(Reading time: 31 - 61 minutes)

 தை பிறந்தாச்சு - சித்ரா.வெ

து ஒரு பெண்கள் விடுதி, வெளியூரில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் பெண்கள் இருக்கும் விடுதி, நாளை முதல் பொங்கல் விடுமுறை, விடுதியில் தங்கி இருக்கும் பல பேர் அவரவர் ஊருக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தனர், அந்த விடுதியில் வசிப்பவர்களில் கங்காவும் ஒருத்தி.

அறையில் கட்டிலில் அமர்ந்து புத்தகம் வாசித்து கொண்டிருந்தாள் கங்கா, அவளைத் தேடி அந்த விடுதியில் இன்னொரு அறையில் இருக்கும் ரம்யா வந்தாள்.

"கங்கா உள்ள வரலாமா?"

Thai piranthachu"வா ரம்யா என்ன கேள்வி இது, நீ வர கூடாதா என்ன? உள்ள வா.

"சும்மா தான் கேட்டேன் நீ சீரியஸா புக் படிச்சிட்டு இருந்தியா அதான் கேட்டேன்"

"ஆமா ரம்யா கதை இன்ட்ரஸ்டா இருந்துச்சா அதான் படிச்சுட்டு இருந்தேன்"

"என்ன கங்கா உன்னோட ரூம் மேட்ட காணோம் அதுக்குள்ள ஊருக்குப் போயாச்சா?"

"ஆமா ரம்யா நாளைக்கு போகி இல்லயா, அதான் இன்னிக்கே போயாச்சு"

"அவளுக்கு என்ன கவர்ன்மெண்ட் வேலை 4 டேஸும் லீவ் கொடுத்துடுவாங்க, எங்க ஆபிஸ்ல 2 டேஸ் தான் லீவ், உனக்கு எத்தனை நாள் லீவ் கங்கா?"

"எனக்கும் 4 டேஸ் தான் லீவ் தான் ரம்யா."

"ஏன் கங்கா நீ ஊருக்குப் போகலயா?"

அவள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை கங்காவிற்கு, ஏதாவது சொல்லித்தானே ஆக வேண்டும்.

"இல்லை ரம்யா போகல"

"ஏன் கங்கா நீ விலேஜ்ல இருந்து வந்ததா கேள்விப்பட்டேன், ஏன் போகல?"

"என்னோட குடும்பத்தோட கொஞ்சம் பிரச்சினை, அதான் போகல."

"சரி கங்கா அது உன்னோட பர்சனல் மேட்டர், அத நான் கேக்கமாட்டேன் ஆனா பேமிலியிலிருந்து யாரும் வராம இந்த ஹாஸ்டலில் ரூம் கொடுக்கமாட்டாங்களே, நீ எப்படி இங்க இருக்க? "

"அது என்னோட ஃப்ரண்டோட அத்தை வார்டனுக்கு தெரிஞ்சவங்க அதான் ரம்யா இங்க இருக்க முடிஞ்சது"

"சரி கங்கா நா வந்ததயே மறந்துட்டேன் பாரு, இந்த ஹாஸ்டலில் யார் யாரெல்லாம் ஊருக்குப் போகலயோ அவங்கல்லாம் இங்கயே பொங்கல் செலப்ரேட் பண்ணலாம்னு இருக்கோம், அதான் யாரெல்லாம் ஊருக்குப் போகலனு பார்க்க வந்தேன், நீ ஊருக்குப் போகல இல்ல நீயும் எங்க கூட செலப்ரேஷன்ல கலந்துக்கனும் சரியா?"

"அப்படியா நல்ல விஷயம் தான் ரம்யா நானும் கலந்துக்கறேன், நீ ஊருக்குப் போகலயா ரம்யா?"

"அது என்னோட அண்ணா அண்ணிக்கு இது தலைப் பொங்கல், எனக்கு அவங்க மட்டும் தான் ரிலேஷன், அவங்க ரெண்டுப்பேரும் அண்ணியோட வீட்ல செலப்ரேட் பண்ணுவாங்க, என்னயும் கூப்டாங்க ஆனா நான் தான் அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு போகல, சரி கங்கா இன்னும் யாரெல்லாம் ஊருக்குப் போகலனு பார்த்து நா இந்த விஷயத்த சொல்லனும் நா வரேன், பை.

" ம் பை ரம்யா "

ந்த மருத்துவமனை வாசலில் அந்த கார் வேகமாக வந்து நின்றது, அதில் இருந்து இறங்கி வேகமாக அந்த மருத்துவமனையின் உள்ளே சென்று வரவேற்பறையில் விசாரித்து அந்த அறை நோக்கிச் சென்றான் சக்தி, அந்த அறை வாசல் அருகே உட்கார்ந்திருந்தால் யமுனா, அவளருகில் சென்றான் சக்தி.

"யமுனா அம்மாவுக்கு இப்போ எப்படி இருக்கு"

"இப்போ பரவாயில்லை மாமா, இப்போ தூங்கிட்டுருக்காங்க"

"நா ஊருக்கு போகும்போது நல்லாத்தானே இருந்தாங்க? இப்போ என்ன ஆச்சு யமுனா?

"மாமா, பிரகாஷ் அவங்க வீட்டுக்கு வந்து இருக்கறதா அப்பாக்கு தகவல் கிடைச்சது அவர பார்க்க அப்பா போனாரு, அந்த பிரகாஷ்க்கு அக்காவப்பத்தி எந்த விவரமும் தெரியல, அதப்பத்தி அம்மாக்கிட்ட வந்து அப்பா சொன்னாரு, அதக்கேட்டு அக்காவப்பத்தி எதுவும் தெரியலயேனு அழுதாங்க, அப்படியே மயங்கிட்டாங்க, உடனே ஹாஸ்பிட்டல் கொண்டு வந்து சேர்த்துட்டோம்"

"ஆமா அப்பா எங்க போய்ட்டாரு?"

"அப்பா டாக்டரை பார்க்க போயிருக்காரு மாமா"

அப்பொழுது டாக்டரின் அறையிலிருந்து வந்தார் கேசவன்

"சக்தி நீ எப்பப்பா ஊரிலிருந்து வந்தாய்? நாளைக்குத் தானே வருவதாக சொன்னாய்"

"வேலை இன்றைக்கே முடிஞ்சிடிச்சு மாமா அதான் உடனே கிளம்பிட்டேன், வீட்டுக்கு வந்தா விஷயத்த சொன்னாங்க மாமா, அப்படியே இங்க வந்துட்டேன், ஆமா டாக்டர் என்ன சொன்னாங்க?"

"உடம்புல ஒன்னும் பிரச்சினை இல்ல மனசுல தான் பிரச்சினை அத சரி பண்ணப் பாருங்க இல்ல போக போக உடம்புலயும் பிரச்சனை வர வாய்ப்பு இருக்குனு சொல்றாரு சக்தி"

" மாமா பிரகாஷ்க்கும் கங்காவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு நான் தான் சொல்லியிருக்கேனே, நீங்க அத நம்பலயா? ஏன் பிரகாஷ் வீட்டுக்குப் போனீங்க? அத அக்காக்கிட்ட வேற சொல்லி இருக்கீங்க, கங்கா வீட்ட விட்டு போனதில் இருந்து அக்கா மனசு உடைஞ்சுட்டாங்கனு தெரியுமில்ல?"

"பிரகாஷ் அவங்க வீட்டுக்கு வரும்போது தகவல் சொல்ல சொல்லி ராமுக்கிட்ட சொல்ல சொன்னேன் சக்தி, அவன் உன்னோட அக்கா இருக்கும் போதே வந்து சொல்லிட்டான், அவளும் நீங்க போய் பாருங்கனு ஒரே நச்சரிப்பு, கங்கா அவன் கூட போயிருக்கமாட்டானு நா சொன்னேன் ஆனா அவ கங்காவப்பத்தி ஏதாவது தகவலாவது அந்த பையனுக்கு தெரிஞ்சுருக்கலாம் போய் கேட்டுட்டு வாங்கனு அனுப்பிவிட்டாப்பா, அப்புறம் எப்படி அந்த தகவலை அவளிடம் சொல்லமல் இருக்க முடியும் சொல்லு.

"அப்பா சரி விடுங்க, இப்பத்தான் அம்மாவுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே"

"அப்படி விட முடியாதும்மா, இப்படியே விட்டா இரத்த அழுத்தம், இதய நோய் இதெல்லாம் வர வாய்ப்பு இருக்குனு டாக்டர் சொல்லியிருக்காரும்மா"

"நீங்க கவலை படாதீங்க மாமா அப்படி எதுவும் நடக்காது, எனக்கு கங்காவப்பத்தி சில தகவல் கிடைச்சிருக்கு"

"என்னப்பா சொல்ற"

"என்ன மாமா சொல்றீங்க" என்று ஒரே நேரத்தில் கேட்டனர், கேசவனும் யமுனாவும்."

"ஆமாம் மாமா, கங்காவோட ப்ரண்ட்ஸ்கிட்ட விசாரிச்சோம் இல்லயா, அதுல சில பேரை அப்போ பார்க்க முடியாமல் போய்டுச்சு, அவங்க வீட்ல என்னோட செல் நம்பர் கொடுத்துட்டு வந்தேன், அதுல கவிதானு ஒரு பொண்ணு எனக்கு ஃபோன் பண்ணுச்சு, நம்ம கங்கா வீட்ட விட்டு போவதற்கு முன்னாடி அந்த பொண்ணுக்கு ஃபோன் பண்ணி இருக்கா,அவக்கிட்ட சென்னையில் இருக்க இன்னொரு ஃப்ரண்ட்டோட அட்ரஸ் கேட்ருக்கா,அந்த பொண்ணும் அட்ரஸ் கொடுத்திருக்கு, அந்த சென்னையில் இருக்க ஃப்ரண்ட விசாரிச்சா கங்காவப்பத்தி ஏதாவது தெரிய வாய்ப்பு இருக்குனு கவிதா அந்த பொண்ணோட அட்ரஸ கொடுத்திருக்கு, அதான் செய்யவேண்டிய வேலையை சீக்கிரம் முடிச்சிட்டு உங்கக்கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன், இங்க வந்தா அக்காவிற்கு இப்படி இருக்கு."

"நீ உடனே கிளம்பி சென்னைக்கு போ சக்தி, கங்காவப்பத்தி ஏதாவது தெரியுதா பாரு, ஜானகிய நாங்க பாத்துக்கறோம்."

"சரி மாமா அக்காக்கிட்ட இந்த விஷயத்த இப்போ சொல்ல வேண்டாம், கங்காவப்பத்தி ஏதாவது தெரிஞ்சா அப்புறம் சொல்லிக்கலாம்."

"சரிப்பா நாங்க பாத்துக்கறோம், நீ கிளம்பு."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.