(Reading time: 31 - 61 minutes)

"ந்தினி நான் சொல்வதை கேளு, இரண்டு மனசும் சேர்ந்தா தான் வாழ்க்கை நல்லா இருக்கும், கட்டாயத்தின் பேரில் வாழ்க்கை அமைஞ்சா அது நல்லா இருக்காது, அதுக்கு என்னோட வாழ்க்கையே சாட்சி."

"அத்தை என்ன சொல்றீங்க"

"ஆமா நந்தினி, எனக்கு 30 வயசாகியும் கல்யாணம் ஆகாம இருந்துச்சு, எங்க வசதிக்கு ஏத்த மாதிரி உங்கப்பாவும் எவ்வளவோ மாப்பிள்ளை பார்த்தாரு, ஆனால் எதுவும் சரி வரல, அப்புறம் கடைசியா ஒரு மாப்பிள்ளை அமைஞ்சுது, அந்த கல்யாணத்திற்கு சக்தி அப்பா தான் உதவி செஞ்சாங்க, குத்தகை விஷயமா அந்த ஊருக்கு வந்தவரு எங்க அண்ணனுக்கு பழக்கமானாரு, உதவி செஞ்சது மட்டுமில்லாம என்னோட கல்யாணத்திற்கும் வந்தாரு, கல்யாணத்தப்போ மாப்பிள்ளை வந்த வண்டி விபத்துக்குள்ளாகி மாப்பிள்ளைக்கு அடிபட்டு என்னோட கல்யாணம் நின்னு போய்டுச்சு, அப்போ நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன், அப்போ என்னை காப்பாற்றி அவரே என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு.

ஆனால் வெளிப்படையா என்னை மனைவியா அவர் சொல்லிக்கல, ஜானகியோட மனசு கஷ்டப்படும்னு என்னை எங்க ஊரிலியே குடி வச்சாரு, கடமைக்காக என்னோடு வாழ்ந்தாரு, மாசத்துக்கு இரண்டு முறை தான் வீட்டிற்கு வருவாரு, அவர் வீட்டில் இல்லாதப்போ எனக்கு என் அண்ணன் வீடு தான் பாதுகாப்பு, சக்தி பிறந்ததுக்கப்புறம் அவன் மேலே அவர் உயிரா இருந்தாரு, ஆனால் அப்பவும் எங்கள அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போகனும்னு நினைக்கல, அவர் இறந்த போது மத்தவங்க சொல்லி தான் நான் அவரோட மனைவினு தெரிய வந்தது, அப்பவே நான் உடைஞ்சுப் போயிட்டேன், என்னால ஜானகி கூட ஒட்ட முடியல, ஆனால் சக்திய அவங்ககிட்ட இருந்து நான் பிரிக்க நினைக்கல, அவனோட உறவுகளும், உரிமையும் கிடைக்கனும்னு நான் நினைச்சேன்.

சாமிநாதனின் மனைவினு உரிமை கிடைச்சதுக்கு அப்புறம் என்னோட அண்ணன் குடும்பத்த மறந்திட கூடாதுனு அவரை இங்க அடிக்கடி வரவழைத்தேன், உன்னையும் என்னோட மருமகளாக்கனும்னு நினைச்சேன், ஆனால் சக்தி மனசுல கங்கா தான் இருந்தா, அவளுக்கு கல்யாணம் ஏற்பாடு ஆனப்போ சக்தியை நினைச்சு நான் ரொம்ப வருத்தப்பட்டேன், ஆனால் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவன் கங்காவை கல்யாணம் செஞ்சு கிட்டப்போ அவங்க அப்பா ஞாபகம் தான் வந்தது, அதனாலதான் தான் நான் அமைதியாக இருந்தேன், ஆனால் கங்கா வீட்டை விட்டு போய் என்னென்னவோ நடந்திடுச்சு, அப்பவும் சக்தி அவளுக்குகாக காத்துகிட்டு இருக்கான், இங்க பாரு நந்தினி, விருப்பம் இல்லாத ச்க்திக்கூட உன்னோட வாழ்க்கை நல்லா அமையாதும்மா, இப்போ கங்கா தான் அவனோட மனைவி, அத மாத்த முடியாது, உனக்கென்ன குறைச்சல் உனக்கு நல்ல மாப்பிள்ளையா நான் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்."

"எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க, நான் பெரிய தப்பு பண்ணிட்டேன், கங்கா நீ தான் என்ன முக்கியமா மன்னிக்கனும், உனக்கு எவ்வளவு பெரிய அநியாயம் பண்ணிட்டேன்."

"பரவாயில்லை நந்தினி, எதுவுமே தெரியாம நான் இருந்ததுக்கு இந்த தண்டனை எனக்கு தேவை தான்"

"ஆமா கங்கா எதையும் இங்கேயே பேசி தீர்க்காம இப்படி வீட்டை விட்டு போனது தப்புமா"

"ஆமா சின்னப்பாட்டி நான் செஞ்சது தப்பு தான், என்னை மன்னிச்சிடுங்க"

"சின்னம்மா என்னையும் மன்னிச்சிடுங்க, என்னால தானே உங்களுக்கு ரொம்ப கஷ்டம்"

"என்ன ஜானகி இதுல உன்னோட தப்பு என்ன இருக்கு, உன்மேலே எனக்கு எப்பவும் கோபம் கிடையாதுமா, அதனால நீ மன்னிப்பு கேக்க வேண்டிய அவசியம் கிடையாது"

"அம்மா என்னையும் மன்னிச்சிடும்மா, உன்னை பத்தி தெரிஞ்சுக்காம நான் ரொம்ப கோபப்பட்ருக்கேன்"

"என்ன சக்தி இது , உன்னோட கோபத்தை நான் பெருசா எடுத்துக்கிட்டது கிடையாது, சரி அத விடு, இங்கப்பாரு சக்தி, நீயும் கங்காவும் இன்னையோட நடந்ததையெல்லாம் மறந்துடனும், நாளைக்கு தை பிறக்க போது, அதோட உங்க வாழ்க்கையையும் புதுசா ஆரம்பிக்கனும் சரியா, என்ன ஜானகி நான் சொல்றது சரிதானே?"

"சரி தான் சின்னம்மா, நானும் இவர்கிட்ட இதைதான் சொன்னேன், சக்தி உங்களுக்கு நாளைக்கு தலைப்பொங்கல் அதை சிறப்பா கொண்டாடனும், நிறைய வேலை இருக்கு."

"அக்கா நீங்க என்ன ஆசைப்படறீங்களோ, அதையே செய்ங்க, கங்காவும் நானும் உங்க சொல்படி கேக்கறோம்."

"அத்தை நானும் என்னோட மனசுல இருந்த தப்பான விஷயத்தெல்லாம் மறந்துட்டு, ஒரு புது மனுஷியா உங்க கூட பொங்கல் கொண்டாடப்போறேன்"

"கண்டிப்பா நந்தினி உங்க அப்பா அம்மாவையும் இங்க கூப்பிடு, எல்லோரும் சேர்ந்து பொங்கல் கொண்டாடலாம்."

"ஹை நாளைக்கு அப்போ ரொம்ப ஜாலியா இருக்கப் போகுது"- யமுனா.

எல்லோரும் சேர்ந்து பொங்கலை சிறப்பாக கொண்டாடினர், அன்று இரவு கங்கா அவள் அறைக்கு வந்தாள், அங்கு சக்தி அவளுக்குகாக காத்துக்கொண்டிருந்தான்.

"மாமா என்னை மன்னிச்சிடுங்க, உங்க மனசை புரிஞ்சுக்காம, நான் உங்களை விட்டு போயிட்டேன்."

"என்ன கங்கா மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு, நான் என் மனசுல இருந்ததை சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் நடந்திருக்குமா, என்ன என்னை பிடிக்காம தான் நீ போயிட்டியோனு நான் நினைச்சேன், இப்ப சொல்றேன் கங்கா உன்னை நான் ரொம்ப நேசிக்கிறேன்."

"மாமா நானும் உங்களை ரொம்ப நேசிக்கிறேன், எனக்கு இது வரைக்கும் இது தெரியல, எப்போ நந்தினி உங்களை விரும்புவதா சொன்னாளோ, உங்களை விட்டு பிரியனும்னு நான் நினைச்சேனோ, அப்பத்தான் உங்க மேல இருந்த காதல் எனக்கு தெரிஞ்சுது."

"கங்கா இந்த நொடி இந்த உலகத்துலயே சந்தோஷமாக இருப்பது நானாக தான் இருப்பேன், இந்த நாளை என்னால மறக்க முடியாது "

"நானும் தான் மாமா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்"

"கங்கா இந்த இரவெல்லாம் இப்படியே பேசிகிட்டு தான் இருக்கப் போறோமா, வேற ஒன்னும் கிடையாதா?"

"போங்க மாமா எனக்கு வெட்கமா இருக்கு"

அவள் வெட்கத்தில் அவன் மயங்கி அவளை அணைத்துக் கொண்டான்.

தை பிறந்தாச்சு, அவர்கள் வாழ்வு மலர்ந்தாச்சு.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.