(Reading time: 2 - 4 minutes)

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!! - ஷாஃப்ரின்

யார் கண் பட்டதோ தெரியவில்லை. ஒன்றுமே நியாபகத்திற்கு வரமாட்டேன் என்று வம்படியாக அடம் பிடித்தது. கேள்விகள் கண் எதிரே இருந்தன. எல்லாமே நன்கு பரீட்சயமானதாகவே தெரிந்தது. மின்விசிறிக்கு கீழே அமர்ந்திருந்தும் வேர்த்துக் கொட்டின.

பதிலை எங்கோ படித்த நியாபகம் ஆனால் எங்கே என்றுதான் தோன்றவில்லை. அன்றைய பரீட்சையின் மேற்பார்வையாளர் சற்று அயர்ந்து தூங்கியதால் தப்பித்தான். அன்று மட்டும் அவர் ஆந்தை போல் நோட்டமிட்டிருந்தால் சதீஷின் செமஸ்டர் முடிவு அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.

studentபரீட்சையின் போது பக்கத்தில் அமர்ந்த பையன் உண்மையில் கர்ணன் அவதாரம். தன் தாளில் உள்ள அனைத்தையும் ஒரு வார்தை விடாமல் எழுத காண்பித்து பெரும் உதவி செய்தான். தேர்வுக்கு 3 மணி நேரம் அவகாசம். ஆனால் அவன் 2 மணி நேரத்திலேயே முடித்துவிட்டான். எதை எப்படி எழுதினான் என்றே தெரியவில்லை. நிறைய மதிப்பெண்கள் வேண்டாம், பாஸ் ஆனாலே போதும். இவன் ஊருக்கு முன்னரே முடித்ததை பாரத்தபோது தற்சமயம் அதுவும் சந்தேகம் என்றே தோன்றுகிறது. மீதமுல்ல நேரத்தில் சுற்றி வேடிக்கை பார்த்தபோது தென்பட்டது.

இந்தப் பெண்களை மனமாற பாராட்டியே ஆக வேண்டும். இரவு முழுவதும் விழித்திறிந்து படித்தார்கள் போலும். அப்படி என்னதான் எழுதினார்களோ, மணி அடித்து ஆசிரியரே வந்து பேப்பரை படுங்கும் வரை எழுதிக்கொண்டே இருந்தனர்.

ன்று மதிப்பெண்கள் வரும் நாள். வீட்டில் சாப்பாடு கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை தீர்மானிக்கும் நாள். வயிறு கலக்கிக் கொண்டு இருந்தது. பெண்களுக்கு அவர்களின் தேர்வு முடிவு மகிழ்ச்சியை தரவில்லை. காரணம் கேட்டால் 100க்கு 5 மதிப்பெண் குறைவாம். அங்கு அப்படி இங்கு எந்த லட்சனத்தில் வரப்போகின்றதோ?

காப்பி அடிக்க உதவிய கர்ணன் “60 மதிப்பெண்கள்”. பேராசிரியர் ஒவ்வொருவர் பற்றியும் தனித்தனியாக அனைவர் முன்னிலையிலும் கூவிக் கூவிக் கூறினார். அடுத்தது அவர் அழைத்தது சதீஷ்யை “…..70 மதிப்பெண்கள்..”. இதை கேட்டு கோபத்தில் கொந்தளிக்கும் காப்பி கர்ணனை பார்த்து அவன் கண்கள் கூறின—

“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!?!?!?”

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.