(Reading time: 3 - 6 minutes)

வச்சுட்டாய்யா ஆப்பு! - ஷாஃப்ரின்

டியது ஓடியதுதான். கட் அடித்தது அடித்ததுதான். நினைத்தால் கூட இனி கல்லூரி உள்ளே செல்ல முடியாது. கேட்டை இழுத்து மூடி விட்டார்கள்.

“மாதிரி பரீட்சை தானே நாளைக்கு அந்த ஆள்கிட்ட ஏதாவது சாக்கு சொல்லிக்கலாம்” என்றான் சரவணன்.

“ஒருவேளை மாட்டிக்கிட்டோம்! வயசு பசங்க, காஸ்ட்லீ ஜீன்ஸ் என்றெல்லாம் அந்த சொட்டை பாரக்க மாட்டான்.. கிலீ கிலீன்னு வீடு கட்டி அடிப்பான்” என நடுங்கினான் கார்த்திக்.

Shocked“ஒன்னுமே படிக்கலை உள்ளே போய் உட்கார்ந்தா மட்டும் அறிவு அருவியா கொட்டுமோ? அதெல்லாம் மாட்ட மாட்டோம், அந்தாளுகிட்ட நா ஒரு காரணம் சொல்லிட்டேன், பயப்படாம நாம மூனு பேரும் எங்க வீட்டுலேயே இருந்து நாளைய பரீட்சைக்கு படிக்கலாம்” என்று சிவா மற்ற இருவரையும் தன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

மாலை ஐந்து மணி இருக்கும் வாசல் திண்ணையில் அமர்ந்திருந்த சிவாவின் தாத்தா அவசரமாக அவனை கூப்பிட்டு “இந்தா சிவா! நீ இன்னிக்கு பரீட்சை எழுத போவலைல.. அந்தா பாரு உன் வாத்தியாருன்னு நினைக்கறேன், நம்ம வீட்ட விசாரிச்சு இந்த பக்கம்தா வாராரு.. நீ சீக்கரம் போய் உள்ளே ஒலிச்சுக்கோ உன்ன கேட்டா இங்க இல்லன்னு சொல்லிட்றேன் போ போ..” வெளியே வந்து எட்டிபார்த்த சிவா

 “ஐயய்யோ!! தாத்தா மொதல்ல நீ போய் உள்ளே ஒலிச்சுக்கோ இன்னைக்கு நீ மண்டைய போட்டேன்னு சொல்லிதான் நா லீவே வாங்கிருக்கேன்”

தாத்தா “!!!...”

ஒரு வழியாக தாத்தாவையும், துக்கம் விசாரிக்க வந்த ஆசிரியரையும் சமாளித்து அடுத்த நாள் பரீட்சை எழுத வருவதாகவும் வாக்களித்தான்.

ஆனால் மூவரும் அன்று முழுவதும் டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்ததில் அடுத்த நாள் பரீட்சையையும் மறந்தார்கள், படிக்கவும் மறந்தார்கள்.

இன்று வீட்டில் இருப்பது சரியல்ல, தாத்தாவையும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என கூறியாயிற்று. சிவா, சரவணன், கார்த்திக் மூவரும் தியேட்டருக்கு சென்று பொருமையாக படம் பார்த்துவிட்டு பகல் நேரம் கல்லூரிக்கு சென்றனர். தெளிவான திட்டத்தோடுதான்.

சரவணனின் ஒன்றுவிட்ட அக்காவுக்கு கல்யாணம், அங்கு சென்றுவிட்டு பரீட்சைக்கு செல்லலாம் என பைக்கில் வரும்போது சைக்கில் மோதியதில் சேற்றில் விழுந்து சரியான நேரத்தில் பரிட்சைக்கு வரமுடியவில்லை என ரோட்டில் உள்ள சேற்றை தானாக அல்லி மேலெல்லாம் பூசிக்கொண்டு ஆசிரியர் முன்வந்து நின்றனர். நிலமையை புரிந்த அவர் தாராள மனதோடு ஒரு வாரம் கழித்து இந்த பரீட்சையை மூவரும் எழுதலாம் என அனுமதி வழங்கினார்.

கிடைத்ததுதான் வாய்ப்பு என சுவற்றில் முட்டாத குறையாக புத்தகத்தையே கரைத்து குடித்து குறித்த நாளன்று மூவரும் பரீட்சை எழுத ஆஜராயினர்.

ஆசிரியர் மூவரையும் தனித்தனி அறையில் அமர வைத்தார். கேள்வித்தாளை கையில் கொடுத்து மூன்று மணி நேரத்திற்குள் எழுத வேண்டும் என கூறி அவ்விடம் விட்டு சென்றார்.

வினாத்தாளை பார்த்ததும் சிவா, சரவணன், கார்த்திக் அதிர்ச்சியில் வெட வெடத்துப்  போயினர். அதில் கேட்கப்பட்டது மூன்றே மூன்று கேள்விகள்தான்:

  1. நீங்கள் சென்ற கல்யாணத்தில் மாப்பிள்ளை பெயர் என்ன? – 50 மார்க்
  2. மாப்பிள்ளை எந்த நிற சட்டை அணிந்திருந்தார்? –- 25 மார்க்
  3. திருமணம் நடந்த மண்டபத்தின் பெயர் என்ன? – 25 மார்க்

முக்கிய குறிப்பு “மூவரின் பதிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்”

இதை பார்த்தபின் இவர்கள் மனதில் தோன்றிய ஒரே கேள்வி “என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்களேம்மா!!!”        

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.