(Reading time: 8 - 16 minutes)

உன்னை தெரியும்.... உன் அன்பும் புரியும்......... !!! - ஆர். ராஜலட்சுமி

லாரியில் குடிநீரை பிடித்து தோளில் தூக்கி வீட்டை அடைந்து கொண்டிருந்த சம்பத்தை அழைத்தார் கிருஷ்ணன், சம்பத் குடியிருந்த அதே ஏரியாவில் வசித்து வருபவர்.

அவர் குரல் கேட்டு நின்ற சம்பத்தின் அருகில் வந்தார் கிருஷ்ணன்.  “சம்பத் உனக்கு ஏன்பா இந்த வேண்டாத வேலை,” சார் எல்லாரும் இதே மாதிரி நெனச்சா, என்ன பண்ண யாராவது கேள்வி கேட்டாதான் அவன் அடங்குவான்.

நாங்களும் எத்தனை பெட்டிஷன் குடுத்தோம் அவன் எங்கள தலையால தண்ணி குடிக்க வெச்சிட்டான் அதனாலதான் சொல்றேன், அப்புறம் உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டு சென்றார்.

Waterதண்ணீர் குடத்துடன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த சம்பத்திற்கும் இதே யோசனைதான்.  அவன் இந்த ஏரியாவின் வீடு கட்டி குடி வந்து 5 வருடங்கள் முடியபோகிறது, வேகமாக வளர்ந்து வரும் அந்த யாரியவிர்ர்க்கு பின்புறம் வாழை சாகுபடியும் நடந்து கொண்டிருந்தது இங்கு குடி வந்து அவன் கேள்விப் பட்டதில் பிரதானமான பிரச்சனை தண்ணீர், கடந்த 3 வருடங்களாக ஆழ்துளை கிணற்றின் உபயத்தில் அவனுக்கு அந்த பிரச்சனை பெரிதாக தெரிந்ததில்லை ஆனால் 2 ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு வற்றி தண்ணீர் தட்டுப்பாடு லாரியில் தண்ணீர் ஒரு குடம் 5 ரூபாய், தினமும் வரிசையில் நின்று தண்ணீர் பிடிக்க சோம்பரித்தனம், அலுவலகத்திற்கு தாமதம் என்று எரிச்சல் படவும் கோபப்படவும் ஆயிரம் காரணங்கள் (ஆண்களுக்கு கோபப்பட காரணமே தேவையில்லை சும்மாவே ஆட்டம் போடுவாங்க இதுல வேப்பிலை வேற அடிச்சா)

முகத்தில் சிடுசிடுப்புடன் வீட்டிற்க்குள் நுழைந்த சம்பத்தின் கைகளில் இருந்த குடத்தினை மனைவியின் கைகளில் திணித்துவிட்டு குளிக்க சென்றான், கம கம வாசனை சூடான இட்லியும் சட்னியும், நேரத்தை பார்த்தான் 8.45 (ஐயோ ஆபிசுக்கு பறந்து போக சிறகு இல்லையே என்று ஆயாசமாக இருந்தது) அவன் முன் பிளேட்டை வைத்து பரிமாற துவங்கினார் செல்வி சம்பத்தின் மனைவி, ஒன்று, இரண்டு, மூன்று தயக்கத்துடன் நான்காவது இட்லியை பாத்திரத்தில் இருந்து எடுக்கும் போதே கத்தத் துவங்கி விட்டான்.  “என்னை என்ன சாப்பட்டு ராமன்னு நெனச்சியா ஆபிசுக்கு லேட் ஆகுது தெரியல, போதும் போய் லஞ்ச் பாக்ஸ் ரெடி பண்ணு” அதட்டல் பலமாக ஒலித்தது.

மூஞ்சிய பாரு மெதுவா சொன்னா ஆகாதா நானும்தான் ஸ்கூல் போகணும் காலைல இருந்து எவ்வளவு வேலை செய்றேன், இவ்வளவும் மனதிற்குள், (அதற்காக பயமென்று காரணமில்லை) வாய்விட்டு பதிலுக்கு கத்தினால் "நாளைல இருந்து நீயும் தண்ணி பிடிக்க வான்னு கூப்பிட்டா என்ன செய்வது, முதலில் இடுப்பில் தண்ணீர் குடம் நிற்காது முருகா எதாவது செய்” என்று புலம்பியவாறே இருவருக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்து வீட்டை விட்டு கிளம்பும் போது மணி 9.15. செல்வியின் பள்ளி வீட்டில் இருந்து மிகவும் அருகில், ஆனால் சம்பத்தின் அலுவலகம் 2 கிலோ மீட்டர் தூரத்தில் (இதுவும் சம்பத்தின் 1008 கோபத்தில் ஒன்று ) அலுவலகத்தின் உள்ளே சம்பத் நுழையும்போது அலுவலகம் துவங்க ஐந்து நிமிடம் நேரம் இருந்தது, மெதுவாக சென்று தனது பணியிடத்தில் அமர்ந்து தன்னை அமைதி படுத்திக்கொள்ள அந்த ஐந்து நிமிடம் போதுமானதாக இருந்தது. வேளையில் மூழ்கியவன் மதிய இடைவேளையின் போதுதான் நிமிர்ந்தான் லஞ்ச் முடித்து வேளையில் முல்கியவனை 3 மணியளவில் பொது நிர்வாகி அழைத்தார், “மாட்டினாயா என்று சிரித்தார் பக்கத்து இருக்கையில் இருக்கும் மதன் அவரை கவனியாதவன் போல் நிர்வாகியின் அறையினுள் சென்றான் சம்பத், "சம்பத் இந்த பிரிண்டர் உள்ளே பேப்பர் சிக்கிடுச்சி வெளியே வரமாட்டேன்குது அதை கொஞ்சம் பறேம்பா என்றார்"  சம்பத் அந்த சிறிய டேபிள் கலர் பிரிண்டரை தூக்கி சுவிட்சை கலை ஆராய்ந்தான் பின்பு அதில் ஒரு சுவிட்சை தட்டினான் பேப்பர் வெளியில் வந்து விழுந்தது)

பொது நிர்வாகி மகிழ்ந்து விட்டார், சூப்பர் பா இதே மாதிரிதான் என்று அவர் துவங்கிய போதே சம்பத் நடுங்கி விட்டான் “ஐயோ ஸ்டார்ட் மியூசிக்கா முடியாதே” என்று பாவமாக பார்த்தான் அவரா கண்டு கொண்டார் நோவே என்று ஒன்றரை மணி நேரம் அவரின் அனுபவத்தை அவர் மகன்  நாய்க்குட்டி சட்டை போட்டு விட்டது என்று அவன் காதில் ரத்தம் வர வைத்தார்.

       அவர் அறையில் இருந்து வெளியே வந்த சம்பத்தின் முகத்தில் கண்கள் வெளியே பிதுங்கி, நாக்கு தள்ளி, காதில் ரத்தம் வடிவதை போல் நினைத்துப்பார்த்த மதனுக்கு, ஒரே சிரிப்பு அவரை பார்த்து முறைத்த சம்பத்திடம், "லஞ்ச் பிரேக் அப்புறம் பிரிண்டர்-ல பேப்பர் சிக்கிடுசுன்னு கூப்பிட்டு அனுப்பினர் ஆனா நான் பார்க்க ஆரம்பிக்கும் முன்பே அவர் பேச ஆரம்பிச்டாறு, என்னுடைய கண் இருட்டி நெஞ்சு வலி வர மாதிரி ஒரே படபடப்பு என்னால முடியல சார்னு வந்துட்டேன் அப்புறம் தான் உன்ன கூபிட்டாரு என்று கூறி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி சம்பத்தை கடுப்பேத்தினர் மதன்.  அலுவலகம் முடித்து வீட்டிற்க்கு கிளம்பும் போதே அலுப்பாக உணர்ந்தான் சம்பத் வீட்டை அடைந்ததும் சோபாவில் அமர்ந்து மனைவி தந்த டீயை அருந்தி கொண்டிருந்தான்.

"சம்பத்" சம்பத்" வெளியில் லோகநாதனின் வாழை மண்டியில் வேலை செய்யும் பணியாள் அழைத்துக்கொண்டிருந்தான்.

வேண்டும் என்றே டீயை மெதுவாக குடித்து முடித்து வெளியில் வந்து "ஏன்யா என்ன வேணும் எதுவாக இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கலாம்னு சொல்லு இப்ப கிளம்பு என்றான்.

"முதல்ல லோகு ஐயா கூட வந்து பேசு, அதுக்கப்புறம் பாத்துக்கலாம், என்று அரை மணிநேரம் போராடி சம்பத்தை லோகநாதனிடம் அழைத்துச்சென்றான்.  பதறிபோய் உடன் வர இருந்த மனைவியை தடுத்து தனியாகவே சென்றான்.  லோகநாதன் அந்த ஏரியாவில் சொல்லி கொள்ளும் அளவிற்கு பெரியமனிதன், அரசியல் பின்புலம் உள்ளவனும் கூட, முன்னால் ரௌடி.

சென்ற இடத்தில லோகநாதனின் அருகில் நின்றிருந்தான் அந்த ஏரியாவில் பின்புறத்தில் வழை சாகுபடி செய்யும் முத்து.

“இந்தாளு எதுக்காக இங்க வந்தாரு இவரோட பேர தானே நாம கேஸ்ல கொடுத்திருக்கோம்” என்று யோசிக்கும் போதே முத்து பேச துவங்கினார்.  சம்பத் இது எல்லாமே உன்னால் தாம்பா ஐயாவே இனி இரண்டு நாளைக்கு ஒருதரம் ஒரு டேங்கு  தண்ணி சும்மா தரன்னு சொல்லிட்டாரு, எல்லா வாழை தாறு மேலையும் 10 ருபாய் கூட போட்டு எடுத்துக்குவாராம் அதனால இந்த கேஸ்க்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லன்னு கையெழுத்து போட்டுட்டேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

சம்பத்திற்கு முகமே சிவந்து விட்டது அந்த அளவு கோபம், இதுவரை அவன் இந்த கேசுக்காக 60 ஆயிரம் ருபாய் வரை செலவு செய்திருந்தான், 3 மாதம் காலம் விரையம் இத்தனையும் இந்த ஆளுடைய ஆதாயத்துக்காகவா அப்போ எங்களுக்கு தண்ணி, கோபம் கட்டு மீறுவதை உணர்ந்தான். 

"லூசாயா  நீ கையெழுத்து வாங்கும்போதே பின்வாங்கக்கூடாதுன்னு சொன்னேனா இல்லையா, முத்து தண்ணி இல்லாம பயிரெல்லாம் வாடிப்போகுது அதுவும் ஒரு வாழை கொலைக்கு 10 ருபாய் அதிகம்னும்போது வாழை மண்டி தேடி அலைய தேவை இல்லை புரோக்கர் காசும் மிட்சமாகுது, எனக்கு என் குடும்பமும், தோப்பும் தான் முக்கியம் அதனாலதான் கையெழுத்து போட்டேன்.

“அடுத்தவங்கள பத்தி  கவலையே இல்லையா உனக்கு லாபம்னா கையெழுத்து போடுவியா.  முத்து நீயும் தான் இந்த ஏரியாவில் ஐந்து வருசமா இருக்குற உன்வீட்டுக்குத் தண்ணி இல்லனதும் கோர்டுக்குப்போன அடுத்தவங்க மேல அக்கறை இருந்தா முதல்ல இருந்தே போரடிருக்கனும்பா அமைதியாக பதில் அளித்தார் முத்து.  வார்த்தைகளை மறந்தவன் போல அமைதியாகிவிட்டான்  சம்பத். 

லோகநாதன் சிரித்துகொண்டே பாருப்பா சம்பத் நான் இந்த தண்ணி பிசினஸ் ஏழு வருசமா பண்றேன் ஒரு டேன்க் தண்ணி ஆயிரத்தி ஐநூறு ன்னு, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பார்த்தாலும் 10 டேன்க் தண்ணி சப்ளை பண்றேன் எவ்வளவு தெரியுமா 10,000/- ரூபாய் வருமானம் மாசம் 3 லட்சதக்கும் மேல புரியுதா, இவ்ளோ பெரிய மோட்டார் வெச்சு தண்ணி எடுக்கரதனாலத்தான் உங்களக்கு தண்ணி இல்ல, ஆனா இப்பல்லாம் யாரு அடுத்தவன் கஷ்டத்தை யோசிக்கிறான் நானும் அந்த வகைதான், ஒரு வகையில் நீயும் அதேதான்.

இத விட சொல்லி பெட்டிஷன் போடறதும், கேஸ் போடறதும் வேஸ்ட்டு, நான் ஒழுங்கா  சொல்லும் போதே கேக்குறது உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது புரியுதா என்றார் கடுமையாக.

திடிரென்று பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் ஆகிப்போனது சம்பத்திற்கு உள்ளே உதறலை மறைத்து கோபத்தை கட்டினான் சம்பத்.

உண்மையாகவே அவனுடைய கோபம் அந்த வாழைத்தோப்புக்காரரின் மேல்தான், இத்தனை தரம் ஏரியா வாசிகள் பெட்டிஷன் போட்ட போதெல்லாம் வாழைத்தோப்பு பற்றி அதில் சேர்த்ததில்லை, ஆனால் சம்பத்தின் தலையிடல் மூலமாக கேஸ் போட்டபோது விவசாய நிலங்களுக்கு தண்ணீர் என்று அழுத்தமாக குரிபிட்டிருந்தன் இது அந்த கேஸின் அதி முக்கியமான பாயிண்ட் அதை அந்த லோகநாதன் வலைத்துப்போட்டதில் கேசின் ஆணிவேர் பிடுங்கப்பட்டதாக நினைத்தான் சம்பத்.

“சம்பத் நீ இப்போ கிளம்பு நாளைக்கு போய் கேஸ் வாபஸ் வாங்கி இருக்கணும் இல்ல உன் பொண்டாட்டி வீட்டுக்கு வரமாட்டா புரிஞ்சுதா” மிரட்டினார் லோகு.  ஒரு விதிர்ப்போடு அங்கிருந்து கிளம்பி விட்டான்  “தண்ணி மனிதனுக்கு முக்கியம் தான் ஆனால் ஒரு குடம் 5 ரூபாய், ஆனா என் செல்விக்கு விலையே கிடையாதே.

"த்" தூக்கத்தில் காலை தூக்கி தன் கணவன் மீது போட்டாள் செல்வி, போட்ட மாத்திரத்தில் பதறி அடித்து எழுந்து விட்டாள் இது ஒரு கெட்டப் பழக்கம் அவளுக்கு, கத்தப்போகிரானே என்று பயன்தவளுக்கு அன்று அவன் அமைதியாக இருப்பது ஆச்சர்யமே, அந்த அளவுக்கு கால் போட்டால் நடு இரவிலும் காட்டேரி போல கத்துவான்.

நல்ல தூக்கம் போல ஏனோ இது அவனின் இயல்பல்ல, அவளுக்கு தூக்கம் வரவில்லை அவனிடம் மெல்ல நெருங்கி அவன் தலைமுடியை விரல்களால் அலைந்தாள் கண்களை தொட்டுப்பார்த்தால், கண்ணீர் அழுதுகொண்டிருந்தான், இரண்டு கை, கால் இல்லாதவன் தனது அத்தியாவசிய தேவைகளை தானே செய்து கொள்ள இயலாது, அதைபோன்றதொரு மாபெரும் இயலாமை சம்பத்திற்கு அதனால் உண்டான கோபம் விளைவு கண்ணீர், அன்பனை இறுக அணைத்து அணைப்பால் அமைதி படுத்த முயன்றாள் துணைவி.

* img used for illustration purpose only.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.