(Reading time: 6 - 12 minutes)

ஆல்-இன்-ஆல் அமுதா - சித்ரா

ன்னைக்கும் வேலைக்கு வரவில்லை அமுதா என் வேலைக்காரி .

கிட்சன் ஒரு மினி சுனாமி attack பண்ண range இல் இருந்தது நான் எதாவது ஹெல்ப் பண்ணட்டா  என்ற மாமியை அவசரமாக தடுத்தேன் .பின்னே இந்த சுனாமி கண்டிஷன் பாத்து மயங்கி vilunthutankanna ..

வேணாம் மாமி வேணாம் நீங்க உள்ளே வராதிங்கோ 

All in All Amudhaமம்மி செய்யும் torture re போதுமட 

இதில் மாமி torture um கூட சேர வேணான்ட 

கொஞ்சம் ஹெல்ப் செய்யும் மாமி வேணாண்ட 

fulla help செய்யும் husband தேவடா 

maid corporation water மாதிரி jananakku jannakku வவ்வாலு 

ஒன்ன விட்டு ஒரு நாள் வந்தாலே பெரிய காரியம் ஆமா கோவாலு 

பாட்டு மட்டுமே நமக்கு எப்பயும் கை குடுக்கும் 

fm on செய்துட்டு சர சர innu வேலை பாக்க ஆரம்பித்தேன் , பாத்திரத்தை  ஒழித்து கழுவி மேடை சுத்தம் பண்ணி ஒரு வழியாய் சமைக்க  ஆரம்பித்த  போது  யாரோ  அழைத்தார்கள் .

சரி இன்னைக்கு இந்த courier  karannukku   நம் கையால் மண்டகபடி  என்று பார்த்தால்  நம்ம அமுதா ..

வாம்மா  மின்னலு ....(இங்கே ஒரு சின்ன psychology  நாம் வேலை பாதி முடித்த பின் அவளை பார்த்தால் எரிச்சல்  தான் ,அநாவசியமா வேலை செய்து விட்டோமே என்று அவளை கண்ணோடு கண் பார்க்காமல் நான்  பாதி  முடிச்சிட்டேன்  வீட்டை கூட்டு என்றேன் .     அவள் அசையாமல் அதே இடத்தில நிற்க கண்டு நிமிர்த்து பார்த்தல் அவள் கண்களில் கண்ணீர் ....

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அக்கா  என எனக்கு சட்டென்று கோவம் வடிந்து அவளை பார்க்க பாவமாக இருந்தது    

என்ன ஆச்சு  என உண்மையான அக்கரையுடன் கேட்க இந்த கதை பிறந்தது friends .

ம்ம heroine ikku அம்மா மற்றும் ஒரு அக்கா மட்டுமே . அப்பா கிடையாது சிறு வயதுலேயே  இறந்துட்டார் .அம்மா வீட்டு  வேலை மற்றும் சமையல் செய்து இவர்களை ஆளாக்க ,வளர்த்த பின் இவர்களும் இப்போ செய்வது அதே வீட்டு  வேலை தான் .ஆறு மாதம்  முன் தான்  எனக்கு இவள் வேலைக்கு அமர்தாள் ,இவள் வராத சமயங்களில் அவள் அம்மா வருவதுண்டு, அப்போ அவர் சொல்லி கேட்டது தான்  இவர்கள் கதை .

அமுதா  இன்னும் நல்லா  இருப்பா  அம்மா ,இப்போ இந்த கஷ்டம் வர தான்  இப்படி, என் பெரிய பொண்ணுக்கு நல்ல இடம் தான்   பாத்து கல்யாணம் பண்ணி வைச்சேன் ,12 சவரன் போட்டேன்ம ,அவ நல்லா இருந்தா எங்களுக்கும் ஒரு ஆம்பளை துணை ஆகும் நினைசேன்ம , யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை , அவளும் சுக படலை எனக்கும்  தலைக்கு மேல கடனா போச்சு .....

நாலஞ்சு  வீடு செய்யறா , அதான் இப்படி இளைச்சு போய்ட்டா ......

இந்த அம்மாவின் சோகம்  அமுதா முகத்தில் தெரியாது . சிரிச்ச முகத்தோடு  நீட்டா தான்  இருப்பா .

கை தன்னால் வேலை செய்த வாய் வள வளத்து   கொண்டிருக்கும் .ஆரம்பத்தில் இது எனக்கு சங்கடமாக இருந்த போதும்,போக போக அவள் கதையில் நாட்டம் வந்தது .அவள் எப்போது வேலைக்கு வருவாள்  என எதிர்பார்க்க வைத்தது..அவள் கதையில் எந்த வம்பும்  இருக்காது . பொதுவாக அவள் செய்யும் மத்த வீட்டில் நடந்த சின்ன சுவரிசியமான tidbits தான் .அவளை இடுப்போடு அணைத்து (சின்ன குழந்தை  தான்  boss )tour  செல்ல அம்மா விடம் தூது போக சொல்லும் குழந்தை . அக்கா குழந்தையின் சேஷ்டை ,அவள் ஆயா தாத்தாவிற்கு படையல் போட்ட சாப்பாட்டில்  ஒரு item கூட அவளுக்கு தராதது , அவளை பூரா வேலையும் வாங்கிய பின்பு   என செல்லும் அவள் அரட்டை .

ஒரு நாள்  என் birthday அக்கா  இன்று என்றாள் . அவளை விஷ் செய்து என்ன வயது என கேட்டால் ,அது சரியாய் தெரியாது அக்கா  , அம்மா எனக்கு 22 தான் ஆச்சு  சொல்லும், ஆனா  எனக்கு 24 ஆவுது  என்றாள் . ஏன்  உனக்கு bc வாங்கலையா  என்றதர்க்கு அதெல்லாம் எங்க அக்கா  , அம்மா rationcard  கூட வாங்கலை . நாங்க யாரும் எந்நேரமும் வீட்டில் இருக்க மாட்டோம்ல  அதனாலே என்றாள் .

ரு நாள் திடீரென்று என் அத்தை  எனக்கு ஒரு வரன் கொண்டுவந்திருக்கு  அக்கா  என்றாள் கொஞ்சமே கொஞ்சம் வெட்கத்துடன் .அப்பா கூட பிறந்த அத்தையா  என்றதுக்கு இல்லை இது அம்மா friend ,சும்மா அத்தைன்னு  சொல்லுவோம் என்றாள் .நல்ல விஷயம் தான  என்ன சொல்லுது உன் அம்மா என்றேன் .அம்மாவுக்கு  ஆசை தான் , கூடவே கடனே இன்னும் அடையலே ,எங்கே கல்யாண செலவு என பயபடுத்து  என்றாள் .. நியாயம் தான்  என்றாலும் எப்போ அலை நின்னு ஸ்நானம்  செய்வது, அது பாட்டுக்கு அது, நீயும் அவர் மகள் தானே சேர்த்து தான் சமாளிக்கணும் என்றேன் ,இல்லக்கா  எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் ரெண்டு வருஷம் போன கொஞ்சம் நிமிர்துடுவேன்   அப்போ பார்க்கலாம்ன்னு  அவள் சொல்ல,  அந்த பையன்  என்ன செய்கிறான் என்று விசாரித்தேன் .

அது எதோ false  ceiling  வேலை யாம்  அக்கா , கார் வச்சிருக்கு  என்றாள்  கண் அகல ....

இம்  உனக்கு பிடிச்சிருக்கா  என்றதற்கு, மேலும் வெட்கபட்டபடியே  கொஞ்சம் கருப்பா  தான்  இருக்கும் ,எங்க அக்க விற்கு வந்த வரன் தான்  ஜாதகம் சரியில்லைட்டாங்க , இப்போ எனக்கு பொருந்துதாம்....

எனக்கு  சுவாரிசயமாக  இருந்தது, உன் அம்மாவை  வர சொல்லு நான்  பேசறேன் என்றேன்,

ரெண்டு நாள்  சென்ற  பின் , மிகவும் மகிச்சியாக  வந்து அம்மா  ஒத்துகிசி ,வர வெள்ளிகிழமை   ஒப்பு தாம்பூலம்  வைக்கலாம்  என்று  முடிவு பண்ணியிருகாங்க .அக்கா வீட்ல தான்  வைக்கலாம்  முடிவு பண்ணியிருக்கு அம்மா .

ரொம்ப   சந்தோசம்  என்றபடியே  ஏற்பாடுகளை  விசாரித்தேன்.   ஒன்னும் பெருசா இல்லை  அக்கா , அவங்க sidela  இருந்து மிரிண்டா  அத்தை (பெயர் காரணம்  வேண்டா வேண்டா  நினைக்க நினைக்க  பிறந்ததாம்  அதனால்  இந்த பெயர்  மருவி  வந்துவிட்ட தது )..அவங்க அம்மா அப்பா அவரு , எங்க பக்கம் அம்மா அக்கா  மாமா  ஆயா  தான்  என்றாள் .அக்கா வீட்ல  மொட்டை மாடி  பெருசா  இருக்கும் அங்கேதான்  வைக்க போறோம் .டிபன் காபி  பூ பழம் வெற்றிலை   செலவு அதை மாமா  பார்த்துபார்  என்றபடியே    உற்சாகமாய்  வேலை செய்தாள் .

ஒப்பு   தாம்பூலம்  முடிந்தவுடன்   சந்தோசமாக   மறுநாள்   halfsaree  கட்டி  தலை நிறைய  பூவும் பூரிப்புமாய்  வந்தாள் .  நிச்சயம்   ஒரு மாதம்  கழித்து   , அது மட்டும் எங்க செலவு ,  கல்யாணம் அவங்க செலவு  . என்றாள்   நிறைவாய் . ஆனால்  அந்த நிலை இரண்டு நாள் தான் ,  அம்மா back  அடிக்குது , நிச்சயத்துக்கு  4 ஆயிரம்  செலவு ஆகுமாம் அதை கூட அம்மா பிரட்ட முடியாதாம் , ஆசை  னா  அதையும் அவனே செய்யட்டும் குது    அக்கா  , அசிங்கமா  இல்லியா  என்றாள் .   நானும் அவள் செய்யும் இன்னொரு வீடு அம்மாவும் அந்த செலவை கொடுக்க  முன் வந்தபின் அது சரி ஆனது,

தினம் என் காதுகள் புளிக்க புளிக்க  அவன் Madavan  பத்தி  பேசுவாள் .

சந்தோசத்தோட  கூட  சிறு சிறு சங்கடங்களும்  வந்தது.

முதலாவதாய்  கல்யாணம்    register  செய்ய அவள் BC  தேவைப்பட்டது . ஒரு   மாதரி அவள் விவரம் சொல்ல சொல்ல அந்த site il  இருந்து  அதை அவளுக்கு எடுத்து கொடுத்தேன் . 

அடுத்து அவன்   கேட்டது  அவளது  TC , அக்கா  சொன்னா  கேட்க மாட்டேன்குது க்கா  , அது எல்லாம் file  பண்ணுமாம்  , பேஜாரு  என்றாள் ......

நான்  கூட அவளை கிண்டல் பண்ணுவேன் தமிழ்ல  உனக்கு  பிடிக்காத வார்த்தை  படிப்பு என்று . அதை அவன்ட்ட  சொல்ல வேண்டியதுதானே என்றால்   சும்மா recordukku  வேணுமாம் அக்கா அதுக்கு  என்றாள் .  அவள் மாமா  உடன் சென்று ஸ்கூல் la  கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாய்  அதையும் வாங்கினாள் .  இன்னும் வேற எதுனா  கேட்டுது நானே கல்யாணத்தை  நிறுத்துவேன்  என்றாள்  சிரித்துகொண்டோம் .

இதற்கு   இடையே  அவள் அக்கா வீடு மாரி  இவர்களுடன்  பக்கத்தில் ஒரு வீடு பார்த்து  குடிவந்தாள் .

மறுபடியும் வேதாளம் முருங்கை  மரம் ஏறியது .   அவள் அக்கா தூபம்  போட  போட  அம்மா வை மறுபடியும்   பயம் பிடித்து ஆட்டியது .   என்னை அனாதையா  விட்டுட்டு  உனக்கு கல்யாணம்  முக்கியமா  என ......

ஒரு வழியாய்   நிறைய பேரோட   அறிவுரை  அக்கறை  சேர்த்து  நிச்சயம்  முடிந்தது .  அப்பாடா  பாதி  கல்யாணம் முடிந்த சந்தோஷம்   எனக்கு , அவளுக்கும்தான் .

கல்யாண தேதி  ரெண்டு மாதம்  தள்ளி செல்ல  , ஒரு மாதம்  வரை  வேலைக்கு வந்துவிட்டு  ஒரு நாள் பத்திரிக்கை   வைத்தாள் .  அவளுக்கு என்று நான்   வாங்கி  வைத்ததை  குடுத்து  வாழ்த்தி  அனுப்ப   அக்கா    நீங்க  இந்த  sudila  அழகா  இருக்கிங்க  என்றாள் .

அப்படி  போடு அருவாள .......

 That is all in all amudha.....My friends.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.