(Reading time: 8 - 15 minutes)

மனதை தொட்ட ராகங்கள் - 07 - வத்சலா

வானுயர்ந்த சோலையிலே

கொடைக்கானல் மலையின், இதமான பின்னணியில் நின்றிருந்தன அந்த இரண்டு பங்களாக்கள்  அடுத்தடுத்த பங்களாக்கள். இளங்காலை பொழுது சில்லென்ற குளிர் காற்றுடன் அழகாய் விடிந்திருந்தது.

அதில் ஒரு பங்களாவின் தோட்டத்தில் இருந்தான் சிவா. அவனது பார்வையும், உள்ளமும் அடுத்த பங்களாவின் மீதே இருந்தது.

அது அவள் வசித்த பங்களா. அவளுடைய வீடு. அவனுக்குள்ளே அவள் ஞாபகம்.!!!! இல்லை இல்லை அவன் ஞாபகமே அவள் தான்!!!!!

Vanuyarntha solaiyile

அவள் ரஞ்சனி. சிவரஞ்சனி. நான் சிவாவுக்காகத்தான் பிறந்திருக்கேன் முதிலிலேயே எங்க வீட்டிலே எனக்கு சிவரஞ்சனின்னு பேர் வெச்சிட்டாங்க பார்த்தியா ??? அடிக்கடி சொல்வாள் அவள்.

பல வருட காதல் இருவருக்கும். அடுத்தடுத்த வீடுகள். இரண்டு வீடுகளையும் பிரிக்கும் சின்னதான காம்பவுண்ட் சுவர்.

ஒரே பள்ளி, ஒரே கல்லூரியில் படித்தார்கள் இருவரும்.

ஆனால் அது ஏனோ இரண்டு குடும்பத்துக்கும் நடுவே ஆரம்பத்திலிருந்தே மன வேற்றுமைகள் அதிகம். இரண்டு தந்தையருக்கும் நடுவே தொழில் போட்டி. இருவரும் சம்மந்தி ஆவது இந்த ஜென்மத்தில் நடக்காது என்று இருவருக்குமே தெரியும்.

தெரிந்துமே வேர்விட்ட அவர்கள் காதல், ஜன்னல் வழி பார்வைகளில் துளிர்தெழுந்து மரமானது.

ஆனால் இப்போது??? எங்கே போனாள் அவள்.???? என்னை விட்டு போக மாட்டேன் என்றாளே போய் விட்டாளா???

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்

நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு பாடுகின்றேன்....

எங்கேயோ சிவரஞ்சனி ராகத்தில் அந்த பாடல் ஒலித்துக்கொண்டிருக்க அந்த பாடல் வந்த திசையை நோக்கி செல்ல துவங்கினான் சிவா.

சிவரஞ்சனி ராகம். என்னவளின் பெயர்க்கொண்ட ராகம். அங்கே ஒலிக்கிறது அந்த பாடல்????

யார் வீட்டு டிவியிலோ ஒலித்துக்கொண்டிருந்தது அந்த பாடல். அந்த வீட்டினுள் செல்ல வேண்டும் போல் இருந்தது!!!!

இயலாதே!!!  அது எப்படி திடீரென்று அவர்கள் வீட்டுக்குள் செல்ல முடியும்? அவர்கள் வீட்டு வாசலிலேயே நின்றிருந்தான் அவன். எனக்காகவே பாடப்படுகிறதா இந்த பாடல்???

இதோ நடந்துக்கொண்டிருக்கிறேன். அவள் நடந்த பாதையிலெல்லாம் கிடந்து அலைந்துக்கொண்டிருக்கிறேன்!!!!

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்...

பாழான நாளிதென்று  என்று பார்த்தவர்கள் கூறவில்லை......

தேனாக பேசியதும் சிரித்து விளையாடியதும்

வீணாக போகுமென்று யரேனும் நினைக்கவில்லை

சேரவே முடியாது என்ற எண்ணத்துடனே வளர்ந்து விரிந்தது அந்த காதல் மரம்.

திடீரென்று பத்து நாட்களுக்கு  முன்னால் அவளுடைய அப்பாவுக்கு தெரிய வந்தது அவர்கள் காதல்.

எதிர்பார்த்தபடி பூகம்பம் எதுவும் வெடிக்கவில்லை. தனது உயிரான மகளை அழவைக்கும் எண்ணமில்லை அவருக்கு. இந்த உலகத்தில் எல்லாவற்றையும் விட அவரது மகளே, அவள் மகிழ்ச்சியே முக்கியம் அவருக்கு. தனது கோபம், தன்மானம் எல்லாவற்றையும்  விடுத்து அவன் வீட்டிக்கு வந்து பேசினார். சட்டென இறங்கி வந்துவிட்டிருந்தார் அவனது தந்தை.

மகிழ்ச்சி, மகிழ்ச்சி  இரண்டு வீட்டிலும் மகிழ்ச்சி வெள்ளம்.!!!!

அப்போது திடீரென்று எங்கிருந்து வந்தது அந்த விபத்து.???? அந்த படகு விபத்து.!!!! எப்படி நடந்தது அது??? எல்லாம் நன்றகாதானே போய்க்கொண்டிருந்தது??? போய் விட்டாளா??? என்னை விட்டு வெகு தூரம் போய் விட்டாளா?

ஏன் வந்தது அந்த நாள்? என் வாழ்கையில் ஏன் வந்தது அந்த நாள். என்னை விட்டு போய்விட்டாளா அவள்????

போகவில்லை அவள்.!!! அவனை விட்டு எங்கேயும் போகவில்லை அவள்.!!! அது எப்படி போக முடியும் அவனை விட்டு.??? அவள் அவனை தேடி திரும்ப வந்துவிட்டாள் என்பதை அறியவில்லை அவன் பாவம்!

தன் வீட்டு  தோட்டத்தில் ஒரு  ஓரத்தில் தான் ஒளிந்திருந்தாள் அவள். அவன்தான் அவளை கவனிக்கவில்லை.

இப்போது நினைத்தாலும் ஓடிச்சென்று அவன் முன்னால் நின்று விடலாம். ஏனோ அப்படி செய்ய தோன்றவில்லை அவளுக்கு.

நான் அவனை விட்டு போய்விட்டால் என்னதான் செய்வான் என்னவன்??? பார்க்க வேண்டும். இன்று ஒரு நாள் பகல் மட்டும் ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் இரவான பின் அவன் முன்னால் சென்று நின்றுவிடலாம்.

அவன் தவித்துக்கிடக்கும் போது அவன் முன்னால் சென்று நின்றால் எப்படி மகிழ்ந்து போவான் அவன். அந்த மகிழ்ச்சியை பார்க்க வேண்டும். அந்த மகிழ்ச்சியில் நானும்  அழுது அவனுள் கரைய வேண்டும். எந்த சக்தியும் நம்மை பிரிக்க முடியாது என்று இருவரும் முழுவதுமாக உணர வேண்டும்.

யோசித்தபடியே இருந்தவளின் பார்வையில் பட்டது அந்த ரோஜாச்செடி. அந்த மஞ்சள் ரோஜாச்செடி. அவளுக்குள்ளே பரவசம் மொட்டு விட்டிருந்தது அந்த ரோஜாச்செடி.

அதே போன்றதொரு ரோஜாச்செடி அவன் வீடு தோட்டத்திலும் இருக்கிறது.. அந்த செடியை அவனிடம் கொடுத்தது அவள்தான்.

அந்த செடியை மண்ணில் நட்டு வைத்து பல மாதங்கள் ஆகின்றன. இரண்டிலும் ஒரு மொட்டு கூட துளிர்க்க வில்லை. ஏன் அப்படி புரியவேயில்லை அவளுக்கு.

இன்று மொட்டு விட்டிருகிறதே அது. ஒரு வேளை அவன் வீட்டு செடியும் மொட்டு விட்டிருக்குமோ???

ஓடி சென்று அவன் வீட்டு செடியை எட்டிபார்த்தாள் ரஞ்சனி. ஆம்! மொட்டு விட்டிருந்தது அதுவும்.!

'சிவா!!! இங்கே வந்து பார். ஓடி வந்து பார். இதோ! சொல்கிறது பார் இந்த ரோஜா செடி!!! இதோ சேர்ந்து விடுவோம்.! நாம் இருவரும் இன்றே சேர்ந்து விடுவோம்.!' கத்த வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.!! அவனை அழைத்து வந்து இதை காட்ட வேண்டும் போல் இருந்தது..

ஆனால் செய்யவில்லை.! இன்னும் சிறிது நேரம் போகட்டும்.! இரவு வரட்டும்!

மதிய நேரம்.! அவள் வீட்டு கதவு திறந்தே இருந்தது. உள்ளே நுழைந்தான் அவன். அந்த பெரிய கூடத்தை ஒட்டியே அவளது அறை.

அந்த பெரிய வீட்டில் யாருமே அவனை கவனிக்க வில்லை. அவளது அறைக்குள் நுழைந்தான் அவன். அந்த அறையின் கதவு அவனுக்கு பின்னால் சாத்திக்கொண்டது.

அந்த அறைக்குள் இருந்தவள், அவன் வருகிறான் என்று தெரிந்த மாத்திரத்தில் கட்டிலுக்கு சட்டென அடியில் புகுந்துக்கொண்டாள்.

அறையை சுற்றி சுற்றி வருகிறான் அவன். இன்னும் அறையெங்கும் அவள் வாசம் வீசுகிறதே எப்படி.??? இங்கே இருக்கிறாளா அவள்???

கட்டிலுக்கு அடியில் மட்டும் பார்க்கவில்லை அவன்.

திறந்துக்கிடக்கிறது அவளது அலமாரி. அதனுள்ளே அவள் உடைகள். இதோ அவளுக்கு அவன் பரிசளித்த பொருட்கள். அலமாரி எங்கும் அவன் பெயர். அங்கே திரும்பினாலும் சிவா, சிவா என்றே எழுதி வைத்திருக்கிறாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.