(Reading time: 2 - 3 minutes)

பொழுதுபோக்கு - விசயநரசிம்மன்

Star

ங்கே இருந்த தூசிகளையெல்லாம் ஒன்றாக திரட்டினேன். மேலும் சில கற்களையும் திரட்டி ஒன்றாக அழுத்தினேன். ஒரு சிறிய தூசு உருண்டையாய் இருந்தது. அதை அப்படியே சுழற்றிவிட்டேன், அதுவும் வேகமாய்ச் சுழல தொடங்கியது.

சுழன்று கொண்டிருந்த அது அருகில் இருந்த தூசுகளை ஈர்த்தது. தூசுகளும் அதனுடன் கலந்தன. மேலும் மேலும் தூசுகளும் சிறிய கற்களும் அதனுடன் கலந்தன. அது மெல்ல மெல்ல பெரியதாக ஆகியது.

ஆனால் உங்களின் சில மணிநேரத்தில் நடக்கும் நிகழ்வு அல்ல, பல கோடி ஆண்டுகள் நடக்கும் ஒன்று… அது உருண்டையாக இருந்தது ஆனாலும் பெரியதாவதை நிறுத்தவில்லை…

பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு அது எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருக்கும், அப்பொழுது அதன் மேற்பரப்பின் அழுத்தம் காரணமாய் உள்ளே அதன் கரு உருவாகும். ஹைட்ரஜன் அணுக்கள் சேர்ந்து ஹீலியமாக மாறும் – இந்த வினை மூலம் வெப்பமும் கதிரியக்கமும் தோன்றும்.

இந்தக் கதிரியக்கம் அதிகரிக்க அதிகரிக்க எனது தூசு உருண்டை ஒரு நட்சத்திரமாய் மாறும், மெல்ல மெல்ல ஒளிரும்…

எனக்கே எனக்குச் சொந்தமான நட்சத்திரம்!

இதேபோல் நான் ஏற்கனவே பல நட்சத்திரங்களும் கோள்களும் செய்து இருக்கிறேன். ஆனால் அது எவ்வளவு கடினமான வேலை தெரியுமா? உங்களுக்கு எப்படித் தெரியும், அதனோடு ஒப்பிட்டால் நீங்களே ஒரு தூசி…

“சீக்கிரம் டிஃபன் சாப்பிட வா…” ச்சே! இந்த அம்மா வேற, ‘டிஃபன் சாப்பிடு, சாப்பாடு சாப்பிடுனு’ தொல்லை பண்ணிட்டு… கடவுளுக்குனா தொல்லைப் பண்ண அம்மாவே இல்லை… எனக்கு அப்படியா?!

“த்தோ வரேன்மா…”

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.