(Reading time: 5 - 10 minutes)

வேலும் மயிலும் எனதே - தமிழ் தென்றல்

மாதவன் வழக்கம் போல் கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்ததும், ’’அம்மா.. எனக்கொரு காபி’’ என்று சொல்லிவிட்டு தனதறைக்குச் சென்றான்.

சிறிது நேரம் கழித்து வந்த லட்சுமி, (மாதவனின் அம்மா) ’’மாதவா...காபியை குடிச்சிட்டு, இந்த டிவிடியை என் தோழி வனஜா வீட்டில் குடுத்திடு. நான் மார்க்கெட்டுக்குப் போயிட்டு வரேன்’’.

’’என்ன டிவிடி அது?’’ என்றான் மாதவன்.

Velum mayilum enathe’திருவிளையாடல் படம்தா மாதவா’’

’’அம்மா..இன்னும் எத்தனை காலத்துக்குதான் இந்தப் பழைய படத்தையே பார்த்திட்டு இருப்பீங்க?’’

’’ரொம்ப நல்ல படம். முடிஞ்சா நீயும் அதைப் பாரு. அதுக்கப்பறமாவது உனக்கு நல்ல புத்தி வருதான்னுப் பார்ப்போம்’’ என்று சொல்லி லட்சுமி மார்க்கெட்டுக்குச் சென்றார்.

காபியைக் குடித்துவிட்டு வெளியில்ப் போக தயாரான மாதவன், அந்த டிவிடியைக் கையில் எடுத்தான்.  திடீரென அவன் அம்மா, ’’படத்தை நீயும் முடிஞ்சாப் பாரு’’ என்று சொன்னது நினைவு வரவும், தனது மடிக்கணினியை எடுத்தான்.

’’நாம்மளையெல்லா இந்தப் படம் எப்படி மாத்திடும்!? நாங்கல்லாம் பொறக்கும்போதே ரொம்ப நல்லவங்க’’ என்றுச் சொல்லிக்கொண்டேப் படத்தை ப்ளே செய்தான்.

திருவிளையாடல் படத்தில், ஞானப்பழம் வேண்டி விநாயகன் மற்றும் முருகன் உலகைச் சுற்றி வரும் காட்சி வந்தது.  அதைப் பார்த்து விட்டு, மாதவன் சிரிக்க ஆரம்பித்தான்.

’’முருகா...என்ன கடவுள் நீ?...போயும் போயும் அந்தப் பழத்துக்காக இப்படி போட்டியில்த் தோற்றுப்போய் மலைமேல் தனியாப் போய் நின்ன.  எங்கிட்ட அந்தப் பழத்தைக் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன்.  அது பார்க்க மாம்பழம் போலதான் இருக்கு!  அப்படில்லனா எங்கிட்ட உதவிக் கேட்டிருந்தால், நானே உன்னை அந்தப் போட்டியில் ஜெயிக்க வச்சிருப்பேன்’’ என்றுச் சொல்லி மீண்டும் சிரித்தான்.

இவையணைத்தையும் மாதவனுடைய மடிக்கணினியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்து முருகனுக்கு கோபமாக வந்தது.  மாதவனோ இன்னும் நிறுத்தாமல் கண்களிலிருந்து நீர் வரச் சிரித்துக்கொண்டிருந்தான்.  பொறுமையிழந்த முருகன், மாதவன் முன்னால் தோன்றினான்.

மாதவன் அதிர்ந்துப்போய் சிரிப்பதை நிறுத்திவிட்டான்.  ’’என்ன நடக்குது இங்க’’ என்று மனதில் நினைத்துக் கொண்டு சமாளித்தவனாய்

’’வா முருகா வா...உன்னைப் பத்திதா, எனக்கு நானேப் பேசிட்டிருந்தேன்’’

முருகன் ஏதும் பேசாது அவனை முறைத்தவண்ணம் நின்றிருந்தான்.

மறுபடியும் மாதவனே தொடர்ந்தான்.

’’என்னிடத்தில் உதவிக் கேட்டு வந்தாயா முருகா?’’

’’...........’’

’’வேறேதாவது பந்தயமா? தயங்காம சொல்லு நான் ஹெல்ப் பண்றேன்’’

இதைக் கேட்ட முருகனுக்கோ கோபம் தலைக்கேற சிவந்த முகத்தோடு

’’உனக்குதான் என் உதவித் தேவை பூமியில் வாழ’’

மாதவன் சிரித்துக்கொண்டே ’’இப்போக் கூட அந்தப் பந்தயத்தை நடத்தினால், நீ தோற்றுவிடுவாய்.’’

’’மாதவா... அதிகமா பேசுர.  உலகத்தை மும்முறை சுற்றி வருவது சுலபமல்ல.  இவ்வளவு பேசுர நீ உலகத்தை சுற்றி வர முடியுமா, சில நிமிடங்களில்?’’

’’வேண்டாம் முருகா டெக்னாலஜி ரொம்பவே வளந்திருக்கு. நீயும் நானும் “முதலில் உலகத்தைச் சுற்றி வருவது யார்?” என்று போட்டியிட்டாலும் நான்தான் ஜெயிப்பேன்’’.

’’உன்னிடத்தில் வாகனமும் இல்லை, நீ வெற்றிப்பெறவும் முடியாது.’’

’’சரி முருகா போட்டிக்கு நான் தயார். ஆனால் போட்டியென்றால் பரிசு வேண்டும்.’’

’’என்னப் பரிசுக் கோருகிறாய்?’’ ’’உன் வேலும் மயிலும் வேண்டும்’’.

’’சரி அப்படியே ஆகட்டும்.  அதேபோல் நான் வெற்றிப்பெற்றால், நீ என்னை மட்டும் வழிபட வேண்டும், இந்த பிறவி முழுவதும்’’

மாதவன் சரியென்றான். நிபந்தனைகள் குறித்து பேசினார்கள்.

தாய், தந்தையை சுற்றி வந்து உலகத்தைச் சுற்றியதாகச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையை இருவரும் ஏற்றிக் கெண்டு, போட்டி எப்போதென்று விவாதித்தனர்.

’’எங்கு, எப்போது வேண்டுமானாலும் போட்டியை வைத்துக்கலாம்’’ என்றான் முருகன்.

’’இப்போவே, இங்கேயே போட்டியை துவங்கலாம்’’ என்றான் மாதவன்.

முருகன், தன் அண்ணான விநாயகனை அழைத்து ’’அண்ணா.. நீதான் நடுவராகிருந்து எங்களில் வெற்றிப் பெற்றவரை அறிவிக்க வேண்டும்’’

விநாயகன் சரியென்றான்.  முருகன் தன் வேல் மற்றும் மயிலுடன் தயாராக நின்றிருக்க, மாதவனோ தனியாக நின்றிருந்தான்.

விநாயகன் போட்டியை துவங்கலாமெனவும், முருகன் தன் மயிலேறிப் பறந்தான்.  மாதவனோ நிதானமாக தன் மடிக்கணினியை எடுத்தான்.

இதைப் பார்த்த விநாயகன், ’’என்ன செய்கிறான் இவன்?’’ என மனதில் நினைத்தவாறு தீவிறமாய் அவனைப் பார்த்தான்.

முருகன் வேகமாக பூமியைச் சுற்றி பறந்துக்கெண்டிருக்க, மாதவன் கூகில் மேப்பைத் திறந்தான்.  ஜூம் அவுட் செய்ய அது ஒரு உலக உருண்டையானது.  நொடிப்பெழுதில் சில மௌஸ் க்ளிக்குகளின் உதவியோடு மூன்று முறை உலகைச் சுற்றி வந்தான்.

விநாயகன் இதைக் கண்டு வியந்துபோய் ’’என்ன தம்பி (முருகா) இம்முறையும் நீ தோற்றுவிட்டாயே’’ என எண்ணி வருந்தினான்.

சில நிமிடங்களுக்குப் பின் மும்முறை உலகைச் சுற்றி முடித்தான் முருகன்.  மாதவனின் வீட்டீல் நின்றிருந்த இடத்திலேயே நின்ற, அவனைக் கண்டு எளனப்புன்னகையை உதிர்த்தான்.  மாதவன், வெற்றிப்புன்னகையை பதிலாக்கினான். விநாயகனோ பரிதாபமாக நின்றிருந்தான்.

’’அண்ணா... போட்டியின் முடிவை வெளியிடுங்கள்’’ என்றான் முருகன்.

விநாயகன் சொன்னான், ’’போட்டியில் வெற்றிப்பெற்றது மாதவன்.  நிபந்தனையின்ப்படி உன்னுடைய வேலும் மயிலும், அவனுக்குச் சேர வேண்டும்.’’

’’எப்படி சாத்தியம் அண்ணா!? மாதவன் இந்த வீட்டிலிருந்துக்கூட சென்றிருக்க முடியாது, அதற்குள் நான் உலகை மும்முறை சுற்றிவந்தேன்’’ என்றான் கோபமாக.

’’அப்பவே சொன்ன, நீ தோற்றுடுவுன்னு.  நீதான் கேட்காமல் போட்டில உன் வேலையும் மயிலையும் தெலைச்சுட்டே’’ என்றான் மாதவன்.

விநாயகன் குறுக்கிட்டு நடந்தவைகளை விளக்கினான்.  முருகன் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டு, தன் வேலையும் மயிலையும் மாதவனுக்குக் கொடுத்தான்.

’’வேலும் மயிலும் எனதே’’ என்றுச் சொல்லி, மாதவன் வேலைக் கையில் சுற்றியவாறு, மயிலையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு வெற்றிக் கூத்தாடினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.