(Reading time: 4 - 7 minutes)

தவற விட்ட வாய்ப்பு - மனோ ரமேஷ்

This is entry #48 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

bike

வனின் மனம் முழுவது அவள் நினைவுகளே.....அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை.....ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர்,தங்கையை போல் அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்.... பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயத்திருந்தார்கள் ….

இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே... இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்… .அவளாவது இன்னொருவனோடு நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது..... அவன் நினைத்து முடிக்கும் முன் பைக்கில் இருந்தவள் திரும்பினாள்.....அது அவளே தான்.

வ போறது கூட எதோ ஒரு வகையில ஒத்துக்கலாம். ஆனா இவன் எப்படி இவள வண்டில கூட்டிட்டு போறான். நடக்காத விஷயம் ஆச்சே.

YMCA சிக்னல்:

Passion Pro

சீக்கரம் போடா.

ஹே நீ தான் சொல்றியா.

இவன் வேற. பேசாம வண்டிய ஓட்டுடா.

Discover 150

YMCA புக்ஸ் ஃபேர் இங்க தான் ரெண்டு பேரும் முதல்தடவை வந்தோம்.

மஹதி "ரெண்டு பேரும் ஒன்னாவே போலாம் எல்லா ஸ்டாலுக்கும்"

யுவன் "என்ன அதிசயமா இருக்கு"

மஹதி "ஒரே புக் ரெண்டுபேரும் வாங்கிட்ட வேஸ்ட் தானே ஒரே வீட்ல எதுக்கு ரெண்டு ஒரே புக் அதான்"

யுவன் "உன் ஃப்ரன்ட்ஸ் எல்லாம் நல்லவே வேலை செய்யுது மூளை"

ண்ணா லைப்ரரி:

Passion Pro

இன்னைக்கு பார்த்தா இப்படி ஆகனும்.

கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல, இன்னைக்கு இருக்கு.

Discover 150

என் அம்மா அவள முதல பார்த்தது இங்க தான்

என் அம்மானே தெரியாம எப்படி டீ கரெக்ட் பண்ண.

நெனப்புதான் அவங்க பையங்கர ஒரே காரணத்துல தான் உன்னைய கல்யாணம் பண்ணிக்கவே ஓகே சொன்னேன் புரியுதா.

காந்தி மண்டபம்:

Discover 150

எங்க முதல் outing எங்க குடும்பத்தோட இங்க தான்.

இந்த அமைதி கிரீன் கார்டன் எஃபக்ட் மஹதிக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இப்போ இத திரும்பி கூட பாக்கமா எங்க இப்படி போயிட்டு இருக்கா.

த்திய கைலாஷ்:

Discover 150

20 நாளுக்கு முன்னாடி இதே இடத்துல இருந்த நான் போன் பண்ணப்போ கூட என் அம்மா கூட இந்த கோவிலுக்கு தான் வந்து இருந்தா.

நீ கோவிலுக்கெல்லாம் போய் என்ன பண்ண போற.

நீ கோவிலுக்கு வெளிய நின்னு பண்றத விட உருப்படியா எதாவது பண்ணுவேன் சரியா.

என்ன நீ வா போ னெல்லாம் பேசற என் அம்மா இல்லயா பக்கத்துல.

என் அத்தை எல்லாம் ரொம்ப நல்லவங்க உங்க அத்தைதான் பிரச்சனை.

இருடி ரெகார்ட் பண்ணி சொல்றேன் என் அத்தை கிட்ட,

நான் இப்போவே சொல்லட்டா நீ டீனு சொன்னத.

நான் போன் வெச்சுட்டேன்.

ஹா ஹா

டையார் கான்சர் சென்டர்:

அட்லாஸ்ட் Passion Pro & Discover 150

ஹே இங்க என்ன பண்ட்றீங்க ரெண்டு பேரும்.

இவ தான் ரத்த குடுக்கணும்னு என்ன டிரைவரா அப்பாயின்ட் பண்ணி கூட்டிட்டு வந்தா.

ஹே நீ ரத்தம் குடுக்க போறியா,

அவளுக்குதான் AB நெகடிவ் ஆச்சே அதான் ஒத்த கால்ல நின்னு வந்து இருக்கா.

என்ன கூப்பிடு இருக்க வேண்டியதுதான்.

உங்க போன் எங்க (மதி இருக்கான்ல அதான் மரியாதை) .

என் கிட்ட தானே இருக்கு.

இருக்கு சரி, ஆன்ல இருக்கா.

ஆஃப் ஆகிடுச்சா, நைட் சார்ஜ் போட மறந்துட்டேன். சரி நான் போய் ரத்தம் குடுத்துட்டு வரேன்.

உனக்கு காதை குடுக்கறதுக்கு ரத்தம் குடுக்கறதே மேல்ன்னு முடிவு பண்ணிட்டாரு.

போலாமா.

ஐயோ மாமா என் கொள்கை தெரியும் இல்ல. இவளோட சென்னை டிராபிக்ல வண்டி ஓட்ட மாட்டேன். ஏன்டா ஹாரன் அடிக்கற சிக்னல, ஏன் இவளோ வேகமா போறன்னு கொன்னுடுவா, வரும் போது உங்களுக்கு போன் போட்டே ஒஞ்சுட்டதாலயும் patient நியாபகத்திலயும் சும்மா இருந்துட்டா இப்போ முடியாது.

நீங்களே கூட்டிட்டு வந்து வீட்ல விட்ருங்க நான் கெளம்பறேன்.

Discover 150

போலாமா,

சரி வண்டிய எடு.

ஹே என்னடி இப்படி உக்கருற.

அது அவசரத்துல வரப்போ சப்போர்ட்க்கு அவன பிடிச்சுகிட்டேன் இப்போ என்ன.

டையாறு சிக்னல்:

போடா கேர்லெஸ், ஒழுங்கா சார்ஜ் போட்டு வெச்சு இருந்து இருக்கலாம் மிஸ்ட் இட். வாய்ப்பெல்லாம் தவறவிட்டா விட்டதுதான் போல.

நீ கேர்லெஸ் இல்ல பாக்கேஜ் ஆஃப் கேர்லெஸ். வீட்டுக்கு போனதும் ஜூஸ் குடி மறந்திடாம.

அதான் எப்படியும் உன்ன இறக்கி விட்டு நான் வீட்டுக்கு போறதுக்குள்ள, போன் சார்ஜ் கூட போடலன்னு ஆரம்பிச்சு எல்லாத்தயும் ஒப்பிசிடுவியே அப்பறம் என்ன.

ஹா ஹா .

ஏன் டா ஹாரன் அடிக்குற ஹாரன் அடிச்சா முன்னாடி நிக்கற வண்டி மறைஞ்சிடுமா

This is entry #48 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.