பெண் பார்க்கும் படலம் - அமுதா அகிலா
அவனும் அவன் அம்மாவும் மட்டுமே மாப்பிள்ளை வீட்டு சைடில் இருந்து வந்து இருந்தார்கள்.
அவர்களுடன் பெண்ணை பற்றி கூறிய தூரத்து சொந்தமான மாமியும் வந்தார்.
அவர்கள் வந்தவுடன் பொண்ணு வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்து வணங்கினர்.
அவன் கண்கள் பொண்ணை மட்டுமே தேடின. சரி போய் உக்காந்தா தான் பொண்ண கண்ணுல காட்டுவாங்க என்று நினைத்து கொண்டே உள்ளே சென்று அவர்கள் காட்டிய சாரில் அமர்ந்து கொண்டான்.
அவனின் அம்மாவுக்கு ஒரு காது சரியாக கேட்காது. தன் தங்கைக்கும் இப்பொழுதுதான் குழந்தை பிறந்ததால் அவளும் உடன் வர வில்லை.
சரி நம்மளே பார்த்து ஒரு முடிவுக்கு வருவோம். பிடிச்சிருந்தா போட்டோ காட்டிக்கலாம் என்ற எண்ணத்துடன் அமர்ந்தவன் பார்வையை சுழல விட்டான்.
அந்த வீடு பெண் பார்க்க வருவதற்கான எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் இருந்தது.
பொண்ண வர சொல்லுங்க- மாமி
நன்றியுடன் அவர்கள் முகத்தை பார்த்தவன் அருகில் இருந்த அறைவாயிலை பார்த்தான்.
பட்டு புடவையில் ஒரு பொண்ணை எதிர் பார்த்தவன் சுடிதாரில் வந்த மாலதியை கண்டதும் பொண்ணு வேற போல பின்னாடி வருமா இருக்கும்னு நினைத்து கொண்டான்.
பின்னாடி அவளை விட குட்டியாக இன்னொரு பொண்ணை கண்டவன் குழம்பி பின் ஒரு முடிவுக்கு வந்தான்
இது மாடர்ன் உலகம் இன்னமும் பொண்ணு சாரீல வராது.வந்தவள் மாப்பிள்ளை வீட்டு சார்பாக வந்த அனைவருக்கும் காபி குடுத்தாள்.
கூட வந்த குட்டி பொண்ணு சோபாவில் அமர்ந்து கொண்டு போய் எனக்கும் காபி எடுத்து வா என்று அமர்ந்து கொண்டாள்.(குட்டி பொண்ணுனதும் LKG, UKG னு நினைக்காதீங்க அந்த பொண்ணு இன்ஜினியரிங் முடிச்சிட்டு வந்துருக்கா. பாக்க தான் குட்டி).
மைதிலி இன்ஜினியரிங் முடிச்சிட்டு சாப்ட்வேர் கம்பெனில work பண்றா.
மனோஜ் ஒரு பெரிய கம்பெனி ரன் பண்ணிட்டு இருக்க இளம் தொழிலதிபன்.
அம்மாக்கு உடம்பு முடியாமல் போகவே இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு ஒப்பு கொண்டு வந்திருக்கிறான்.
மாமி சொன்ன வரைக்கும் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.கிராமத்துல வளர்ந்த பொண்ணு வேற. நல்ல அடக்கம் ஒடுக்கமான பொண்ணா இருக்கும்.அப்போதான் நம்ம அம்மாவை கவனிச்சுக்கும் நமக்கும் எந்த தொல்லையும் இருக்காது.
அவனின் கற்பனைகள் இப்படி இருக்க வந்தவளோ ஒரு வணக்கம் கூட சொல்லவில்லை.
எல்லாவற்றையும் பார்த்தவன் திகைப்பில் இருந்து மீளாமல் அமர்ந்து இருந்தான்.
அவர்கள் குடுத்ததை எல்லாம் இயந்திர தனமாய் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.அந்த குட்டி பொண்ணு அவனிடம் வந்து எங்க அக்கா உங்ககிட்ட பேசனுமாம் என்றாள்.
உன் பேர் என்ன நீ என்ன பண்ணிட்டு இருக்க (இதெல்லாம் மனோஜ் கேட்டான்னு தான நினைக்கிறீங்க கேட்டது நம்ம குட்டி வாலு)
ஷாக்கில் இருந்து ஒரு வழியாக வெளியே வந்தவன் சிரித்து கொண்டே இவ்ளோ குட்டியா இருக்கவங்களுக்குலாம் நாங்க பதில் சொல்றது இல்ல என்றான்.
அவளோ நீங்க என்ன சொல்றது எனக்கே தெரியும் உங்க பேரு மனோஜ்.லக்ஷ்மி industries வச்சு நடத்திட்டு இருக்கீங்க.XYZ collegla இன்ஜினியரிங் முடிச்சிருகீங்க.
அதான் என்னை பத்தி உனக்கே தெரியுதே. அப்புறம் எதுக்கு என்கிட்ட கேக்குற.எங்களுக்கு தெரிஞ்ச details கரெக்டானு செக் பணிக்கலாம்னு கேட்டன்.ஆனா நீங்க என்னை insult பண்ணிடீங்க என்று சோகமாய் மூஞ்சிய வச்சுகிட்டு சொல்ல அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
இவ்ளோ பேசுறியே வாலு உன் பேர் என்ன?
என்னை பத்தி யாருமே சொல்லலையா very bad .நான் தான் நீங்க பாக்க வந்துருக்க பொண்ணோட தங்கச்சி பேரு ருவந்திகா.
நேம் சூப்பரா இருக்கு.நீயும் இன்ஜினியரிங் முடிச்சிருக்க தான jobku try பண்றியா.
அதெல்லாம் நா campusla select ஆகி இருக்கேன்.
சரி உன் அக்காவ போய் பாப்போமா இல்ல இன்னும் நீ கதை அடிச்சிட்டே தான் இருக்க போறியா.
ஹலோ மாம்ஸ் உங்க ஆள பாக்க போணுமா?ரைட்டு வாங்க போலாம். ஆனா அதுக்காக என் காலை வார கூடாது.
மைதிலியுடன் என் மாமியாரும் நின்று கொண்டு இருந்தார்.(என்ன இது அவள அவ்ளோ கொறை சொல்லிட்டு என் மாமியார்னு நினைக்கிறனே !!!)
செதுக்கி வைத்தசிலை போல் பொண்ணுக்கு வேண்டிய அத்தனை அம்சங்களுடன் அவள் இருந்தாள்.பொறுப்புணர்ச்சி கண்களில் தெரிந்தது.
அவள் கேட்ட ஒரே கேள்வி நீங்க குடிப்பீங்களா என்பது மட்டும் தான்.மாட்டேன்ஆனா நீங்க ஏன் கேக்குறீங்க னு தெரிஞ்சுக்கலாமா?
என் அப்பா இறந்ததுக்கு காரணமே இந்த குடி தான்.உலகத்துல இருக்க நிறைய பொண்ணுங்க விதவை ஆகுறதுக்கு காரணம் அது தான்.
நீங்க குடிக்கறத தவிர மத்த எதையும் என்னால அட்ஜஸ் பண்ணிக்க முடியும்.
குடிக்க மாட்டன் ஆனா தம் அடிப்பேன் பரவால்லையா?
அவள் முழித்த முழியை கண்டு சிரிப்பை அடக்க அவன் பெரும் பாடு பட வேண்டி இருந்தது.
அதெலாம் நிறுத்த வைக்க என்னால முடியும்.கல்யாணத்துக்கு அப்புறம் பாருங்க என்ன பண்றேன்னு.
அவனின் மாமியார் என்ன மாப்பிளை பொண்ணு புடிச்சிருக்கா?
அத்தை நான் ரொம்ப open type .வந்ததும் பொண்ணு traditionalla இல்லையேனு நினைச்சன்.அப்புறம் என் மச்சினிச்சி பேசுன பேச்சுல எனக்கு மயக்கம் வராத கொறை தான்.
அப்படியே போய்டலாம் உங்க பெரிய பொண்ணு என்ன குண்டை தூக்கி போடுமோனு பாத்தா அவ ரொம்ப தெளிவா பேசுறா. நான் எதிர் பார்த்த அத்தனை குணமும் அவளுக்கு இருக்குனு நம்புறேன்.
உங்க சின்ன பொண்ணுக்கு வால் மட்டும் தான் இல்ல.
உடனே அவர் பதறி போய் கடை குட்டினு கொஞ்சம் செல்லம் குடுத்து வளர்த்துட்டோம் மாப்பிள்ளை அதுக்காக தப்பா எடுத்துகாதீங்க.
இருங்க நீங்க ஏன் இவ்ளோ பதட்ட படறீங்க. அப்படி expect பண்ணி வந்ததால கொஞ்சம் பயந்துட்டன் அவ்ளோ தான் .
எனக்கு உங்க ரெண்டு பொன்னையும் ரொம்ப புடிச்சிருக்கு என்றதும் மூவரும் அவனை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சில் பார்த்தனர்.
ஒரு மந்தகாச புன்னகையுடன் உங்க பெரிய பொண்ண பொண்டாட்டியா புடிச்சிருக்கு.உங்க சின்ன பொண்ண என் முதல் மகளா புடிச்சிருக்கு.இன்ஜினியரிங் முடிச்சிருந்தாலும் கொழந்தைதனம் மாறாம அப்படியே இருக்கா.
இவனை விட வேறு எந்த மருமகன் எனக்கு கிடைப்பான் என்ற பூரிப்பில் நின்றது அந்த தாயுள்ளம்.
உங்க அம்மா தங்கசிக்குலாம் பொண்ண புடிக்கனுமே?
அம்மாக்கு பொண்ண பாத்ததும் புடிச்சிருச்சு தங்கச்சிகும் ஓகே தான்.
அவங்க தான் இன்னும் எங்க அக்காவ பார்க்கவே இல்லையே அப்புறம் எப்படி புடிச்சிருக்கு?
நா வந்த உடனே பொண்ண whatsappla pic எடுத்து அனுப்பிட்டனே.
சரியான fraud மாமா நீங்க என்றவளிடம் உன்னை விட கம்மி தான் மா என்று கிண்டலடித்தான்.
இவர்களின் பேச்சை பார்த்து கொண்டிருந்த நம் ஹீரோவின் அம்மா தானாக சிரித்தார்.
காது கேட்காதவர் என்றாலும் அவர்களின் உற்சாகம் அவரையும் தொற்றி கொண்டது.
அம்மாவை பார்த்த மகனோ இந்த குடும்பத்துல இருக்கவங்கலால அம்மா ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிக்கிறாங்க.
நம்ம இன்னும் ஓல்ட் பேஷன்லயே இருக்கோம்.காலத்துக்கு ஏத்த மாதிரி நம்மள மாத்திக்கணும்.
கடைசியாக இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
இன்னும் ஒரு மாதமா என்று ஏக்கத்துடனே கிளம்பினான் மனோஜ்.
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.