(Reading time: 10 - 20 minutes)

என் செல்ல சென்னை - சித்ரா

This is entry #05 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

டடடா அவ அழகு அடடடா அவ ....... ஹய் பிட்சில் அலறி கொண்டிருந்த பாட்டுக்கு ஏற்றார் போல மெல்ல உடலை அசைத்த படியே கிளம்பி கொண்டிருந்தாள் ஜனனி , 

பட்டென்று பாட்டை அணைத்தபடி ''சீக்கிரம் கிளம்பு பிசாசே நேரமாச்சு'' என்றாள் அம்மா 

''ராஜம் இன்னைக்கு டிபன் என்ன'' என்று அப்பா குரலில் மகள் கேட்பதை பார்த்து இயல்பாய் விரியும் புன்னகையை அடக்கி மறுபடியும் அதட்டினாள் , 

Chennai''சீக்கிரம் ஆபீஸ்லேர்ந்து வர வழிய பார் , இன்னைக்கு லீவ் போடுனாலும் கேட்க மாட்டேங்குற இந்த மழையிலும் போன்னுங்கிற''.....

''கூல் மம்ஸ்'' என்றபடியே அம்மா ஊட்டிவிட்ட தோசையை சாப்பிட்டு கிளம்பியவளுக்கு அப்போது தெரியாது , அவள் மறுபடியும் அம்மாவை அன்றைய பொழுது பார்க்க மாட்டாள் என்று ...

 '' ம்ம் சொல்லுங்க ''... 

''என்ன இதையே தான் பத்து நிமிஷமா சொல்ற வேற எதாவது பேசேன் ''என்று போனில் நாளை மறுநாள் கல்யாணம் பண்ணிக்கொள்ள போகும் ப்யன்சியிடம் கொஞ்சிக் கொண்டிருப்பவன் அஸ்வந் ,

 மென் சிரிப்புடன் பேசிக்கொண்டிருந்த மகள் வர்ஷினியை பார்த்த லக்ஷ்மிக்கு மனம் கனிந்தது ,கூடவே நடக்க வேண்டிய கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற பயமும் இருந்தது, அவர்களுடைய சொந்த பந்தம் பெரும்பாலும் சென்னையில் இருந்ததால் வீட்டில் கல்யாண கூட்டம் என்று ஏதும் இல்லை , தலைக்கு மேல் வேலை தான் இருந்தது ,மறுநாள் மதியம் நாள் விருந்துக்கு மண்டபம் போய் சேர வேண்டும் , அதில் எந்த தடையும் இல்லை என்றால் வேறு பிரச்னை இல்லை, தன் கணவர் எப்போதும் சொல்வது போல் நல்லதே நினைப்போம் என்று மனதை தேற்றி வேலையை பார்க்க ஆரம்பித்தாள் .

 '' ன்னைக்காவது அந்த கார்பெண்டர் வருவானா , கொல்லகதவை மூடிறதுகுள்ள உயிர் போறது'' என்று சலித்து கொண்ட மனைவி ரேவதிக்கு

 ''பொறுமையா தான் இருக்கனும் அவனுக்கும் இந்த மழையில் வந்து போறது சுலபம் இல்லையே'' என்றார் மாதவன் 

 இருவரும் டல்லஸில் இருக்கும் மகன் வீட்டில் தங்கி இருந்துவிட்டு திரும்பி வந்து ஒரு வாரம் தான் ஆகிறது ,

பேத்தியை ஆறு மாசமாய் கொஞ்சியபோது சுகமாய் தான் இருந்தது .ஆனால் இந்தியா திரும்பி பூட்டி இருந்த வீட்டை சுத்தம் பண்ணி குடித்தனம் பண்ணுவதற்குள் போதும் போதும் என்று ஆனது .முப்பது வருடம் முன் கட்டிய வீடு , இப்போ இரண்டு வருடம் முன் மாடியில் சகல வசதியுடன் ஒரு ரூம் மகன் வந்தால் தங்குவதற்கு என்று கட்டி இருக்கிறார் , மாடிப்படி வெளியில் தான் இருந்தது ,மொத்தமும் இடித்து கட்டாததால் தினம் ஒரு ரிப்பேர் பார்ப்பதே பொழைப்பு ஆனது ,ஆனால் மாடிப்படி வெளியில் இருந்தது அவர்களுக்கு யமனாய் வந்து முடியும் என்று யாரும் எதிர்பார்கவில்லை .

''வூட்டை விட்டு என்கியம் போகாத , நா ஜல்தியா வூட்டு வேலை முடிச்சிட்டு ஓடியாறன் , தம்பிய பார்த்துக்க '',என்று ஏழு வயது மகளிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் ஜோதி .

 வூடு பெரிய பங்களா இல்லை என்றாலும் ஒரு பாதுகாப்பு ,ராவில் அண்டிகொள்ள ஒரு இடம் , இருந்தும் ஒரு தெரு தள்ளி ஓடி கொண்டிருந்த கூவம் கரைகளை தொட்டு கொண்டு தளும்பி ஓடி கொண்டிருந்தது பயமுறித்தியது ,இதற்கு முன் ஒரு முறை தண்ணி வூட்டுக்குள் வந்து அவள் பார்த்திருக்கிறாள் , ஆனால் அப்போ கை குழந்தை கிடையாது ,சரி வரதை சமாளிப்போம் கஷ்டம் நமக்கு என்ன புதுசா என்றபடி கிளம்பி போனாள் ....

 காலை பரபரப்பு முடிந்தவுடன் தூங்கி கொண்டிருக்கும் மகனை ஒரு பார்வை பார்த்து விட்டு ,கையில் காப்பியுடன் டிவியில் மழை பத்தி என்ன சொல்கிறார்கள் என்று பார்க்க அமர்ந்தாள் கீதா 

கணவர் ஆபீஸ் அரை மணி தூரத்தில் ,திரும்பி வர மாலை ஆறு ஆகும் ,

மழை பற்றி பெரிதாக ஏதும் டிவியில் சொல்லவில்லை என்பதால் வெளிய சென்று எட்டி பார்க்க மெலிசாய் மழை தூரி கொண்டிருந்தது .உள்ளே வந்து வேலைக்காரி வருமுன் செய்ய வேண்டிய ஆயத்த வேலைகளில் ஈடுபட மேலும் அரை மணி போனது .மறுபடியும் ஏதோ உந்துதலில் வெளியே சென்று பார்க்க மழை வலுத்திருந்தது , தண்ணி போர்டிகோ வரை வந்திருந்ததை பார்த்து உறைந்தாள் .

 மாலை ஆறு மணி ஆக ஜனனி சிஸ்டத்தை சட் டொவ்ன் செய்துவிட்டு எழுந்து கீழே வந்து காரை எடுத்து வீட்டுக்கு போக முற்பட்டாள் ,ஓ எம் ஆர் ரோடு இரண்டு பக்கமும் தண்ணி நிறைந்து இருந்தது , ரோடு பக்கம் இன்னும் வரவில்லை என்பதால் பெரிதாக பயம் எழவில்லை , ஒரு பத்து நிமிடத்தில் அவள் வீட்டை அடைந்து விடலாம் என்ற நிலையில் திருப்பி விடப்பட்டாள் , அந்த சைடு ஸ்ட்ரீட்டில் கொஞ்சம் பயணித்து மறுபடியும் மெயின் ரோடு பிடித்து , இப்பொழுது வலுத்து விட்ட மழையில் மெல்ல வண்டியை செலுத்த ஒரு கட்டத்துக்கு மேல் அதுவும் முடியாமல் போனது . காரை ரோடு ஓரம் பார்க் பண்ணிவிட்டு அம்மாவுக்கு செய்தி சொல்லலாம் என்று போன் எடுத்தால் நெட்வொர்க் ப்ரொப்லெம் , வெளியே இப்போது இவளை போல் காரை நிறுத்தி இறங்கி நின்ற மேலும் இருவரை பார்த்து சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து இறங்கி அவர்களுடன் சேர்ந்து கொண்டாள் ,அவர்கள் நின்றிருந்த பக்கத்தை விட எதிர்புறம் சற்று மேடாக தெரிய மூவரும் அங்கே சென்றனர் , அவர்கள் கம்பனியை போன்ற ஒன்று அங்கே இருந்தது , அதன் செக்யூரிட்டி அவர்களை உள்ளே அனுமதிக்க ,உள்ளே சென்று அமர்ந்தனர் . சற்று நேர மவுனத்திற்கு பிறகு தத்தமது பேர் அலுவலகம் வேலை போன்ற விவரங்களை பகிர்ந்து கொண்டனர் , இதற்குள் அங்கே மேலும் தண்ணி ஏற மூன்றாவது மாடிக்கு சென்று அமர்ந்தனர் .அன்றைய பொழுது அந்த இடத்தில கழிந்தது ,அதே ப்ளூரில் இருந்த சாண்ட்விட்ச் சாப்பிட்ட போது , அம்மா ஞாபகம் வர கண் நிறைந்தது , இதில் இருந்து மீண்டு அவளை காண்போமா என்ற வேதனையுடன் அன்றைய ராத்திரி கழிந்தது .

றுநாள் காலை வெளியே பார்த்தபோது எங்கும் வெள்ளக்காடு , அவள் கார் நின்ற சுவடு தெரியவில்லை , நேர் எதிரே தெரிந்த ஒரு ஸ்விப்ட் தண்ணி மேல் மெதந்தபடியே அலை அடிக்கும் பக்கமெல்லாம் திரும்பியது . சற்று நேரத்தில் வாட்ச்மேன் உதவியுடன் ஒரு போட்டில் ஏறி சென்று வீட்டு அருகில் இறங்கி காத்திருந்த அம்மாவின் கைகளில் அடைக்கலம் ஆன போது அடைந்த நிம்மதிக்கு விலையேது .

 '' லோ லக்ஷ்மி அங்க எப்புடி இருக்கு நிலைமை நியூஸ் ல ஏதேதோ சொல்றான் '' 

''நாங்க இருக்கிற இடத்தில் கணுக்கால் அளவு தண்ணி தான் இருக்கு ரோட்டில , வீட்டுக்குள் தண்ணி வரல '' என்றேன் அது ஓரளவு உண்மை , வீட்டுக்குள் தண்ணி வரவில்லை ஆனால் வீட்டை சுற்றி தண்ணி நின்றது , பக்கத்துக்கு தெருவில் இடுப்பளவு தண்ணி நின்றது ,இன்னும் சற்று உயர்ந்தாலும் வெளியே போக முடியாது , ஆனால் இதை பெரியம்மாவுடன் பகிர்ந்தால் பேச்சாகி போகும் என்று தயங்கினேன் 

 ''என்னமோ போ எங்களால வர முடியல ,நீங்களும் எப்படி இருக்கீங்க என்று கவலையாய் இருக்கு , ஆனா நம்ம ரம்யா கல்யாணமும் ஐப்பசியில் தான வச்சோம் துளி மழை இல்லை நிறைவா நடந்தது , சரி சரி ப்ராப்தம் எப்படியோ அப்படித்தானே நடக்கும் நான் வச்சிடுறேன்'' என்று முடித்த போது எனக்கு ஆயாசமாய் இருந்தது , உண்மையில் பெரியம்மாவுக்கு இங்கு சுவாரிசியமா ஒன்னும் கிடைக்கலைன்னு வருத்தமா தான் இருந்திருக்கணும் என்று தோணியது , நாரதர் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்று தான் சொந்தங்கள் இருக்கின்றன என்று படித்தது ஞாபகம் வந்து அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது , மறுபடியும் போன் அழைக்க வேலை செய்யும் லேன்ட் லைன் மேல் முதல் முறையாக கோவம் வந்தது , சலிப்புடன் பார்க்க ஐயோ சம்மந்தி 

''எப்படி இருக்கீங்க நான் சாந்தி பேசறங்க'' என்றது அந்த முனை 

'' நல்லா இருக்கோம் ,வீட்டுக்குள் தண்ணி இல்ல வெளிய தண்ணி ஒசராம இருந்ததுனா ஒன்னும் பிரச்னை இல்லை , இப்படியே போச்சுனா போதும் ''என்றேன் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.