(Reading time: 5 - 9 minutes)

சுதந்திர விடியல் - ப்ரீத்தி

ருவத்தி ஒன்பதாவது சுதந்திர நாளை முன்னிட்டு பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றி மரியாதை செலுத்தினார், இதை தொடர்ந்து மாணவ மாணவியர், போலீசாரின் அணிவகுப்பும் ராணுவத்தின் அணிவகுப்பும் நடந்தேறியது. மேலும் இந்தியாவின் வளர்ச்சியை முன்னிட்டு உரை ஆற்றினார்....” என்று சிரத்தையுடன் செய்திகள் வாசிக்க பட்டுக்கொண்டிருந்தது தொலைகாட்சியில்.

“மஞ்சு கொஞ்சம் காபி கொண்டுவாமா...” என்று அறிவித்துவிட்டு மின்விசிறியை தன் பக்கம் திருப்பிவிட்டுவிட்டு ஆயாசமாக அமர்ந்தார் அரசு ஊழியர் மோகன். தந்தை வந்தது தெரிந்ததும் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் மகள் மலர்.

“என்னம்மா பள்ளியில கொடியேற்றம் முடிஞ்சிதா?”

Independence day“முடிஞ்சிதுப்பா... கொடி ஏற்றம் முடிஞ்சு, இதோ இந்த ஷீல்ட் தந்தாங்க...” என்று நெஞ்சில் இருந்து இன்னும் கழட்டாமல் இருந்த நாட்டுக் கொடியின் பதக்கத்தை காட்டினாள். இவர்கள் பேசிக்கொண்டிருக்க, அன்னையும் காபியுடன் வந்துவிட, “இந்தாங்க... ரொம்ப நேரம் வெயில்ல இருக்குற மாதிரி ஆகிடுச்சோ...”

“ஆமாமா... என்ன இன்னும் பெரியவள் ஊருல இருந்து வரலையா? மணி 9.30 ஆகிடுச்சே...” என்று காபியை பருகிக்கொண்டே வினவினார்.

“அம்முக்கு போன் பண்ணேங்க... வந்துட்டே இருக்காள்... இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவாள்” என்று பதில் சொல்லிகொண்டிருந்தார் மஞ்சு.

அதே நேரத்தில் அவள் சொல்லிக்கொண்டு இருந்த அம்மு என்கிற கீர்த்தனா ஊர் பாதையில் நடந்து வந்துக்கொண்டிருந்தாள். விடிந்து சூரியன் சுள்ளென முகத்தில் பட்டாலும் வீட்டுக்கு அருகிலேயே பேருந்து நிலையம் இருக்கவே நடந்தே சென்றாள், சென்னையில் பணிபுரிந்துக்கொண்டிருந்த அம்மு.  

அரக்க பறக்க பெரியவர்கள் சிலர் வண்டியில் விரைந்து செல்ல, பள்ளி குழந்தைகள் எல்லாம் நெஞ்சில் குத்தி இருந்த பதக்கத்தை பற்றி பேசிக்கொண்டே நடந்து செல்ல, அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்துக்கொண்டிருந்தாள் அம்மு. எதிரில் யாரோ இரு வயோதிடர்கள் பேசியப்படி போய்கொண்டிருக்க, அதில் ஒருவரின் கைக்குட்டை கீழே விழந்துவிட அதை பின்னே சென்ற இளம் பெண் எடுத்து தந்தாள். என்றும் இருக்கிறதோ இல்லையோ ஆனால் சுதந்திரத்தினதன்று தான் நாட்டு பற்று மேலோங்கி வரும் சில இளம் வயதினருக்கு. முதியோரை கண்டாலே சுதந்திரத்துக்கு போரிட்டதெல்லாம் நியாபகம் வர, பவ்வியமாக பார்பர். இந்த எண்ணைகள் எல்லாம் அம்முவின் மனதில் நொடியில் கடந்துபோக மெல்லிய முறுவல் தழுவிச் சென்றது அந்த கருத்த மேனியின் கருத்த உதடுகளில்.  

வேலைக்கு போகும் பெண்கள், கல்வியில் முதன்மை பெற்ற சிறு கிராமம் என்ற பெயருக்கேற்ப செல்லும் மாணவர்கள், பொறுப்பாக கடைத்திறக்கும் வணிகன், காய்கறிகளை கூவி விக்கும் பாட்டியம்மாள், இந்த தினத்திலும் முந்தின நாள் சிரத்தையாக குடித்துவிட்டு சாக்கடைக்கும் வீட்டுக்கும் வித்யாசம் தெரியாமல் உறங்கும் குடிகாரன், ஒழுங்கு படுத்தப்பட்ட சாலைகள் அதை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்கள், உயர்த்தப்பட்ட பேருந்து எண்ணிக்கைகள் இப்படி ஓவ்வொன்றும் கண்ணில் பட பட நன்றோ தீமையோ எவ்வளவு மாற்றங்கள் என்று பிரமித்துப் போனது மனது...  

எண்ணங்கள் வேகமாக ஓட, நடைபயணமும் வீட்டின் தூரத்தை குறைத்து இருந்தது. வீடு தொலைவில் கண்ணில் பட, உற்சாகத்தோடு முன்னேறி சென்றாள். “எங்க கனகா சுதந்திரம் கெடச்சுது... காலைல நியூஸ் பார்த்தியா பாவம் அந்த பொண்ண என்ன பண்ணிருக்கானுங்க... எப்படி தான் மனசு வந்துச்சோ... படுபாவி பசங்க... நல்ல சாவே வராது அவங்களுக்கு...” என்று தொலைபேசியில் புலம்பிக்கொண்டு போனார் நடுத்தர வயோதிட பெண்மணி.

பரிதாபம் தான் அந்த பெண்ணின் நிலைமை... ஆனால் அதற்காக கிடைத்த சுதந்திரத்தை குறை சொல்லுவது எப்படி சரியாகும்... அனைத்துமே சரியாக நடந்துவிட செத்துக்கிய சிலையல்லவோ வாழ்க்கை... கல்லின் நேர்த்தி தெரிந்து நாமல்லவோ செதுக்கவேண்டும்... இப்படி சிலரின் பேச்சுக்கள் காதில் படும் போதெல்லாம் தந்தையின் வசனம் தான் நினைவிற்கு வரும்... நினைவுகள் முற்றுக்கு வர வீட்டில் அடியெடுத்து வைத்தாள் அம்மு.

அவள் வந்தது அறியாமல் தந்தை தங்கையிடம் பேசிக்கொண்டிருந்தார். “சுதந்திரம்ன்றது நினைத்ததெல்லாம் செய்யுறது இல்ல கண்ணா... நினைத்ததை சரியான விதிமுறையில் செய்வதுதான்...” தந்தையின் வார்த்தைகள் காதில் படவும், துளைந்த எண்ணங்கள் மீண்டும் ஒட்டிக்கொள்ள மெதுவாக வந்து தந்தையின் தோளில் சாய்ந்துக்கொண்டாள். திடிரென தொடுகையில் திரும்பிப்பார்த்தவர், “மஞ்சு அம்மு வந்துட்டா பாரு, சூப் வச்சுடீனாக் கொண்டு வா...” என்றுரைத்தார். இந்த சூப் எல்லாம் பல நாள் கழித்து ஒரு நாள் ஊர் வந்து பார்க்கும் பிள்ளைகளின் சலுகைகள்...

அதன் பின் நேரம் விரைந்தோட அம்மா கையில் செய்த சாதாரண உணவும் தேனாய் இனிக்க, தொண்டை வரை சாப்பிட்டுவிட்டு, செரிக்க மோர் கலந்து குடித்தபடி வராண்டா சென்றாள். எண்ணங்கள் மீண்டும் வந்து ஆக்கிமித்துகொள்ள, சரி தான் சுதந்திரம் சரியான முறையில் செயல் படுத்துகையில் நேர்த்தியான சிலைகள் வடிவமைக்க முடியும்... இந்த கிராமத்தில் இருந்து படித்து குடும்ப சந்ததிகளில் இருந்து முதல் பெண்ணாக சென்னையில் வேலை செய்வேன் என்று எதிர்ப்பார்க்கவில்லை தான்.

நாட்டிற்கு பலர் தியாகங்கள் செய்து வாங்கி தந்த சுதந்திரத்தை விட என் பெற்றோர் தன் சுயத்தை மறந்து எனக்களித்த சுதந்திரம் எனக்கு பெரிது தான். படிப்பாகட்டும், உடுத்தும் உடையாகட்டும், பார்க்கும் வேலையாகட்டும், கையில் கிடைக்கும் பணமாகட்டும் அனைத்துமே எனக்கான சுதந்திரமே...

பெற்றோரில் தியாகத்தில் என்னுடைய சுதந்திரத்தை நினைக்கையில் இன்று மட்டுமல்ல என்றுமே அது எனக்கு சுதந்திர விடியல் தான்...     

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.