(Reading time: 6 - 11 minutes)

ஊடலுக்கு பின் கூடல் தானே - சந்தியா

ணமகன் மணமகள் கழுத்தில் மங்கலநானை பூட்டினான்.

சுற்றியிருந்த உறவினர்களும் நண்பர்களும் அட்சதை தூவி மனமுழுக்க உள்ள மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினார்கள்.

தன் மனைவியின் கைவிரல் கோர்த்து அக்கினி குண்டத்தை வளம் வந்து  அம்மி மிதித்து அருந்ததி பார்த்து  அவள் பூ பாதங்களில் மெட்டியை அணிவித்தான்.

Oodalukku pin koodal thaaneசாங்கிய சம்பிரதாயங்கள் முடிய புதுமண தம்பதியரையை வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.

தோழிகளின் கிண்டல் கேலியில்  அவள்முகம் சிவப்பதை ரசனையோடு பார்த்திருந்தவனின் முதுகில் ஒரு அடி வர திகைப்புடன் திரும்பி பார்த்தான் . அவன் நண்பன் வேலன் நின்றிருந்தான்.

"டேய் கண்ணா என்ன அங்கே பார்வை ?? "என்று குறும்புடன் கேட்டான்.

அது....வந்து "என்று அசடுவழிந்தான்.

"ரொம்ப வழியுதுடா தொடச்சிக்கடா" என்றான் வேலன் .

"நீ மட்டும் இவ்வளவு நேரம் அந்த தூணருகே எதையோ பார்த்திட்டு  இருந்தப்  போல இருக்கு" என்று அவனை எதிர் கேள்வி கேட்டான் கண்ணன்.

"அது ஒன்னுமில்லடா அங்க தூசியா இருந்துச்சா  அதான் கயல்கிட்ட சுத்தம் செய்ய சொன்னேன்டா "மனதில் நம்ம வாயாலே நமக்கே ஆப்பு வெச்சிக்கிட்டோமே என்று புலம்பினான்.

"அப்படியா காலையில தான் நீயே அங்க போய் சுத்தம் செய்றனு ஒரு மணி நேரமா சொல்லிகிட்டு இருந்த" என்று குறும்பாக கண்ணன் கேட்டான்

ஹி......ஹி......ஹி என்று  வேலன்  அசடுவழிந்தான்.

"போதும் இப்போ உனக்கு வழியுது துடைச்சிக்கோடா" என்று  கண்ணன் வாரினான்.

"சரி மாப்புளே சீக்கிரம் போய்  ரெடியாகு இன்னும்    கொஞ்சம் சம்பரதாயம் இருக்காம் . அப்புறம்  சொந்தகாரர்கள் எல்லாரும் உன்னை பார்க்க வராங்க" என்றான் வேலன்.

"என்னையா ?இப்போவா? போடா டையடா இருக்கு எனக்கு , அதுமட்டும் இல்லடா இன்னும் கோதையிடம் கூட பேச நேரம் கிடைக்கவில்லை" என்று தன் ஆதங்கத்தை கூறினான்.

"இன்னும் கொஞ்ச  நேரம் தான்டா அப்புறம் தினமும் நீ தானே  பேச போற, அதனால இப்போ போய் சீக்கிரம்  ரெடியாகு" என்றான் வேலன்

சம்பரதாயங்கள் முடிந்து  உறவினர்களை சந்தித்துவிட்ட பின்னர் தன் அறைக்கு சென்றான் கண்ணன்.

லர்களால் ஆலங்கரிக்கப்பட்ட கட்டில்  அதில் நேர்த்தியாக போர்வைகள் விரிக்கப்பட்டு இருந்தன.

இவைகளை பார்வை இட்டபடியே ஜன்னல் கம்பியின் வழியே பால்நிலவை பார்த்துக் கொண்டே தன் தேன்நிலாவுக்காக காத்துக் கொண்டிருந்தான்

அவள் வரும் கொலுசின் ஓசை கேட்க திரும்பி பார்த்தான் .

வெள்ளை மற்றும் பச்சை நிறம் கலந்த அழகிய சேலையையை கட்டிக்கொண்டு தலை நிறைய மல்லிகை பூ மணக்க கையில் பால் டம்லருடன் மனதில் குழப்பதோடு வந்தாள்.

காரணம் தன் தோழி கேட்ட  கேள்வி.

உன்னை போயா இவ்வளவு பணக்காரர் கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதிச்சாரு ?? தனக்கு இது போன்ற பணக்கார மாப்பிள்ளை அமையவில்லையே என்ற ஆதங்கத்தில் திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருந்தாள்.

ஒரு வேலை அவரை வற்புறுத்தி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கலாம்.

இல்லை என்றால் அவர் யாரையாவது காதலித்து இருக்கலாம் அது தெரியாமல் உன்னை கல்யாணம் செய்து ஏமாற்ற விரும்பி இருப்பார்கள் என்று அவள் வாழ்க்கையை கெடுக்க நினைத்தாள்.

இன்று அவள் சொன்னது

ஞாபகம் வந்தது.

குழப்பத்தோடு உள்ளே நுழைந்த தன் மனைவியை கேள்வியோடு நோக்கினான் கண்ணன்.

பாலை வைத்து விட்டு  அவன் காலில் வணங்க சொன்ற கோதையை தடுத்து நிறுத்தி தன்னருகில் அமர வைத்தான்.

"என்ன ஏதோ குழப்பமா இருக்க போல இருக்கு" கண்ணன்

"அதேல்லாம் ஒன்னுமில்லை" என்றாள் அமைதியாக

"இல்ல உன்னோட  முகமே சரியில்லையே இந்த மஞ்சள் முகத்தோட பிலஸ் பாயின்டே உன்னோட அந்த சிரிப்புதான் அதுயில்லையே" கண்ணன்

அவன்  வார்த்தையில் முகம் சிவந்தாலும் தன் மன குழப்பம் கூட வரவே அதை மறைத்து குழப்பமே  குடியேறியது.

தன் மனைவியின் முக மாறுதலை கண்ட கண்ணன்  "என்னம்மா என்னிடம் எதுவா இருந்தாலும் சொல்லு" அவனின் குரலில் அப்படியொரு அன்பு, காதல், கனிவு நிறைந்திருந்தது.

அந்த குரலில் தன்னை சிலநொடி தொலைத்து தான் போனாள் அவள் . சிறிதும் கண்ணிமைக்காமல்  தன் கணவனையே மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள். இவன் என்னுடையவனா? எனக்குமடடும் சொந்தமானவனா? என்ற கேள்வி வர மீண்டும் குழம்பி போனாள்.

சொல்லுமா என்ன சந்தேகம் உனக்கு" கண்ணன்

"அது....வந்து  நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக் கொள்விங்களா"

என்று பயந்தபடி அவள் 

கேட்க அவள் கையை ஆதரவாக பிடித்துக்கொண்டு "என்னோட கண்ணம்மா மேலே எனக்கு ஏன் கோபம் வர போகுது நீ எது சொன்னாலும் நான் கோபப்பட மாட்டேன் டா" கண்ணன்

"நீங்க ஏன் என்னை கல்யாணம் செய்துகொண்டிங்க" கோதை

"என்ன கேள்வி இது எதுக்கு கல்யாணம் செய்துப்பாங்க வாழ்த்தான்"

"இல்ல நான் அதை பத்தி கேக்கல , நீங்க பெரிய பணக்காரர்தானே  என்னை ஏன் கல்யாணம் செய்துக்கிட்டிங்க நான் சாதாரணமான  ஒரு ஏழை பெண் தானே" என்று அவள் பாவமாக கேட்க

பாவமாக அவள் கேட்ட விதத்தில் சிரிப்பு வந்துவிட வயிறு வலிக்க வலிக்க சிரித்தான்.

ஏன் சிரிக்கிரிங்க "என்று  அவள் கோபமாக கேட்க

தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவளிடம் கோட்டான்.

ம்ம்ம்....உனக்கு அறுபது வருஷம் கழிச்சிதான் இந்த கேள்வி கேட்க தோனுதா  என்றான். ( ஆமாங்க இப்போ அவங்களுக்கு அறுபதாம் கல்யாணம் தான் நடந்தது , அவங்க தோழி கேட்டது அறுபது வருடத்திற்கு முன்பு இப்போ தான் கேட்கறாங்க)

"பின்ன என்ன பண்றது இத்தனை வருஷமா இது மாதரி பேசி சிரிக்க நேரம் கூட இல்லாமல் எப்போ பாரு வேலை வேலைனு இருந்தீங்க, இப்போதானே நீங்க கேட்டிங்க அதனால தான் சொன்னேன்" கோதை

சாரிடா உன்னோட விருப்பங்களை  தெரிஞ்சிக்க நேரம் ஒதுக்கவே இல்ல" கண்ணன்

சரி விடுங்க ,இப்போ தான் டைம் கிடைச்சி இருக்குல சொல்லுங்க "

ம்ம்ம் இப்போவது கேட்டியே  வேறு  எதாவது கேள்வியிருந்த அதையும் கேளு" கண்ணன் தாத்தா.

ம்ம்ம் இருக்கு ஆனா பொய் சொல்ல கூடாது" கோதை பாட்டி.

சொல்ல மாட்டேன் சொல்லு "கண்ணன் தாத்தா.

நீங்க இதுக்கு முன்னாடி யாரையாவது காதலிச்சி இருக்கிங்கலா "என்று தயங்கி தயங்கி கேட்டாள்" கோதை பாட்டி.

அவளின் கேள்வியில் ஒருமுறை அவளை ஆழப்பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டார் கண்ணன் தாத்தா.

ம்ம்ம் காதலிச்சி இருக்கேன் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி" கண்ணன் தாத்தா

அவரின் பதிலை கேட்ட கோதை பாட்டி கண் கலங்க "அப்போ எதுக்கு என்னை கல்யாணம் செய்துகிட்டிங்க"

"அதான் சொன்னனே வாழ்றதுக்கு தான்னு"

"காதலிக்கறதுக்கு அவள் கல்யாணம் பண்ண மட்டும் நானா  இப்போஏன் திரும்ப என்னை அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க அவளையே கல்யாணம்  பண்ணிகிடலாம்ல "என்று கண்ணிருடன் திட்டினாள்" கோதை பாட்டி

கண்ணீரை துடைத்து விட்டு  அவளின் முகவாயை தன் முன் நிமிர்த்தி  "அவளைதான் காதலித்தேன் அவளையோ தான் அறுபது வருடத்திற்கு முன்பும் மணமுடித்து இப்போ ஆறுபதாம் கல்யாணமும் பண்ணிக்கொண்டேன் " கண்ணன் தாத்தா.

கண்ணில் காதல் ததும்ப தன் கணவனின் வார்த்தைகள்  இதயத்தை மயில் இறகாக வருடிவிட தன் கணவனை ஆர தழுவிக் கொண்டாள் என்றும் மாறாத காதலுடன்.

"ஏய் என்ன இது இப்போ தான் என்னை திட்டி தீர்த்த" என்று அவளை கேட்ட உதடுகளில் புன்னகை ததும்ப அவர் கைகள் அவளை வலைத்துக் கொண்டன.

கோதை பாட்டி "ஊடலுக்கு பின் கூடல் தானே"

அது இருபதா இருந்தால் என்ன ??அறுபதா இருந்தால் என்ன ??

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.