மீனா:தம்பி உனக்கு ஏன் இப்படி ஆச்சு?

பையன்:அக்கா 6 மந்த்ஸ் முன்னாடி எனக்கு ஆபரேசன் பண்ணாங்க.அப்போ தெரியாம எய்ட்ஸ் இருக்க ரத்தத்தை ஏத்திட்டாங்க.அதனால எனக்கு இப்படி ஆகிடுச்சு.

எனத் திக்கி திணறியபடி பேசினான்.

அவனிடம் ஏதும் சொல்லாமல் அழுதுகொண்டே வெளியே ஓடி வந்தாள்.

ஒரு இடத்தில் தனியே அமர்ந்து யோசிக்கும் போது தான் அவளின் தவறே அவளுக்கு புரிந்தது.இது நாள் வரை அவள் எய்ட்ஸால்  பாதிக்கப்படவர்களின் பாதிப்புகளை படித்திருக்கிறாளே தவிர, நேரில் கண்டதில்லை.நேரில் பார்த்த உடன்  அவளுக்குள் ஏற்ப்பட்ட தாக்கம் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவருக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என தூண்டியது.அந்த தூண்டல் அவளைக் கொண்டு நிறுத்திய இடம் அவள் பணிபுரியும் ஆராய்ச்சி கூடம்.

எய்ட்ஸ்க்கான மருந்து கண்டுபிடிப்பதில் அவளுடைய சக ஊழியர்கள் மேற்கொண்ட முயற்ச்சியை(past history) கணினியில் படித்தாள்.

அடுத்த நாள் காலை 10 மணி ஆகியது கூட தெரியாமல் அந்த ஆராய்ச்சியின் குறிப்பை படித்துக் கொண்டிருந்தாள். மற்றவர்கள் அவளை வித்தியாசமாக நோக்கியது கூட தெரியாமல் அவள் மூழ்கி இருந்தாள்.கீர்த்தியும் வந்து சேர்ந்தாள்.

கீர்த்தி:என்னடி பண்ணிட்ருக்க?

மீனா:எய்ட்ஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க நாம பண்ண ஆராயிச்சிய படிச்சுட்டுருக்கேன்.

கீர்த்தி:என்னது! என் காது வேலை செய்து தானே??!!

மீனா:அதெல்லாம் கரெக்டா தான் வேலை செய்யுது.இங்க வா.வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு.

கீர்த்தி:என்னடி ஆச்சு?எப்போல இருந்து இங்க இருக்க?நைட் வீட்டுக்கு கூட வரலைன்னு அம்மா சொன்னங்க.சாப்பிட்டியா ?

மீனா:அதுக்கெல்லாம் நேரம் இல்லை.டைம் வேஸ்ட் பண்ணாத.வா வேலை செய்யலாம்.எனக்கு டவுட்ஸ் இருக்கு.வந்து கிளியர் பண்ணு.

கீர்த்தி:பர்ஸ்ட் சாப்பாடு.அப்புறம் வேலை

எனக் கூறி அவளை உணவு உன்ன அழைத்து சென்றாள்.

மீனா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவளின் மனதில் ஓடியது இது தான்.

"இந்த நட்பு தான் எவ்வளவு உயர்வானது.தன்னலத்தை கருதாமல், நட்பு கொண்டவரின் உடல் நலத்தையும், மன நலத்தையும் கருதுவது"

அவள் உணவு உண்டு முடித்த பிறகு அவர்கள் வேலையை தொடர்ந்தனர்.

மீனா கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொன்னாள் கீர்த்தி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.