(Reading time: 31 - 61 minutes)

திருமண தேதி நிச்சயமானதும் கங்காவை வெளியே அழைத்து செல்ல நினைத்தான் பிரகாஷ், ஆனால் கங்கா அதை விரும்பவில்லை திருமணத்திற்கு பிறகு தான் அனைத்தும் என்று கூறி விட்டாள், பிரகாஷும் அவள் விருப்பத்திற்கு விட்டுவிட்டான், திருமணத்திற்கு முன்னாள் திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச் செல்ல மாப்பிள்ளை வீட்டார் வரவில்லை, வெகு நேரம் ஆகியும் வராததால் சக்தி நேரில் பார்த்து வர சென்றான், மாப்பிள்ளை வீட்டார் வரும் வழியில் அவர்கள் வந்த வண்டி சிறு விபத்துக்குள்ளானது, அதில் இருவருக்கு அடிபட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், பெண்ணின் ராசி சரியில்லாததால் இந்த விபத்து நடந்தது என்று திருமணத்தை நிறுத்தி விட்டார்கள், இதை அறிந்த சக்தி அவர்களிடம் மன்றாடினான், அதை அவர்கள் ஏற்கவில்லை, கங்காவைத்தான் மணப்பேன் என்ற பிரகாஷை மிரட்டி பணிய வைத்து விட்டார்கள், திருமணம் நின்றது.

திருமணம் நின்றதால் கேசவனும் ஜானகியும் உடைந்து போயினர் பெண் ராசிக்கெட்டவள் என்றால் இனி திருமணம் நடப்பது கஷ்டம் என்று புலம்பினால் ஜானகி, கங்கா தன்னால்தான் அவள் பெற்றவர்களுக்கு கஷ்டம் என்று வருந்தினாள், சக்தி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான், திருமணத்திற்கு வந்தவர்கள் சக்தி கங்காவை மணக்க வேண்டுமென்றனர், கேசவனும் ஜானகியும் சக்தியிடம் கேட்க தயங்கினர், இவர்களின் தயக்கத்தை புரிந்துக்கொண்ட சக்தி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான், கங்காவின் சம்மதத்தை கேட்கச் சொன்னான், கங்காவிடம் அவள் பெற்றோர்கள் சக்தி உன்னை மணக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம், சக்தி கூறியதால் பிரகாஷுடன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டோம், சக்தியை மணந்து கொண்டால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்று கூறினர், பெற்றவர்களின் விருப்பத்தை தெரிந்துகொண்ட கங்கா திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாள்.

குறித்து வைத்த முகூர்த்தத்தில் சக்தி கங்கா திருமணம் நடைப்பெற்றது, இந்த இக்கட்டான சூழ்நிலையில் தன் எதிர்ப்பை பத்மா காட்டவில்லை, அமைதியாக ஆசீர்வாதம் வழங்கினார், நந்தினி கோபத்தோடு சென்றுவிட்டாள்.

அன்று அவர்கள் முதல் இரவில் சக்தி கங்காவிடம் திடீரென திருமணம் நடந்துவிட்டது, ஆனால் நம் வாழ்க்கையை மெதுவாக ஆரம்பிக்கலாம் என்று கூறி தரையில் பாயைப் போட்டு படுத்துவிட்டான், சக்தியின் மனதில் தன் காதலை கங்காவிடம் சொல்லிய பின் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினத்தான், கங்காவோ தான் பிரகாஷை விரும்பவில்லை, அம்மா அப்பாவின் விருப்பம் தான் என்னுடையதும் என்று சக்தியிடம் சொல்லி அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தாள், ஆனால் விதியோ வேறொன்று நினைத்தது.

வர்கள் பயணித்த அந்த கார் அவர்கள் வீட்டின் முன் வந்து நின்று அவர்களின் பழைய நினைவுகளை கலைத்தது.

கார் சத்தம் கேட்டு கேசவன், ஜானகி, யமுனா மூவரும் வெளியே வந்தனர், காரில் இருந்து இறங்கினாள் கங்கா, ஓடி வந்து அணைத்துக் கொண்டார் ஜானகி.

"கங்கா எங்கள விட்டு எங்கம்மா போய்ட்ட, நீ இல்லாம இந்த வீடே எப்படி இருந்தது தெரியுமா? ஏம்மா இப்படி செஞ்ச?"

"அம்மா என்ன மன்னிச்சிடுமா, நா போனதுக்கு அப்புறம் உனக்கு உடம்பு சரியில்லாம போகும்னு நா நினைக்கவேயில்லமா, இப்போ உங்களுக்கு எப்படி இருக்குமா?"

"உங்கம்மா நேத்துக்கூட ஹாஸ்பிட்டல இருந்து தான் வந்தாள், நீ எப்போ வீட்டவிட்டு போனாயோ, அப்போ இருந்து எப்பவும் அழுதுக்கிட்டு தான் இருப்பா, அப்பப்போ ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் நடக்கற வேலை தான் இவளுக்கு, எப்போ உன்ன பார்த்துட்டதா சக்தி ஃபோன் பன்னானோ அப்பதோலிருந்து அவ சரியாயிட்டா மா" என்று கேசவன் கூறினார், ஓடிப் போய் அப்பாவை அணைத்துக் கொண்டாள் கங்கா.

"அப்பா எப்படி இருக்கீங்க, என்ன மன்னிச்சிடுங்க, உங்களுக்கெல்லாம் கஷ்டத்தை கொடுத்துட்டேன்"

"சரி விடுமா எல்லாம் நடக்கனும்னு இருக்கு, வா உள்ளே போகலாம்" அனைவரும் உள்ளே சென்றனர், சக்தி எல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான்.

கங்கா வீட்டிற்கு வந்து சில நிமிடங்கள் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தனர், பிறகு ஜானகி அவள் வீட்டைவிட்டு போனதை பற்றி கேட்டார், சக்தி இப்போது இதை கேட்க வேண்டாம் என்று கூறினான், ஆனால் ஜானகி அதை கேட்கவில்லை. கங்காவை பார்த்து கேட்டாள்.

"கங்கா உனக்கு விருப்பமானு கேட்டுத்தானே நாங்க அன்றைக்கு உங்க கல்யாணத்தை நடத்தினோம் அப்புறம் ஏன் வீட்டை விட்டு போனாய்'

"அக்கா ஒரு லெட்டர் கூட எழுதி வைக்காம கிளம்பிட்ட, நாங்கெல்லாம் என்ன நினைக்கிறது, எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா? ஊர்ல இருக்கரவங்கல்லாம் நீ பிரகாஷ் கூட ஓடிப்போய்ட்டனு எவ்வளவு தப்பா பேசினாங்க தெரியுமா? " - யமுனா.

"யமுனா கொஞ்சம் அமைதியா இரு, பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கோமில்ல" - கேசவன்.

சக்திக்கு முள்ளின் மீது இருப்பது போலிருந்தான், கங்காவை இப்படி நிற்க வைத்து கேள்வி கேட்பது அவனுக்கு பிடிக்கவில்லை, வேறு யாராவது இருந்திருந்தால் அவர்கள் நிலைமையே வேறு, ஆனால் தன் அக்கா, மாமா என்பதால் அமைதியாக இருக்கிறான்.

"என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல, நா பிரகாஷ் கூட ஓடிப்போனேனா, நீங்களும் அதெல்லாம் நம்பறீங்களா?" கங்காவின் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

"கங்கா உன்னை நாங்க யாரும் அப்படி நினைக்கல, ஊர்க்காரங்க எப்படி வேணா பேசலாம் அதெல்லாம் உண்மை ஆகாது" உன்னப்பத்தி எங்களுக்கெல்லாம் தெரியும். - சக்தி.

"அம்மா கங்கா, நீ ஊர விட்டு போகறதுக்கு முன்னாடி கடைசியா பிரகாஷ பார்த்துருக்க, அத சில பேர் பார்த்திருக்காங்க, அதுக்கப்புறம் பிரகாஷும் ஊர்ல இல்ல, நீயும் ஊரவிட்டு போய்ட்ட, இதெல்லாம் வச்சு ஊர்க்காரங்க கண்டபடி பேசறாங்க ஆனா சக்தி சொல்ற மாதிரி அதெல்லாம் நாங்க நம்பல, ஆனா நீ ஏன் வீட்டவிட்டு போனாய், அது எங்களுக்கு தெரிஞ்சாகனும் இல்லையா, என்னப் பிரச்சினைன்னு சொல்லேம்மா." - கேசவன்.

"என்னப்பா நான் ஒன்னும் சொல்லிக்காம போகலை, லெட்டர் எழுதி வச்சுட்டு தான் போனேன், அதை நீங்க பார்க்கலையா, அதுல எல்லாம் தெளிவாக எழுதி இருந்தேனே அப்புறம் ஏன் இப்படி சொல்றீங்கனு தெரியல" - கங்கா.

"என்னம்மா சொல்ற, நீ லெட்டர் எழுதி வச்சிட்டு போயிருந்தா எங்களுக்கு தெரியாதா" - கேசவன்.

"கங்கா லெட்டர் எழுதி வச்சியோ இல்லையோ, இப்ப சொல்லு என்ன பிரச்சினைனு" - ஜானகி.

"சொல்ற என்ன நடந்துச்சுனு எல்லாமே சொல்றேன், எங்க கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள் என்ன பார்க்கனும்னு பிரகாஷ் ஃபோன் பண்ணாரு, என்கிட்ட கொஞ்சம் பேசனும்னு சொன்னாரு, என்னால வர முடியாதுனு சொன்னேன், அப்போ ரொம்ப கெஞ்சி கேட்டதால நான் அவரை போய் பார்த்தேன், அப்போ.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.