(Reading time: 3 - 5 minutes)

பிறந்தநாள்  - ஸ்ரீ

Birthday

“நீ அழுது உன் தாய் சிரிக்கும்

ஒரே நாள் உன் பிறந்தநாள்

-அப்துல்கலாம்

யிற்று,இன்றோடு ஒரு வருடம்..தன் அருகில் உறங்கும் மகனை வாஞ்சையோடு பார்த்தாள் ஸ்ரீ.

கடந்த வருடம் இதே நேரம் மருத்துவமனையில்..

ரோகன் நாங்க எவ்வளவோ டிரை பண்ணிடோம்..குழந்தையின் தலை இறங்கவே இல்லை…இன்னும் கொஞ்சம் டிரை பண்ணுவோம் இல்லையெனில் ஆப்ரேஷன் தான் செய்ய வேண்டும் ..எதற்கும் கையெழுத்து போட்ருங்க..இவ்வாறு  மருத்துவர் கூறி முடித்த பொழுது,சற்றும் யோசிக்காமல் கையெழுத்திட்டான்..காரணம் துவண்ட மலராய் இருந்த அவனது உயிரினும் மேலான அவனது ஸ்ரீ..

எப்பொழுதும் ஓயாத பேச்சும்,துரு துரு கண்களும் இன்று ஒளி இழந்து இருப்பதை பார்த்த போது,மூச்சு விடவும் சிரமமாய் தான் இருந்தது ரோகனுக்கு..

ஸ்ரீ எப்பொழுதும் கூறுவாள், நம் குழந்தை இந்த உலகத்திற்கு வரும் நேரம் நீ என் அருகே இருக்க வேண்டும் என்று..ரோகன் சிரித்து கொண்டே கூறுவான்,அதுக்கு அப்புறம் உன் பக்கத்து வார்டுல என்னை அட்மிட் பண்ண வேண்டியது தான் னு…

ஆனால் இன்று அதுதான் நடந்துள்ளது..தன் அன்பு மனைவி கை பற்றி,புஜ்ஜி மா இன்னும் கொஞ்ச நேரம் தான் டா..நம்ம குட்டி வந்துடுவான் டா.,.வாஞ்சையாய் தடவினான் தன்னவளின் நெற்றியை…

கணவனின் அன்பில் கண் கலங்கியவள் இவனுக்காக எவ்வளளவு வலியையும் தாங்கலாம் என்று எண்ணிணாள்…

அவளின் எண்ணம் இதுவாக இருக்க அவர்களின் இளவரசனோ,அம்மா உன் ஆசைப்படி அப்பா உன் பக்கத்தில் இருக்காரு இதோ நா வந்துடேன்நு தன் தந்தை வந்த 10வது நிமிடம் இந்த பூமி யை வந்தடைந்தான்,தன்னுடைய கணீர் என்ற அழுகுரலுடன்…

பல்வேறு விதமான உணர்ச்சிகளுடண் தன்னவளை ஆர தழுவி கொண்டான் கண்கள் நிறைந்த கண்ணீருடன்,..

பிரசவம் – ஒரு பெண் உடலளவில் சுமக்கும் வலியை விட ஆயிரம் மடங்கு வலியை சுமக்கும் அன்பு கணவனின் மனம்…அதை கண்ணெதிரில் கண்டாள் ஸ்ரீ.,.

அவர்களின் 10 மாத கனவு இன்று இதோ தொட்டிலில் புன்னகையோடு உறங்குகிறது..

ந்த குட்டி கண்ணணின் ஒரு வருட பயணத்தையும் மனதில் அசை போட்டு கொண்டிருந்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை தன்னவன் வந்து உலுக்கும் வரை…

பையன் வந்தாலும் வந்தான் இப்படி ஒருத்தன் இருக்குறதே தெரியருது இல்ல என்று போலியாக குறைபட்டு கொண்டான்…

ஆசையோடு கணவனை அணைத்தவள்,குழந்தையின் அழுகுரல் கேட்டு அவனையும் தோளில் சாய்த்து கொண்டாள்,.

தன் இரு குழந்தைகளையும் பார்த்த பெண்ணின் மனதில் சொல்லிலடங்கா பெருமிதம்,பூரிப்பு,ஆனந்தம்…

இந்த இன்பம் ஆயுள் முழுதும் நீண்டிட இறைவனை வேண்டினாள்…

ஒரு பெண் மகளாய்,உணர முடியாத பல உணர்வுகளை தாய்மை பரிசளிக்கிறது…

நம் ஒருஒருவரின் பிறந்தநாளுமே ,குழந்தையாய் இருந்த நாம் வளர்ந்து விட்டோம் என்பதை மட்டுமின்றி நம்மை பெற்றவர்கள் வயதால் முதிர்ந்து மனதால் குழந்தைகளாகின்றனர் என்பதையும் உணர்த்துவதாக இருந்தால் முதியோர் இல்லங்களின் தேவை இருக்க போவதே இல்லை இவ்வுலகிற்கு...

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.