நான் தனியா யோசிச்சு பார்க்கும் போது தான் தோணுச்சு, 4 வருஷமா என் தியா என்னை பார்த்தும் என் கிட்ட பேச முடியாம எவ்ளோ வருத்தப்பட்ருப்பா..? என்னால எவ்ளோ வலியை அனுபவிச்சிருப்பா..? அவளுக்கு நிறைய வேதனையை கொடுத்திட்டு, அதை கூட தெரியாமயே இருந்ததுக்கு எனக்கு எந்த தண்டனையுமே இல்லாம நான் மட்டும் சந்தோசமா இருக்கணுமா..? நானும் அதை அனுபவிக்கனும்னு அப்போ முடிவு பண்ணேன்..
ஒரு நாள் அவளுக்கு ஃபோன் பண்ணி உன்னை நான் பார்க்கணும்னு சொன்னேன்.. அவளும் நான் சொன்ன இடத்துக்கு வந்தா..
நான் அமைதியா இருந்தேன்.. அவ முகத்துல அப்டி ஒரு சந்தோஷம்.. நான் அவளை வர சொல்லிட்டேன்னு.. அவ தான் முதல்ல பேசுனா, "எதுக்கு என்னை வர சொன்ன..? "
"நான் மேற்படிப்புக்காக US போகலாம்னு இருக்கேன்.. எனக்கு என் கனவு, என் படிப்பு இது மட்டும் தான் என் உலகம்.. உன் காதல் எனக்கு புரியுது.. ஆனால், நான் 2 வருஷம் கழிச்சு தான் திரும்பி வருவேன்.. எனக்கு உன் மேல காதல் வருமா, இல்லை அங்க யாரையாவது பிடிச்சுடுமா அதை பத்தி எனக்கு எதும் தெரியாது.. எனக்காக நீ காத்துக்கிட்டு இருக்காம உன் வாழ்க்கைய பாரு ".. இதை கேட்டுட்டு அவ என்ன ரியாக்ட் பண்ணுவாளோன்னு நான் யோசிச்சிட்டு இருக்கும்போதே, கொஞ்சம் கூட வருத்தமே இல்லாம, அதே புன்னகையோட சொன்னா, "உன்னோட தகவலுக்கு ரொம்ப நன்றி.. என்னோட வாழ்க்கையை எப்படி வாழணும்னு எனக்கு தெரியும்.. அதனால, நீ படிப்புல மட்டும் நல்லா கேட்டுக்கோ உன் படிப்புல மட்டும் கவனத்தை செலுத்து.. நீ வரதுக்கு ஒரு 2 நாள் முன்னாடி நாள் இதே மாதிரி எனக்கு தெரியப்படுத்து.. உன்னை வெல்கம் பண்ண பட்டாசு, வான வேடிக்கை எல்லாம் ரெடி பண்ணனும்ல"...
நான் அமைதியா இருக்கறதை பார்த்திட்டு தியா " பயப்படாத அங்க நான் வர மாட்டேன்.. அப்புறம் உன்னை பத்தி தெரிஞ்சுக்கவும் யாரையும் அங்க அனுப்ப மாட்டேன்.. எனக்கு தெரியும் நீ எங்க போனாலும் என் கிட்ட தான் வரணும் டா கண்ணா.. பார்த்து போ என்ன.. டேக் கேர் " .. தியா கிளம்பிட்டா...
அவ சொன்ன பதிலை கேட்டு "என்ன பொண்ணுடா இவ" ன்னு தான் எனக்கு தோணுச்சு..
நான் US வந்ததுக்கு அப்புறம் தியான்னு இல்லை என்னை யாருமே தொந்தரவு பண்ணலை.. எல்லோருமே என்னோட இலட்சியத்தை மதிச்சாங்க.. ஏன் என் தியா டார்லிங் கூட எனக்கு ஒரு ஃபோன் கால், ஒரு மெசேஜ் கூட பண்ணலையே.. அவளோட ஆசையை விட அவ என்னோட கனவை மதிச்சு என்னை விட்டு விலகியே இருந்தா.. அந்த விலகல் தான் என்னை அவ கிட்ட நெருங்க வச்சுது.. கொஞ்சம் கொஞ்சம் நான் அவளோடவனானேன்..
கண்ணாடியில என் முகத்தை பார்த்தா எனக்கு அவ முகம் தான் தெரியுது.. அவ கிட்ட இருந்த அந்த காதல் பைத்தியம் எனக்கும் ஒட்டிகிடுச்சுன்னு எனக்கு புரிஞ்சிது.. இப்படியே, ரெண்டு வருஷமும் முடிஞ்சிடுச்சு.. எனக்கு இங்கயே நிறைய ஜாப் ஆஃபர்ஸ் வந்துச்சு.. எல்லாத்துக்கும் நோநோநோநோநோநோ தான்.. எனக்கு என் சொந்த நாட்டுல கம்பெனி ஆரம்பிக்கணும், இது வரைக்கும் என்னால என் தியாக்கு கொடுக்க முடியாத அன்பை, காதலை இனியாவது அவளுக்கு கொடுக்கணும்..
ஹேஹேஹேஹே, "மீ பேக் டூ இந்தியா" இதை அப்படியே சந்தோசமா கத்தணும் போல இருந்துச்சு..
ஒருவழியா, என் ஊருக்கு வந்து, தியா வீட்டுக்கு எனக்கு முன்னாடியே 10 பொக்கே, 20 சாரி கார்ட்ஸ், அவ நம்பருக்கு 50 சாரி மெசேஜஸ் இப்படி எல்லாம் அனுப்பி, அவளை கூல் பண்ணி அவ வீட்டுக்கு அவளுக்கு பிடிச்ச டைரி மில்க் சாக்லேட்டோட போய் அவளை பார்த்தேன்.. இப்பவும் என் தியா அப்படியே, கண்ணுல தெரியற அதே காதலோடவே தான் எனக்காக எனக்கு பிடிச்ச வைட் கலர் சுடிதார்ல, தேவதையாட்டம் நின்னுட்டு இருந்தா.. வானுலகத்தில இருந்து உண்மையாவே ஒரு தேவதை தான் வந்திடுச்சோன்னு ஒரு நிமிஷம் அசந்திட்டேன்..
ஒரு வழியா அவ கிட்ட போய் தியா சாரி டார்லிங் அப்படின்னு சொன்னேன்..
திரும்பி எப்பவும் போல மொறைச்சு பார்த்தா.. இப்போ எதுக்கு மொறைக்கிறன்னு கேட்டதுக்கு, இப்போ கூட நீ உன் காதலை சொல்லலையேன்னு கேட்டா...
எப்பவும் என் தியா அதே தியா தான்.. "உன்னால மட்டும் எப்படி இப்படி இருக்க முடியுது..? என் மேல இவ்ளோ லவ் வச்சதுக்கு நான் அப்படி என்னடி உனக்கு பண்ணேன்..? உனக்கு கஷ்டத்தை தவிர நான் எதுமே கொடுக்கலையே..? என் மேல உனக்கு கோபமே வரலையா"..?
தியா, "அதான் உன்னையே எனக்கு தர போறியே, உன்னையும், உன் காதலையும் விட இந்த உலகத்தில எனக்கு வேற எதுவும் பெருசில்லன்னு சொல்லிட்டு என் கையை பிடிச்சுக்கிட்டா.. எதையுமே எதிர்பார்த்து வரதுக்கு பேரு காதல் இல்ல.. உன்னை பார்த்த அந்த முதல் நொடில நீ தான் எனக்காக பிறந்தவன்னு எனக்கு தோணுன அந்த நொடில இருந்து இப்போ வரைக்கும், இனி வர போற காலம் முழுமைக்குமே உன் மேல நான் வச்சிருக்க அன்பு அதிகம் தான் ஆகுமே தவிர குறையவே குறையாது.. ஏன் நாளைக்கு நமக்குன்னு ஒரு குழந்தை பிறந்தா கூட, எனக்கு நீ தான் முதல்ல, அப்புறம் தான் எல்லாருமே" ன்னு சொல்லிட்டு நான் எதிர்பார்க்காத நேரம் என் கண்ணத்துல கிஸ் பண்ணிட்டு ஓடிட்டா..
என்ன தவம் செஞ்சனோ தெரியலை என் தியாவோட காதலை கொஞ்ச காலம் நான் புரிஞ்சுக்காம போனாலும், அதை நான் தவற விடாம, அவளோட காதல்ல முழுசா நான் கரைஞ்சுட்டேன்.. இனி, என் தியா, எதுக்காகவும் அழக் கூடாது.. ( வெங்காயம் கூட அவளுக்கு நான் தான் இனி கட் பண்ணி தருவேன்..)
என் முதல் காதல் முற்றிலும் காதலாய்..
இனி என்ன லைஃப் ஃபுல் ஆஃப் செலிப்ரேசன் தான்.. ஸ்வீட் எடு கொண்டாடு வித் மை ஸ்வீட் ஏஞ்சல் தியா..
இந்த காதல் ஒரு மாய உலகம்.. அது நமக்குள்ள எப்போ நுழையும்னே தெரியாது.. சரியா புரிஞ்சுக்கிட்டா காதல்ல எப்பவும் சந்தோசம் தான்.. என்னை மாதிரி கொஞ்சம் லேட் பண்ணாம அதை கரெக்டா பிடிச்சிடுங்க..
என்னை பார்த்ததும் காதல்ல விழுந்து, சுயநலம் இல்லாம எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம என்மேல காதல் மழைய பொழிஞ்சு, எனக்காகவே காத்திருந்த என் தியாவ இனி என் காதல் மழையால குளிப்பாட்டுவேன்.. இனிமையான தென்றல் காற்று மாதிரி என்னோட காதல்ல அவளை சிறகடிக்க வைப்பேன்.. எனக்காக காத்திருந்த என்னோட காதலுக்கு இனி நான் எல்லாமுமா இருப்பேன்..
சாரி, எங்க காதலை பத்தியே சொல்லிக்கிட்டு, அதுலேயே நான் மூழ்கிட்டதால என் பேரை சொல்ல மறந்திட்டேன்.. என் தியா பத்தி நினைச்சாலே இப்படி தான்.. அவ காதலுக்கு முன்னாடி எல்லாமே மறந்து போய்டும்..
என்னோட பெயர் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒரு நாளைக்கு ஒரு 100 தடவையாவது என் பேரை சொல்லியே ஆகணும் அவளுக்கு..
நான் சித்தார்த்.. என் தியாவோட சித்தார்த்..
ஹாய் ஃப்ரண்ட்ஸ், இந்த தலைப்புக்கும் என்னோட கதைக்கும் செம பொருத்தம்.. என்னோட முதல் கதை தான் என்னோட இந்த முதல் காதல்..
This is entry #60 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.