இருட்டில் வெளிச்சம் - கவிதாசன்
எத்தன வேலை நா ஒருத்தியே செய்றது.... தண்ணி எடுக்கணும், பாத்திரம் கழுவனும், வீடு வாசல சுத்தம் பண்ணனும்.., இதுவே எனக்கு பெரிய தலைவலியா போச்சு... காலைல எந்திரிச்சா தூங்கறவறைக்கும் வேல.. 8PM மணி ஆக போகுது சீக்கிரமா வேலைய முடிச்சிட்டு படுக்கணும்... அட டா...., பருப்பு இல்லையே... டேய்.., சின்னபைய வாடா இங்க...., பக்கத்துக்கு கடைல போய் பருப்பு வாங்கி வா... இந்தா காசு... டேய் தொவரம் பருப்பு டா .. ஒரு கிலோ மட்டும் வாங்கிட்டு சில்லறைய சரியா வாங்கிட்டு வா... நாளைக்கு Bus ticket க்கு அதுதான் இருக்கு....
சரி மா...
இது வேற பெரிய தொல்லையா போச்சு.., ஒரு மணி நேரத்துக்கு 10 முற current அ cut பண்றாங்க... எந்த ஆச்சி வந்தாலும்..., current வரதுல...
Hey.., நீ ஏண்டி உள்ளே இருக்க வெளிய வா... பொட்ட புள்ளன்னு ஒன்னு இருந்தா அம்மாளுக்கு ஒத்தாசையா இருக்கும்னு சொல்லுவாங்க... எனக்கு னு பொறந்தது என்கிட்ட தான் வேல வாங்குது..... எல்லாம் என் தல எழுத்து... ஏண்டி, இந்த பாத்திரமாவது கலுவேண்டி...
அம்மா.., எந்த வேலையும் நா செய்றேன் ஆனா பாத்திரம் கழுவமாட்டேன்.... நான் தான் செய்னுமா என்ன??? உன் மகன செய்ய சொல்லு....
இது பொண்ணுங்க செய்ற வேல பாப்பா... பசங்க செய்ய கூடாது...
அப்படி யாரு மா சொன்னது....??
அப்படி தான் காலகாலமா நடக்குது.....
அம்மா..., வெளில நல்ல காத்து வருது....
இங்க எனக்கு வெறுப்பு தான் வருது... போனவன் இன்னும் வரல.... என்ன பன்றான்???
(வழக்கம் போல்) ஆஹா.... ஆஹா..... அம்மா..., சீக்கிரம் ஓடி வா... மா...
என்ன பாப்பா .....???
எவ்ளோ அழகா இருக்கு பாரேன்.... இந்த வானம்... நிலவு, நட்சத்திரங்கள், சின்ன சின்ன மேக கூட்டம் .... அந்த நிலவ பாக்கும் போதெல்லாம் எனக்குள்ள நா அத ஓடி போய் தொட்டுட்டு வரணும் போல இருக்கு மா.... அதன் வெளிச்சம் இந்த பூமிக்கு Current கொடுத்தது போல இருக்குல..!!!! அது நம்மல விட்டு தூரத்துல இருந்தாலும் வெளிச்சத்தால் தொடுகிறது...!!!! என் மனசு முழுசா அந்த நிலவு பதிந்துள்ளது....! ரொம்ப ஆச்சரியமா இருக்கு..!!!! எப்படி இது உருவாயிருக்கும்...? எப்படி அதுக்கு இவ்வளவு வெளிச்சம் கிடைகிறது நமக்கு கொடுக்க...!!! அம்மா..., எனக்கு அதிசயம் என்று இந்த உலகில் உள்ளது என்றால் அது இந்த இயற்கை தான்....!!! வேறெதுவும் எனக்கு இல்லை.... Book ல நா பாக்கும் போதெல்லாம் அத கைல பிடிச்சுப்பேன்.... ஆனா, நிஜத்துல அது என்ன விட்டு தோலைவா இருக்கு... இருந்தாலும்..., அதன் அழகை காண என் கண்கள் உள்ளது, அதன் சிறப்பை சொல்ல என் எழுத்து உள்ளது....அதை நான் கற்றுக்கொள்ள புத்தகம் உள்ளது... அதில் என் காலைவைக்க விஞ்ஞானம் உள்ளது.....
நட்சத்திரம்..... எனக்கு சின்ன வயசு Rhymes தான் மனசுல ஓடிட்டு இருக்கு... Twinkle Twinkle Little Stars.... நம்ம கண்ண மூடி மூடி திறகுற மாறி மின்னுது இல்ல....!!! இந்த பூமிய முழுசா போர்வை போட்டு மூடி அதுக்குள்ள சின்ன சின்ன Light வெளிச்சம் இருக்கிறமாறி.... கண்களை பறிக்கும் அழகு...!!! கண் காண விரும்பும் மீன்கள்..... விண்மீன்கள்......!!!! இந்த பூலோகத்தில 8 கோள்கள் இருக்கு... அதுல நா 3 பாத்துட்டேன்....:-).. நா இருக்கும் இந்த பூமி(Earth), விடி வெள்ளி னு சொல்றோம் ல (Venus), அப்புறம் பெரிய கோள் (வியாழன்) Jupiter. அம்மா, ஒரு முறை நா சும்மா இப்படி தான் வெளியே வந்து நிண்டுட்டு இருந்தேன்..., அப்போ திடிர்னு ஒரு வெளிச்சம் என்னை நோக்கி வந்தது... அதுதான் விண்கற்கள் பொழிவு (Meteor Shower). பார்பதற்கே என் கண்கள் மகிழ்ந்து...., நீர் வீழ்ச்சி கொண்டது....!!!! நம்ம நாட்டுல எல்லா வீட்டுக்கும் ஒவ்வொரு நட்சத்திரம் கொடுத்தா நல்லா இருக்கும் ல....??
Hey.., என்ன பாப்பா... இவ்வளோ அருமையா சொல்ற.... என் பொண்ணு எவ்ளோ அழகா பேசுறா....:-):-).. என் பொண்ணு என்ன விட புத்திசாலிய இருக்கு...
அம்மா, இந்த பருப்பு...
அம்மா, நா நிலா, நட்சத்திரம் பத்தி ஒரு கவிதை சொல்லட்டுமா....??
சொல்லு பாப்பா ... :-)
நிலவு நட்சத்திரம்
சின்ன சின்ன விண்மீனே.. சிங்கார வெண் நிலவே..!!!
எண்ணி எண்ணி பார்கிறேன்.. எண்ணியே வாழ்கிறேன்...
வானெல்லாம் உன் கோலம்.. வரைந்தது யார் சொல்வாயோ??
நேருக்கமாக உள்ளீlரே... இங்கே கொஞ்சம் வாராயோ!!!!
வந்து செல்ல நினைக்காதே... வந்தால் என்னை நீ நீங்காதே...!!
நீல நிற மேனியில்.. வெண்மை யார் தீட்டினார்???
கறையாக இல்லாமல்.. ஓவியமாய் உள்ளீர்கள்..!!
ஓவியத்தின் நடுவிலே.., நெற்றி பொட்டை கண்டேனே...!!!
வெண்மை போட்டு நீதானோ.. வெண்ணிலவே வாராயோ...!!!
சின்ன சின்ன விண்மீனே.. சிங்கார வண்ண நிலவே..!!!
எட்டும் கனியாய் இருந்தால் நான் எட்டி பறித்து விடுவேன் என்று எட்டா கனியாய் உள்ளாயோ?????
ஏட்டு கனி நீ இல்லை. என் கைக்கு எட்டும் தொலைவில் தான் உள்ளாய்.....!!!!!
எவ்வளவு அழகா சொன்ன பாப்பா... என் தங்கம்,,,, என் பொண்ணு என்னம்மா பேசுது..... நீ உட்காரு டா தங்கம் நா சமைக்கிறேன்..... :-) :-)
கனவுகள் எல்லோருக்கும் உண்டு.. சிலர் உறங்கும் போது காண்கிறார்கள்... சிலர் விளிதிருக்கையில் காண்கிறார்கள்.. அதை எண்ணி எண்ணி சிந்தனையில் வாழ்கிறார்கள். என் கனவாய் தான் இன்று வரை நீ இருக்கிறாய்... உன்னை பெரிதாக நான் எதுவும் கேட்கமாட்டேன்... கொடுபதற்க்கு உன்னிடம் உள்ளது ஆனால் நீ மறுத்து விட்டாய்.... நீ துணியவில்லை.. நான் துணிந்துவிட்டேன்.... உன்னை தீண்டும் நாட்களை நோக்கி ..... :-) :-).. உறக்கம் கொள்கிறேன் விழிப்பதற்கு....:-).
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.