என்னை யார் என்று எண்ணி எண்ணி.... - சித்ரா
தூங்கும் குழந்தையை பார்த்துக்கொண்டே இருக்க அவளுக்கு பிடிக்கும் , ஆனால் அம்மா அதட்டுவது கூடவே ஞாபகம் வந்தது, அவள் முகம் சுருங்கியது .
இனி ஒருபோதும் அம்மா வை பார்க்க முடியாது என்ற நினைவு அலை போல் எழுந்தது , தலையை உதறி அந்த நினைப்பை மாற்ற வென்று எழுந்து முகம் கழுவி சுவாமி விளக்கேற்றி வைத்தாள் .
அதற்கு கூட எந்த அர்த்தமும் இல்லை என்றே தோன்றியது ,,ஒரு நாள் கூட தவறாமல் தான் அம்மா இதை செய்வாள் , என்ன பயன் ....
ஒரு மாதம் முன்னே அவள் இது போல் ஒரு readymade குடும்பத்தில் தன்னை பொருத்தி ஐந்து மாத குழந்தையுடன் இரண்டு வாரமே ஆன கல்யாண வாழ்க்கை வாழ்வாள் என கனவிலும் நினைத்தாள் இல்லை .குழந்தையுடன் கோயிலுக்கு கிளம்பி சென்ற அவள் அக்கா அம்மா அப்பா மாமா மாமி என அனைவரும் ஒரு accidentil போய் சேர அவர்களுடன் சென்ற குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது வரமா இல்லை சாபமா என்று அவளுக்கு புரியவில்லை . அந்த பயணத்தில் கூட செல்லாத அவள் அக்கா கணவனும் இவளும் வாழ்க்கை பயணத்தை இணைத்து தொடர , அந்த செல்ல குட்டிக்காக முடிவு எடுத்து , இரண்டு வாரம் ஓடி மறைந்துவிட்டது .அக்கா குடித்தனத்தை அவள் இடத்தில் இருந்து ஏதோ நடத்துகிறாள் . அக்கா கணவர் என்பதை மறந்து அவனுடன் தான் ஒன்ற முடியவில்லை .அவனுக்குமே delicate ஆக தான் இருந்தது .அவரவர் வேலை மற்றும் குழந்தை என்று நாட்கள் ஓடியது .
அன்று வழக்கத்தை விட சீக்கிரமாய் 4.30 மணிக்கு அவன் வீடு வந்தான் .குழந்தையை எட்டி பார்த்தபடியே இரண்டு cinema டிக்கெட்டை எடுத்து diningtable மேல் வைத்தான் . உன் fav ஹீரோ Rana படம் Bahubali டிக்கெட் , கிளம்பு 6.30 ஷோ என்றான் .அவர்கள் மூவரும் சேர்த்து செல்லும் முதல் நிகழ்வு ,அதுவுமே strange ஆக தான் இருந்தது அவளுக்கு .படம் முடியும்வரை நல்லவேளை குழந்தை அதிகம் சிணுங்கவில்லை . dinner முடித்து வீடு வந்த போது , ஒரு சின்ன சந்தோஷம் இருக்க தான் செய்தது .மேலும் ஒரு வாரம் ஓடி மறைய , ஒரு நாள் office இல் இருந்து நல்ல ஜுரத்துடன் வீடு வந்தான் .பக்கத்து வீட்டு பாட்டி தான் ஆபத்து காத்தவர் அனாதை ரட்ஷகர் ஆய் வந்து குழந்தையை பார்த்து கொண்டே அவனை கவனிக்கவும் உதவினார் .
குழந்தைக்கு பரவாமல் இருக்க அவளை பாட்டியுடன் விட்டு விட்டு முதல் முறையாய் அவனை அருகில் இருந்து கவனிக்கும் படி ஆனது .நெற்றியில் துணி நனைத்து போட்டாள் ,சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஜுரத்தில் அவன் உளறியதை கேட்டுகொண்டே அவன் அருகில் இருந்தாள் .
இராத்திரி குழந்தை பாட்டியுடன் சமர்த்தாய் தூங்க , இவள் அவன் பக்கத்தில் படுக்க வேண்டி வந்தது .அவள் வாழ்க்கையில் ஓரு பெரிய திருப்பம் வந்தது .
சுர வேகமா ,அல்லது சுரத்தின் விளைவாக தன் நிலை மறந்தானா , எது அவனை அந்த பாதையில் செலுத்தியது என்று அவளுக்கு தெரியாது, ஆனால் அந்த இரவு அவர்களின் சங்கம இரவாக அமைந்தது . மறுநாள் அவன் ஜுரம் முற்றிலுமாய் சரியானது .அவளிடம் இருந்த சங்கடம் அவனிடம் இல்லை . இயல்பாய் தன் வேலைகளை கவனித்தான் . பாட்டியின் துணையுடன் ரசம் வைத்தாள் . பின்னே இப்போ risk எடுத்து மறுபடியும் அவனுக்கு ஜுரம் வந்துவிட்டால் என்ன செய்வது ......( friends if this situation reminds u all off something athukku nan பொறுப்பு இல்லப்பா )
பாட்டி அவர் வீடு திரும்பியபின்னும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை,,oh my God , அவனுக்கு நடந்தது ஞாபகத்தில் இல்லை .... அவள் வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படி ,பார்த்து பழகி பிடித்தபின் செய்ய வேண்டிய கல்யாணம் அவசர கதியில் , அதை அடுத்து நடந்ததும் அவன் கருத்தில் பதியாமல் .......சரி இதுவும் நல்லதுக்குதான் என்று தன்னை சமாதான படுத்திக் கொண்டாள் . நெருங்கி பழகும் சமயம் தள்ளி போனால் நல்லது என்றே தோணியது அவளுக்கு .
வழக்கம் போல் வேலை முடித்து மஞ்சு குட்டிக்கு பால் குடுக்க போன போது ,வாயில் bottlelai வைக்காமல் சிணுங்கியது , போக போக அழுகை பலமானது , பாட்டியும் ஊருக்கு போய்விட்டதால் பயந்து போய் அவனை அவசரமாக அழைத்தாள் .கவலை படாதே ஒன்னும் பெருசா இருக்காது , நான் உடனே கிளம்பி வரேன் என்று அடுத்த அரை மணியில் வந்து சேர்த்தான் .
வழக்கமாக காட்டும் paedeo விடம் காட்ட , அது bottle பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வரும் colic pain தான் என்று ஒரு சிரப்பை அவரே குடுக்க , சற்று நேரத்தில் அழுகை ஒய்ந்து தூங்கியது குட்டி .
வீட்டுக்கு வந்து தூங்கும் குழந்தையை படுக்க வைக்க அவன் மெத்தையை ready செய்ய ,குழந்தையின் கிழே ஒரு கையும் கழுத்துக்கு கிழே ஒரு கையுமாய் அவள் குனிய குழந்தை safe ஆய் அவளது கமீசின் necklinenil ஒரு கையை clamp பண்ணியிருந்தது . அவள் செய்வது அறியாமல் நிற்க அவன்தான் நாசுக்காக மூன்றே விரலால் கையை அகற்றி விட்டு coolai மறுபடியும் ஆபீஸ் போனான் . அவளுக்கு தான் மூச்சி சீராக விட அரை மணி ஆனது .
உட்கார்ந்து யோசித்து பார்த்ததில் இவள் இது போல் electricuted monkey போன்ற reactionai குறைக்க வேண்டும் என்றே தோன்றியது . அதில் வெற்றியும் கண்டு சுமுகமாய் நாட்கள் ஓடியது.
அன்று ஒரு சண்டே . அவளது off day . பூரா நேரமும் அவன் babysitting அவள் haiyaka tv பார்த்துகொண்டிருந்தாள் .சரி போனா போகுது அவனுக்கு ஒரு ஜூஸ் குடுப்போம் என்று எழுந்தவள் மயங்கி அவன் காலடியில் சரிந்தாள் . கண் திறந்த போதே அவன் முகம் ginger monkey போல தான் இருந்தது . மெல்ல அவன் டாக்டர்ரை contact பண்ணேன், சும்மா fatique தான் இருக்கும் , எதுக்கும் ஒரு pregy டெஸ்ட் கிட் வாங்கி பார்க்க சொன்னான் என்றான் . அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் காண அவளுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது, அனுபவி ராசா அனுபவி , ஆனால் டெஸ்ட் ரிசல்ட் positive என்று வந்து நிலைமையையும், கனவு போல் அவன் மனதில் படிந்திருந்த அந்த நினைவை அவன் உணர்த்த போது அவள் நிலை தான் மாறி போனது .
ஏற்கனவே மஞ்சு அவளை மஞ்சு விரட்டு போல் சுளுக்கு எடுக்க , இன்னுமொரு பாப்பாவை எப்படி சமாளிக்க .....அவன் கனிவும் concernum சேர்ந்து அவளை நன்றாகதான் கவனித்து கொண்டான். வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் குழந்தையை பார்த்துக்கொண்டே அவளுக்கும் உதவி செய்தான்.. தோசை சுட்டு சட்னியுடன் midnight la கேட்டாலும் அசராமல் குடுத்தான் .
ஆனால் அவள் electricuted monkeyil இருந்து ஒரு shrieking cat ஆக மாறி போனாள் . அவனை வறுத்து எடுத்தாள் . அன்று 7.00 மணி ஆனா பின்னும் அவன் வரவில்லை, அடம் பண்ணி அழுது களைத்து ஒரு வழியாய் மஞ்சு தூங்க விட்டு தான் அவளுக்கு முதல் முறையை பயம் வந்தது, வெறுத்து பொய் எங்காவது ஓடிவிட்டனோ , அவள் torture தங்க முடியாமல் மகளையும் விட்டு விட்டானோ ...
அப்போ அவன் நண்பன் அழைத்து அவனுக்கு accident என்றும் கவலை பட வேண்டாம் , கையில் மட்டுமே அடி, கட்டு கட்டிக்கொண்டு இப்போது வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறோம் என கூற , அவளுக்கு நிம்மதி ஆனது
சற்று நேரத்தில் அவன் வாசலில், கை ஒரு sling கில் தொங்க , மற்றபடி முழுசாய் நிற்பவனை கண்டு ஓடி போய் அவன் மேல் விழுந்தாள் . நன்றாக இருக்கும் ஒரு கையால் அவளை தாங்கியபடியே இந்த freeshowvai நாம் உள்ளே பொய் வைத்துக்கொண்டால் நான் மேலே எதுவும் செய்ய வசதியாய் இருக்கும் என்றான் .
bade acche laghte hai
yeh dharti yeh nadiya yeh rainaa
AUR THUMMMMM.....
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.